தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
வாழ்வியல் தடமாற்றமும் வள்ளு வரின் தடுமாற்றமும் மானுட வாழ்வியல் காட்டுமிராண்டி நிலையிலிருந்து கணினி, இணைய நிலையை வந்தடைந்திருக்கிறது. இதற்கிடைப்பட்ட பல்லாயிரமாண்டு காலப் பரிணாம வளர்ச்சியையும் பரிமாண நிலைகளையும் உள்ளடக்கிக் கொண்டு உயர்ந்துள்ளது. தனிமனித குடும்ப, சமூக, அரசு நிலைகளில் மானுட வாழ்வியல் தத்தமக்கென ஒழுகலாற்று நெறிகளை உருவாக்கிச் செம்மைப்படுத்திக் கொண்டே இயங்குகிறது. மரபுகள், விழுமியங்கள், அறநெறிகள் மனிதனின் இயல்புநிலைகளைச் செம்மைப்படுத்து கின்றன. தமிழர்களின் வாழ்வியலைச் சங்காலச் சமூக அகம், புறம் என்ற பாகுபாட்டுமுறை பல்வேறு இலக்கிய, இலக்கணங்களின்வழி உயிர்ப்புமிக்கதாக நிலவச்செய்யும் வல்லமையுடன் வாழ்கிறது. எனினும், காலந்தோறும் மானுட வாழ்வியல் தன் இயல்புக்கேற்ற …
-
- 0 replies
- 1k views
-
-
தோற்றவர் வென்றார் - சுப. சோமசுந்தரம் இத்தலைப்பு வள்ளுவத்திலிருந்து சுடப்பட்டது என்பது இந்த எழுத்துக்கான பேறு. ஆனால் இத்தலைப்பில் எனது பேசுபொருள் வேறு என்பதைச் சுட்டுவதும் என் கடமை. வள்ளுவன் காமத்துப்பாலில், "ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப்படும்" (குறள் 1327) என்று காதற் களத்தில் ஊடலில் தோற்பதைச் சொல்வான். தமிழர் வாழ்வில் தலையாயவை காதலும் வீரமும்தாமே ! இங்கு நாம் மற்றொரு துறையான வீரத்தைக் கையிலெடுத்துப் பொர…
-
- 1 reply
- 1k views
- 2 followers
-
-
விண்வெளியில் உள்ள ஒரு நிலவினையோ அ ஒரு கோளினையோ சுற்றி தகவல் சேகரிப்பதற்காக மனிதனால் ஏவப்பட்ட இயந்திரமே இந்த செய்மதி அ செயற்கைக்கோள் ஆகும். ஆனால் இதைக் குறிப்பதற்கான சொல்லாக நமது தமிழ் மொழியில் நில அடிப்படியிலான இரு பெரும் எழுத்து வழக்குகளில் இரு வேறு சொற்கள் கையாளப்படுகின்றன. அவற்றுள் எது பொருள் அடிப்படியில் சரியானது என தற்போது பார்ப்போம். (எனக்குப் பட்டதை நான் எழுதிவைக்கிறேன்.) செய்மதி = செயற்கை நிலவு → ஈழம் செயற்கைக்கோள் = செயற்கை கோள்மீன் → இந்தியா ————————————————— முதலில் ஈழத் தமிழின் செய்மதி விளக்கத்தினை பார்ப்போம். விண்ணில் உள்ள செயற்கைக்கோளானது மனிதர்களால் செய்து அனுப்பப்பட்ட ஒரு செயற்கையான புவியை மையமாகக் கொண்டு சுழலும…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
வட்டுக்கோட்டைக்கு வழி என்ன எண்டு கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு கருத்து வழியைக் காட்ட சொன்னா, துட்டு ( 1காசு ) இரண்டு பாக்கு வாங்கலாம் எண்டு சொல்லுங்கள் சில சனம் அப்பிடின்னா சாதாரணமா எங்கட ஆக்கள் சிலரின்ர குணம் ஒண்டு இருக்குது. ஒரு கேள்வியக்கேட்டா அதுக்கு நேரா விடை சொல்லத்தெரியாது. அங்க போய், இங்க வந்து சுத்தி வளைச்சுத்தான் பதில் சொல்லுவினம். இது போன்ற சில சொற்கள் ஈழத்தில நாங்க பயன்படுத்தினது. அதாவது ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ற மாதிரி கனக்க வார்த்தை பிரயோகங்கள் இருக்குது. இதை நான் ஏன் இங்க வந்து சொல்லிறன் எண்டு நினைக்கிறியளே அது ஒண்டும் பெரிசா இல்லைங்கோ. எதிர்கால சந்ததியினருக்கு இது போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் போய்்ச்சேருமோ எண்ட…
-
- 3 replies
- 1k views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
தமிழை எதிர்ப்பவர்களுக்கு பயங்கர பதிலடி உலகநாயகி பழனி
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ், குறிகளும் ஒற்றும் January 23, 2022 அன்புள்ள ஜெ.. எழுத்து குறித்த அடிப்படையான ஒரு கேள்வி.முற்றுப்புள்ளி , காற்புள்ளி போன்றவை ஆரம்ப கால தமிழில் இல்லை… போக போக தமிழில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இதன் பயன்பாடு குறித்து ஒரு தெளிவு இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.. உதாரணமாக விகடன் போன்ற பத்திரிகைளில் எல்லா வாக்கியங்களிலுமே ஓர் ஆச்சர்யக்குறியை போட்டு விடுவார்கள்… ஒரு முறை பாலகுமாரன் எழுத்தை இப்படி ஆச்சர்யக்குறி போட்டு “ அழகு படுத்திய” ஒரு பத்திரிக்கையைக் கடுமையாக சாடி இருந்தார் வாக்கியங்களின் நடுவே ஒரு பிராக்கெட்டை சேர்த்து சுஜாதா அழகாக காமெடி செய்வார்…அடுத்தடுத்த முற்றுப்புள்ளிகள் வைப்பதன் மூலம் ஒ ஸ்லோனசை (நிதானத்தன்மை) ஏற்பட…
-
- 0 replies
- 998 views
-
-
அனைவருக்கும் வணக்கம்.. மருத்துவமும் சிங்கைநாடும் என்னும் காணொளியை பார்த்தேன். மிகவும் பிரயோசனமாக இருந்தது. பேரறிஞர் டாக்டர்.கே. பாலசுப்ரமணியம் அவர்கள் சில விடயங்களைக் கூறியிருக்கிறார்.. அகத்தியர் இலங்கையில் பிறந்தவர். பழைமையான தமிழர் பிரதேசமான மகேந்திரமலையே தற்கால மிகிந்தலை.. இது போல பல.. நீங்களும் பாருங்கள்..
-
- 0 replies
- 996 views
-
-
திரைப் படங்களில் வரும் பாடல்களில் உள்ள கற்பனைகள் சில சமயம் விமர்சனத்திற்குள்ளாவது சகஜம். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை கவிக்கோ அப்துல்ரகுமான் விமர்சனம் செய்தார். "தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்” என்ற பாடலின் அர்த்தம் என்னவென்றால் தன்னுடைய உயிர் பிரிவதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் காதலன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது அவளுடைய உயிரே பிரிந்து செல்வதைப் பார்த்து நிற்கின்றாளாம் காதலி எனச் சொல்லும் அற்புதமான கற்பனை இது. ஆனால் இப்பாடலை இந்திப் படப் பாடல் ஒன்றில் கேட்க நேர்கிறது கவிக்கோவிற்கு “யாராவது உயிர் போவதைப் பார்த்ததுண்டா? இதோ என் உயிர் போய்க்கொண்டிருக்கிறது" என்று காதலன் ஒருவன் இந்திப் படத்தில்…
-
- 0 replies
- 987 views
-
-
புனைவு என்னும் புதிர்: ஷோபா சக்தி - வெள்ளிக்கிழமையின் விசேஷம் ஷோபாசக்தி கலையின் முக்கியமான அம்சம், வெளிப்பாடுதான்; கருத்தன்று. அதி அற்புதமான கருத்துகளை அரிய கண்டுபிடிப்பு போல் அநேக மேதைகள் என்றைக்கோ எழுதிவைத்துச் சென்றுவிட்டனர். ஆனால் அவற்றைக் கலையாக வெளிப்படுத்தும் விதத்தில் கிறங்கடிக்கிறான் கலைஞன். இனி பிறக்கப்போகும் எவருக்கும் அகண்டாகாரமாய்த் திறந்து கிடக்கும் வெளி அது. ஷோபாசக்தி, தமது கதைகளில் அரசியல்தான் பேசுகிறார். அவர் பேசும் அரசியலைக் கடுமையாக மறுப்போர்கூட அவர் கதைகளின் கலைத் தரத்தை மறுக்க சிரமப்படுவார்கள். வாசகனின் பார்வைத் திறனுக்கேற்ப, பல அடுக்குகளைக் கொண்ட கதைகளே, பெரிய எழுத்து என இலக்கியவாதிகளால் கொண்டாடப்படுகி…
-
- 0 replies
- 986 views
-
-
கீழே நான் கைத்துப்பு(pistol)/ சுடுகலன்(gun)/ துமுக்கி(rifle) சிதறுசுடுகலனிலும்(scatter gun) போட்டு சுடும் வெடிபொதிகளின் உறுப்புகளுக்கான தமிழ்ப்பெயர்களை கொடுத்துள்ளேன்.. படித்து மகிழவும்…. கைத்துப்பு(pistol)/ சுடுகலன்(gun)/ துமுக்கி(rifle) வெடிபொதிகளின் உறுப்புகள்: படிமப்புரவு(image courtesy): NOQ Report வெடிபொதி - cartridge நடுவடி வெடிபொதி - centerfire cartridge விளிம்படி வெடிபொதி - rimfire cartridge கோது - case சன்னம் - bullet வெடிமருந்து - gun powder (propellant) எரியூட்டி - primer எரியூட்டி கொண்ட விளிம்பு - rim with primer சிதறு சுடுகலன்(scatter gun) எறியத்தின்(project…
-
- 1 reply
- 984 views
-
-
திருமூலர் பெரியார் - சுப. சோமசுந்தரம் சமீபத்தில் திருமந்திரப் பாடல்கள் சிலவற்றை நினைவுகூர்ந்து முகநூலில் பதிவு செய்திருந்தேன். பெரியாரும் அச்செய்தியைத்தான் கூறுகின்றார். சொல்லும் முறைதான் வேறு. "கடவுளை மற, மனிதனை நினை" என்பவர் பெரியார். "மனிதனை நினை, அதன் வாயிலாய்க் கடவுளை நினை" என்று மாற்று மொழியில் சொல்பவர் திருமூலர். மனிதனை முன்னிறுத்துவதில் இருவரும் ஒரே அணிதான். இறையிருப்புக் கோட்பாட்டில் மட்டுமே எதிரெதிர் அணி. திருமூலர் சிவத்தில் திளைத்து இறையிருப்பிலும், பெரியார் இறை மறுப்பிலும் நிற்கின்றனர். இவ்விடயத்தைப் பொருத்தமட்டில் ஒற்றுமையில் வேற்றுமை அமைந்திருக்கிறது…
-
- 1 reply
- 978 views
- 2 followers
-
-
பேராசிரியர் தெய்வசுந்தரம் தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக்கூடிய சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழை களைத் திருத்த முடியும். இந்த மென்பொருளைச் சிறப் பாக வடிவமைத்த தெய்வசுந்த ரம், ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ பெற முதன்முறை யாகத் தமிழக அரசால் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப் பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த மென்பொருளை கம்ப் யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவேற்றிவிட்டால், தமிழ் வார்த் தைகளில் உள்ள தவறை எளி தாகக் கண்டுபிடித்து ஒரு வினாடி யிலேயே திருத்த முடியும். வார்த்தை யில் ஒ…
-
- 0 replies
- 975 views
-
-
சிவகுமாரின் மகாபாரதம் குமரி எஸ். நீலகண்டன் நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் பேசிய இரண்டு மணி நேர மகாபாரத சொற்பொழிவின் காட்சிப் பதிவினை சமீபத்தில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை எந்தக் குறிப்புமில்லாமல் மகாபாரதக் கதையை சொல்வதென்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் நீந்திக் கடப்பதற்கு ஒப்பானது. இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். திசை தெரியாத அடர்ந்த வனத்திற்குள் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தன்னந்தனியனாய் வெளியே வருவதற்கு ஒப்பானதாகும். மகாபாரதக் கதையை கையாளுவதென்பது மிகவும் கடினமானது. நிறைய குட்டிக் கதைகள்… நூற்றுக் கணக்கான கதாபாத்திரங்கள்… மிகச் சிக்கலான முடிச்சுகள் கொண்ட நூற்பந்து போல் உருவம் கொண்ட சிக்கலான மகா காவியம். அது ஒரு…
-
- 1 reply
- 969 views
-
-
சீறாப்புராணம் முற்றோதல் - காப்பு தமிழ் இலக்கிய உலகினில் ஜாதி மத காழ்ப்புணர்வு உள்ளது என்று நான் நிச்சயமாக கூறவில்லை. ஆனால் அவ்வாறு இல்லை என்றும் என்னால் கூற இயலாது. நவீன உலகில், நேரமில்லாது மக்கள் உழலும் இந்தக் காலத்தில் டீக்கடைகளில் அமர்ந்து வெட்டிக்கதை பேசும் கூட்டம் முற்றிலுமாக தமிழ் அகத்தில் அழிந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன், ஆனால் அதில் ஒரு பெரும் பகுதி இன்று இணையத்தில் பல சிறு சிறு குழுமங்களில் பரவி உள்ளதை இல்லை என்றும் என்னால் நிச்சயமாக கூறமுடியாது. வெறுமனே காலத்தை கழிக்க இணையத்தில் உலவுவது முட்டாள்தனம். அடுத்த தலைமுறைக்கு தேவையான சில செயல்பாடுகளை நாம் செய்தே ஆகவேண்டும். நான் செய்வேன். விழியமாக முற்றோதல் செய்வத…
-
- 0 replies
- 965 views
-
-
தமிழ்மொழியின் சிறப்பு, பலவகைகளில் உள்ளன. இதன் சிறப்பு, படைப்பு நூல்களான இலக்கியங்களிலும் படைப்பு நூல்களின் படைப்பினைத் திறவுகோல் இட்டுத் திறக்கும் இலக்கணங்களிலும் மிளிர்கிறது. இலக்கணம் கசப்பானதா? தேவையற்றதா? தள்ள வேண்டியதா? என்று பலரும் பலவாறாகச் சிந்திக்கும் வண்ணம் அதன் கடுமை அமைந்துள்ளது. முன்னோர்கள் மிகக் கடுமையாக இலக்கணக் கருத்துகளைக் கூறியுள்ளமைக்குக் காரணம் என்ன? "இலக்கியம்', அறைக்குள் இருக்கும் வைரக்கல் என்றால், "இலக்கணம்', அதனைப் பார்ப்பதற்குகதவைத் திறக்கத் துணை செய்யும் சாவி திறவுகோல் என்பதை இங்கு இரண்டு மேற்கோள்களால் விளக்கலாம். ""மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்'' என்பது திருக்குறள் கடவுள் வாழ்த்து. நிலமிசை நீடுவாழ்வோர் யார…
-
- 1 reply
- 964 views
-
-
தெறாடி = Musket காது/வத்திவாய்/ பற்றுவாய் - Touch hole இரஞ்சகம் - வத்தியாயில் வைக்கும் வெடிமருந்து குதிரை - Cock ஆக்கம் & வெளியீடு: நன்னிச்சோழன்
-
- 1 reply
- 962 views
- 1 follower
-
-
சிதம்பரம் நடராசன் கோயிலில் திருவாசகம் பாடலாம் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்து விட்டது. இந்து அறநிலையத் துறை ஆணையர் திரு. பிச்சாண்டி அவர்கள் விசாரணை செய்து, நடராசன் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு அனுமதியளித்துள்ளார். நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பினை எடுத்துக்காட்டியும், சம்பிரதாயங்களை மேற்கோள்காட்டியும் இந்து அற நிலையத்துறை ஆணையர் அத்தகைய ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார். ஆறுமுகசாமி என்ற சிவ பக்தர் (வயது 73) இந்தப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டும் வருகிறார். அவரை தில்லை நடராசன் கோயில் தீட்சதர்கள் அடித்து கையையும் முறித்தனர். அதுபற்றி காவல்துறையில் அவர் புகார் கொடுத்தும், தீட்சதர்கள…
-
- 0 replies
- 956 views
-
-
*தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு காரணம் ஏன் தெரியுமா?*.. தேன் கொண்டு வந்தவனை பார்த்து, நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை? என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்.... ஐயா நீங்கள் கூறியதை நினைத் தேன் ! கொல்லிமலைக்கு நடந் தேன்! பல இடங்களில் அலைந் தேன்! ஓரிடத்தில் பார்த்தேன் ! உயரத்தில் பாறைத் தேன்! எப்படி எடுப்பதென்று மலைத் தேன்! கொம்பொன்று ஒடித் தேன்! ஒருகொடியை பிடித் தேன் ! ஏறிச்சென்று கலைத் தேன்! பாத்திரத்தில் பிழிந் தேன்! வீட்டுக்கு வந் தேன்! கொண்டு வந்ததை வடித் தேன்! கண்டுநான் மகிழ்ந் தேன்! ஆசையால் சிறிது குடித் தேன் ! மீண்டும் சுவைத் தேன் ! உள்ளம் களித் தேன்! உடல் களைத் தேன் ! உடனே படுத் தேன்! கண் அயர்ந் தேன்! காலையில் கண்வி…
-
- 3 replies
- 956 views
-
-
[size=1][size=4]பொருள் தேடச் சென்ற தலைவன் கடமை முடித்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தான். தன் வருகை அறியாமல் தலைவி வருந்திக் கிடப்பாள் என்றும் அறிந்தால் பெருமகிழ்ச்சியோடு அலங்கரித்துக் கொண்டு தன்னை வரவேற்பாள் என்று எண்ணினான். தன்னை பிரிந்திருக்கும் நாட்களில் பூக்கள்சூடாமலும் அணிகலன்கள் அணியாமலும் இருக்கும் துன்ப நிலையும், தன்னைக் கண்டவுடன் மகிழ்ந்து அலங்கரித்துக் கொள்ளும் இன்ப நிலையும் அவன் மனதில் வந்து போயின. இதேபோல்தான் முன்னொரு முறை தான் பொருள் தேடச் சென்று திரும்பி வந்த போது நடந்த நிகழ்வை தனது தேர்ப்பாகனுக்கு எடுத்துக் கூறினான். [/size][/size] [size=1][size=4]"மறக்க முடியாத காட்சி அது, பாகனே. கோடையில் உண்டான வறட்சியால் உயிர்கள் எல்லாம் வருந்தியிருக்க, அவ்வுயிர்…
-
- 2 replies
- 955 views
-
-
சுந்தர ராமசாமி தமிழ் என்பது தமிழன் சக தமிழனுடன் கொள்ளவேண்டிய உறவின் அடிப்படை தமிழ்வழிக் கல்வியை அமல்படுத்துவதில் தமிழ் எழுத்தாளர்கள் ஆற்ற வேண்டிய பங்கு முக்கியமானது. தமிழ் வாழ்வு, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிற ஒரு வரலாற்று நிகழ்வுதான் தமிழ்வழிக் கல்விக்கான போராட்டம். இவ்வரலாற்று நிகழ்வை தெளிவற்ற, மேலோட்டமான சிந்தனைகள் சார்ந்து படைப்பாளிகள் எதிர்கொள்ள முடியாது. அதிகாரத்தைச் சுயநலம் சார்ந்து சுரண்டுவது தமிழ் அரசியலின் பொதுக்குணம். அச்சுரண்டலுக்குத் துணை நிற்கும் முகமூடிகளை அரசியல் இயக்கங்கள் உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும். தமிழ் வாழ்வைச் செழுமைப்படுத்துவது படைப்பாளிகளின் பொதுக் குணமாக மலர வேண்டும். தாய்மொழிவழிக் கல்வி அடிப்படை தாய்மொ…
-
- 1 reply
- 954 views
-
-
புல் மேலே பனித்துளி by என். சொக்கன் நூல்: நாலடியார் (நல்லினம் சேர்தல் #171) அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறி அல்ல செய்து ஒழுகி அவ்வும், நெறி அறிந்த நல் சார்வு சாரக் கெடுமே வெயில் முறுகப் புல் பனிப் பற்று விட்ட ஆங்கு பாடியவர்: சமண முனிவர்கள் அறியாத பருவத்தில், அடங்காதவர்களோடு சேர்ந்து சில பிழைகளைச் செய்துவிட்டீர்களா? அதனால் பாவம் சேர்ந்து இப்போது வருத்தப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். இனிமேல் நீங்கள் நல்ல நெறியில் செல்கிறவர்களுடன் சேர்ந்து பழகி வாழுங்கள். அதன்மூலம் உங்களுடைய பழைய குற்றங்கள் தானாக மறைந்துவிடும். நம்பமுடியவில்லையா? அதிகாலையில் புல்தரையைக் கவனித்துப் பாருங்கள். ஒவ்வொரு புல்லின் நுனியிலும் பனித்துளி படர்ந்து அதை நனைத்திருக்கும், ஆனால் பின்னர…
-
- 3 replies
- 954 views
-
-
-
பாமரர் வழக்கே பாவலர் வழக்கு தேர்வு முடிவு வெளியானதும் மாணவன் ஒருவன் “அஞ்சும் (ஐந்தும்) பாஸ்” என மகிழ்ச்சியில் குதிக்கிறான். அவன் ஐந்தும் எனச் சொன்னதை வைத்து அவன் எழுதிய தேர்வுத் தாள்கள் மொத்தமே ஐந்து என்பது நமக்குப் புலனாகிறது. “இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்” என நவில்வது தொல்காப்பியம். மேற்கூறிய எடுத்துக்காட்டில் மொத்தம் இவ்வளவுதான் என (இனைத்தென) அறிந்த சினை முதற்சொல் (ஐந்து) வினைச்சொல்லுடன் இணையும் இடத்தில் (‘பாஸ்’ செய்தல் என்ற வினைப்படு தொகுதியில்) “உம்” வேண்டும். “அஞ்சும் பாஸ்” எனச் சொன்னவன் தொல்காப்பியனை அறிந்திலன்; அதனைக் கேட்டு மொத்தம் ஐந்து தாள்கள் எனப் பு…
-
- 2 replies
- 946 views
- 1 follower
-
-
ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.
-
- 0 replies
- 945 views
-