Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. மரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.! Last updated Feb 6, 2020 கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. 2005 பெப்ரவரி 7 சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது. – தமிழீழத் தேசியத் தலைவர…

  2. முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 1 படைநடவடிக்கையில் 19.07.1996 அன்று நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் (19.07.1996) படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முல்லைத்தீவு தளத்தில் தாக்குதலுக்குள்ளா…

  3. 15.08.1999 அன்று கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் மற்றும் மேஜர் எழில்வேந்தன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருமலை - முல்லைத்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு அணி மீது 15.08.1999 அன்று அதிகாலை கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. கடுமையான சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையின் டோறாப் படகு ஒன்றை மீது கடற்கரும்புலிகள் தமது வெடிமருத்துப் படகினோல் மோதி வெடிக்கவைத்து மூழ்கடித்தனர். இதன்போது கடற்கரும்புலி லெப்.க…

  4. வாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரெட்ணாதரன். கரும்புலி மேஜர் ரெட்ணாதரன் குமாரசாமி ஆனந்தன் வீரப்பிறப்பு – 04.05.1975 வீரச்சாவு - 09.08.1999 கோடைமேடு எருவில் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு. அழகின் இரகசியங்களையெல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கிழக்கின் கிராமங்களில் களவாஞ்சிக்குடி கோடைமேடு கிராமத்தின் அழகையும் வளத்தையும் வற்றா ஊற்றாய் வடித்தால் அது பொய்யாகாது. நீரை நிறைத்த அழகான குளமும் அதன் மீது தன் இதழ்களால் வர்ணங்களை அப்பிடி வைத்திருக்கும் பூக்களும் , பறவைகளும் , மீன்களும் பசுமையின் ரம்மியத்தில் கரைந்து போய்விடும் மனசு. இத்தனை ரம்மியங்கள் நிறைந்த கோடைமேடு கிராமத்தில் குமாரசாமி , பூரணிப்பிள்ளை இணையருக்கு ஆனந்தன் என்ற குழந்தை வந்துதித்தான். ஆ…

    • 12 replies
    • 1.8k views
  5. தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது.படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தக…

    • 1 reply
    • 1.8k views
  6. பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று! பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை படை நடவடிக்கையில் வீரச்சாவை அணைத்து கொண்ட வேங்கைளின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 11.11.1993 தொடங்கப்பட்ட படை நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பலாலி படைத்தளத்திலி…

  7. வெளியேறுங்கள் அண்ணா! – தலைவருக்கு எழுதிய கடைசிக் கடிதம்! – பிரிகேடியர் துர்க்கா “அண்ணா! எங்களை நம்புங்கள், நீங்கள் வெளியே இருந்து கட்டளை இடுங்கள். நாங்கள் அதனைச் செயற்படுத்துகின்றோம். நீங்கள் எங்களுக்கு மட்டுமல்ல எங்கட மக்களுக்குக் கட்டாயம் தேவை. அதனால் தயவு செய்து ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுங்கள் அண்ணா இதனை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எங்களுடைய தமிழ்மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.” இதுதான் அவள் தலைவருக்கு எழுதிய கடைசிக் கடிதம். உண்மையிலேயே ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுவது என்ற எண்ணம் தலைவர் அவர்களிடம் ஒருதுளியும் இருக்கவில்லை. இறுதிவரை நின்று போராடுவது என்றே தலைவர் முடிவெடுத்திருந்தார். ஆனாலும், அந்தக் கடிதத்தில் இரு…

  8. அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் கரும்புலிகளின் பொங்கல்...! www.facebook.com/karumpulimaveerarkal கரும்புலிகள் உயிராயுதம்

  9. 12.10.1986 அன்று மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிககொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesa...ndex.php?option மண்ணின் விடியலுக்காக தம்மையே ஆகுதியாக்கிய இந்த மாவீரருக்கு எனது வீரவணக்கம்

    • 13 replies
    • 1.7k views
  10. 26.06.2000ம் அன்று இரணைமடுக்குளத்தில் மூழ்கி சாவினை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராஜசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை உவப்பீகை செய்த இந்த வீரமறவனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

  11. உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விததுச்சென்ர ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் தேதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி 7பக்கங்களுக்கு’உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியளுக்காகா தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஈகைப்பேரொளி முருகதாசன் உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள் என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறு…

    • 0 replies
    • 1.7k views
  12. பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி “சத்ஜய” என்ற குறியீட்டுப் பெயருடன் பெருமெடுப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 67 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமா…

  13. தமிழீழ தேசிய மாவீரர் வாரம் ஜனவரி 15, 2013 | வழித்தடங்கள். களம் வீழ்ந்த முதல் வேங்கை மாவீரர் தினம் இதுதான் “தாயகத்திலும் தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் “தமிழீழத் தேசிய மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது ” உலகமெலாம் தமிழர் ஒன்றுதிரளும் செய்தி விண்ணதிரக் கேட்கிறது. “இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்” 1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் …

  14. வாகரை படைமுகாமின் இரண்டாம் கட்டளை மேலாளர் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1990களில் மட்டக்களப்பில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்பு பட்ட வாகரை படை முகாமின் இரண்டாவது கட்டளை மேலாளரான மேஜர் கருணாநாயக்க மீது வாகரைப் படை முகாமில் வைத்து 09.08.1999 அன்று கரும்புலித் தாக்குதலை நடாத்தி கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

  15. இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள் (Video & Photo in) Wednesday, October 5, 2011, 8:46 இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் அப்துல்லா, ரகு, நளன், பழனி, மிரேஸ், றெஜினோல்ட், தவக்குமார், அன்பழகன், கரன், ஆனந்தக்குமார் ஆகியோரின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1987ம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு இலங்கை – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 198…

  16. Started by விசுகு,

    மாவீரர் வாரம் தொடங்கிவிட்டது. மாவீரர்நாள் வருகிறது. ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது. தெய்வங்களாக வணங்குவோரும் தூற்றுவோரும் துண்டாடுவோரும் ஒரு வைபவமாக கடந்து செல்கின்றோம் ஒரு முறையாவது சிந்தித்தோமா? 2009க்கும் தற்பொழுதும் எமது பலம் எவ்வாறுள்ளது? தாயகத்தை தற்போதைக்கு விடுவோம். புலத்தில் எமது அமைப்புக்கள் வலுவாக உள்ளனவா? வலுவிழக்க யார் காணரம்?? நாமே தான். இதை உணருவோமா?? 2009 இலிருந்து எழுதி வருகின்றேன் அமைப்புக்களை பலமிளக்க செய்யாதீர்கள். மீண்டும் கட்டியமைப்பதென்பது???? அமைப்புக்கள் பாடசாலைகள் விளையாட்டுப்பகுதிகள் கலைப்பிரிவுகள் என தூர நோக்கோடு அவை கட்டியமைக்கப்பட்டன அவை எல்லாம் ஒழுங்காக…

  17. போராளிக் கலைஞன் / பாடகன் மேஜர் சிட்டு ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவ…

    • 11 replies
    • 1.7k views
  18. இன்று (10/1/14) அன்புத் தம்பி பாலச்சந்திரனின் 16வது பிறந்தநாள்.. தமிழீழ தேசத்தின் மீது இனவெறியர்களும், ஏகாதிபத்தியங்களும் நடத்திய போரில் இனவிடுதலை கோரிக்கையான தனித்தமிழீழ கோரிக்கையை மனதில் ஏந்தி போரிட்டு வீரமரணம் அடைந்த போராளிகள் மற்றும் தமிழீழ மக்களின் உருவகமாக இருப்பவன் பாலச்சந்திரன்.. இனப்படுகொலைக்கு ஆளான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சாட்சியாக இருக்கின்றான் பாலச்சந்திரன். பால் முகம் மாறாத அந்த பாலகனின் முகம் இங்கு தூங்கி கிடந்த அண்ணன்களை வீறு கொண்டு எழவைத்திருக்கின்றது வீரம் தெறிக்கும் அவனது விழிகள் ஈழச்சுடரை எமது கைகளில் திணித்து இனத்தின் விடுதலையை நோக்கி ஓடவைத்திருக்கின்றது. பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு அவன் சுட்டு கொல்லப்பட்ட காட்சிகள், பாதுகாப்பான இடங்கள் என அறிவ…

  19. பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார். தமிழீழ மக்கள் மனங்கள…

  20. லெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் டிசம்பர் 6, 2013 | வீரவணக்க நாள். லெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டுநகர் வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மட்டு – அம்மாறை மாவட்ட தளபதி லெப். கேணல் ஜீவன் உட்பட ஏழு மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் விடியலுக்காய் தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்… ஜீவனுள்ள நினைவுகள்…. கிழக்கில் விழுந்த வித்துக்கள் (இறுவெட்டு) கப்டன் சேகரன் (சண்முகம் காந்தரூபன் – மட்டக்களப்பு) வீரவேங்கை தயாபரன் (கிருஸ்ணபிள்ளை இராசு – மட்டக்களப்பு) வீரவேங்கை சுஜீவன் (ந…

  21. 09.01.1985 அன்று யாழ். ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகைக்கு எதிராக தீரமுடன் களமாடி வரலாறாகிய கப்டன் பண்டிதர்(இளங்கே) உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினருடன் தீரமுடன் களமாடி தமது தோழர்கள் தப்பிச்செல்ல வழியேற்படுத்திக்கொடுத்து கப்டன் பண்டிதர்/இளங்கோ (சின்னத்துரை ரவீந்திரன் – கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) வீரவேங்கை நேரு (செல்லையா தில்லைச்சந்திரன் – கச்சேரி, யாழ்ப்பாணம்.) வீரவேங்கை கராட்டி ரவி/ராஜீவ் (சோமசுந்தரம் பிரதாபன் – நல்லூர், யாழ்ப்பாணம்.) வீரவேங்கை சாமி (ஆறுமுகம் தவரத்தினம் – ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்.) வீரவேங்கை தவம் (நடே…

  22. சுகவீனம் காரணமாக சாவடைந்த கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். கேணல் ராயு அவர்கள் தொடர்பான குறிப்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயு அண்ணை புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆரா…

  23. போரில் மாண்ட வீரர்கள் நினைவுக் கல்லறை - கனகபுரம் . Sri Lanka: Kanagapuram warrior Cemetery 2004 - போரில் மாண்ட வீரர்கள் நினைவுக் கல்லறை - கனகபுரம் . நன்றி - யூரூப்

  24. சென்ற 16.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிக் கடற் கலங்களை மூழ்கடித்து மேலும் சில கடற்கலங்களை தேசமாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர், லெப்.கேணல் குமுதன் உட்பட்ட….. ….கடற் கரும்புலிகள் லெப்.கேணல் அனோசன், மேஜர் அருணா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி மற்றும் – 10 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற் புலிகளும், கடற் கரும்புலிகளும் சிறிலங்கா…

  25. 16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பலையடிவெட்டைப் பகுதியில் சிறலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள். இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர். தென் தமிழீழத்தின் புகழ் புத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.