Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியமும் இசையும்

இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை

பதிவாளர் கவனத்திற்கு!

இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மனிதர்கள் எண்ணிக்கை விட கதைகள் அதிகம்: எஸ்.ராமகிருஷ்ணன் மின்னம்பலம் மழைக்காலங்களின் காலை நேரங்கள் அலாதியானவை. அந்தக் கதகதப்பையும் விநோத மனநிலையையும் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், 80களில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர். இவரது முதல் கதை ‘பழைய தண்டவாளம்’ கணையாழியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, தீவிரமாக எழுதத் தொடங்கிய இவர், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், பயணம், உலக சினிமா குறித்த அறிமுகம், திரைக்கதை எனப் பல தளங்களிலும் தனது எழுத்தை விஸ்தரித்துக்கொண்டே இருப்பவர். கரிசல் இலக்கியத்தின் மரபில் வந்தவரான எஸ்.ராம…

  2. பிரபாகரன் என்ன சித்தனா? தெய்வமா? – நேர்காணல் -தமிழ்க்கவி இதுவரை படித்தவர்கள்: 351 நான்வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் பரந்தனைக் கடந்து கிளிநொச்சியை விரைவாக அண்மித்து நீதிமன்ற நிறுத்தத்தில் என்னை இறக்கி விட்டுத் தனது பயணத்தைக் தொடர்ந்தது. கிளிநொச்சிக்கும் எனக்கும் ஒரு பரமார்த்தமான தொடுகைகள் முன்பு இருந்தன. சிறுவயதில் இருந்தே எனது தந்தையார் இங்கு கடமையாற்றியதால் ஏற்பட்டதாலும் இங்கு நெற்செய்கை வயல் இருந்தகாரணத்தினாலும் அது ஏற்பட்டது. நான் கிளிநொச்சியில் இறங்கியபொழுது அந்தக்காலை வேளையிலும் வெய்யில் வெளுத்துக்கட்டியது. வியர்வையில் உடல் தெப்பமாக நனைந்து விட்டதாலும் குறித்த நேரத்திற்கு முதலே வந்து விட்ட காரணத்தினாலும் நீதிமன்ற வளாகத்தின் அருகே…

  3. மயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன் கடந்த காலங்களில் ரமணிசந்திரன் எழுத்துகள் பற்றி நான் சமூக வலைதளங்களில் விமர்சன‌க் கருத்துகள் சொல்லி கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து இருக்கிறேன். அவரது வாசக பலம் அப்படி. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் படை மாதிரியான விசுவாசமான வாசகிகள் திரள். நான் முன்வைத்த கருத்துகள் பெரும்பான்மை பகடியானவை என்பதால் இது பற்றிய என் எண்ணங்களைக் கொஞ்சம் சீரியஸாக எழுதிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. அவ்வகையில் இது ஒரு சுயபரிசீலனை. ரமணிசந்திரன் 1970லிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். படைப்புலகில் அவருக்கு இது பொன்விழா ஆண்டு. அதற்கு முதலில் அவருக்கு வாழ்த்துகள். 2014ல் அவள் விகடன் பேட்டியில் அது வரை 157 நாவல்கள் எழுதியிருப்பதாகச் சொல்கிறா…

  4. "போரியலை தளமாகக் கொண்டிருக்கும் படைப்பாளர்களை மக்கள் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குகின்றனர் ". கோமகன் - பிரான்ஸ் . வடபகுதியில் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கோமகன், தனது இளமைக்காலத்திலேயே நாட்டின் சூழ்நிலைகளினால் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்து நீண்டகாலமாக அங்கு வசித்து வருகின்றார்.தமிழ் எழுத்துப் பரப்பில் வேகமாக வளர்ந்துவரும் படைப்பாளிகளில் கோமகனும் ஒருவர் .சட்டகங்களில் குறுக்காத இவரது படைப்புகள் எளிமையான சொல்லாடல்களுடன் பலதரப்பு வாசகர்களை வசப்படுத்துவது இவரது பெரிய பலமாகும் .தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கோமகனின் "தனிக்கதை " என்ற சிறுகதை தொகுதி கடந்த வருடம் இவரால் கிடைக்கப் பெற்றுள்ளது . அடுத்த கட்ட முயற்சியாக தான் இதுவரை செய்த நேர்காணல்களை தொகுப்பாக்கி ஆவணப்படுத்து…

  5. ‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன் கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையைதேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வ…

  6. பாலுணர்வை அறிதலும் எழுதுதலும் - ஜெயமோகன் ஹாவ்லக் எல்லிஸ் சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார். ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். அவர்கள் இவ்வகை எழுத்துக்களையே தெரிவுசெய்கி…

  7. “நாங்கள் அருகில் இருந்திருந்தாலும் எங்கள் தந்தையின் மறைவை இத்தனை மரியாதையுடன் அணுகியிருக்க மாட்டோம். தமிழ் இலக்கிய உலகம் எங்கள் தந்தையின் இறுதி மரியாதையை கண்ணியத்துடன் நடத்தியது” என்று நினைவுகளைக் கூறி நெகிழ்கிறார், ஈழத்து எழுத்தாளர் கே.டானியலின் மகனான டானியல் வசந்தன். கே.டானியல் இலக்கியம் என்பது ஒரு காலம் வரை குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியலை மட்டுமே பதிவு செய்தது. சொல்லப்போனால் இலக்கியம், ஒரு பொழுதுபோக்குக் களமாக மட்டுமே இருந்த காலம். அப்போது அதனை ஒருவர் தலைகீழாக மாற்றி அரசியல் படுத்தியவர் எழுத்தாளர் கே.டானியல். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியலை, வாழ்க்கை அனுபவங…

  8. சிங்கப்பூர் - மலேசியா பயணம் தமிழ் முரசு நாளிதழ் மற்றும் சிங்கப்பூர் கலை மன்றம் இணைந்து நடத்தும் ஒருநாள் அறிவியல் புனைவு - வரலாற்று புனைவு பயிலரங்கிற்காக என்னை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூரோ தஞ்சாவூரோ எங்கு சென்றாலும் உரிய தயாரிப்புடன் செல்ல வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அறிவியல் புனைவு, வரலாற்று புனைவு தொடர்பாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து வாசித்து என்னை தயார் செய்து கொண்டேன். வழக்கமாக செல்லும் ஊட்டி கூட்டத்திற்கு கூட இந்தமுறை செல்லவில்லை. வெளிநாட்டிற்கு தனியாக பயணிப்பது இதுவே முதல்முறை எனும் பதட்டம் வேறு லேசாக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டது. மே எட்டாம் தேதி நள்ளிரவு திருச்சியில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை சிங்கப்பூர் செ…

    • 0 replies
    • 1.6k views
  9. குணா கவியழகனை வாசித்தலும், புரிந்துகொள்ளுதலும் வாசன் குணா கவியழகன் இப்போது அதிகம் எழுதுகிறார். அவரது படைப்புக்கள் குறித்த ஆரவாரங்களும் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டன. இப்போது அவரது 5 வது நாவலினையும் அவர் எழுதி முடித்துவிட்ட நிலையில் அவர் குறித்த சர்ச்சைகளும் அவர் மீதான விமர்சனங்களும் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டன. ஒரு படைப்பாளிக்கு செய்யப்படும் அநீதிகளிலேயே மிகப்பெரியது அவனை ஒற்றை வரியில் ஒரு படிமத்திற்குள் அடக்கி அவன் மீதான ஒரு ஆழமான முத்திரையை பதித்து விடுவதுதான். அவன் எத்தனை ஆயிரம் படைப்புகளை வெவ்வேறு தளங்களில் படைத்திருந்தாலும் இத்தகைய ஒற்றை வரிப் படிமத்தில் அவனைக் கூண்டில் அடைக்கும் செயலானது உலகளாவிய ரீதியில் காலாகாலமாக நடக்கின்ற ஒரு செயற்பாடு.…

  10. 🎶 🎵சிம்பொனி என்றால் என்ன? 🎵 🎶 🎵 ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். 🎵 உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது. அதில் முக்கியமானவை: 1. சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra) 2. சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra). 🎵 16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது. 🎵 அது தான் சிம்பொனி! இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Sy…

  11. யாழ்ப்பாணச் செலவு பெருமாள்முருகன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கை சென்று திரும்பிய திரு.வி.க. தம் பயண அனுபவத்தை ‘எனது இலங்கைச் செலவு’ என்னும் தலைப்பில் விரிவாக எழுதினார். தமிழ்ப் பயண இலக்கியத்தில் முக்கிய இடம்பெறும் கட்டுரை அது. அதில் ‘ஈண்டுச் செலவு என்னுஞ் சொல்லைப் பொருட் செலவென்னும் பொருளில் பெய்தேனில்லை. தரை – நீர்ச் – செலவு என்னும் பொருளில் அச்சொல்லைப் பெய்தேன்’ (ப.57) என்கிறார். செலவு என்னும் சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பயின்றுவருகிறது. செல்லுதல் – பயணம் என்னும் பொருளுடையது. தலைவன் பொருள் தேடிப் பிரிந்து செல்லுதலைச் ‘செலவு’ என்றும் தலைவியின் துயர் கண்டு அவன் தம் பயணத்தை நிறுத்திவிடுதலைச் ‘செலவழுங்குதல்’ என்றும் அகப்பொருள் இ…

  12. உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா நெஞ்ச உதச்சி உதச்சி பறந்து போனா அழகா? யாரோ அவளோ? தாலாட்டும் தாயின் குரலோ ராஜா ஆரம்பமே ராஜாவோட ஸ்டைலிஷ் ஆரம்பமா இருக்கு. சித் ஸ்ரீராமோட குரல் இந்தக் காலகட்டத்துக்கான காற்றா வருடுது. கபிலன் கூச்சலற்ற வார்த்தைகளால இசை பேச வேண்டிய இடத்துல சொற்களை மௌனிச்சு அதனூடா சொற்களைப் பேசவைக்கிற லாவகத்தோட எழுதிருக்கார். அதுவும் ராஜாவோட தனித்துவம் எப்பவுமே ஒரு பாட்டை ஆரம்பிக்கும் போது ஆர்ப்பாட்டம் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு கதவாத் திறந்துகிட்டே போய் ஒரு பழக்கமான மூலையில் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்ததும் அது வரைக்குமா…

    • 0 replies
    • 1.6k views
  13. ஜெயமோகனின் பிதற்றல்கள் 1. ஒருமுறை ரஞ்சகுமார் ஜெயமோகனின் புத்தகம் எழுதும் வேகத்தை கண்டு “இதன்ன நாங்கள் காலையில் எழுந்து மலங்கழிப்பதுபோல் இந்தாள் புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கு!” என்று சொன்னதாக எனக்கொரு நண்பர் கூறினார். ரஞ்சகுமார் என்ன கருத்தில் அதைச் சொன்னாரோ தெரியாது, ஆனால் ஜெயமோகன் ஆரம்பத்தில் எழுதிய ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘கொற்றவை’ என்பவை போன்ற சிலதைத்தவிர ஏனையவை எல்லாம் மலங்களாய் வெளித்தள்ளப்படும் கழிவுப்பொருட்களே! (உதாரணம்: பாரதம் இரண்டு பாகம்) விந்து கதித்தவன் விலைமாதரிடம் செல்லும் தொழிலே அவர் எழுத்தாகிவிட்டது. 2. இத்தகைய இவருடைய புத்தகங்களை வாசித்து எவரும் விமர்சனம் செய்யாததாலும் அதன் மூலம் இவருக்கு publicity கிடைக்காததாலும், தன்னை ஏதோ விதத்தில் ஒரு…

    • 2 replies
    • 1.5k views
  14. நாம் எல்லோரும் ஒவ்வொரு வகையில், வாழ்க்கையில் என்றோ நம்வசம் இருந்து நாம் இழந்துபோன சில விடயங்களை தேடிக்கொண்டே இருப்போம் என நினைக்கிறேன். அப்படி நான் பல பத்து வருடங்களாக (1991 இல் இருந்து) தேடிக்கொண்டிருக்கும் விடயம் ஒரு காலத்தில் ஈழத்தில் மிக பெரும் ஞனரஞ்சக நகைச்சுவை படைப்பாக ஒவ்வொரு தேத்தண்ணி கடையிலும் கேட்ட “லூஸ் மாஸ்டர்” நகைச்சுவை ஒளிநாடா பதிவு. 2015 வாக்கில் யாழிலும் எழுதினேன். இன்றுவரை இந்த நாடகத்தின் ஆடியோ கசட்டை யாரும் எங்கும் தரவேற்றியுள்ளதாக தெரியவில்லை. ஆனால் பின்னர் தேடிப்பார்த்ததில் - 2014 இலேயே இதை எழுதி, நடித்த நாவாலியூர் ஐசக் இன்பராஜா ஜேர்மனியில் வசித்து காலாமாகினார் என்ற சோழியன்( 🙏) அண்ணாவின் பதிவும், அந்த திரியில் பொயட் ஐயா உட்பட பலர…

  15. பா. அகிலனின் அரசியல் மொழி சேரன் பா. அகிலன் கவிதைகள் கீதா சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘Then There Were No Witnesses’ எனும் தலைப்பில் இருமொழிப் பதிப்பாகவும் கூடவே அகிலனின் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும் ஜுன்17 அன்று கனடாவில் வெளியிடப்பட்டது. நிகழ்வில் Then There Were No Witnesses பற்றி நாவலாசிரியர் ஷியாம் செல்வதுரை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளில் எழுதும் கவிஞர் இந்திரன் அமிர்தநாயகம், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான நீத்ரா ரொட்ரிகோ, நூலை வெளியிட்ட மவ்ந்ன்ஸி பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் நூர்ஜஹான் அஸீஸ் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாற்றினர். ‘அம்மை’ தொகுப்பைப் பற்றியும் அகிலனின் இதர கவிதைகள் பற்றியும் எஸ்.கே. விக்கினேஸ்வரன் தமிழில் உரையாற்றினார். இந்திரன் …

  16. நேர்காணல்: ம. நவீன் “எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” by வல்லினம் • October 7, 2018 • 1 Comment ம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து எவ்வித சமரசமும் இல்லாமதல் நவீன இலக்கியத்தில் தீவிரத்தன்மையுடன் செயல்பட்டு கொண்டிருப்பவர். அதனை நிரூப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தனது படைப்புகளை நூலாக்கி மலேசியத் தமிழ் இல…

  17. மேட்டிமைவாதமா? jeyamohanDecember 26, 2023 அன்புள்ள ஜெ உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு பு…

      • Haha
      • Like
      • Thanks
    • 13 replies
    • 1.5k views
  18. பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும் — ராகவன் — கடந்த மார்ச் 30-31 இல் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் அறிமுகங்கள் அத்துடன் பாலஸ்தீனப் பிரச்சனை, இன முரண்பாடு, மலையக மக்கள், பால் நிலை வேறுபாடுகள், LGBTQ, சாதியம் போன்ற பல்வேறு விடய தானங்கள் பேசப்பட்டன. விவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டாம் நாள் மாலை நிகழ்விற்கு நாலு பேர் புதிதாக வந்திருந்தனர். அவர்கள் நால்வரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். ஒருவர் யோகு அருணகிரி. மற்றவர் கார்வண்ணன். மூன்றாமவர் நெய்தல் நாடன். மற்றவர் பெயர் தெரியாது. டெலோன் மாதவன் என்ற இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிரான்ஸு நாட்டு அறிஞர் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் புவியியலில் டாக்டர் பட்டம…

  19. “போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!” வே.கிருஷ்ணவேணி முக்கியமான ஈழத்தமிழ்க்கவிஞர். ஆனால் பெரும்பாலான தமிழகத் தமிழர்களுக்கு அவரை ‘ஆடுகளம்’ பேட்டைக் காரனாகத்தான் தெரியும். வ.ஐ.ச.ஜெயபாலன் மலையாளம், ஆங்கிலம் என்று மொழி எல்லைகளைத் தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேசினேன். “தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக…

    • 15 replies
    • 1.4k views
  20. இதற்குமிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை – அ.இரவி May 31, 2020 நேர்கண்டவர் : அகர முதல்வன் அ.இரவி ஈழத்து எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.இவருடைய “ஆயுதவரி”, “பாலை நூறு” ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாண பாஷையில் அமைந்திருக்கும் இவரின் எழுத்து மொழிக்கு ஒரு தனித்துவ இடமுண்டு. இவரின் புகழ்பெற்ற “காலம் ஆகி வந்த கதை” தொகுப்பும், “வீடு நெடும் தூரம்” தொகுப்பும் ஈழர் இலக்கியத்தின் முக்கிய பிரதிகள். “காலம் ஆகி வந்த கதை” – என்ற உங்களின் தன் வரலாற்றுப் புனைவுப் பிரதி சாத்வீக – வன்முறை ஆகிய இரண்டு போராட்ட வரலாற்றுக் காலங்களைப் பேசுகிறது. இந்த நூலிற்கு கிடைத்த வரவேற்பைக் கூற முடியுமா? தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இதனை வாசி…

  21. நேர்காணல்: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு) விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். ஒன்பது நாவல்கள் உட்பட பதினேழு நூல்களின் படைப்பாளி. அவரது நண்பரும் முதுகலை மாணவருமான அரவிந்த (தமிழ்நாடு) னின் மின்னூல் மூலமான கேள்விகளுக்கு அளித்த நேர்காணல் இது.) கேள்வி 1: தமிழின் முக்கியமான ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டுள்ளீர்கள். இந்நிலையில் அண்மையில் உங்கள் 'கலிங்கு' நாவல் வெளிவந்திருக்கிறது. வடிவம், உள்ளடக்கம், அதன் சமூகச் செயற்பாடுகள் சார்ந்து நவீன நாவலின்மேல் காத்திரமான கேள்விகள் உருவாகியுள்ள இன்றைய நிலையில், பொதுவாக நாவல்களைப் பற…

  22. அம்பாரி யானை by ஜா.ராஜகோபாலன் • September 11, 2018 9௦ களின் தொடக்கத்தில் நவீன தமிழ் இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய எனக்கு பத்தாண்டுகள் கடந்த பின் சில கேள்விகள் இருந்தன. தமிழ் எழுத்தாளர்களை பொதுவாக வகைப்படுத்தும்போது வணிக எழுத்தாளர்கள், இலக்கிய எழுத்தாளர்கள் எனச் சொல்கிறோம். இலக்கிய எழுத்தாளர்களுக்குள் வந்தால் அதிலுமே சில பிரிவுகள் இருக்கின்றன. எழுத்தின் வகையாலன்றி பேசுபொருளின் அடிப்படையில் நான் வகுத்துக் கொண்ட விதத்தால் இப்படி சொல்கிறேன். இலக்கிய எழுத்தில் பெரிதும் புகழப்பட்ட எழுத்துகளில் பெரும்பான்மையும் உறவுச் சிக்கல்களை, விலக்கமும் நெருக்கமும் அச்சுகளாகி ஆடும் மானிட உறவுகளின் ஆட்டங்களை, அதன் ரகசியங்களைப் பேசியவையாகவே இருந்தன. வெகு குறைவாக அல்லது வெக…

  23. “கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்” ஷாலினி சார்ல்ஸ் ஷாலினி சார்ல்ஸ் ஈழத்தின் வடபுலத்தில் உள்ள சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டு யாழ்நகரில் வசித்துவரும் ஷாலினி சார்ல்ஸ், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பன்முக ஆளுமையுடையவராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். திரைப்பட நெறியாட்கை, குறும்படத்தயாரிப்பு, சமூக சேவை, யாழ் என்ரர்ரெயிமென்ற், மற்றும் யாழ் அறக்கட்டளை ஸ்தாபகர் என்று பலதுறைகளில் தனி முத்திரை பதித்து இருக்கின்றார் இவரே ஈழத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற தகமையையும் பெறுகின்றார். இவரது “உயிர்வலி” குறும்படம் விருதை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது. திரைப்படம், சமூகம், அரசியல் என்று தனது …

    • 3 replies
    • 1.4k views
  24. எனதில்லாத எனது ஊர் - ‍ யாழ்ப்பாணம் இளங்கோ-டிசே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும்போது காலை ரெயினை எடுத்திருந்தேன். நேரத்தை சிக்கனமாகப் பாவிக்கவேண்டுமாயின் இரவு பஸ்ஸெடுக்கலாம். ஆனால் இலங்கைக்கு எப்போதாவது செல்லும் எனக்கு பயணக்காட்சிகளைத் தவறவிடுவதில் விருப்பமில்லை என்பதால் சற்று நீண்டதாயினும் ரெயினைத் தேர்ந்தெடுத்தேன். கொழும்பின் நெரிசல்களைக் கொஞ்சம் தாண்டிவிட்டால் அது ஒரு அழகான காட்சியாக விரியத்தொடங்கும். சூரியன் இன்னும் உதிக்காக விடிகாலையில் பனிப்புகார் மூடிய பசும் வெளிகளுக்குள்ளால் இரெயின் ஊடறுத்துப் பாயும்போது நாமும் புத்துணர்ச்சி அடைவோம். என்ன வளம் இந்த நாட்டில் இல்லை என்கின்றமாதிரியாக சிறுகுளங்களையும், பெருமரங்களையும்,விவசாய நிலங்களையும், மகிழ்ச்சியான கிராம…

  25. தரவுகளையும் கதைகளையும் எப்படி நாவலாக மாற்றுவது? ஈழத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவர் இக்கேள்வியைஎன்னிடம் எழுப்பியிருந்தார். அவர் ஈழப்போரின் பின்னணியில் ஒருஅடித்தட்டு மனிதரின் நிஜக்கதையை நாவலாக எழுதவுள்ளதாகவும், அதற்காக நிறைய தரவுகளையும், நேர்முகங்களைக் கண்டு பதிவுபண்ணியுள்ளதாகவும், இத்தகவல்களையும் உணர்வுகளையும்எப்படித் தொகுத்து நாவலாக எழுத ஆரம்பிப்பது என்று வினவினார். நான் அவரிடம் சொன்ன சில விசயங்களை உங்களில் இளம்நாவலாசிரியர்களுக்கு பகிர்வது பயனுள்ளதாக இருக்குமெனநம்புகிறேன். ஏதாவது ஒரு பாத்திரத்தை தேர்வு பண்ணி அவரது பார்வையில்கதையைச் சொல்லுங்கள். அப்பாத்திரம் உங்கள் மனதுக்குநெருக்கமாக, வித்தியாசமாக இருக்க வேண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.