Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தென்னன் மெய்ம்மன். மகாபலிபுரம் சிற்பக்கல்லூரியில் பயின்று தங்கப்பதக்கம் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்.. ஸ்தபதி என்ற சொல்லுக்கு பெருந்தச்சன் என்பதே சரியான தமிழ்ச் சொல் என்று எடுத்துரைப்பவர். ஆண்டுக்கு நாட்கள் 360. மாதந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமாவாசையும், வெள்ளிக்கிழமைகளில் பெளர்ணமியும் வரும் திராவிட ஆண்டுப்பிறப்பு, ஆரியர் ஆண்டுப்பிறப்பு, திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு என்றிருப்பதுபோல் தமிழனின் மெய்யான புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் தைமாதம் 1 தேதிதான் வரும். அஃது ஜனவரி 4 அல்லது 5 தேதியாகவே இருக்கக்கூடும். நீங்கள் தமிழரென்றால் இந்த நாட்காட்டியைப் பின்பற்றுங்கள்; இல்லையென்றால் புறக்கணியுங்கள் என முழக்கமிட்டு வருபவர், தென்னன் மெய்ம்மன். சென்ற ஆண்டு தமிழர்தம் நாட்காட்டி ப…

    • 0 replies
    • 1.8k views
  2. கவியரசு கண்ணதாசன் நாத்திகராகவும், திராவிடராகவும் இருந்து பின்னர் ஆத்திகராகவும் திராவிட மறுப்பாளராகவும் மாறி வழ்ந்து மறைந்தது எல்லோருக்கும் தெரியும். அதேபோன்று திராவிட இயக்கங்களால் இன்றளவும் கொண்டாடப்படுபவர் பாரதிதாசன். தன் வாழ்நாளின் இறுதிப் பகுதியில் ஒரு தமிழ்த் தேசியராக வாழ்ந்து மறைந்தார் என்னும் உண்மையைத் திராவிட இயக்கங்கள் ஒத்துக்கொள்வதில்லை. அவர், தொடக்கத்தில் ஒரு ஆத்திகராக, இந்தியராக வாழ்ந்தார். தந்தை பெரியாரை ஏற்றுக் கொண்ட பிறகு ஒரு நாத்திகராக, ஒரு திராவிடராகத் தன்னை மாற்றிக் கொண்டார். இதனையே கிளிப்பிள்ளையைப் போலத் திரும்பத் திரும்பக் கூறிவருகின்றனர் திராவிட இயக்கத்தினர். இது முழு உண்மையல்ல. பாரதிதாசன் ஒரு நாத்திகராக வாழ்ந்தார் என்பது மட்டுமே உண்மை. அவர் தமிழராக வ…

    • 0 replies
    • 3.3k views
  3. புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா? அன்பான யாழ் கழ உறவுகளே! நாம் புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களில் சிதறிக்கிடக்கிறோம். அப்படியிருந்தும் எமது மொழி, கலை, கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கங்களை ஓரளவாவது கட்டிக்காத்து வருகிறோம். இந்நிலையில் நாம் வாழும் நாடுகளில் இதனைத் தொடர்ந்து கட்டிக் காப்போமா? கைவிடுவோமா என்றொரு கேள்வி என்னில் எழுகிறது. இதற்கான தலைப்பைத்தான் மேலே தெரிவு செய்துள்ளேன். இதனை வாதப்பொருளாகக் கொண்டு, உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து இளைய தலைமுறயினரை ஊக்குவிக்க ஆவன செய்வீர்களென எதிர்பார்க்கின்றேன். …

    • 19 replies
    • 8.6k views
  4. நாம் அணிவகுத்துள்ளோம்... நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்... அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமது ஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது! எதிரியின் குண்டுகள் வெடிக்கும்... ஆனால் எமது விடுதலை நெஞ்சங்கள் எரிமலையென வெடிக்கும் சத்தத்தில் அதன் சத்தம் அமுங்கிவிடும்! நாம் அணிவகுத்துள்ளோம்... நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது அண…

  5. எம் தேசியத்தலைவரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எம்மால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வாழ்த்துப்பாடலின் முன்னோட்டத்தை இணைக்கிறோம் . ஈழப்பிரியனின் வரிகளில் வரையப்பட்டு விஜயன் ,நாதன் ,ராஜீவ் குரல்களில் எனது இசையில் உருவாக்கம் பெர்ருக்கொண்டிருக்கின்றது இந்தப்பாடல் .மேலும் எனது இசையில் உருவான பாடல்களில் முதல்முறையாக சிறந்த ஒரு சவுண்ட் இன்ஜினியரின் மெருகூட்டலில் நிறைவு பெற இருக்கின்றது .காத்திருங்கள் .எம் தேசியத்தலைவரின் 60 ஆவது அகவையை ஆடிப்பாடி கொண்டாடுவோம்

  6. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப்படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில்! ''நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாளராகப் பணிபுரிந்தேன். 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டு வேலையை உதறித் தள்ளினேன். இப்போதைய ஃபேஸ்புக் நண்பர்களைப் போல, அப்போது பேனா நண்பர்கள் இருப்பதும் தங்களுக்குள் நட்பு வளர்த்துக்கொள்வதும் வழக்கம். அப்படி என் மகன் சேகரின் பேனா நண்பராக இருந்தவர்தான் ஜப்பான், ஷீமாடா நகரைச் சேர்ந்த சூஜோ மாட்சுனுகா. 1981-ல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வந்தார் சூஜோ. 'ஒரு ஜப்பானியன் பார்வையில் திருக்குறளும் திருவ…

  7. எழுதியவர் : பழ. கருப்பையா மூலம் : http://tamil.oneindia.com/ "திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; "திராவிடன்" என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.'' ''ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், 'இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு" என்று பேசுகின்றன. ஆகவே, நேரு காலத்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய இந்த நூல்கள் கொளுத்தப்பட வேண்டும்!'' ''இங்கு, இந்து நாகரிகம் ஒன்றுதான் உண்டு; யூத கிருத்துவ நாகரிகத்துக்குப் பிந்தையது இந்து நாகரிகம்…

  8. மாவீரன் அலெக்ஸாண்டரை இரும்புப்பறவை என்று வருணிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் அந்த இருப்புப்பறவையை மேலும் வருணிக்கிறார் இவ்வாறு: இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால் வீரமும் விவேகமும் இவன் ஆயுதம் கம்பீரமும் அழகும் இவன் சக்தி எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த கிரேக்கப்புயல்! உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில் உலக தேசங்களை தன் எஃகு பாதையில் நசுக்கி வைத்திருந்த ஓர் இரும்புப்பறவை! ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால் ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன் எத்தகையவன் அந்த மனிதன்தான் அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் (THE GREAT ) கி.மு 356-ஆம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந…

  9. பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன; ஆராயப்படுகின்றன. எனவே, மேலைநாட்டுச் சிந்தனையின் தந்தையர்களில் ஒருவராக இவர் போற்றப்படுகிறார். ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார். கி.மு. 399 ஆம் ஆண்டில் சாக்ரட்டீஸ் 70 வயதை எட்டியிருந…

  10. சங்ககாலப் போர்முறைகளும் விதிகளும் அறிஞர் க.பூரணச்சந்திரன் போர்முறைகளும் விதிகளும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே வருகின்றன. வாளையும் ஈட்டியையும் கொண்டு போரிட்ட காலத்துப் போர் முறைகள் ஒருவிதம். துப்பாக்கியையும் பீரங்கியையும் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு போரிட்ட முறைகள் இன்னொரு விதம். டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு போர்முறை வேறுவிதமாக மாறியது. டாங்கிகள், போர் விமானங்கள் வந்த பிறகு போர்முறை முற்றிலும் வேறுவிதமாக மாறியது. கடைசி யாக இப்போதோ அணுகுண்டு, ஹைடிரஜன் குண்டு போன்ற அணு ஆயுதங்கள், வேதியியல் நச்சுகள், உயிரியல் அழிப்புப் போர்முறைகள் போன்ற பலவிதமான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. போரின் வரலாற்றை நோக்கும்போது, தனி மனித அழிப்பிலிருந்து மாறி எவ்விதத் தொ…

  11. Source : http://subavee-blog.blogspot.com/ கம்பரின் காப்பியத்தில், ஆரண்ய காண்டத்திலே இடம் பெற்றுள்ள சூர்ப்பனகைப் படலம், கரன் வதைப்படலம், மாரீசன் வதைப்படலம் ஆகிய மூன்று படலங்களையும் படித்தால் பல உண்மைகள் நமக்கு விளங்கும். இலக்குவனால் அமைக்கப்பெற்ற பர்ணசாலையின் வெளிப்புறத்தில், இராமர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தூங்கியும்,தூங்காமலும் அரிதுயில் கொண்டுள்ளதாக அதனைக் கூறுவர். அப்போது தன் கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் இழந்து, கைம்பெண்ணாய்க் காட்டில் அலைந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கு வருகிறாள். இராமரைக் கண்டு, அவர் அழகில் மயங்குகிறாள். தன்னுடைய அரக்க உருவத்தை, மந்திரத்தால் அழகிய உருவாக மாற்றிக் கொண்டு,இராமரை நெருங்குகிறாள். அவள் எப்படி நடந்து வந்தாள் என்பதைக்…

  12. தமிழால் இணைவோம் தமிழால் ஒன்றுபடுவோம் தமிழர்களாய் வாழ்வோம் என்று தணியும் இந்தத் தமிழனின் பிரிவு. எல்லாமே அரசியல்தான் என்று விட மனமில்லை. அரசியல்வாதிகளினாலும் அடிப்படைவாதிகளினாலும் பிரிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்அவர்களின் மாயைக்குள் வீழ்ந்து சிக்கிச் சின்னாபினமாகிக் கொண்டிருக்கின்றனர். ஒரு இனத்தை அடையாளப்படுத்துவது தாய் மொழி. தாய் மொழியால் இணைந்தவர்கள் அனைவருமே மதங்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும் கலை கலாச்சாரம் என வேறு பல காரணிகளால் தாய்மொழியினால் இணைக்கப்பட்டு ஒரு இனமாக வாழ்கின்றனர். தமிழன் தமிழ் மொழியால் இணைந்து உலகெல்லாம் பரவி வாழ்ந்து வருகின்றான். ஆனால் அந்தத் தமிழர்களே தங்களுக்குள் தாங்கள் மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், …

  13. இந்த வருட மாவீரர் தினம் என்பது 4 இடத்தில் 4 அமைப்புக்கள் ஏட்டிப் போட்டியாக வைப்பார்களா என்பது தெரியாது. அவர்களுக்கு அஞ்சலி செய்தல், கௌரவம் செய்தல் என்பது கட்டாய தேவை. ஆனால் வழமை போல 4 பாட்டு, 3 நாடகங்கள், 2 நடனங்கள், என்று நடத்திக் கொண்டே இருக்கப் போகின்றார்களா? அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க ஏதாவது செய்ய வேண்டாமா?? இதை மக்களிடமே விட்டுவிடலாம் எள நினைக்கின்றேன். மாவீரர் தினத்துக்கு வருகின்ற மக்களிடம் கருத்துக் கணிப்பாக என்ன எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்பது தொடர்பாக தகவல்களை திரட்டும் வண்ணம் எழுதவைத்துப் பெறலாம் என நினைக்கின்றேன். சில நாதாரிகள் கேவலமாக எழுதித் தரக்கூடும். அவற்றுக்கு குப்பைக்கூடு எதற்காக இர…

  14. வீரத்தாய் குயிலி நினைவு தினம் இன்று ! சுதந்திர இந்தியாவிற்கு அடித்தளம் இட்ட, வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு, எவரும் எதிர் பார்க்கா வண்ணம், வெள்ளையர்களின் ஆயுத கிட்டங்கிகளை அழிக்க தன் மீது எண்ணையை ஊற்றி, எவராலும் அழிக்க முடியாத ஆயுத கிடங்கை அழித்தும், தன்னையும் மாய்த்துக்கொண்ட வீரம் செறிந்த, விடுதலைக்கு வித்திட்ட வீரத்தாய் குயிலி நினைவு தினம் சுதந்திர இந்தியாவிற்கு அடித்தளம் இட்ட, வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு, எவரும் எதிர் பார்க்கா வண்ணம், வெள்ளையர்களின் ஆயுத கிட்டங்கிகளை அழிக்க தன் மீது எண்ணையை ஊற்றி, எவராலும் அழிக்க முடியாத ஆயுத கிடங்கை அழித்தும், தன்னையும் மாய்த்துக்கொண்ட வீரம் செறிந்த, விடுதலைக்கு வித்திட்ட அருந்ததிய வீரத்தாய் குயிலி -இன்று நினைவு தினம் இன்று . …

  15. தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் அறிஞர் க.பூரணச்சந்திரன் தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் பற்றிப் பலர் கவலையோடும் அக்கறையோடும் விவாதிக்கிறார்கள். பொதுவாக நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்களை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள். அவற்றைப் பகுத்துப்பார்த்தால், பெரும்பாலும் 1. உலக/ இந்திய நாகரிகத்திற்குத் தமிழகத்தின் பங்கு ஏற்றுக்கொள்ளப்படாத நிலை 2. இந்தியாவில் தேசிய நலனுக்கு உகந்த கூட்டாட்சிகள் அமையாத நிலை-தமிழ்த் தேசியம் உருவாகாத நிலை 3. ஆங்கிலத்தின் ஆதிக்கம்/ அதன் பின்னணியிலுள்ள உலகமயமாக்கல் 4. செம்மொழிப் பிரச்சினை 5. ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசியலும் அதனோடு இணைந்த தமிழ்மேம்பாடும் என்ற பொருள்களில் அடங்குகின்றன. சிலருக்கு தமிழனுக்கு இனவுணர்வில்லையே என்ற…

  16. தமிழ்மொழியில் அறிவியல் இல்லையாம்..?? அப்ப இதெல்லாம் என்னவாம்..!? தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் ! உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் த…

  17. நாட்டார் கலைகளில் ஒருபார்வை – ‘தமிழ்க்கவி’ நாட்டார் கலைகள் என்றால் என்ன? நாட்டார் கலைகள்தான் ஒவ்வொரு நாட்டுக்கும்’ ஒவ்வொரு இன மக்களுக்கும ; பாரம்பரியமானது என்று சொல்லக்கூடிய பண்பாடு பழக்கவழக்கங்கள் உண்டு.அவை நாட்டு மக்களின் வாழ்வாதாரம. ;. கூடவே இவர்கள் இன்னார் என இனங்காட்டுவதும்’ இவர்களது கலை பண்பாடு பழக்க வழக்கம்தான். நாட்டாரியல் ஆய்வுகள் நாடுகள் தோறும் செய்யப்பட்டு வந்தாலும் அமெரிக்கா .பிரித்தானியா போன்ற நாடுகளே இதற்காக பெரும் பொருட்செலவில் நிறுவனங்களை அமைத்துள்ளன.முந்நாளில் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டு வளமிக்க நாடுகளைக் கண்டுபிடித்து அவற்றை ஆக்கிரமித்து தம் பலத்தால் ஆட்சி புரிந்த போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயருமே முதலில் நம் நாடுகளின் கலை கலாச்ச…

  18. உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய் ================================= ‘அப்பா’ என்ற தமிழ்ச்சொல் இன்று உலகித்தின் பல மொழிகளில் நேரடியாகவும் – மருவியும் – திரிந்தும் – சிதைந்தும் வழங்கிவருகின்றது என்ற செய்தி வியப்பிற்குரிய ஒன்று. தமிழ்மொழியின் தொன்மைக்கும் – முதன்மைக்கும் – தாய்மைக்கும் – தலைமைக்கும் இதுவொரு மிகச் சிறந்த சான்றாதாரம் அல்லவா? உலகத்தின் மூத்த மொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதற்கு தமிழுக்கு இருக்கும் தகுதியை நிறுவுதற்கு இதுவொன்றே போதுமல்லவா? சரி வாருங்கள், ‘அப்பா’ என்கிற தமிழ்ச் சொல் உலக மொழிகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது – மருவியிருகிறது என்று பார்ப்போம். தமிழ்:- அப்பன் // மலையாளம்:- அப்பன் // கன்னடம்:- அப்ப // துளு:- அப்ப // குடகு:- அப்பெ // …

  19. தொன்மச் சோழர்கள் சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு…

    • 2 replies
    • 17.3k views
  20. செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? http://www.unmaionline.com/new/2123-.html You are here: Home செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? Print Email - கவிஞர் கலி.பூங்குன்றன் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. அது தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனை எதிர்த்து ஆகஸ்டு முதல் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துவிட்டார். சமஸ்கிருதமும் ஒரு மொழிதானே _ குறிப்பிட்ட பள்ளிகளில்தானே கொண்டாடச் சொல்லியிருக்கிறார்கள் என்று சிலர் முட்டுக் கொடுக்கக் கிளம்பியுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா வகையறாக்களைச் சேர்ந்தவர்கள். சமஸ்கிரு…

  21. “நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” – இளம்பூரணர் 1967-69 யாண்டுகளில் 'சென்னை மாகாணம்' என்று அதற்குமுன் வழங்கிய பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றப் பெயர்சூட்ட முனைந்த பொழுது சான்றுகள் தேடியபொழுது சிலப்பதிகாரத்தில் காட்டினதாகச் சொல்லுவார்கள். சிலப்பதிகாரத்திலே “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருதினையாயின்” (சிலப்பதிகாரம் : வஞ்சிக் காண்டம்) என்று சொல்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டுமேயன்றி மற்ற பழைய உரைகாரர்களில் ஒருவரும் தமிழ்நாடு என்ற சொல்லை வழங்குகின்றார். அது சிலப்பதிகாரத்தின் வழக்கை விட இன்னும் தேற்றமானது. அதைக் காண்போம். தொல்காப்பியத்தின் பழைய உரைகாரர்களுள் முந்தியவர் இளம்பூரணர் (கிபி 11-ஆம் நூற்றாண்டு). செப்பும் வினாவும் வழுவாது வருதற்கு “நு…

  22. “ஐபோன் புரட்சியில் தமிழுக்கும் இடம் உண்டு!” அ.முத்துலிங்கம் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், 'அனைத்துலக வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனைக்கான இயல் விருது’ விழாவை சமீபத்தில் ரொறொன்ரோவில் நடத்தியது. வருடாவருடம் வழங்கப்பட்ட இயல் விருதை இதுவரை சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், அம்பை, பத்மநாப ஐயர், ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன், டொமினிக் ஜீவா போன்ற ஆளுமையாளர்கள் பெற்றிருந்தார்கள். இயல் விருதுடன் இந்த முறை வழமைபோல புனைவு, அபுனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு, தமிழ்க் கணிமை விருதுகளும் வழங்கப்பட்டன. பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்ட கட்டுரைப் போட்டியில் ருமேனியாவைச் சேர்ந்த எலினா ரோபோறஸ் என்கிற இளம்பெண…

  23. தமிழ் மொழியின் பெருமை பற்றியும் மீனாட்சி அம்மன் கோவில் பற்றியும் அழகு தமிழில் பேசும் சீனத்து பெண் https://www.facebook.com/photo.php?v=10154278257055637

  24. இராசேந்திரசோழனை நினைவுகூரல் தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை பொதிகை தொலைக்காட்சி மட்டுமே முழுவதும் ஒளிபரப்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் எவரையும் காணமுடியவில்லை. நியாயமாக தமிழக முதல்வரே நேரில் வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்க வேண்டும். தமிழகம் தழுவிய விழாவாக இதை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். திராவிட அமைப்புகள், கட்சிகள் சோழர்களின் புகழ்பாட ஒருபோதும் முன்வர மாட்டார்கள் . அதேபோல் ஆரிய இந்துத்வா அமைப்புகளும் சோழர்களை சிறப்பிக்க முன்வர மாட்டார்கள். காரணம் சோழர்கள் தமிழ்த் தேசத்தின் பெருமைமிகு சின்னமாக விள…

    • 5 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.