மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
20.02,2009 அன்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான் படைத் தளம் மீதும் வான்புலிகளின் கரும்புலித் தாக்குதல் இதில் வீர காவியமான கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் இவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
-
- 13 replies
- 3.3k views
-
-
13.07.2004 அன்று மட்டக்களப்பு மருத்துவமனையில் வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜாவின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு நகரில் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த லெப்.கேணல் சேனாதிராஜா 05.07.2004 அன்று அரசடிச் சந்திப் பகுதியில் வைத்து சிறிலங்கா படை ஒட்டுக்குழுவின் துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் பண்டுவம்(சிகிச்சை) பெற்றுவரும்வேளை 13.07.2004 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அரசியற்துறையின் முக்கிய போராளியான லெப்.கேணல் சேனாதிராஜா, மட்டக்களப்பு மண்ணில் துரோகச் செயற்பாடு முறியடிக்கப்பட்ட பின்னர் மீளவும் மட்டக்களப்பு நகர அரசியற் பொறுப்பாளராக கடமையேற்று விடுதலைப் போரா…
-
- 13 replies
- 2k views
-
-
12.10.1986 அன்று மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிககொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesa...ndex.php?option மண்ணின் விடியலுக்காக தம்மையே ஆகுதியாக்கிய இந்த மாவீரருக்கு எனது வீரவணக்கம்
-
- 13 replies
- 1.8k views
-
-
12.09.1999 அன்று யாழ். நல்லூர் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டலெப்டினன்ட் கேணல் செந்தமிழ் (செந்தமிழ்ச்செல்வன்) அவர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளும், மட்டக்களப்பு அரணகல்வில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். http://www.tamilthai.com/?p=26532
-
- 13 replies
- 1.6k views
-
-
வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். உலங்குவானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் 20.08.1997 அன்று புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர். இதன்போது சிறிலங்கா படையினரின் இரு முதன்மை போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டதுடன் மேலும் இரு டாங்கிகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன. 73மி.மீட்டர்…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
பார்திபன் கனவு எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது, அவன் மனதில் அனல் குடி இருந்தது. உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது, எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது. சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை, எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு, சிதைத்தது பாரத வஞ்சத்தை. பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம். போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது. அவனுக்கு பொருத்தப் பட்டது ஆட்டு ஈரலாம். இருக்கட்டும், அவன் இதயம் வேங்கையினது. அவன் ஒரு சாரம் கட்டிய பொடியன். ஆனால், பாரதத்துக்கே காந்திய சாரம் புகட்டிய வலியன். மருத்துவனாய் வந்திருக்கவேண்டியவன், இனத்தின் ரணத்திற்கு தானே மருந்தாய் வந்தான். முடிவில் மருத்த…
-
-
- 13 replies
- 1.7k views
-
-
25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித் நெடுமாறன் ஐயா வன்னிக்கு வந்து தமிழகம் திரும்பும்போது அவருக்கு பாதுகாப்புக்காக ஜீவன், சபா, மற்றும் லோரன்ஸ், லலித் மன்னார் சென்று பாதுகாப்பாக விக்ரர் அண்ணாவிடம் நெடுமாறன் ஐயாவை விட்டு விட்டு திரும்பி வந்தபோது வவுனியா சாஸ்திரி கூளாங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் கொப்பேகடுவ தலைமையில் பதுங்கி தாக்குதலின் போது. தமிழ் ஈழத்தாயகத்தை மீட்க்கும் போராட்டத்தில் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
-
-
- 13 replies
- 1.4k views
-
-
களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறை நிலையத் தாக்குதலில் காவியமான லெப்.பரமதேவா, வீரவேங்கை ரவி ஆகியோரின் 28ம் ஆண்டு நினைவு நாளும், முல்லைக் கடலில் காவியமான லெப்.கேணல் அருணனின் 14ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். 22.09.1984 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது மட்டக்களப்பு மாவட்ட தாக்குதல் படைத் தளபதி லெப்டினன்ட் ராஜா (இராமலிங்கம் பரமதேவா - மட்டக்களப்பு) வீரவேங்கை ரவி (தம்பையா வாமதேவன் - மகிழடித்தீவு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். 22.09.1998 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் அருணன் …
-
- 12 replies
- 1.8k views
-
-
[size=3][size=4]02.10.1995 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது[/size] [size=4]கடற்கரும்புலி மேஜர் அருமை (செல்லத்துரை விஜயானந்தன் - புத்துவெட்டுவான், கிளிநொச்சி) கடற்கரும்புலி கப்டன் தணிகை (கணபதிப்பிள்ளை வதனா - யாழ்ப்பாணம்) லெப்.கேணல் இளநிலா (செல்வராசா அனுராஜினி - இராமநாதபுரம், கிளிநொச்சி) கப்டன் சுஜீவன் (யோகராசா) (இராசரத்தினம் இராஜேந்திரன் - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) லெப்டினன்ட் அமுதன் (ஏகாம்பரம் குலசிங்கம் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர். இம் மாவீரர்களினதும் இதேநாள் அம்பாறை மாவட்டம் 40ம் கிராமம் …
-
- 12 replies
- 729 views
-
-
லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள் இம்ரான்-பாண்டியன் யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில் – யாழ் 23.03.1960 – 09.01.1988 (விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.) இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழ…
-
- 12 replies
- 1.6k views
-
-
கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும் 03.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/11/03 தமிழ் ஈழ விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரருக்கு வீரவணக்கம் மற்றும் இன் நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கம்.
-
- 12 replies
- 1.4k views
-
-
"தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா) 1930 -2012" கொண்ட கொள்கைக்கும், இலட்சியத்திற்கும் களங்கமின்றி பயணித்த, மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் நல்லதம்பி ஐயா அவர்கள் 06 .08 .2012 அன்று சாவடைந்து விட்டார். இவரின் இழப்பு தமிழ்த் தேசியப் பற்றளார்களை தாக்கியுள்ளது. எதையும் தாங்கும் இதயத்தைக் கொண்டவர்களான நாம் இதையும் தாங்கிக் கொண்ட போதும் இவருடைய நினைவுகளில் மூழ்கி, அழியாத பதிவாக எமது நெஞ்சினில் உறைந்துள்ள சிலவரலாற்று நிகழ்வுகளை எமது மக்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றோம். கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட G3ஐயா, சு.ம என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1930.04.18 நாள் அன்று வாழைச்சேனையில் பிறந்தார். தந்தை பெரியாரின் …
-
- 12 replies
- 1.4k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2011 11:06 | இன்று கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் வீரவணக்க நாள் 15.10.2006 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வீரகாவியமான கடற்கரும்புலி லெப்.கேணல்வளவன் அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=10273:2011-10-16-11-06-51&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 12 replies
- 1.1k views
-
-
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் 16.01.2012 http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக கிட்டுஅண்ணா உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம். http://youtu.be/oODsLTp3jOk
-
- 12 replies
- 1.3k views
-
-
[size=3]வணக்கம் [/size] [size=3]கரும்புலிகள் உயிராயுதம் முகபுத்தக பக்கம் தாய்மண்ணின் மீதும் எம்மீதும் எம்மக்கள் மீதும் அதீத அன்பும் பாசமும் கொண்ட தேசப்புதல்வர்களின் வரலாற்றை என்றும் அழியாது நிலைத்து பாதுகாக்கும் ஒரு முயற்சியே. எமது விடுதலை போராட்டம் இன்னும் முற்றுபெறவில்லை இருப்பினும் எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது தேசபுயல்களின் வீரத்தையும் உறுதியையும் எடுத்து கூறுவது எம் முன்னே இருக்கும் முக்கிய கடமை. எந்த விலை கு[/size][size=3] டுத்தும் வாங்க முடியாத உறுதியின் சிகரங்களாய் விளங்கிய தேசபுயல்களின் சரித்திரங்களின் பதிவுகள் அடங்கிய முகப்புத்தக பக்கமே இந்த கரும்புலிகள் உயிராயுதம். கரும்புலிகள் உயிராயுதத்தில் நாள்தோறும் ஒரு கரும்புலி வீரரின் வீரவரலாறுகளும் அவருடைய பு…
-
-
- 12 replies
- 1.3k views
-
-
28.12.1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். லெப்.கேணல் லக்ஸ்மன் - பொம்பர் (வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் - வாழைச்சேனை, மட்டக்களப்பு) மேஜர் துவாரகன் - பிரதீப் (சிவஞானம் முத்துலிங்கம் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) மேஜர் நிதர்சராஜா (நிவேசன் (மயில்வாகனம் - ஏரம்பமூர்த்தி மட்டக்களப்பு) மேஜர் சத்தியா (அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை - பதுளை) கப்டன் இதயராஜன் (இராமகுட்டி பேரின்பராஜா - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு) கப்டன் வித்துவான் (இரத்தினசிங்கம் மோகனரெத்தினம் - க…
-
- 12 replies
- 2k views
-
-
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர். பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார். சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார். ஆனால் 1983 ஆம் ஆண்டில் …
-
- 12 replies
- 1.9k views
-
-
[size=1][size=3][size=4]கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் திருமலையில் காவியமான மேஜர் பாபு, 2ம் லெப்.நித்தியன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்[/size][/size] [size=3][size=4]09.10.2001 அன்று சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது[/size][/size] [size=3][size=4]கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் (பாலசுந்தரம் தயாபரன் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)[/size][/size] [size=3][size=4]என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.[/size][/size] [size=3][size=4]இம் மாவீரரினதும் இதே நாள் திருகோணமலை வெல்வேரி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை முகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவைத் தழுவிய[/size][/size] [size=3][size=4]மேஜர் பாபு (தெய்வேந்திரம் சிவகுமார் – பி…
-
- 12 replies
- 1.4k views
-
-
வாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரெட்ணாதரன். கரும்புலி மேஜர் ரெட்ணாதரன் குமாரசாமி ஆனந்தன் வீரப்பிறப்பு – 04.05.1975 வீரச்சாவு - 09.08.1999 கோடைமேடு எருவில் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு. அழகின் இரகசியங்களையெல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கிழக்கின் கிராமங்களில் களவாஞ்சிக்குடி கோடைமேடு கிராமத்தின் அழகையும் வளத்தையும் வற்றா ஊற்றாய் வடித்தால் அது பொய்யாகாது. நீரை நிறைத்த அழகான குளமும் அதன் மீது தன் இதழ்களால் வர்ணங்களை அப்பிடி வைத்திருக்கும் பூக்களும் , பறவைகளும் , மீன்களும் பசுமையின் ரம்மியத்தில் கரைந்து போய்விடும் மனசு. இத்தனை ரம்மியங்கள் நிறைந்த கோடைமேடு கிராமத்தில் குமாரசாமி , பூரணிப்பிள்ளை இணையருக்கு ஆனந்தன் என்ற குழந்தை வந்துதித்தான். ஆ…
-
- 12 replies
- 1.8k views
-
-
05.01.2008 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ்(அருள்வேந்தன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம். கேணல் சாள்ஸ் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அவர் தெரிவித்தவை: …
-
- 12 replies
- 3.2k views
-
-
[size=4]திருமலை பள்ளித்தோட்டம் பகுதியில் இராணுவத்துடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரசவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் மற்றும் மட்டக்களப்பு நகர் பகுதியில் சிறீலங்கா படைகளுடன் இணைந்து செயல்ப்பட்ட தேசத்துரோகிகள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் [/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
18.11.1997 அன்று வவுனியா மதியாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் யோகரஞ்சன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 12 replies
- 2.3k views
-
-
முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் காவியமான இரு கடற்கரும்புலிகள் உட்பட்ட மூன்று மாவீரர்களினதும், அக்கரைப்பற்றில் வீரச்சாவைத் தழுவிய லெப். ராகவன் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 04.08.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது ஏற்பட்ட படகு விபத்தில் கடற்கரும்புலி கப்டன் ராகுலன் (ஏரத்பண்டா கிருஸ்ணகுமார் - பரந்தன், கிளிநொச்சி) கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் (பூலோகசிங்கம் புஸ்பகாந்தன் - முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு) மேஜர் சர்மா (ஆறுமுகம் சங்கரலிங்கம் - கல்லடி, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இதேநாள் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையின…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மேஜர் திசையரசி, கடற்புலி லெப்.கேணல் பழனி, கடற்புலி மேஜர் தூயவள் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 15.08.2000 அன்று முல்லைக் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஏற்பட்ட படகு விபத்தில் கடற்கரும்புலி மேஜர் திசையரசி (செல்லச்சாமி செல்வம் - உடுத்துறை, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்.கேணல் பழனி (பழனிராஜ்) (அங்கமுத்து சிவநாதன் - கண்டி, சிறிலங்கா) கடற்புலி மேஜர் தூயவள் (சங்கரப்பிள்ளை விஜயலட்சுமி - முரசுமோட்டை, கிளிநொச்சி) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாயக விடுதலைப் பயணத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய…
-
- 12 replies
- 1.1k views
-
-
15.08.1999 அன்று கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் மற்றும் மேஜர் எழில்வேந்தன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருமலை - முல்லைத்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு அணி மீது 15.08.1999 அன்று அதிகாலை கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. கடுமையான சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையின் டோறாப் படகு ஒன்றை மீது கடற்கரும்புலிகள் தமது வெடிமருத்துப் படகினோல் மோதி வெடிக்கவைத்து மூழ்கடித்தனர். இதன்போது கடற்கரும்புலி லெப்.க…
-
- 12 replies
- 1.8k views
-