Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 36 minutes ag திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அ…

  2. உன் புகைப்படத்தை ஓராயிரம் முறை பார்த்து இருப்பேன் ஏனோ நீ இன்னும் பார்க்கவில்லை என் குறுஞ்செய்தியை காத்திருந்தால் காதல் அதிகரிக்கும் என்று நானும் கூட சிலாய்த்துப் பேசியது உண்டு என் தோழியின் காதலுக்கு தூது போன நாட்களில் தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியுமென அப்போது தெரியாமல் போனது ஏனோ! நீ இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறாய் இம்மியளவும் மாறாமல் உன்னை நினைத்து உண்ணவும் முடியாமல் உறங்கவும் இயலாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் கோட்டானாய் நள்ளிரவில் நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா? என நினைத்தால் நெஞ்சம் பஞ்சாய் வெடிக்கிறது என்ன செய்ய நீயும் கொள்கையின் வாரிசு தானே! உன் கொள்கையை காதல் களவாடுமென நினைத்தேன் மாறாக கொள்கை களவாடியது…

  3. கரைச்சல் வேண்டும் ---------------------------------- கடவுளே வருடம் வந்து விட்டதே என்று காணி நிலம் கேட்பார்கள் சொத்து சுகம் கேட்பார்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கரைச்சலாவது கட்டாயம் கொடுக்கவும் ஒன்றுக்கு மேல் கொடுத்தால் இன்னும் நல்லது பெரிதாக தேவையில்லை சிறியவையாகவே போதும் பச்சை தண்ணீர் குடித்தால் மூக்கு ஓடுவது போல முருங்கைக்காய் சாப்பிட்டால் தோலில் அரிப்பு வருவது போல இனிப்பு சாப்பிட்டால் நெஞ்சு எரிவது உறைப்பு சாப்பிட்டால் வயிறு எரிவது நடந்தால் பாதம் நோவது இருந்தால் பிஷ்டம் நோவது படுத்தால் கழுத்து சுளுக்கு…

  4. Started by Kaviarasu,

    கடைகோடியில் கைவிடப்பட்ட நூலின் மறு வாழ்வு, மங்கையின் கழுத்தில் மாங்கல்யமாய். ~ கபியின் கவி

    • 1 reply
    • 1.7k views
  5. 'கருணை பொழியும் கதிர்காம முருகா' கருணை பொழியும் கதிர்காம முருகா கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா! கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன் கண்கள் இரண்டும் அழகில் மயங்குது! சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள் சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய்! சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட சங்கமம் ஆகிறாள் இதயத்தில் இன்று! கண்களில் ஒரு காதல் தேடல் கரை புரண்டு ஓடுது மனதில்! கதிரவன் ஒளியில் அவள் மட்டுமே கந்தன் கடம்பனாய் என்னை அழைக்கிறாள்! உன்னைக் காண தனிமை ஏங்குதே ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே! வள்ளி நீயோ முருகன் நானோ வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'கருணை பொழியும் கதிர்காம முருகா'] https://www.facebook.com/groups…

  6. குட்டிக் கவிதைகள்..! உணவு..! உணவை அறிந்தே உண்ணுவோம் உலகின் உயர்வையே எண்ணுவோம். விவசாயி..! கரையழுது நுரை தள்ளுவது-ஒருபோதும் நடுக் கடலுக்கு தெரிவதில்லை. அன்பு..! அறுக் கமுடியாத இரும்புச் சங்கிலி அறுந்துடைந்தால் ஒட்டமுடியாத கண்ணாடித் துவள்கள். துர்நாற்றம்..! பொறாமைச் செடியில் பூக்கும் இதயம் அன்பை அழிக்கும் மணமே வீசும். அன்புடன் -பசுவூர்க்கோபி-

  7. பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தே…

    • 5 replies
    • 626 views
  8. இன்னும் அவர்கள் இசைந்தும் அசைந்தபடியும் தான் இருக்கின்றனர். பெருங்குரலெடுத்து அழமுடியாத அவலம் கொண்டவர்கள் தினமும் மகிழ்வாய்க் கண்மூடித் தூங்கி அறியாதவர்கள் சிலநாட்களேனும் பாரங்களின்றிப் பசியாற முடியாதவர்கள் பசிக்கும் வயிறைப் பானைத் தண்ணீரில் நிரப்பியபடி பிள்ளைகள் வயிற்றை நிரப்பத் துடிப்பவர்கள் கோடை வெயில் கொடுமழை கண்டும் கால்கடுக்கத் தினம் கனவு நெய்பவர்கள் கணவனின் அணைப்பின்றி மனது தகிக்கையில் கண்டவர் பார்வையில் கசங்கித் துடிப்பவர்கள் அடிமுடி தேடியும் அகப்படா அன்பின் அகலமும் நீளமும் ஆழமும் அறியாத எரிதளலின் எச்சமாய் இருப்பவர்கள் இடர்கள் கடந்தும் கடக்காததுவாய் தொடரும் துயரில்…

  9. புளிய மரமும் பொற்க்காலமும்.! ************************* முற்பது வருடம் கழித்து என் மண்ணுக்கு போனபோது-என்னை யாருக்கும் தெரியவில்லை. சொந்த மண்ணிலே என்னை சுற்றுலா பயணியாக.. எந்த நாடு ,எந்த ஊர் எங்கு போகவேண்டும் இங்கு.. யாரைத்தெரியுமென ஏதேதோ கேள்விகள் என்னைச்சுற்றி குவிந்தன.. ஊர்ப்பற்றோடு உறுதியாக வாழ்ந்து.. மறைந்துபோன எம் தாய்,தந்தையைக்கூட தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால்.. அந்த ஊரில் வசித்திராத புது முகங்கள். அங்கு ஓடித்திரியும் பிள்ளைகளை பார்க்கிறேன் அவர்களும் மூண்றாவது தலைமுறையினர் அவர்களை எனக்கோ என்னை அவர்…

  10. இருள் கலந்த சாலையில் ஒரு சிறு வளைவில் எனக்கான மரணம் இன்று காத்திருந்தது ஒரு கணப் பொழுதில் தீர்மானம் மாற்றி இன்னொரு நாளை குறித்து விட்டு திரும்பிச் சென்றது பனியில் பெய்த மழையில் வீதியின் ஓரத்தில் மரணம் காத்திருந்ததையும் என்னை பார்த்து புன்னகைத்ததையும் பின் மனம் மாறி திரும்பிச் சென்றதையும் நானும் பார்த்திருந்தேன் தூரத்தில் ஒலி எழுப்பும் வாகனம் ஒன்றில் அது ஏறி சென்றதையும் ஏறிச் செல்ல முன் தலை திருப்பி மீண்டும் என்னை பார்த்ததையும் நான் கண்டிருந்தேன் எல்லாக் காலங்களிலும் ஏதோ ஒரு புள்ளியில் நானும் அதுவும் அடிக்கடி சந்திக்க முயல்வதும் பின் சந்திக்காது பிரிவதும் அதன் பின் இன்னொரு சந்திப்பிற்காக காத்திருப…

    • 14 replies
    • 7k views
  11. கடலோரம் தென்னம் தோப்பு கரை மீது இரண்டு கிளிகள் கடல் அலையில் சுரம் எடுத்து கனவுகளை பாடுது காற்றினிலே தொட்டில் கட்டி கிளி இரண்டும் ஆடுது தென்றலிலே முகம் நனைத்து தேன்நிலவை தேடுது விழி ஓரம் கவி எழுதி வரம் ஒன்று கேக்குது வாழ்வு தனை வரையுது வசந்தத்தை பாடுது அலை வந்து சுரம் பாட அவள் மடி மீது தலை வைத்து மனதோடு பல ராகம் கிளி இரண்டும் சுக ராகம் அந்தி வானம் சிந்தி விட்ட அழகான மழை துளியில் கிளி இரண்டும் நனையுது கீதங்கள் கேக்குது ஏழு சுரத்தில் கவிதை எழுதி இதயம் இரண்டும் பேசுது எல்லை இல்லா வானத்தருகே ஏதோ கீதம் பாடுது . கிளி இரண்டும் இசை பாட கிண்கிணியின் ராகத்திலே கடல் அலையும் ஆடுது காதல் ம…

    • 2 replies
    • 1.9k views
  12. "உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்" "சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் உற்சாகம் கொடு!" "சோர்வாக இருக்கே என்று பின்போடாமல் சோதனை வருகுதென மனம் தளராமல் சோம்பல் கொள்ளாமல் எடுத்த காரியத்தை சோதித்து வெற்றி கண்டதுமே நிறுத்து!" "கொள்கைகளில் சிறந்தது நேர்மை மனிதா கொண்ட கருத்தில் நிலையாய் நிற்பது கொடுமையிலும் கொடுமை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது கொப்பூழ் கொடியென மலிவானவர்களிடமும் எதிர்பார்ப்பது!" "உழைப்பு நேர்மையாக கடினமாக இருக்கட்டும் உயர்…

  13. "அலைபாயும் மனது நான் அல்ல" "அலைபாயும் மனது நான் அல்ல அனைத்தையும் துறந்த ஏகாந்தம் நான்! அன்பாய், கனிவாய், அக்கறையாய் வருபவரை அதிகாரம் அற்று நேசிப்பவன் நான்!" "ஆழ்ந்த அறிவு அகன்ற பார்வை ஆய்வு செய்திகள் விரும்புபவன் நான்! ஆறுதல் தேடி நட்பு நாடுபவரை ஆனந்தமாய் அணைத்து மதிப்பவன் நான்!" "அத்திவாரம் வாழ்க்கைக்கு தேவை என்று அன்றும் இன்றும் உணர்பவன் நான்! அறிவு ஒற்றுமை காணாத கூட்டத்தை அண்டி வாழாமல் புறக்கணிப்பவன் நான்!" "ஆடைகளை கழட்டுவது போடுவது போல ஆட்களை கொள்கைகளை மாற்றுபவனல்ல நான்! ஆசை ஒன்றைப் பெற்று நிறைவேற்ற ஆரத்தி எடுத்து பந்தம்பிடிப்பவனல்ல நான்!" "அனைவரும் ஒன்றே குலம் என்று அகிலம் முழுவதும் நேச…

  14. "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்" [அரசியல், சமயம் மற்றும் வரலாற்று வாதிகளுக்கு, இன்று 24/07/2024 இல்] "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!" "சுயநல ஆசைகள் எங்கும் வளர்கிறது சுதந்திரமாக மனித மனதிலும் பதுங்குகிறது சுழன்று சுழன்று அவனை கெடுத்து சுருக்கி விடுகிறது அவனின் இதயத்தை!" "எமக்கு வேண்டியதை நாங்கள் எடுக்கிறோம் எம்மை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம் எதுக்கு எடுத்தாலும் எம்மை முதல்நிறுத்தி எடுத்த காரியத்துக்கு நியாயம் கூறுகிறோம்!" …

  15. தாகமெடுத்துத் தவிக்கும் தமிழ்நாடே சற்றுப் பொறு விரிகுடா வங்கத்தை விவாகரத்துப் பண்ணிவிட்டு காவிரித் தோழியைக் கட்டித்தழுவக் கங்கை வருகிறாள். எண்ணி ஓர் ஐம்பது ஆண்டுகள்தான். இப்போதே இமயத்திலிருந்து வரும் பனிக்கட்டிகள் எண்ணக் கனவுகளில், எங்கள் உச்சிகளைக் குளிர்விக்கின்றன. எம் கனவில் வங்கத்தைப் பிரியும் கங்கை வளம்தனைக் கொழித்து நிற்க சிங்க மராட்டியத் தலைமை வந்து ‘‘சிஸ்டம் சரியில்லை தீர்த்து வைக்கிறேன் வையத் தலைமை கொள்ள வந்து நிற்கிறேன்‘‘ என்று கவிதை பாடுகிறது. தந்தங்களைப் பிடுங்கிப் பரிசளிக்க சட்டமில்லை! அதனாலென்ன? காவிரி வெற்றிலையைப் பரிசளிப்போம். எப்படியோ மாறிச் சுழித்து பாரதியே நீ கண்ட கனவு நனவாகப் போகிற…

    • 0 replies
    • 1.2k views
  16. "இடையது கொடியாய் இளமையது பொங்க" "இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தந்தவளே!" "அழகில் மயிலாய் அன்பில் தாயாய் ஆனந்தத் தேனாய் ஆசைக்கு நாயகியாய் வானின் தேவதையாய் வாழ்க்கைக்கு துணையாய் தன்னையே தந்து தந்திரமாய் பறித்தவளே!" "பணிந்து உன்னை பலவாறு காட்டி பண்பின் திறனை பலவாறு விளக்கி பருவ எழிலை பலவாறு வீசி பந்தத்தை ஏற்படுத்தி பத்தினியாய் வந்தவளே!" "என்னை அறிந்து எல்லா…

  17. காந்தியும் கனவுகளும் காந்தியை ஒரு நாள் கனவில் கண்டேன் எப்படி இருக்கிறது இந்தியா என்றார் நீங்கள் நேசித்த மூன்று குரங்குகள் போல் இல்லை என்றேன் சாதி மதம் என்று சண்டைகள் இல்லையா என்றார் நீங்கள் பொய் சொல்லி விட்டீர்கள் தாத்தா கர்ஜனங்கள் உங்கள் பிள்ளைகள் என்று கடைசி வரை ஒத்துக்க மாட்டானாம் காவிக்குள் புகுந்து இருக்கும் சாமிமார் பிறந்த இடம் போய் பார்த்தீர்களா தாத்தா பத்தி எரிந்தது தாத்தா ஒரு நாள் பாடுபட்டு நீங்கள் கட்டிய ஐக்கியம் செத்து விழுந்தது மானிடம் தாத்தா பாவர் மசூதியை போய் பாருங்கள் ராமர் பிள்ளைகள் உங்கள் சத்திய சோதனையை அந்த புனித மண்ணில் புதைத்து விட்டனர் நேரம் இருந்தால் …

  18. கொண்டாட்டமே வாழ்வு. - ஜெயபாலன் * பருதியோடு எழுகவென பாடி பல்லுயிர்கள் கொண்டாடும் அதிகாலை. பூப்படைகிற முல்லை என் படுக்கை அறையுள் நுழைகிறாளா?. * எல்லோரும் வாழ்வோம் என்றபடி சன்னலைத் திறந்தேன். கரு முகில் அபாயா அணிந்த நம் முழுநிலவின் புன்சிரிப்பில் விடிகிறது வாழ்வு * என் சின்ன வயசு முழுவதும் முக்காடிட்ட சோனக மாமிகள் தந்த அறியப்படாத சிற்றுண்டிகளின் தேன் கமழ்ந்தது. * வளர் இளம் பருவத்தில் அபாயா அணிந்த அன்னை மேரியும் அம்மனும் ஒன்றென நம்பினேன். வாழ்வு பலவண்ன உறவுகளின் வானவில் என்பதை எப்படி மறந்தோம்? * மா முனிவன் ராமானுஜன் அபாயாவுடன் த…

    • 2 replies
    • 675 views
  19. "நீராடும் நிலா" "வானத்து மதியாய் என்னுடைய காதலியாய் கானத்து குயிலாய் இனிமையின் ஒலியாய் மோனமாய் இருந்து நெஞ்சில் நிறைந்தவளே! ஆனந்தம் எதுவென உன்னில் அறிந்தேன் அனலாய் இதயம் இன்னும் கொத்திக்குதே!" "கிராமத்து மண்ணின் வாசனை தெரியுது கூரான கண்ணனும் என்னைத் துளைக்குது சீரான அழகோ ஆசையைத் தூண்டாதே! நேரான பாதையிலே தலைநிமிர்ந்து போறவளே நீராடும் நிலா நீதானோ என்னவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  20. இது எனது அறிவுரை இல்லை அன்புரை. அன்றைய பொதுநலமும் இன்றை சுயநலமும்..! ************************************ நானே பலனெடுக்க வேண்டுமென்றே நானிலத்தில் சுயநலமே ஓங்கிறது வீணே விளைநிலங்கள் தூங்கிறது-பல வீடனைத்தும் பட்டணியே ஆழ்கிறது. பலன் கிடைக்க நீண்டகாலமென்று-பனை பயிரிடவே பயப்படுவோர் இன்று பயன் படுத்தும் பனையுணவு எல்லாம்-உன் பாட்டனவன் போட்டதுவே நம்பு. பனை தென்னை நட்டு வைத்தார் முன்னோர் பரம்பரைக்கே விட்டுச்சென்றார் அன்னோர் பங்கு போட்டு சண்டையிட்டார் இன்னோர் பலனை மட்டும் தேடுகின்றார் நம்மோர். அம்மாவை போல அந்தத் தென்னை அரும் பசியை தீர்க்குமென்பதுண்மை கண்போல இரு தென்னை நா…

  21. பனையின் கவலை! ********************** என் மண்ணைப் பற்றி பிடித்ததனால் மரமாக நிற்கின்றேன் பிள்ளைகளை மாடுழக்கி தோலுரித்து பற்களால்- உதிரக்கழி உறிஞ்சி தூக்கியெறிய வந்தவனோ பனம் பாத்தியென்று மண்தோண்டி மூடிச்சென்றான். நாளை வடலியாக வளருமென்ற நம்பிக்கையில்தான் நான் வாழுகின்றேன். -பசுவூர்க்கோபி.

  22. ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப்பாய்இருந்தாய்..! இப்போதோபேச்சுக் கொடுத்தாலும்பெரும் மெளனம் காக்கின்றாய்..முட்கம…

  23. "கம்பன் வழியில் .... " [கம்பன் விழா 2024 ஜூன் நடுப்பகுதியில் இருந்து பல நாடுகளில் / இடங்களில் ஜூலை நடுப்பகுதிவரை நடக்கின்றன. அதையொட்டி கம்பன் வழியில் எனது ஒரு துளி] "பால் ஒழுகும் இரு குடங்களோ பாலகன் பசி தீர்க்கும் சுனையோ? பாசம் பொழியும் பெண் தெய்வமோ பாவி என்னை அணைக்கா தேவதையோ??" "தென்னையில் இரு அழகு குரும்பையோ தெய்வ மங்கையின் எழில் வடிவமோ? தெவிட்டாத அவள் இன்ப மழையோ தென்றல் காற்றும் கொஞ்சும் உடலோ??" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)

  24. புலம் பெயர் தேசங்களில் வாழும் பெற்றோர்களே…ஆங்கிலம்,பிரான்ஞ்,டொச்,டச்,டெனிஸ்,என பலமொழிகளில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு கட்டாயம் தமிழ் மொழியின் அவசியம் பற்றி நெதர்லாந்து மேடையொன்றில் படித்த சிறு கவிதை இது. தமிழே பொது மொழி அதுவே உயிர் மொழி..! சின்னம் சிறார்கட்கு சிறந்த நம் தமிழ் மொழியை சிந்திக்க வைக்க-பெற்றோரே சிந்தியுங்கள் சிறப்பாகும். பிற மொழிகள் படிப்பித்து பெரியோர்களாகினாலும்-எம் பிறப்பு மொழியில்லை என்றால் பெற்றோர்களும் இல்லை பேரனுடன்,பேத்தியுடன் பேசவேண்டும் என்றெண்ணி பாசமுடன் பெற்றோர்கள் பல மைல்கள் அங்கிருந்து நேசமுடன் தொடர்பெடுத்தால் ஓப்பா,ஓமா என ஒரு கு…

  25. Started by நிலாமதி,

    தாமரை தாமரைதான் பூக்களிலே பெரியதென்பார்;-தம்பி தாமரைப்பூ ஊர்க்குளங்கள் அழகாய்த் தோன்றும்! "தாமரை'யில் "தா' என்னும் எழுத்தை நீக்கு;-அங்கே "மரை' என்ற மானின் பெயர் துள்ளி ஓடும்! 'மரை'என்ற இரு எழுத்தை மறைத்து விட்டால்? "தா' என்ற ஓரெழுத்துதானே மிஞ்சும் -அது 'கொடு' என்றே உனைப் பார்த்து கொடுக்கச் சொல்லும்! தாமரையில் நடு "ம'வை நீக்கிப் பார்த்தால்-அழுவோர் கண்களிலே கண்ணீர்தான் "தாரை' தரையாக வார்க்கும்! நன்றி பொன்னியின் செல்வன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.