மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
கப்டன் ஈழமாறன் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து “டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் விடுறா…. என்ர பொடியள் என்ன மாதிரியோ…. விடடா மச்சான்….” வைத்தியசாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில்குத்திய திருக்கைமுள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவனாய், வேதனைகளை மறைத்தபடி, தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக்கொண்டிருந்தான் ஈழமாறன். அவனின் நச்சரிப்பினைத் தாங்காது வைத்தியரிடம் சொல்லும் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். “விசம் உடனே இறங்காது தம்பி, இதால ஆக்கள் செத்துப்போய் இருக்கினம்: ஒரு இரண்டு நாள் பொறும், பிறகு போகலாம்” எனப் புன்னகைதனை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனை…
-
- 2 replies
- 854 views
-
-
தமிழ் செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் வீரகாவியமான சக தோழர்களுக்கும் வீர வணக்கம் 🙏 தமிழினத்தின் அழகான சிரிப்பின் குரல் மெளவுனமாகி 12 ஆண்டுகள் ஆகி விட்டது 😓
-
-
- 4 replies
- 853 views
- 1 follower
-
-
கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் அவர்கள் பற்றி நினைவில் நிலைத்தவை... பலதடவை படகு கட்டுமானத்தில் கரும்புலிப்படகு ( இடியன் ) வடிவமைக்கும் போது அதில் இயந்திரம் இருப்பு இணைக்கும் வேளையில் பல சில தாக்குதல் வழிமுறைகள் அனுபவங்கள் பற்றி பொறுப்பாளர் மற்றும் அந்த தாக்குதலில் பங்கு பற்றிய சக போராளி ( அக்காமார்கள் , அண்ணாமார்கள் ) கூறுகையில் பல கடல் கருவேங்கை காவியம் மனதில் பதிந்து நிற்கின்றன... இம்மாவீரன் அதிக பேச்சாற்றல் , தோழர்கள் இழப்பை தாங்கத ஓர் நட்பின் இமையம் , தாய்மண்ணின் மடியில் சிங்களத்தில் இனவழிப்பின் அரங்கேற்றமும் , இயற்கை அனர்த்தமும் சேர்ந்து வதைத்த போது நாளும் வனத்தில் தனிமையில் இவனின் மனம் உருகி விழிநீர் கசிந்ததை அந்த மரத்தடி வேர்களும் , துயிலும் நீளும் இரவுகளும் …
-
- 2 replies
- 852 views
-
-
வேகுந்தீ ஊடேயும் ஆகு(ம்)தி யானீரே வேங்கைம கர்க்கென்றும் வீழ்விலை யே! சாகுந்தீ ஆனாலும் போகும்பு லிக்கென்றும் சாவில்லை யாமிது சத்திய மே! தாகம்தீன் தெரியாது தூரம்தான் சலியாது போகும்தி சைகாணும் சூரியர் ரே! மோகம்பெண் நாடாது வேள்விக்குக் கோடாது வேருக்குள் நீராகும் மாவீர ரே! வீட்டினுள் பெண்களாய் வீழ்ந்துகி டக்காமல் நாட்டுக்காய் உதிர்ந்த நாரிய ரே! காட்டிக்கொ டுப்பாரும் கண்டதி சைக்குள்ளும் கால்கள்ப தித்தவெம் காரிகை யே! அண்ணன்தி சையோடும் ஆகிப்ப றந்தேகும் வண்ணக்கி ளியான மாதுக ளே! மண்ணின்ம டிக்குள்ளே மானப்போர் செய்திட்ட வஞ்சிக்கு என்றென்றும் சாவிலை யே! செங்களத் தின்னுயிர் சேரம ரித்திட்ட எங்களின் பிள்ளைக ளானவ ரே! இங்குபு லத்தெங்கும் ஈகச்…
-
- 2 replies
- 852 views
-
-
லெப்ரினன்ட் புகழினி புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் "லொட லொட" என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு "தெண்டித் தெண்டி"சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள்.எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்....பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அ…
-
- 3 replies
- 849 views
-
-
வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம் http://www.eelamview.com/2011/12/12/anton-balasinga/
-
- 0 replies
- 849 views
-
-
(மூன்று நாட்கள் தொடர்ந்த பெரும் சமரில் விடுதலைப்புலிகளின் முதன்மை தளபதிகள், கட்டளைதளபதிகள், தாக்குதல் தளபதிகள், மகளிர் படையணி தளபதிகள் என 700 இற்கும் மேற்பட்ட போராளிகளின் இரத்தத்தில் தமிழர் தேசம் சிவந்த நாட்கள் அவை.. ) வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம...
-
- 0 replies
- 847 views
-
-
11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது லெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் - உவர்மலை. திருகோணமலை) மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் - மாமாங்கம், மட்டக்களப்பு) லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி - மூதூர், திருகோணமலை) 2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் - மூதூர், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநேரம் மட்டக்களப்பு வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் - மத்தியமுகாம், அம்பாறை) கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் - மல்வத்தை 2,…
-
- 8 replies
- 844 views
-
-
26.08.1993 அன்று கிளாலி நிரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி கடற்படையின் இரு நீருந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலிகள் இருவர் உட்பட ஐந்து போராளிக்ள வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்) (கந்தசாமி இராமசந்திரன் - கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு) கடற்கரும்புலி கப்டன் மதன் (சீனிவாசகம் சிவகுமார் - மட்டக்களப்பு) கடற்புலி கப்டன் சிவா (முத்துலிங்கம் கருணாநாதன் - குச்சவெளி, திருகோணமலை) கடற்புலி லெப்டினன்ட் பூபாலன் (சுந்தரராஜ் பாஸ்கரன் - நாகர்கோவில், யாழ்ப்பாணம்) கடற்புலி 2ம் லெப்டினன்ட் சுர…
-
- 9 replies
- 843 views
- 1 follower
-
-
வீரவேங்கை அப்பன் புதிய சகாப்தம்: முதல் எல்லைப்படை மாவீரர் வீரவேங்கை அப்பன். “உதெல்லாம் உங்கட கனவு. துயிலும் இல்லத்தில உங்களையோ?” “என் எல்லைப்படை எண்டாலும் சண்டைக்குதானே போறன். சண்டையில செத்தா துயிலுமில்லம்தான்?” உங்கட உந்த எல்லைப்படையை நம்பி சண்டையில் அதுவும் முன்பொயின்ரில விடுவாங்களே?” நீ என்ன வேணுமெண்டாலும் சொல்லு. போயிட்டு திரும்பி வருவன் அல்லது துயிலுமில்லத்தில புதைகிற மாதிரி மாவீரனா வருவான்.” “சரி சரி உந்தக் கதைகளை விடுவம். வெளிநாட்டுக்குப் போறதக்குக் தேவையான அலுவல்கள் இன்னமிருக்கு ஞாபமிருந்தா சரி” “நான் சுவிக்குப் போனாலும் சரி ஜேர்மனிக்குப் போனாலும் சரி, ஐஞ்சு வருசமோ ஆறுவருசமோ நிண்டு உழசை;சுக்கொண்டு வந்திடுவன். பிள்ளையளை விட்டி…
-
- 1 reply
- 843 views
-
-
அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார். சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிகளுக்குத் “தேவர்” தலைமைதாங்கிக் கொண்டிருந்தார். கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்துத் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். “நிதர்சனம்” ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமெரா, நாலா பக்கங்களிலும் சுழன்று படம் பிடித்துக் கொண்டிருந்தது. மேடையில் கவிதைகள் முழங்கி கொண்டிருந்தப…
-
- 1 reply
- 843 views
-
-
12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுநாள்! இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் 32ஆவது நினைவுநாள் இன்றாகும். இவரின் மறைவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட முறுகல் நிலைக்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வலுவான நிலையை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதவனின் சிறப்பு தொகுப்பு காணொளியாக… http://athavannews.com/12-நாட்கள்-உண்ணாவிரதமிருந/
-
- 4 replies
- 843 views
-
-
[size=1] [size="2"]23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட [/size][/size] [size=1] [size="2"]லெப்.கேணல் றெஜி (இளங்கோ)[/size] [size="2"]மாணிக்கம் றமேஸ்[/size] [size="2"]அம்பாறை[/size][/size] [size=1] [size="2"]மேஜர் றோஸ்மன் (கணேஸ்)[/size] [size="2"]தேவராசா ரவீந்திரராசா[/size] [size="2"]திருகோணமலை[/size][/size] [size=1] [size="2"]மேஜர் நிதர்சன்[/size] [size="2"]தியாகராஜா தியாகேந்திரன்[/size] [size="2"]முல்லைத்தீவு[/size][/size] [size=1] [size="2"]மேஜர் நித்தி (சோழவேங்கை)[/size] [size="2"]இராசையா ஜெகன்[/size] [size="2"]வவுனியா[/size][/s…
-
- 10 replies
- 843 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார். இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 842 views
-
-
"கடற்கரும்புலி கப்டன் வினோத்" மிழீழ முகநூல் தமிழர்களின் குரல் "கடற்கரும்புலி கப்டன் வினோத்" ============= 1988ம் ஆண்டுக் காலப்பகுதி…. வினோத்தின் வீட்டை இந்தியப் படைகள் அடிக்கடி சுற்றி வளைத்தனர். அவனைத் தேடி இந்திய சிப்பாய்கள் அங்கு பாய்வதும் வழமை யாகிவிட்டது. அந்த ஆபத்தான பொழுதுகளில் , வீட்டுக் கூரைக்குள் ஏற்றி பெற்றோரால் அவன் மறைத்துக் காக்கப்படுவான். மேலேயிருந்து – ” சயனைட் ” குப்பியைப் பற்களுக்கிடையில் செருகிக்கொண்டு எதனையும் எதிர்பார்த்து நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பான் வினோத். வினோத்தின் அக்கா சொல்கிறாள் …. ” அந்த நேரத்தில் சின்னச் சின்ன ‘ கானு ‘ களுக்குள்ள ( கொள்கலன் ) என்னவோ கொண்டு வந்து , வீட்டு மூலையளுக்குள்ள வைப்பான். ‘ என்னடா இது ‘ என்று கேட்டால் …
-
- 6 replies
- 841 views
-
-
"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடிக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த 15.02.2009 அன்று தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான…
-
- 3 replies
- 839 views
-
-
புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில் துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன். அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாக்கிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று. சுதந்திரப் போராட்டத்தின் பங்கெடுப்பு என்பது ஈர்ப்பு, கவர்ச்சியின் சமன்பாடல்ல. அது சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடாக, இனத்தின் மீதான அடக்குமுறைச் சம்பவங்களின் தொடர்வினையாக, பாதிப்பின் வெளிப்பாடாக உருவாகின்றது. அது வாழ்வி…
-
- 0 replies
- 839 views
-
-
[size=1]25.10.2006 அன்று திருகோணமலைத் துறைமுக கடற்ப்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோற படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட[/size][size=1] [/size][size=1] கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) கந்தசாமி கோபாலகிருஸ்ணன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) தெய்வேந்திரன் யோகேஸ்வரன் திருகோணமலை ஆகிய கடற்கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=1] [size=4]தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size][/size]
-
- 7 replies
- 835 views
-
-
பலாலி வான்படைத்தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலின்போது வீரகாவியமான கரும்புலிகள் மேஜர் ஜெயம், கப்டன் திரு, கப்டன் திலகன், கப்டன் நவரட்ணம், லெப்.ரங்கன் மற்றும் வேவுப்புலி மேஜர் சேரன் ஆகியோரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். உன்னத விடுதலை பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலிலிருந்து….. என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி ஆகஸ்ட் 2 1994 இல் நடத்திய அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். இது பலாலித் தளத்தின் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலாகும். இதயம் முழுதும் தலைவன் பின்னணி : 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத…
-
- 2 replies
- 832 views
-
-
தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் அசாத்திய ஆற்றல் மேஜர் இறைகுமரன் (திவாகர்) 1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பல நூறு ஆண்டுகளின் பின்னர், பகைவன் கோட்டையொன்றைக் கைப்பற்றுவதற்கான முற்றுகையைத் தமிழர் வீரவரலாறு சார்பாகப் புலிகள் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சம் தீவுப்பகுதி மக்கள் ஏதிலிகளாயினர். பல இலட்சம் தீபகற்ப மக்கள் அல்லலுறுகின்றனர். இதற்கு நேரடிக் காரணமான படை முகாம் வீழ்த்தப்பட்டேயாக வேண்டும். இம்முகாமிற்குப் முதன்மை வழங்கற் பாதையாக விளங்கும் பண்ணைப் பாலம் தகர்க்கப்படல் வேண்டும். ஐம்பது மீற்றர் முன்னால் பகைவனின் ப…
-
- 1 reply
- 830 views
-
-
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன் அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் …
-
- 3 replies
- 830 views
-
-
பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள். காரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என்பதுடன் விடுதலைப் போராட்டத்தின் முன்நகர்விற்கு வலுவான தளத்தையும் வழங்கியிருந்தது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழினம் எண்ணிக்கையில் குறைந்த இனமாக இருந்தாலும் தனது சுயபலத்தின் அடித்தளத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எதிரி பல்வேறு தடைகளையும் நெருக்குவாரங்களையும் கொடுத்து, போரியல் ரீதியாகத் தோற்கடிப்பதனூடாக விடுதலைப் போராட்டத்தை அழிக்க முற்ப…
-
- 1 reply
- 829 views
-
-
கடற்கரும்புலி கப்டன் புலிமகள் பூக்களுள் எழுந்த புயல் கடற்கரும்புலி கப்டன் புலிமகள். அது 1998 நடுப்பகுதி. கிளிநொச்சியின் நகரப்பகுதி இராணுவத்திடமிருந்தது. டிப்போச் சந்தியடி எங்களிடமிருந்தது. தற்போது கிளிநொச்சி மாவட்ட தமிழீழ காவற்பணிமனை அமைந்திருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள தேவாலயம், கருணா நிலையம் எல்லாம் எமதும் சிறீலங்காப் படையினரதும் காவல் நிலைகளுக்கிடையிலான சூனியப் பகுதிக்குள் அமைந்திருந்தன. நேர்வீதி. எமது நடமாட்டத்தைப் படையினரும் அவர்களை நாமும் இலகுவாக அவதானித்து, பதுங்கிச் சூடுகளை தாராளமாக மேற்கொள்ள வசதியான நேர்வீதி. இரு பகுதியுமே தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மறைப்புப் படங்குகளை வீதிக்குக்குறுக்கே கட்டித் தொங்கவிடுவோம். ஒருவரின் படங்…
-
- 1 reply
- 826 views
-
-
எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். மே.21.2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே! விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்துருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப்படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கி…
-
- 1 reply
- 825 views
-
-
ஒயாத அலைகள் -1 முல்லைத்தள வெற்றிச்சமருக்கான கடினமான கடற்பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது, அதேவேளை உயரக்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வினியோக நடவடிக்கைகளில் கொலின்ஸ், வினோத், தர்மன், தீபன் போன்ற அதிவேகப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டு நடுச்சாம வேளைகளில் இரகசியக் கடற்பயணங்கள் நடைபெற்றுவந்தது. முதன்முதலாக எமது இயக்கத்துக்கு இரட்டைக்குழல் கனொன் பீரங்கிகள் இறக்கப்பட்டு சமவேளையில் அதற்கான பயிற்சிகளும் பிரமந்தனாறு காட்டுப்பகுதியில் லெப் கேணல் இரும்பொறை தலைமையினான பயிற்சியாசிரியர்களால் கடற்புலிகளின் விசேட அணியினருக்கு வழங்கப்பட்டுவந்தது. முல்லைச்சமருக்கான விமான எதிர்ப்பு நடவடிக்கையில்கூட கடற்புலிகள் விசேட அணியினரே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இ…
-
- 0 replies
- 820 views
-