பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
-
- 0 replies
- 594 views
-
-
புயலையும் தாங்கி நிற்கும் பனை மரம். "திணைத்துணை நன்று செயினும் பனைத்துணையாகக் கொள்வார் பயன்தெரி வார்" நன்றியின் பயனை பனையின் பயனோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் நம் வள்ளுவர். தென்னை மரம் கிபி 2ம் ஆண்டிற்கு பின்தான் இங்கு அறிமுகமானது. ஆனால் பனை மரம் அதற்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது. "தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான் பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்" கிராமங்களில் புழங்கும் சொல்வழக்கு இது. பனைமரங்கள் பண்டைய காலம்தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றெனக் கலந்திருக்கின்றன. பனைமரத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருள் மனிதனுக்கு எப்படியாவது பயன்பட்டு வருகிறது. அந்த அளவில் அதிக பயன்களை அது கொண்டிருக்கிறது. பண்டைய இலக்கியங்களை …
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ் என்னும் ஆயுதம் 2019 - மனுஷ்ய புத்திரன் · உயிர்மை தலையங்கம் தமிழர்கள் ஏன், எப்போதும் தமிழுக்காகப் போராட நிர்பந்திக்கப்படுகிறார்கள்? வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி நிகழ்கிறதா? அமித் ஷா, இந்தியை முதன்மைப்படுத்திப் பேசியபோது, தமிழகம் மட்டும் ஏன் கொந்தளித்தது? அமித் ஷா கவர்னர்மூலம், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்துத் தன் பேச்சிற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. உண்மையில், தமிழர்கள் இந்தி திணிக்கப்படுவது குறித்து அதிக அளவில் அச்சப்படுகிறார்களா? இந்தக் கேள்விகள் எண்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மொழிப்போரின் வரலாற்றோடு தொடர்புடையது. 1938லிருந்தே தமிழகம், தனிக்குரலாக இந்திக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக…
-
- 0 replies
- 2k views
-
-
கடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும் .! கடல்சார் வரலாறு என்றால் என்ன? கடல் சார்ந்து மனித சமூகம் கடலிலும் நிலத்திலும் நிகழ்த்தும் வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பைக் கடல்சார் வரலாறு என்று வரையறுக்கலாம். இது, பொதுவான பாடவகைப் பிரிவுகளைத் தாண்டி உலக அளவில் நிகழ்ந்து தாக்கங்களை ஏற்படுத்திய சம்பவங்களைப் பற்றிய ஆய்வு என்று கருதலாம். நிலம்சார் வரலாற்றில் (terrestrial history) நிகழும் சமூகப் போக்குகளுக்கு, பலசூழல்களில் கடல்சார் நிகழ்வுகளே பெரிதும் காரணிகளாய் அமைகின்றன. அதற்கு கடல் ஒன்றே சான்று. கடலின் செல்வங்களையும் நிலப்பரப்பிலுள்ள செல்வங்களையும் தமதாக்கிக் கொள்வதற்கு மனித சமூகம் படும்பாடே கடல்சார் வரலாறு என்றும் கூறலாம். மனித வரலாறு…
-
- 0 replies
- 712 views
-
-
வேங்கைத் திட்டம் 2.0 சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தரக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும். https://ta.wikipedia.org/wiki/விக…
-
- 0 replies
- 306 views
-
-
இக்கட்டுரையின் நோக்கம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கோள்கள், அவை நடந்ததாக சொல்லப்படும் காலம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே. அங்கு சொல்லப்பட்டிருக்கும் இடம், ஆறுகள் மற்றும் மன்னர்கள் ஆகியவற்றை ஒதுக்கி விடுவோம். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி, தமிழ் நிலத்தை அதன் மொழியை பற்றி கிடைத்திருக்கும் புதிய தடயங்கள் ஆகியவற்றைக் கொண்டு கடந்த கால வரலாறை யூகிக்க முயன்றிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் வரும் இக்கடற்கோள்கள் பற்றி எழுதும் பலர், இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விடுகின்றனர். நம்முடைய இன்றைய ஆராய்ச்சிகள் எல்லாம் நிலத்திற்குள்ளேயே தான் நடக்கின்றன. எதுவும் கடலுக்குள் நடப்பதில்லை. ஆதாரம் உங்கள் கண்ணுக்கு முன்னே இல்…
-
- 4 replies
- 1.3k views
-
-
மனிதர்களின் தினசரி வாழ்வில் மிக முக்கியமான அம்சமாக மொழி இருக்கிறது. சமூகத்தில் உரையாடுவது, அரசின் நிர்வாக விவகாரங்கள் என மொழி தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி, நமக்கு பாரம்பரியமாக தொடர்ந்து வரக் கூடிய கலாசாரத்தில், தாய்மொழி என்பது முதன்மையான இடத்தை வகிக்கிறது. அதேசமயத்தில், மற்ற மொழிகளால் தங்கள் தாய் மொழிக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. முக்கியமாக இந்தியாவில் அவ்வப்போது உணர்வுபூர்வமான கொந்தளிப்புகள் ஏற்படுவதற்கு, இந்தப் பிரச்சினை முக்கிய காரணமாக உள்ளது. இந்தி மொழி பேசுபவர்கள் - பெரும்பாலும் வட இந்தியர்கள் - இந்தி தான் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழி என்றும், அதுதான் தேசிய மொழி என்றும் பிடிவாதம் காட்டுகின்றனர். இருந்தபோதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
எங்கெங்கும் பழங்கால பானை ஓடு சிதறல்கள்.... வட தமிழகத்தின் கீழடியா கல்யாணம்பூண்டி? விழுப்புரம்: தமிழரின் தொன்மை வரலாற்றை மெய்ப்பித்திருக்கும் கீழடியில் கிடைத்த பழங்கால பானை ஓடுகளின் சிதறல் குவியல்கள் வடதமிழகத்தில் கல்யாணம்பூண்டி கிராமத்திலும் நிறைந்து காணப்படுகிறது. கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் மூலம் கிமு 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் உச்சநாகரிக வாழ்வியலை வாழ்ந்தது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் பெருநிலப்பரப்பானது ஆதி மனிதன் தோன்றிய 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து படிப்படியான வாழ்நிலையை கடந்து வந்திருக்கிறது. இந்த ஒவ்வொரு கால கட்டத்துக்குமான சான்றுகள் தமிழ்நிலப் பரப்பின் ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்து வருகின்றன. கீழடியில் கிமு 6-ம் நூற்றாண்டி…
-
- 0 replies
- 463 views
-
-
ஆதிச்சநல்லூர் - சிந்துவெளி இடையே வியத்தகு ஒற்றுமை - வெளியிடப்படாத ஆய்வு முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டுவாக்கில் நடந்த ஆய்வின் முடிவுகள் பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வுகளில் தெரியவந…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்! Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்த…
-
- 12 replies
- 1.2k views
-
-
கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ? ** 1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும். 2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர்…
-
- 0 replies
- 813 views
-
-
கி. மு. 6-வது நூற்றாண்டிலே தமிழ் உயரிய எழுத்து வடிவம் கொண்டிருந்ததைக் காட்டும் கீழடி அகழாய்வுகளின் தொல்காப்பியத் தொடர்புகள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் கிமு ஆறாவது நூற்றாண்டிலேயே தமிழ் உயரிய எழுத்துவடிவம் கொண்டிருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வுகள் உறுதிசெய்கின்றன! கீழடி தரும் புதிய ஆதாரங்களின் பின்புலத்தில், நம் தொன்மையான இலக்கியங்களில் காணப்படும் இலக்கியச் சான்றுகளில் சிலவற்றை மீள்வாசிப்பு செய்வோம்! 1.கீழடி அகழாய்வுகள் காட்டும் முதல் இலக்கியப் பொருள் தொல்காப்பிய காலம்! தொல்காப்பியத்தின் காலம் (கீழ் எல்லை) கி.மு. ஏழ…
-
- 0 replies
- 741 views
-
-
"முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம் வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?" மேலே இருப்பது சங்க இலக்கிய நூல்களில் ஒன்றா தலைவியைத் தலைவன் பிரிந்துசெல்ல, தலைவி படும் துன்பத்தைக் கூறும் பாடல் இது. இந்தப் பாடலில், "பத்து உருவம் பெற்றவன் மனம்போல" என்ற வார்த்தைகள், தாய விளையாட்டில் பத்து என்ற எண்ணிக்கையை பெற்றவன் மனம் மகிழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது. அப்படி பத்து என்ற எண்ணைப் பெறுவதற்கு உருட்டப்படும் பகடைக்காய்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை கீழடியில் கிடைத்திருக்கும் பகடைக்காய்கள் காட்டுகின்றன. தற்போது தாயத்தில் உருட்டப்படும் தாயக்கட்டைகள் நான்க…
-
- 2 replies
- 436 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Tamil Nadu State Archeology Department Image caption கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட …
-
- 6 replies
- 1.3k views
-
-
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே! சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன்
-
- 0 replies
- 310 views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
புதிய ஆராய்ச்சியில் தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது எனவும் அதில் தமிழ் மிகப் பழமையான மொழி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும் டேராடூன் இந்திய வன உயர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டன. தெற்காசியப் பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. திராவிடம், இந்தோ–ஐரோப்பா, சீனா–திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த 6 மொழிக் குடும்பங்களில் முதன்மையானதும் பழமையானதும் திராவிட மொழிக் குடும்பமே என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தம…
-
- 0 replies
- 340 views
-
-
மாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்.! சென்னை: ஒவ்வொரு ஊருக்கும் அடையாளமாகிய முகவரி என்பது அதன் மொழி தான். ஆனால் இப்போது சென்னையில் சென்னை தமிழ் தன் இயல்பை இழந்துவருகிறது. தென் மாவட்ட மக்கள் மொத்தமாக வந்து குவிந்ததால் இப்போது சென்னை பாஷையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்க ஊரு மெட்ராசு.. இதுக்கு நாங்க தானே அட்ரசு.. மெட்ராஸ் படத்தில் வரும் பாடல் வரிகள் தான் சென்னை என்றதும் ஞாபகத்து வருகிறது. 2009ம்ஆண்டு இருந்த சென்னை 10 வருடங்களில் அப்படியே மாறிப்போய் விட்டது.இந்த 10 வருடங்களில் சென்னை மாநகரம் அடையாளத்தையே மாற்றிக்கொண்டுள்ளது. மாறி போன அடையாளம் ஒவ்வொரு முக்கிய சாலைகளிலும் மெட்ரோ ரயில்கள் ஆக்கிரமித்து ஓடுகின…
-
- 1 reply
- 1.1k views
-
-
அசோகமரத்தின் கிளைகள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்தநிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்க வேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர் சிற்பம் ( உ.பாண்டி ) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற சிற்பங்கள், கல்வெட்டுகள், மன்னர் கால வாழ்விடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தீர்த்தங்கரர் சிற்பம் ராமநாதபுரம…
-
- 0 replies
- 774 views
-
-
ஆவணப்படுத்தாத தமிழரின் ஆவணங்கள் | உலக வரலாற்றில் தமிழனின் தொன்மையை உயர்த்தும்! | காளையார்கோவில் | முடிக்கரை | சிவகங்கை | பழமையான கோவில் | முதுமக்கள் தாழி | கல்வட்டங்கள் | தொல்குடி சமூகமான தமிழினத்தின் மறைக்கப்பட்ட,மறுக்கப்பட்ட கலை,இலக்கியம்,பண்பாடு,அறிவியல்,அரசியல்,வரலாறு, இயற்கை, விவசாயம்,நாகரிகம்,மண்விடுதலை,சாதிய ஒடுக்குமுறை,பெண்விடுதலைகளுக்கான போராட்டங்களை மீட்டுருவாக்கம் செய்து அழிவின் விளிம்பில் இருக்கும் ஆவணங்களையும், ஆளுமைகளையும் இளையதலைமுறை பிள்ளைகளுக்கு தெரிவிக்கும் விதமாக வெளிக்கொண்டு வரும் வேலையை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து நாங்கள் இப்பணியை செய்ய உங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்புகிறோம்!
-
- 0 replies
- 375 views
-
-
11-ம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்பு" படத்தின் காப்புரிமை Google சுமார் 51 ஏக்கர் பரப்பளவை கொண்ட சிதம்பரம் நடராஜர் கோயிலின் உட்பகுதியில் விழும் மழைநீர் முழுவதையும் சேமிக்க வேண்டும் என்று கருதி அதற்கேற்றாற்போல் 11ஆம் நூற்றாண்டிலேயே கோயில் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. "சிதம்பரம் நடராஜர் கோயிலின் வடகிழக்கு பகுதியில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் உருவாக் கப்பட்ட திருப்பாற்கடல் என்ற குளம் தமிழக அரசால் தூர்வாரப்பட்டது. அப்போது குளத்தின் தெற்கு பகுதியில் ஒரு கால்வாய் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. …
-
- 0 replies
- 307 views
-
-
தமிழ்நாட்டில் 13ம் நூற்றாண்டில் நிலவிய சாதிய சண்டைகள் சச்சரவு குறித்தும், சண்டைகளைத் தவிர்க்க அம்மக்கள் ஏற்ற உறுதி மொழி குறித்தும் விவரிக்கிறது கல்வெட்டு ஒன்று. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமணஞ்சேரி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள விக்ரம சோழன் காலத்தில் (கிபி 1118 - 1136) கட்டப்பட்ட கோயிலொன்று உள்ளது. பாழடைந்த அந்த சிவன் கோயில் ஒன்றை புனரமைக்கும்போது கல்வெட்டு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்த கல்வெட்டினை, முன்னாள் வங்கி அதிகாரியான வேலூரைச் சார்ந்த கல்யாணராமன் என்பவரும், ஊர்மக்களும் எடுத்து திருப்பணி செய்யப்பெற்ற அக்கோயிலின் மகாமண்டபத்தின் வடபுறம் தரையில் நட்டு காப்பாற்றி வந்துள்ளனர். அக்கல்வெட்டை அண்மையில் கல்வெட்டு ஆய்வாளரான முதுமுனைவர் குடவா…
-
- 0 replies
- 337 views
-
-
திருக்குறளின் சிறப்பை விளக்கி இளைஞர்கள் திருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும், திருக்குறளை இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வாழ்வியல் நெறியாக கொள்ள வேண்டும் என்றும் அழைக்கிறார் சத்யராஜ் ஆகஸ்ட் 12, திங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை. காமராசர் அரங்கம், தேனாம்பேட்டை. - பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு! திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க திரள்வோம்: வைகோ அறிக்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை :பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் நடத்த இருக்கும் திருக்குறள் மாநாடு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத மாநாடு ஆகும். செத்துப்போன வடமொழியை புத்துயிர் கொடுத்து…
-
- 1 reply
- 964 views
-
-
9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் லண்டன் நகர மக்கள் தொகை வெறும் 30,000 மட்டும்தான். அதே சமயம், கம்போடிய அங்கோர் நகரில் 10 லட்சம் மக்கள் வசித்திருக்கிறார்கள் என்கிறது வரலாற்று ஆய்வாளர்களின் புள்ளி விவரம். 10 லட்சம் மக்கள் வசித்தார்கள் என்பதில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். அந்த மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகரத்துக்குத் தேவையான தண்ணீரும் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. கம்போடியா கோயிலுக்கும் பனைக்கும் மட்டும் பிரபலமல்ல, அங்குள்ள ஏரிகளுக்காவும்தான். கம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 ச.கி.மீ. அந்நாடு, 443 கி.மீ நீளமான கடற்கரையைக் கொண்டது. கம்போடியாவில் சிறப்பாகச் சொல்லக்கூடிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், அவ…
-
- 0 replies
- 736 views
-
-
பழந்தமிழ் மலர் - இட்லிப்பூ என்ற வெட்சிப்பூ .! என் இளமைக் கால நினைவுகளில் ஒன்று இட்லிப்பூ. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் என் ஐயாப்பா வெளியூரிலிருந்து - சென்னையாயிருக்கலாம் - செடி வாங்கி வந்தார். வீட்டின் முன்னால் பரந்த வெளியிடம். அதன் நடுவே செயற்கை நீருற்றுடன் கூடிய வட்ட மீன் தொட்டி. வாசலின் ஒரு பக்கம் வீட்டிற்கும் தொட்டிக்குமிடையே அமர்வதற்கு கல்லாலான இருக்கை. அதன் அருகே இச் செடி வைக்கப் பட்டது. சில நாட்களில் பூவும் பூத்தது. செம்மஞ்சள் நிறத்தில் இட்லிப்பூ. நீண்ட குழல்களின் மேற்புறத்தில் நான்கு சிறிய இதழ்கள். பல குழல்கள் சேர்ந்து கொத்தாக இட்லி போல் இருக்கும். குழலை உறிஞ்சினால் இனிப்பாக இருக்கும். தேன் குடிக்கிறோம் என்று சொல்லிக் கொள்வோம். செடியில் பூ …
-
- 0 replies
- 2.3k views
-