தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
ஆய்வு: நற்றிணையில் கடற்பெயர்கள் முன்னுரை - ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -கடல் என்னும் நீர்நிலையானது, நீர் நிலைகளில் தனித்துவமான ஒன்றாகும். வருடம் முழுவதும் நீரினைக் கொண்டதாகக் கடல் திகழ்கின்றது. அதன் பிரம்மாண்ட அளவும், அது கொண்ட நிறமும், அதன் செயல்பாடும் கொண்டு கடலை பல்வேறு பெயர்களில் நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனா். ஆசிரியப்பா என்னும் இலக்கண வடிவத்தில் கவிபுனைந்த புலவர்கள், கடற் பெயர்களை அவரவர் புலமை அனுபவத்தில் செம்மையான சொற்செட்டுமானத்துடன் படைத்திருப்பதை நற்றிணைப் பாடல்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கடலும் அதன் குடிவழிகளும் தமிழன் பயன்படுத்திய நீர்நிலைகளி…
-
- 0 replies
- 1.8k views
-
-
திருக்குறள் 1330 குறள்கள் பொருளுடன்
-
- 1 reply
- 2.8k views
-
-
குறிஞ்சி நில மக்களின் உணவு முறைகள்.. மக்கள் தாங்கள் வாழ்கின்ற நிலச் சூழலுக்கு ஏற்றவாறு தம் வாழ்வியலை அமைத்துக் கொள்கின்றனர். இது பண்டைக்காலந்தொட்டு இன்றுவரைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயற்கையான தொடர் நிகழ்வாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நில வாழ்வியலையும் சங்க இலக்கியங்களில் பார்க்கலாம். இவற்றுள் பாலையானது கரடுமுரடான பகுதியாகும். இங்கு வழிப்பறிகள் நடைபெறுவதுண்டு. இதுதான் அப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் தொழிலாக விளங்கியுள்ளது. தங்களின் நிலத் தன்மைக்கேற்றவாறே மக்களும் தங்களின் தொழில் முறைகளை உருவாக்கிக் கொண்டனர் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். அந்த வகையில் குறிஞ்சி நில மக்கள் மலை சார்ந்த பகுதிகளில் வேட்டையாடுதல், தேனெடுத்தல், தினை…
-
- 2 replies
- 13.9k views
-
-
தவளை கத்தினால் மழை. அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம். தும்பி பறந்தால் தூரத்தில் மழை. எறும்பு ஏறில் பெரும் புயல். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. தை மழை நெய் மழை. மாசிப் பனி மச்சையும் துளைக்கும். தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு. புற்று கண்டு கிணறு வெட்டு. வெள்ளமே ஆனாலும்பள்ளத்தே பயிர் செய். காணி தேடினும் கரிசல் மண் தேடு. களர் கெட பிரண்டையைப் புதை. கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னிகெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. நன்னிலம் கொழுஞ்சிநடுநிலம் கரந்தைகடை நிலம் எருக்கு. நீரும் நிலமும் இருந்தாலும்பருவம் பார்த்து பயிர் செய். ஆடிப்பட்டம் பயிர் செய். விண் பொய்த்தால் மண் பொய்க்கும். மழையடி புஞ்சைமதகடி நஞ்சை. களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. உழவில்ல…
-
- 1 reply
- 1.6k views
-
-
வடமொழியால் விளக்க முடியாததை வள்ளுவன் விளக்கினான்.எப்படி தெரியுமா? நீதியரசர் ராமசுப்ரமணியன்
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ் இந்தோ ஐரோப்பிய மொழித்தொடர்பு
-
- 0 replies
- 1.7k views
-
-
உலக மொழிகளில் தமிழ் மொழியின் தாக்கம்
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆய்வு முறைமைகளின் பல்வகைமைகளும் காலனித்துவ நீக்கமும் – கலாநிதி சி.ஜெயசங்கர். ஆய்வும் எழுத்தும் ஆய்வு என்பது எழுத்து வடிவத்திற்குரிய விடயமாகவே நவீன ஈழத்து தமிழ்ச் சூழலில் புழங்கப்பட்டு வருகிறது. காரண காரிய ரீதியானஇ அறிவுபூர்வமான விடயங்களின் மொழியாகஇ வடிவமாகஇ ஊடமாக எழுத்து வடிவம் கொள்ளப்பட்டு வருகிறது. காலனியத்திற்கு முந்திய காலத்தில் வாய்மொழி மரபுகள் அறிவின் மொழியாக அமைந்த நீண்ட உறுதியான பாரம்பரியம் இருந்தும்இ ஆய்வின் மொழியாக எழுத்து வடிவத்தைத் தாண்டிச் சிந்திப்பது அல்லது கற்பனை செய்வது கூட சாத்தியமற்றதாக இருந்து வருகிறது. நவீன மயமாக்கம் என்னும் கலனியமயமாக்கம் திணித்துவிட்ட எழுத்தின் ஆதிக்கம், அதிகாரம் வாய்மொழி மரபுகளின் அறிவுருவாக்கல் பண்புகளை நிராகரித்துவி…
-
- 0 replies
- 1.6k views
-
-
சங்க இலக்கியத்தில் குறுங்கூளியரும் .. உருவெழு கூளியரும் .. சங்க இலக்கியங்கள் பல்வேறு வகையான நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் குறித்துப் பேசுகின்றன. சங்கக் கலைஞர்கள் கலைகளை வளர்ப்பதற்கென்றே தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டுள்ளனர். கலைவேறு வாழ்கை வேறு என்று அறிய முடியா வண்ணம் அவர்களின் வாழ்வியல் கலையோடு பின்னிப்பிணைந்திருந்தது. அவ்வகையில் இரவலர்க் கலைஞர்களாக அறியப்பெறும் குறுங்கூளியர் குறித்தும், அவரில் மற்றொரு பிரிவினரான உருவெழு கூளியர்கள் குறித்துமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் விரவியேக் காணப்படுகின்றன. இக்கலைஞர்கள் குறித்து உரையாசிரியர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இவற்றில் உள்ள சில புரிதல்களை முன்வைப்பதாய் இக்கட்டுரை அமைகிறது.…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர் பண்பாட்டில் கள் .. திருமணம் முடித்து குடும்பத்துடன் நலமாய் வாழ்பவனை ‘அவன் குடியும் குடித்தனமுமாய்’ இருக்கின்றான் என்று கூறும் வழக்கம் நம்மிடையே மரபாக உள்ளது. அதேபோன்று குடிக்கு அடிமையான ஒருவனைக் கூறுவதற்கும் மேற்கண்ட வாசகத்தையேக் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. இன்று மதுவிலக்கு பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. அவற்றால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் குறித்துப் பல ஆர்வலர்களும், அமைப்பினரும் குரல் கொடுக்கின்றனர். பெண்களேக் கூட பல மதுக்கடைகளின் முன் நின்று போராடுவது குடி எத்தனை குடிகளை மூழ்கடிக்கின்றது, மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளம். இந்தச் சூழலில் தமிழரின் குடி கலாச்சாரம் குறித்துப் பேசுவது அவசியமாகிறது. அதாவது சங்ககாலத்தில் இருந்த குடி கலாச்…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஒப்பாரியில் ஆராய்ச்சி செய்யும் சீனத் தமிழர் பேட்டி
-
- 3 replies
- 1.7k views
-
-
போன வாரம் துவிட்டரில் "தமிழ் வக்கற்ற மொழி" என்றான் சமற்கிருத வெறியன் ஒருவன். ஏனடா என்றால், மற்ற இந்திய மொழிகளில் நான்கு க, நான்கு ச என வகை வகையாக வல்லின எழுத்துக்கள் இருக்கின்றன; தமிழில் இல்லையே என்றான் சிறுபிள்ளைத்தனமாக. ➵ உண்மையிலேயே தமிழில் வல்லின எழுத்து வகைகள் இல்லையா? ➵ ஆம் எனில் அதற்குக் காரணம் என்ன? ➵ இது தமிழின் குறைபாடா இல்லையா? இவற்றுக்கான விடையே இப்பதிவு. ஆனால் தொடங்கும் முன், “அப்படியா கேட்டான்! தமிழையா இழித்துரைத்தான்!” என உங்கள் நெஞ்சு கொதிக்கும் இல்லையா? அதைத் தணிவிக்கும் முயற்சியாக இதோ அந்த அறிவிலிக்கு நான் தந்த எதிரடிகள் சில உங்கள் பார்வைக்கு. என்ன, பார்த்து விட்டீர்களா? ஆனால் என்னதான் நாம் இப…
-
- 7 replies
- 3.4k views
-
-
உள ஆற்றுப்படுத்தலில் தூசணங்களின் பங்கு உள ஆற்றுப்படுத்தலில் தூசணங்களின் பங்கு — கமலநாதன் பத்திநாதன், களுவன்கேணி — உள ஆற்றுப்படுத்தலில் தூசணங்கள் மற்றும் மரபுத்தொடர்களின் வகிபாகம் உலக இயங்கியலிலே மனித வலுக்களின் பெறுதியானது மிகத் தேவைப்பாடானதாகும். தனித்தனி மனிதர்களின் கூட்டு வடிவமான சமூகம், அதன் உறுப்பினர்களான ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடைமுறைகளிலும் சிறப்பான செல்வாக்கை செலுத்துகின்றது. அவ்வாறான வாய்ப்புக்களையும், இருப்புக்களையும் உரிய வகையில் பயன்படுத்தியோரும், தவறாக பயன்படுத்தியோரும் பெறும் பயன்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. இவ்வ…
-
- 0 replies
- 1.9k views
-
-
01. உங்களின் பெயர்களை சங்க காலத்து தமிழியிலும் , பல்லவர் காலத்து தமிழ் வட்டெழுத்திலும் எழுதிப்பார்த்துக்கொள்ளுங்கள். 02. உங்களின் சூழலிலுள்ள பழந்தமிழ்க்கல்வெட்டுகள் , ஏடுகளை நீங்களாகவே உச்சரித்து வாசியுங்கள். உங்கள் நண்பர்களோடும் பகிருங்கள் 247 எழுத்துக்களையும் பார்க்க - https://drive.google.com/.../1KJRwelxSbZeRr.../view
-
- 1 reply
- 1.4k views
-
-
கபிலர் பாடல்களில் அகப்புற மரபுகள் முன்னுரை எல்லாவற்றிலும் புதுமையை விரும்புவது மனித இயல்பு. இருப்பினும், பழமையை சுலபமாக விட்டுவிட முடிவதில்லை. அத்தகைய பழமை பாராட்டுவதே மரபின் அடிப்படை. கலை, இலக்கியங்கள் மரபைப் பின்பற்றியதால்தான் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் மரபின் அடிப்படையிலேயேயாக்கப் பெற்றுள்ளன. இவ்வகத்திணைப் பாடல்கள் மிகப் பழமையனவாக இருப்பினும், இன்றும் அவை ஆளுமைத்தன்மை மிக்கதாக விளங்குவதைக் காணலாம். சங்க அகப்பாடல் உருவாக்கத்தில் திணை, துறை அமைப்புகள் வழி நின்று கபிலர் எத்தகைய மரபைப் பின்பற்றியுள்ளார் என்பதை சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அகமும் புறமும் சங்கப்பாடல்களை அகம், புறம் என்ற இரு பெரும்பிரிவுகளுள்…
-
- 0 replies
- 2.9k views
-
-
சங்கத் துறைமுகம் - முசிறி முன்னுரை ஒரு நாட்டில் கடல் வணிகம் அதன் துறைமுகங்களைப் பொருத்தே அமையும். சாதகமான காற்று, இயற்கையானத் துறைமுகங்கள், பாதுகாப்பான வணிகநிலை, ஆதரவான அரசுகள், தேவையான கச்சாப்பொருள்கள், நெகிழ்வான வரிவிதிப்பு முறை போன்றவை வணிகத்திற்குச் சாதகமான அம்சங்களாகும். அவற்றில் மிகவும் இன்றியமையாதது இயற்கையான துறைமுகங்களேயாகும். தமிழ்நாட்டில் இவ்வாறான இயற்கை துறைமுகங்கள் மிகவும் குறைவு. இருந்த போதிலும் பழந்தமிழ் சேரநாட்டில் உள்ள துறைமுகங்கள் தம் வணிகத்தினால் சிறப்பிடம் பெற்றன. முசிறி, தொண்டி போன்ற சிறந்த துறைமுகங்களின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. சேர நாட்டில் கிடைத்த வாசனைப் பொருட்களான மிளகு (Pepper) போன்றவையே அவர்களின் உலகளாவிய வணிகத்திற்…
-
- 1 reply
- 9k views
-
-
-
ஐங்குறுநூற்றில் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகள் .. முன்னுரை ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார், தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இந்நூலில் மொத்தம் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் காணப்படுகின்றன. கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். ஐங்குறுநூற்றுத் திணைகளில் ஐந்தாவது திணையாகவும் மற்றும் இறுதித் திணையாகவும் இடம்பெறுவது முல்லைத் திணையாகும். இம்முல்லை நிலமே ஆய்வுக்களமாக அமைகின்றது. இம்முல்லைத் திணையின் ஆசிரியர் பேயனார் ஆவார். இத்திணையில் செவிலி கூற்றுப் பத்து, கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, தோழி வற்புறுத்த பத்து, பாணன் பத்து, தேர்வியங்கொண்ட பத்து, வரவுச் சிறப்புரைத்த பத்து…
-
- 1 reply
- 3.3k views
-
-
கணிதத்தின் மகுடம் கணக்கதிகாரம்.. முன்னுரை கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மையான இடம் உண்டு. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலப் புலவர்களின் கணித அறிவினைப் பறைசாற்றுகின்றன. கணிதம் ஒரு கலை என்பதினை ‘கணக்கதிகாரம்’ என்ற நூலால் அறியலாம். கொறுக்கையூர் காரி நாயனார் என்ற புலவரால் கணக்கதிகாரம் என்னும் கணித நூல் 15-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இவர் காவிரி பாயும் சோழ நாட்டு மன்னர் வழி வந்தவர் என்றும், இவரின் தந்தை பெயர் புத்தன் என்றும் நூலின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. இந்நூலில் காணப்படும் வியப்பான கணித முறைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கணக்கதிகாரம் இந்நூல் காரிநாயனாரின் கற்பனைத் திறனையும், கவிதை நயத்தையும், கணிதத்தில் இவர் பெற…
-
- 2 replies
- 3.8k views
-
-
எங்கே 86,257 ஓலைகள்.? திருட்டு - ஒன்லைன் விற்பனை சர்ச்சை.! தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு? "19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் அதிகாரத்துக்குக் கீழ் இருந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் ஹாரிங்டன். இவரிடம் சமையல் வேலை பார்த்துவந்தவர் கந்தப்பன். அந்தக் காலகட்டத்தில், தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கால ஓலைச்சுவடிகள் இருப்பது வழக்கம். வருடத்துக்கு ஒரு முறை கரையான் அரித்த, பழுந்தடைந்த சுவடிகளை எரிப்பதும் வழக்கம். அப்படித் தன்னிடம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் சில எந்தப் பழுதும் இல்லாமல் நன்றாக இருப்பதைக் கண்ட கந்தப்பர், அதை …
-
- 0 replies
- 3.2k views
- 1 follower
-
-
முல்லை நில மக்களின் தொழில்கள்.. முன்னுரை சங்க இலக்கியம் என்பது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் உள்ளடக்கியது. இதில் அகம், புறம், அகம்புறம் என பகுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு அடிப்படையாக அமைவது தொழிலாகும். மக்கள் தாங்கள் வாழும் நிலத்தின் அடிப்படையில் தொழில் காணலாம். மலையும் மலை சார்ந்த நிலத்தைக் குறிஞ்சி என்பர். காடும் காடு சார்ந்த நிலத்தை முல்லை என்பர். வயலும் வயல் சார்ந்த நிலத்தை மருதம் என்பர். கடலும் கடல் சார்ந்த நிலத்தை நெய்தல் என்பர். சங்க இலக்கியத்தில் முல்லை நிலத்தொழில்கள் பற்றிய கருத்துக்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தொல்காப்பியத்தில் தொழில் “ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே” (த…
-
- 0 replies
- 13.5k views
-
-
ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள்.. தமிழரின் மரபையும் தொன்மையையும் அறிவதற்கான வரலாற்றுச் சான்றாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற பரந்துபட்ட மனத்துடன் வாழ்ந்த பழந்தமிழனை அடையாளம் காட்டுவதாய் உள்ளன. அறிவியல் வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மேற்கத்தியத் தாக்கம் போன்றவற்றால் தமிழரின் தனித்துவமான அடையாளங்களை இழந்தும், மறந்தும், தவிர்த்தும் வரும் நிலையில் சங்க இலக்கியங்களில் தமிழர் பழக்க வழக்கங்கள் அன்றும் இன்றும் என்ற பொருண்மையிலான சிந்தனை ‘காலத்தின் கட்டாயம்’ என்றே கூறலாம். ஆற்றுப்படை இலக்கியம் பத்துப்பாட்டில் பெரும்பான்மை பெற்றதாக ‘ஆற்றுப்படை’ இலக்கியங்கள் உள்ளன. ‘பகிர…
-
- 0 replies
- 3.5k views
-
-
கொன்றை வேந்தன் பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. நூல் உயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு ககர …
-
- 0 replies
- 2.5k views
-
-
தொல் தமிழர் கொடையும் மடமும்.. செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். கொடை விளக்கம் கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், பு…
-
- 0 replies
- 3.1k views
-
-
நற்றிணை காட்டும் நற்பண்புகள்.! காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வாழ்ந்தவர்கள் சங்ககால மாந்தர்கள். அத்துடன் கூர்த்தமதி உடையவர்கள் என்பதை அவர்தம் பாடல்கள் தெளிவாய் எடுத்துரைக்கும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை காதல், அன்பு, இல்வாழ்க்கை முதலிய அக வாழ்வு முறைகளை எடுத்தியம்புகிறது. நற்றிணை கூறும் நற்பண்புகள் சிலவற்றைக் காண்போம். அன்பு: தலைமக்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள அன்பின் வலிமையைப் பறைசாற்றிச் செல்கிறது இப்பாடல். தலைவன் தலைவியைக் காணக் காலம் தாழ்த்துதலைத் தோழி சுட்டிக்காட்டும் வேளையில், தோழிக்குத் தலைவி "என் தலைவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?' என்று கூறுவதுபோல் அமைந்துள்ளது " நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்' (பா.1) என்கிற பா…
-
- 0 replies
- 2.1k views
-