மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
காலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை டிசம்பர் 3, 2020/தேசக்காற்று/தமிழீழக் கலைஞர்கள், போராளிக் கலைஞர்கள்/0 கருத்து தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம். விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயண…
-
-
- 1 reply
- 1.3k views
-
-
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகளின் 12ம் ஆண்டு நினைவு! AdminApril 4, 2021 ஆனந்தபுரம் எதிரிக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே தமிழரின் வீரத்தை உணர்த்தியது. நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகளின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் 04.04.2021 ஆகும். ஆனந்த புரத்தில் ஆகுதியாகிய வீரத் தளபதிகளுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு வீரவணக்கம் தெரிவித்துள்ளது. http://www.errimalai.com/?p=62886
-
- 0 replies
- 332 views
-
-
01.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நெடுங்கீரன்(நவம்) அவர்களின் மூன்றாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை அர்ப்பணித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட இந்த மாவீரனுக்கும் இதேநாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
-
- 8 replies
- 2.1k views
-
-
வவுனியாவில், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 நினைவேந்தல்! அகரன்November 24, 2018 in: நிகழ்வுகள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான ‘நினைவேந்தல் வாரத்தை’ இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை ‘நினைவு கூருதலுக்கான பொதுநாளாக’ தேர்ந்தெடுக்கும் விசமத்தனமான பிரசாரத்தில் கயமைக்கூட்டம் ஒன்று ஈடுபட்டிருக்கும் சூழலில், ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி, கர்வத்தோடும் – பெருமையோடும் அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துமாறு தமிழீழ மக்களிடம் வலியுறுத்தி கூறியுள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, 2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முற…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை) யாழ் மாவட்டம் 10.03.1950 - 15.02.2009 ... தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர் . 15.02.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்
-
- 15 replies
- 1.9k views
-
-
மாவீரர் தினம் 2015 நினைவுகளும், நிகழ்வுகளும் நம் தேசத்திட்காய் உயிர்நீத்த உறவுகளுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திரியை ஆரம்பித்துவைக்கின்றேன். வித்தாகிப்போன மாவீரச்செல்வங்கள் பற்றிய குறிப்புக்கள், மாவீர்களுக்குரிய சிறப்புப்பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் 2015 மாவீரர்தின நிகழ்வுகளை இத்திரியில் என்னுடன் இணைந்து பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். இம்முறை யாழில் மாவீர்கள் தினத்தை பற்றிய கதையே இல்லாதது பெரும் வருத்தத்தை கொடுக்கின்றது. ------- நன்றி
-
-
- 69 replies
- 17.3k views
-
-
மான்னார் மாவட்ட கடற்பரப்பில் காவியமான கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 15 மாவீரர்களினதும் நெடுங்கேணியில் காவியமான வீரவேங்கை இசையமுது என்ற மாவீரரினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 07.10.1999 அன்று மன்னார் மாவட்டக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோயன் (பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன் - ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்) மேஜர் காமினி (ஜெயராஜ்) (குப்புசாமி அருணாசலம் - கதிரவெளி, மட்டக்களப்பு) மேஜர் நகுலன் (சண்முகலிங்கம் லோகேஸ்வரன் - மாரீசன்கூடல், யாழ்ப்பாணம்) மேஜர் குகன் (செல்லையா) (யோசப் நியூட்டன் - நானாட்டான், மன்னார்) மேஜர் சோழன்…
-
- 9 replies
- 1.2k views
-
-
வேங்கையணி தளபதி பிரிகேடியர் துர்க்கா - காணொளி “அண்ணா! எங்களை நம்புங்கள், நீங்கள் வெளியே இருந்து கட்டளை இடுங்கள். நாங்கள் அதனைச் செயற்படுத்துகின்றோம். நீங்கள் எங்களுக்கு மட்டுமல்ல எங்கட மக்களுக்குக் கட்டாயம் தேவை. அதனால் தயவு செய்து ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுங்கள் அண்ணா இதனை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எங்களுடைய தமிழ்மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.” இதுதான் அவள் தலைவருக்கு எழுதிய கடைசிக் கடிதம். உண்மையிலேயே ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுவது என்ற எண்ணம் தலைவர் அவர்களிடம் ஒருதுளியும் இருக்கவில்லை. இறுதிவரை நின்று போராடுவது என்றே தலைவர் முடிவெடுத்திருந்தார். https://www.thaarakam.com/news/5dbb84f1-6af3-4d3d-b5b9-81000c9b6127
-
- 0 replies
- 305 views
-
-
"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடிக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த 15.02.2009 அன்று தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான…
-
- 3 replies
- 820 views
-
-
லெப். கேணல் நவம் வீழ்ந்தாலும் வித்துக்களாக மடிந்தாலும் மக்களுக்காக………..! Last updated May 14, 2020 முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவந்த வேளை 15.05.1989 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் நவம் (டடி) ஆகிய மாவீரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையி…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரிகேடியர் விதுசா எனும் விடுதலை தீ -காணொளி பிரிகேடியர் விதுசா வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஆளுமையின் வடிவம். பார்த்தவுடனே தளபதி என்கின்ற மரியாதை பார்ப்பவர் அனைவருக்குமே வந்துவிடும். உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கும் அளவுக்குப் பெண்புலிகளை வழிநடத்தி, வான்முட்டும் வெற்றிகளை, மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதங்களைப் படைக்க வைத்த இரண்டாம் லெப். மாலதி படையணியின் சிறப்புத்தளபதி. ஓப்பரேசன் லிபரேசனில் தொடங்கிய அவரது களமுனைப் பயணம் விடுதலைப்புலிகளின் இறுதி முற்றுகைச் சமராக இருந்த ஆனந்தபுரத்தில் தனது இறுதி மூச்சைத் தமிழீழ மண்ணுக்காய் அர்ப்பணிக்கும் வரை ஓய்வு என்பதையே அறியாத உழைப்பாளி. https://www.thaarakam.com/news/d9710c17-5b89-4ae0-a565-a723172ea977
-
- 0 replies
- 715 views
-
-
இன்று செப்டம்பர் 26. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறேன். சின்ன வயதில் இடம்பெயர்ந்து வீடுகளே இல்லாத நாட்களில்கூட திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்தோம். 1995இற்கு முன்பாக ஒரு வருடத்தில், அதுவும் ஒரு நாவற்பழக்காலம் வீட்டின் முன்பாக உள்ள நாவல் மரத்தின் கீழ் எங்கேயோ வாங்கி வந்த திலீபனின் படத்தை கொண்டு வந்து தீபம் ஏற்றிய நினைவு இப்பொழுதும் அந்த நாவல்மரத்தின் கீழிருக்கிறது. இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் இருந்த பொழுது எங்களுக்கு வசிக்க வீடே இருக்கவில்லை. ஒரு மர நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுதும் திலீபனின் நினைவுநாள் வந்தது. ஒரு துணியால் ச…
-
- 0 replies
- 773 views
-
-
[size=3][size=4]“ஓயாத அலைகள் - 4” படைநடவடிக்கையின்போது 02.10.2000ம் அன்று முகமாலை, எழுதுமட்டுவாள், இத்தாவில் மற்றும் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது[/size] [size=4]லெப்.கேணல் தில்லையழகன் (தில்லை) (கபிரியேல் அருந்தவராஜன் - முருங்கன், மன்னார்) கப்டன் ஆரதி (நாராயணன் ராணி - கந்தர்மடம், யாழ்ப்பாணம்) கப்டன் நேசமலர் (வெள்ளையன் கலா - கல்மடு, வவுனியா) கப்டன் பவநீதன் (செபஸ்ரியான் சந்தான்குரூஸ் - தாழ்வுபாடு, மன்னார்) வீரவேங்கை சிவா (புவனேந்திரன் சசிக்குமார் - உரும்பிராய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணிமாறன் (மரியநாயகம் மரியபிறவுன்சன் - மாந்தை, மன்னார்) வீரவேங்கை கருவேங்கை (விஜயன் சுரேந்திரன் - கச்சாய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை…
-
- 8 replies
- 939 views
-
-
இது யாழ் இணையம் சார்பில் பிரபாகரனுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி 22.05.2009 அன்று நான் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவை யாழ் களத்தில் இட்டிருந்தபோது பெரும்பாலான உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டு யாழ் கள நிருவாககமும் அந்த பதிவை நீக்கி விட்டிருந்தது அத்தோடு தான் எனக்கும் யாழ் களத்துகுமான இடைவெளி ஆரம்பித்து யாழ் கள நிருவாகத்தில் நுனாவிலான் என்னை நீக்கியும் விட்டுந்தார் அது பிரச்சனையில்லை பதினோரு வருடம் கழித்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது நிச்சயம் ஒரு இனத்துக்காக குடும்பத்தையும் இழந்து போராடிய ஒரு வீரனுக்கு செலுத்தும் மரியாதையே ..அஞ்சலிகள் ..ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளவே பதினோரு வருடம் சென்றிருக்கிறது என்கிறபோது இந்த இனம் உருப்படாது என்று மட்டு…
-
-
- 14 replies
- 2.4k views
-
-
என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி - காணொளி 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்கப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி பிரிகேடியர் தீபன், பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அ…
-
- 0 replies
- 462 views
-
-
14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ் உட்பட்ட ஆறு கடற்கரும்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கொக்குளாய் கடற்பரப்பில் கடற்படையினரின் டோறா கடற்கலங்கள் கடற்புலிகளால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை டோறா கலங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த இரு கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதினால் ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ், மேஜர் கலைமகள், மேஜர் சூரியப்பிரபா, மேஜர் பரணி, கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்ப…
-
- 13 replies
- 1.9k views
-
-
13.12.1999 அன்று ஓயாத அலைகள் 3 தொடர் நடவடிக்கையின் போது யாழ். குடா நாட்டில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவமோகன் உட்பட்ட 14 வீரவேங்கைளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற சமரில் லெப்.கேணல் சிவமோகன் (சதாசிவம் கிருபாகரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) கப்டன் ஈழத்தரசன் (முருகையா கேதீஸ்வரன் - பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி) லெப்டினன்ட் கவிகரன் (குணேஸ் ரவீந்திரன் - பெரியபோரதீவு, மட்டக்களப்பு) லெபடினன்ட் மலைமகன்/மலைமாறன் (அழகிப்போடி ஜெயா - நாவற்காடு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அகிலநாதன் (வேல்முருகு சுபாநாயகன் - அம்பிலாந்துறை, மட்டக்களப்பு) ஆகிய போராளிளும். வெற்றிக்கேணிப் பகுதியில் நடைபெற்ற சமரில்…
-
- 9 replies
- 1.5k views
-
-
[size=3][size=4]02.10.1995 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது[/size] [size=4]கடற்கரும்புலி மேஜர் அருமை (செல்லத்துரை விஜயானந்தன் - புத்துவெட்டுவான், கிளிநொச்சி) கடற்கரும்புலி கப்டன் தணிகை (கணபதிப்பிள்ளை வதனா - யாழ்ப்பாணம்) லெப்.கேணல் இளநிலா (செல்வராசா அனுராஜினி - இராமநாதபுரம், கிளிநொச்சி) கப்டன் சுஜீவன் (யோகராசா) (இராசரத்தினம் இராஜேந்திரன் - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) லெப்டினன்ட் அமுதன் (ஏகாம்பரம் குலசிங்கம் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர். இம் மாவீரர்களினதும் இதேநாள் அம்பாறை மாவட்டம் 40ம் கிராமம் …
-
- 12 replies
- 729 views
-
-
இன்று (10/1/14) அன்புத் தம்பி பாலச்சந்திரனின் 16வது பிறந்தநாள்.. தமிழீழ தேசத்தின் மீது இனவெறியர்களும், ஏகாதிபத்தியங்களும் நடத்திய போரில் இனவிடுதலை கோரிக்கையான தனித்தமிழீழ கோரிக்கையை மனதில் ஏந்தி போரிட்டு வீரமரணம் அடைந்த போராளிகள் மற்றும் தமிழீழ மக்களின் உருவகமாக இருப்பவன் பாலச்சந்திரன்.. இனப்படுகொலைக்கு ஆளான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சாட்சியாக இருக்கின்றான் பாலச்சந்திரன். பால் முகம் மாறாத அந்த பாலகனின் முகம் இங்கு தூங்கி கிடந்த அண்ணன்களை வீறு கொண்டு எழவைத்திருக்கின்றது வீரம் தெறிக்கும் அவனது விழிகள் ஈழச்சுடரை எமது கைகளில் திணித்து இனத்தின் விடுதலையை நோக்கி ஓடவைத்திருக்கின்றது. பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு அவன் சுட்டு கொல்லப்பட்ட காட்சிகள், பாதுகாப்பான இடங்கள் என அறிவ…
-
-
- 1 reply
- 1.7k views
-
-
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது. அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களை…
-
- 3 replies
- 1.7k views
-
-
இந்தியப் படை வருகை துட்டக்குரங்கினைச் சிட்டுக்குருவிக்குக் கட்டிவைத்தே பெரும் சாதனையை எட்டிவிட்டோமுயர் நோபல் பரிசெமக்(கு) ஏற்புடைத்தாமென எண்ணினரால் வெட்டிப் பிடுங்கிய வீறாப்பில் எங்களை வீழ்த்திடலாமென்ற நோக்குடனே துட்டப் படைகளை ஏவினர் ஈழம் துயரடைந்தாள் எனில் சோர்வடையாள் பாரதச் சூதர்கள் வானரசேனை படுத்திய பாடுகள் ஒன்றிரண்டோ நேரெதிர் கொண்ட வியாக்கிர சேனை நிகழ்த்திய சாதனை ஒன்றிரண்டோ ஆதரவற்ற தமிழினம் மீது அமைதிப் படையெனும் போர்வையிலே காதகர் செய்த பழிகளை மீட்பதில் காண்பதென்ன அதை விட்டிடுவோம் பன்னிரண்டு புலித்தலைவர்களின் மறைவு (வேறு) ஆயுதந் தனைக்கொடுத்தே - அந்த அமைதியைக் கெடுத்திடு;ம் படைகளிடம் சேய்கள் தம் பணி முடித்தார் - சிலர் தி…
-
- 3 replies
- 891 views
-
-
புலி வீரர்களின் வாழ்வுக்கு கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் ஒரு பாடம். கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்) சுப்பிரமணியம் நாதகீதன் அரியாலை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:15.11.1975 வீரச்சாவு:29.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் “சுப்பர்டோறா” அதிவேகபீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு அவன்ஒரு குழந்தை.வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். சி…
-
- 1 reply
- 463 views
-
-
தாயகக் கனவுகளுடன் ....... [1] " நான் பெரிது,நீ பெரிது என்று வாழாமல், நாடு பெரிது என்று வாழுங்கள். நாடு பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே.எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது." ----- தேசியத்தலைவர் வே.பிரபாகரன் --------------------------------------------------------------------------------
-
-
- 32 replies
- 3.6k views
-
-
01.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டவீரவேங்கை தேனமுதன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/historical/2012/01/01 தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரமறவர்களுக்கு வீரவணக்கம்.
-
- 8 replies
- 1.4k views
-
-
நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009. அப்போது அந்த வைத்தியர் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கு உதவியாக அவருடைய மாமா அங்கு இருந்தார் அவருடைய குடும்பமும் அதே வைத்தியசாலையில் இருந்தது என்று தெரியும். ஆனந்தபுர கோர தாண்டவத்தின் இறுதி நாள் வித்துடல்கள் கிடந்த கிடங்கிற்குள் மயக்க நிலையில் நான் இருந்தது தெரியாமல் வீரச்சாவு என்று நினைத்து என்னையும் போட்டு விட்டு சென்று விட்டனர். மயக்கம் தெளிந்து நான் அலம்பிக்கொண்டு கிடந்தேன் ஒருவர் எனது கைகளை பிடிக்க மற்றையவர் எனது இரு கால்களையும் பிடித்து தூக்கி கொண்டு வாகனத்தில் போட்டார்கள். பின் வைத்தியசாலையில் நான் பெரிய சத்தமாக கத்தினேன் நான் சாக போறன் சாகப்போறன் என கத்தினேன் அதற்கு முதல் தேசிக்காய் தண்ணி தாங்க என்று கத்த அங்கு இருந்த வைத்தி…
-
- 2 replies
- 506 views
-