தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
திருமூலர் பெரியார் - சுப. சோமசுந்தரம் சமீபத்தில் திருமந்திரப் பாடல்கள் சிலவற்றை நினைவுகூர்ந்து முகநூலில் பதிவு செய்திருந்தேன். பெரியாரும் அச்செய்தியைத்தான் கூறுகின்றார். சொல்லும் முறைதான் வேறு. "கடவுளை மற, மனிதனை நினை" என்பவர் பெரியார். "மனிதனை நினை, அதன் வாயிலாய்க் கடவுளை நினை" என்று மாற்று மொழியில் சொல்பவர் திருமூலர். மனிதனை முன்னிறுத்துவதில் இருவரும் ஒரே அணிதான். இறையிருப்புக் கோட்பாட்டில் மட்டுமே எதிரெதிர் அணி. திருமூலர் சிவத்தில் திளைத்து இறையிருப்பிலும், பெரியார் இறை மறுப்பிலும் நிற்கின்றனர். இவ்விடயத்தைப் பொருத்தமட்டில் ஒற்றுமையில் வேற்றுமை அமைந்திருக்கிறது…
-
- 1 reply
- 978 views
- 2 followers
-
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. (மழை பெய்யாமல் பொய் படுமானால் கடல் சூழ அகன்ற உலகமாக இருந்தும் உள்ளே பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.) திருவள்ளுவர் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய து¡உம் மழை. (உண்பவர்க்கு தக்க உணவுப் பொருட்களை விளைத்துத் தருவதோடு பருகுவார்க்கு தானும் ஒர் உணவாக இருப்பது மழையாகும்.) திருவள்ளுவர் வான்சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால் மழையானது உலகத்து வாழும் உயிரிகளுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.) திருவள்ளுவர் சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினு¡உங்கு ஆக்கம் எவனோ உயிர்…
-
- 15 replies
- 4.3k views
-
-
திருவள்ளுவர் திருநாளும், தொல்காப்பியர் திருநாளும் தமிழ்ச் சங்க இலக்கியங்களையும், அவை மருவிய காலச் சூழலையும், கல்வெட்டுக்களையும் ஆராயும் தமிழறிஞர்கள் திருக்குறள் சங்கம் மருவிய காலமாகிய கி.பி. நான்காம் நூற்றாண்டு வாக்கில் உருவாகிய நூலெனவும், வள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்பது துறவு, புலால் உண்ணாமை போன்றவற்றை வலியுறுத்துவதாலும், கடவுள் வாழ்த்து அதிகாரத்தாலும் சான்று காட்டியுள்ளனர். சமணர்கள் என்றைக்குமே வள்ளுவதேவர் அருளிய தமிழ்மறையை “எம் ஓத்து” என்று கொண்டாடுகின்றனர். களப்பிரர் காலத்தில் தமிழில் சிரமண சமயங்களின் கொடை மிகுதியானது. அப்போதைய சமணக் காப்பியம் சிலப்பதிகாரமும், பெளத்தர்களின் காப்பியம் மணிமேகலையும் சிறந்த ஆதாரங்கள். பதினெண் கீழ்க்கணக்கில் சிறந்த குறளும், நாலடியா…
-
- 0 replies
- 2.1k views
-
-
திரைப்பட பாடல்களில் இலக்கணம். திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம். தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக... அடுக்குத்தொடர்: ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. சினைப்பெயர்: பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. பொருட்பெயர்: கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல இடப்பெயர்: வீடு வரை உறவு வீதி வரை மனைவி! காலப்பெயர்: வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் …
-
- 0 replies
- 2.7k views
-
-
சிதம்பரம் நடராசன் கோயிலில் திருவாசகம் பாடலாம் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்து விட்டது. இந்து அறநிலையத் துறை ஆணையர் திரு. பிச்சாண்டி அவர்கள் விசாரணை செய்து, நடராசன் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு அனுமதியளித்துள்ளார். நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பினை எடுத்துக்காட்டியும், சம்பிரதாயங்களை மேற்கோள்காட்டியும் இந்து அற நிலையத்துறை ஆணையர் அத்தகைய ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார். ஆறுமுகசாமி என்ற சிவ பக்தர் (வயது 73) இந்தப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டும் வருகிறார். அவரை தில்லை நடராசன் கோயில் தீட்சதர்கள் அடித்து கையையும் முறித்தனர். அதுபற்றி காவல்துறையில் அவர் புகார் கொடுத்தும், தீட்சதர்கள…
-
- 0 replies
- 956 views
-
-
நான் கல்லூரியில், பட்டிமன்றத்தில் கேட்டு ரசித்த கவிதை. இப்போது ஏனோ நினைவுக்கு வருகிறது: ஒருவன் பாரதியிடம் அவர் யாரென்று தெரியாமல் பீடி பற்றவைக்க தீப்பெட்டி இருக்கறதா என்று கேட்பதும், அதற்கு பாரதியின் பதிலுமே கவிதை : "தீப்பெட்டி உண்டா பீடி பற்ற வைக்க?" "தீப்பெட்டியில்லை, ஆனால் தீ உண்டு நெஞ்சில், உலகின் தீமைகளை பற்றவைக்க"
-
- 0 replies
- 844 views
-
-
தும்மல் விளைவித்த ஊடல்! தும்மல்' என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் உருவாகும் தடையழர்ச்சியின் வெளிப்பாடாக, திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது. தும்மல், "நீர்க்கோவை'யாலும் (ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை, அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும். இவைதவிர மனவியல் காரணங்களாலும் தும்மல் உருவாகும் என்று கூறப்படுகிறது. மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசும்போது தும்மல் போடுபவர்கள் கடிந்துகொள்ளப்படுவதும் நடைமுறையில் உள்ளது. தும்முபவர் ஒற்றைத் தும்மலுடன் நிறுத்திவிடாமல், மேலும்…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
நான் அறிந்த ஒரு சில தூய தமிழ்ச் சொற்களை இப் பகுதிக்கு எடுத்து வந்துள்ளேன். மேலதிகமான தூய தமிழ்ச் சொற்களை அறிந்தவர்கள் இப்பகுதிக்கு எடுத்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி சைக்கிள் - மிதியுந்து அலாரம் - துயிலெழுப்பி மோட்டார்ச்சைக்கிள் - உந்துருளி லொறி - பாரஊந்து பேக்கரி - வெதுப்பகம் ஜிவலரி - பொற்தொழிலகம் ஐஸ்கிறீம் - குளிர்கழி கூல்பார் - குளிர்பருகை நிலையம் எயிட்ஸ் - எசகு நோய் (எதிர்ப்பு சக்தி குறைவு) புகையிரதம் - தொடருந்து சந்தோசம் - மகிழ்ச்சி
-
- 39 replies
- 29.3k views
-
-
ஆகமம் = தூய தமிழ்ச் சொல் ‘ஆகமம்’ என்ற சொல் தமிழிலும் வடமொழியிலும் உள்ள தற்சமம் என்ற வகையைச் சேர்ந்த சொல். ஆகமம் என்ற வடசொல்லிற்குப் பொருள் வேறு. ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லிற்குப் பொருள் வேறு. ஆகமம் என்ற வடசொல்லிற்கு வந்தது என்று பொருள் என வடமொழி வல்லுனர்கள் கூறுகின்றனர். எதிலிருந்து வந்தது? எங்கிருந்து வந்தது? எப்போது வந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு அதில் விடையில்லை. எனவே, இது குன்றக் கூறலாய் வடமொழியில் அவாய் நிலையைக் கொண்டு நிற்கும் சொல். அவாய் நிலை என்பது பின்னும் பல தகவல்களை அவாவிய நிலையில் உள்ளது என்று பொருள். அடுத்து ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லை பின்வருமாறு பிரித்துப் பொருள் காணலாம். ஆ+கம…
-
- 0 replies
- 478 views
-
-
வணக்கம், சூரியன், சந்திரன், உதயம் இதெல்லாம் தமிழ் சொல்லுகள் இல்லையாம்; வடமொழிச் சொல்லுகளாம். இப்பிடி வழமையில பயன்படுத்துகிற சொற்களில அரைவாசிக்கு மேல வடமொழிச் சொல்லுகளாம். ஓர் தமிழ் அறிஞருடன் கதைச்சபோது சொன்னார். அவருடன் தொடர்ந்து நான் தமிழில் (?) உரையாடிய போது இப்பிடிச் சொன்னார்: தமிழில இருக்கிற பலவித கிளைகளை பாவிச்சு தேவையான அளவுக்கு புதிய தமிழ்ச் சொல்லுகளை உருவாக்கலாமாம். உதாரணமாக, ஆங்கிலத்தில இருக்கிற குளோரபில் - Chlorophyll எனப்படுகிற சொல்லிண்ட அர்த்தத்தை புரிந்து அதற்கு நிகராக தமிழில பச்சையம் என்று ஓர் சொல் உருவாக்கப்பட்டதாம். காந்தம் எண்டுறது தமிழ்ச்சொல் இல்லையாம். நான் கேட்டன் அப்ப அதுக்கு என்ன தமிழ்சொல்லு எண்டு. அவரால் உடனடியாக பதில் சொல்ல முட…
-
- 6 replies
- 2.1k views
-
-
நாம் அன்றாடம் பயன்படுத்தும், பழமொழிகளின்... உண்மையான அர்த்தம் இதுதான்.
-
- 1 reply
- 2.6k views
-
-
"தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையிலும் நுண்ணிதே ஆயினும், அண்ணல் யானை அணிதேர், புரவி, ஆள் பெரும்படையொடு மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே" - வெற்றிவேற்கை நன்கு வளர்ந்த ஆலமரத்தில் உள்ள கனிந்த ஆலம்பழத்தின் உள்ள ஒரு சிறு விதையானது சிறிய மீனின் முட்டையை விடவும் சிறிதாக இருப்பினும் கூட, அந்த விதையால் உருவான ஆலமர நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட் படை என்னும் நால்வகைப் படையைக் கொண்ட மன்னனும் தங்க முடியும். அதைப்போல,நீங்கள் பிறர்க்குதவும் செல்வம் குறைந்த அளவே இருப்பினும்கூட அது அவர்களுக்கு மிகப் பெரிய உதவியாகக் கூடும். இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!
-
- 3 replies
- 19.8k views
-
-
தொடரும் தவிப்பு. (உண்மைக்கதையின் வதைசொல்லும் பார்வையிது) - சாந்தி ரமேஷ் வவுனியன் - 'தொடரும் தவிப்பு" தூக்குமர நிழலில் நிற்கும் ஒரு மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் கதை. இல்லை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுதலையாகாமல் தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்படாமல் சிறையிருக்கும் பேரறிவாளனின் கதை இந்த தொடரும் தவிப்பு. உண்மையை உள்ளபடி ஆவணப்பதிவாக்கியவர் ப.ழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி. 2004யூன் மாதம் வெளிவந்த இந்நூல் பற்றி எழுத வேண்டும் என எண்ணிய கணங்கள் ஒவ்வொன்றும் எதை எழுத என்று குழம்பிவிட்ட தருணங்கள் பல... நூலைக் கையிலெடுத்து வாசித்து முடியும் வரையும் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை தவிர்க்க முடியாதபடி…
-
- 12 replies
- 3.4k views
-
-
கலை / இலக்கியம்! தேங்கோ நடனம் : காதலின் கலை வடிவம் - யமுனா ராஜேந்திரன் - 1 தகதகவெனக் கொழுந்துவிட்டு மூண்டெழுந்து நடனமிடும் நெருப்பு. ‘ஆரத்தழுவி எனக்குள் மூழ்கிக் கலந்து விடு’ என, ஆண்பெண் உடல்கள் எதிர்பாலிடம் விடுக்கும் விரகத்தின் அழைப்பு. அடர்ந்த இரத்தத்தின் அடையாளமாகி கிளர்ச்சியூட்டும் சிவப்பு நிறத்தின் தவிப்பு. ‘ஸல்சா’ முதல் ‘தேங்கோ’ வரையிலுமான இலத்தீனமெரிக்க நடனங்களை நினனைக்கும் தோறும், இந்த மூன்று பிம்பங்களும், இவைகளின் அப்படைகளையேனும் அறிந்தவர்ககு முன்வந்து, பரவசம் எமது நரம்புகளில் பரவுவதை அனுபவிக்க முடியும். ஸ்பானியத் திரைப்பட இயக்குனரான கார்லோஸ் ஸவ்ராவின் ‘இரத்தத் திருமணம்’( Blood wedding 1981) திரைப்படம…
-
- 4 replies
- 3k views
-
-
*தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு காரணம் ஏன் தெரியுமா?*.. தேன் கொண்டு வந்தவனை பார்த்து, நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை? என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்.... ஐயா நீங்கள் கூறியதை நினைத் தேன் ! கொல்லிமலைக்கு நடந் தேன்! பல இடங்களில் அலைந் தேன்! ஓரிடத்தில் பார்த்தேன் ! உயரத்தில் பாறைத் தேன்! எப்படி எடுப்பதென்று மலைத் தேன்! கொம்பொன்று ஒடித் தேன்! ஒருகொடியை பிடித் தேன் ! ஏறிச்சென்று கலைத் தேன்! பாத்திரத்தில் பிழிந் தேன்! வீட்டுக்கு வந் தேன்! கொண்டு வந்ததை வடித் தேன்! கண்டுநான் மகிழ்ந் தேன்! ஆசையால் சிறிது குடித் தேன் ! மீண்டும் சுவைத் தேன் ! உள்ளம் களித் தேன்! உடல் களைத் தேன் ! உடனே படுத் தேன்! கண் அயர்ந் தேன்! காலையில் கண்வி…
-
- 3 replies
- 955 views
-
-
தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் "தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!" --------------திருமந்திரம் பாடல் 3065. பாடற் குறிப்பு : புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்.... பாடற் பொருள் : தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த ஊனுடம்புக்குள்ளேயே ஈச…
-
-
- 1 reply
- 567 views
- 1 follower
-
-
எனக்கு மிகவும் பிடித்த ஒரு மேடைநாடகத்தைப் பற்றியது இந்தக்கட்டுரை. கூடவே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களும் இந்த நாடகத்தில் நடித்திருப்பதால் இந்த கட்டுரையை எழுதுவது சந்தோசமான அனுபவமாகவிருக்கிறது. இந்த நாடகம் எங்கே ஆரம்பித்தது? பாரதக்கதையின் ஒரு கிளைக்கதைதான் இது என்றாலும் வியாசரின் மகாபாரதத்தில் தொட்டதைவிட வில்லிபுத்தூராழ்வார் தமிழில் இயற்றிய 'வில்லிபாரதம்' என்ற நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பி.எஸ்.ராமையா இந்தநாடகத்தை எழுதியவர், மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடகநடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் (பின்னாளில் குணசித்திரபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர்) நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய…
-
- 2 replies
- 3.4k views
-
-
தொல் தமிழர் கொடையும் மடமும்.. செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். கொடை விளக்கம் கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், பு…
-
- 0 replies
- 3.1k views
-
-
தொல்காப்பிய கால பெண்களின் நிலைகள் முனைவர் பூ.மு.அன்புசிவா தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலக்கட்டங்களில் பல ஆய்வாளர்கள் வௌ;வேறு விதங்களில் இதன் காலத்தை கணிக்க முயன்றுள்ளார்கள். பண்டையக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந்நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும். தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனி…
-
- 0 replies
- 1.5k views
-
-
தொல்காப்பியம் http://tawp.in/r/2wz கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல் தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம் அகத்தியம் தொல்காப்பியம் பதினெண் மேற்கணக்கு எட்டுத்தொகை ஐங்குறுநூறு அகநானூறு புறநானூறு கலித்தொகை குறுந்தொகை நற்றிணை பரிபாடல் பதிற்றுப்பத்து பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை குறிஞ்சிப் பாட்டு மலைபடுகடாம் மதுரைக் காஞ்சி முல்லைப்பாட்டு நெடுநல்வாடை பட்டினப் பாலை பெரும்பாணாற்றுப…
-
- 0 replies
- 15.9k views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல் பாடல்: ‘மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. - தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5 ‘மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.’ தவறுகள்: இப்பாடலின் முதல் வரியில் ‘காடுறை’ என்ற சொல்லில் ‘டு’ …
-
- 1 reply
- 11.5k views
-
-
தொல்காப்பியரும் சம்ஸ்கிருதமும் தொல்காப்பியம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தியதென்பது ஒரு முடிவு. அது எத்தனை யாயிர வருடங்களுக்கு முந்திய தாயினுமாகுக; அதற்கு முந்தியே தமிழகத்திற் சம்ஸ்கிருதமுண்டு. அது தமிழகத்திற்கு வந்த மொழியென அந்நூல் சொல்லவில்லை. அம்மொழிச் சொற்களைத் தமிழ் நூல்களில் வழங்குவதற்கு அதுவே விதியும் வகுத்தது. அச்சொற்களை திசைச்சொற் கூட்டத்திலும் அது சேர்த்திலது. அம்மொழி வேதமும் அந்நூலில் இடம் பெற்றது. அங்ஙனமாகப் பின்வந்த சங்க நூல்களும் அம்மொழியின் சம்பந்தத்தையும், சகாயத்தையும் பெற்றனவே யென்பதிற் சந்தேகமில்லை. தொல்காப்பியம் என்ற சொல்லுக்கு இலக்கணங் கூற வந்த ஆசிரியர் அதனைக் கூறியதோ டமையாது ஐந்திர முதலிய வடசொற் போல வந்த தென்றுங் கூறி விளக்கினார் சங்கப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
தோற்றவர் வென்றார் - சுப. சோமசுந்தரம் இத்தலைப்பு வள்ளுவத்திலிருந்து சுடப்பட்டது என்பது இந்த எழுத்துக்கான பேறு. ஆனால் இத்தலைப்பில் எனது பேசுபொருள் வேறு என்பதைச் சுட்டுவதும் என் கடமை. வள்ளுவன் காமத்துப்பாலில், "ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப்படும்" (குறள் 1327) என்று காதற் களத்தில் ஊடலில் தோற்பதைச் சொல்வான். தமிழர் வாழ்வில் தலையாயவை காதலும் வீரமும்தாமே ! இங்கு நாம் மற்றொரு துறையான வீரத்தைக் கையிலெடுத்துப் பொர…
-
- 1 reply
- 1k views
- 2 followers
-
-
நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலைப்பாடு முன்னுரை. தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும். தோழி தோழி என்ற சொல்லை தோழூூ இ எனப் பிரித்தால் ‘இ’ என்பது பெண்பால் விகுதியைக் குறிக்கின்றது. தோளோடு தோள் நின்று உழைத்தல், தோள் கொடுத்தல் என்பன உதவுதல் என்ற பொருளில் இருந்தே தோழி என்ற சொல்லானது தோன்றியது. இகுனை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி, சேடி, சகி போன்ற சிறப்பு பெயர்களால் தோழியினை அழைக்கின்றனர். தோழி இல்லையேல் காதல் இல்லை, அகப்பொருளும் இல்லை என்று சுட்டும் அளவிற்கு சிறப்பைப் பெற்ற…
-
- 0 replies
- 3.3k views
-