கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
அம்மாவும் போராளிக் கவிஞன் தோழன் புதுவை இரத்தினதுரையும். . எங்கள் வீடு எப்பவும் போராளிகளுக்கு நிழலாக இருந்தது. என் அம்மாவும் அப்பாவும் போராளிகளையும் தங்கள் பிள்ளைகளாகவே அரவணைத்தார்கள். கவிதை ஈடுபாடுள்ள என் பெற்றோர் புதுவை இரத்தினதுரை மீதும் அவரது கவிதைகள்மீதும் பெருமதிப்பு வைத்திருந்தனர். போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்தபோது போராளி நண்பர்கள் பலர் என் அம்மாவைப் போய்பார்த்து நலம் விசாரித்த சேதியை தம்பி பாரதிதாசன் மூலம் அறிந்து நிமதியடைந்தேன். எனினும் சக கவிஞன் தோழன் புதுவை இரத்தினதுரை இன்னும் அம்மாவைப் போய்ப் பார்க்கவில்லை என்கிற சேதி கவலை தந்தது. . அந்த நாட்க்களில் கொங்கு நாட்டு காட்டாறான கொடுங்கரை ஆற்றுக்கு ஓசை காழிதாசுடன் சென்றிருந்தேன். நி…
-
- 0 replies
- 967 views
-
-
அழகு தமிழ் அன்னையாம் தமிழுக்கு ஆயிரமாயிரம் பேர்சொல்வர் அழகு செந்தமிழ் ,இன்பத்தமிழ் குழந்தையின் நாவில் தவழும் மழலைத்தமிழ், அமுதம் சொட்டும் தேன் தமிழ் இன்பத்தமிழ் அகிலம் எங்கும் காண்போம். அழுகின்ற குழந்தை கூட"அம்மா " என அழைத்தால் உருகாதார் நெஞ்சம் உருகாதோ? செந்தமிழால் இன்னிசையால் பாடடெழுதி கவி எழுதிய கண்ணதாசனுக்கும் எண்ணத்திலே சிந்தையிலே முந்தி வந்த தமிழ் என் உயிரான தமிழ் என் முதல் மொழி என் இனிய மொழி. தமிழ் என் உயிர். கரை காணாத கடல். சுடடால் மிளிரும் பொன் போல அதைக் கற்றால் புரியும் உலகம். வளரும் உலக அறிவும் . தமிழுக்கு நிலவென்று பேர் வளர்ந்து கொண்டே இருப்பதால். பழக பழக பண்பை சொல்லி வாழ வைக்கு…
-
- 3 replies
- 967 views
- 1 follower
-
-
என் வீட்டின் சாளரங்களை விருப்பப்பட்ட நேரம் நான் திறக்க விரும்புகிறேன் பனி மூடிய வீதிகள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் எப்போதாவது ஒரு வசந்த நாளை நான் எதிர்பார்த்திருக்கிறேன் குளிர் சலித்துப் போய்விட்டது இப்போது என் மனம் சூடான ஒன்றை விரும்புகிறது தியா - காண்டீபன்
-
-
- 11 replies
- 962 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 960 views
-
-
-
- 0 replies
- 956 views
-
-
சிறகு --------- ஒட்டி உலர்ந்த தேகம் ஒன்று எப்பவும் அங்கே பாதையில் கழிவுநீர் ஆறு என்று ஓடும் அந்தக் கரையில் சுருண்டு கிடந்தது அது கையை நீட்டவும் இல்லை கண்களை பார்க்கவும் இல்லை புதிதாக வெளியில் வந்தது போல வெட்கம் அதன் உயிரைக் கொன்று அதன் பசியை மூடி வைத்திருந்தது இது செத்து விடுமோ என்று பழிபாவம் அஞ்சும் யாரோ ஒருவர் அதுக்கு தெரியாமல் அங்கே ஒரு தட்டும் அதில் உண்ணும் பொருளும் வைத்தார் வேறு சிலரும் வைக்க வைக்க எழும்பி இருந்து வானம் பார்க்கத் தொடங்கி பின்னர் நடக்கத் தொடங்கி இப்பொழுது அது உலாத்துகின்றது இன்று காலை அது ஒரு பாட்டும் பாடியது …
-
- 0 replies
- 956 views
-
-
பொங்கல் வாழ்த்து 2020. இரண்டாயிரத்து இருபதிலே எங்கும் தமிழர் இனமதனை அண்டாதிருக்கப் பெருந்துயரம் அகலத் தீமை இருள் விலக உண்டாயிருக்கத் திருவெல்லாம் ஓடி மறையப் பகையெல்லாம் திண்டோளுயர்த்தி ஞாலமதில் சீரும் சிறப்பும் பெறுவோமா?; தமிழைக் கணனி தனிலேற்றி தரணியறியப் புகழேற்றி அமிழ்தின் இனிய எம்மொழியை அகிலத் துயர்த்தி அறிவியலில்; கமழும் மொழியாயுருவாக்கி கலைகள் நிறைத்துச் செறிவாக்கி திமிரோடிருந்த எம் பெருமை திரும்ப நாங்கள் பெறுவோமா நாடொன்றமைத்துப் படைபலத்தால் நாங்கள் வாழ்ந்த பெருவாழ்வை கேடென்றுலுத்தர் எண்ணியதால் கீழ்மைச் செயல்கள் பலசெய்து வாடப் பலபேர் அகதிகளாய் வதைகள் புரிந்து வன்னியிலே ஆடத் தருமம் நிலை தாழ்ந்த …
-
- 2 replies
- 955 views
-
-
-
- 1 reply
- 953 views
-
-
-
- 4 replies
- 946 views
-
-
-
- 3 replies
- 944 views
-
-
https://www.facebook.com/photo/?fbid=10160014474376950&set=a.10151018148611950&__cft__[0]=AZWx_ghLUGUfdOGsEGqD0O1RrbmZSPkuwd00JPoBavte-iCSNhoJyTSCQXr1UYWhV-IfMvhGBBK_meknfAjNWTrbLXB-T-Q0GYuAVKZeZ0sps0QZ0BAQIgjnY16eW-KRdPc&__tn__=EH-R இலங்கைத் தலைமையின் இரங்கற் கூக்குரல் ஐயாமாரே ஐயாமாரே மொய்யாய் ஏதும் போட்டுப் போங்கோ பணச்சடங்கு நடத்திறம் பார்த்து ஏதும் செய்யுங்கோ பெரிய இடமென்று பிச்சைக்குப் போனால் கரியை வழிச்சுக் கையில கொடுக்கினம் தானத்தைப் பெற்றுக்கொண்டு இனவாதம் பேசியவை …
-
- 2 replies
- 943 views
-
-
வித்து.... விதைக்கப்பட்டு.. மரமாகிறது..... ! மரத்தின் இலைகள்.... புதைக்கப்பட்டு.... உரமாகிறது.... ! விதைத்தாலும்... புதைத்தாலும்.... பயன் இருக்கிறது.... ! நம் மண்ணில்..... உடலங்கள்... இலட்சக்கணக்கில்..... புதைக்கப்பட்டன.... ஆயிரக்கணக்கில்... விதைக்கப்பட்டன...! புதைத்ததால் நம்.. இனத்தை உலகறிந்தது... ! விதைத்ததால் நாம்... தலைநிமிர்ந்து... வாழ்கிறோம்..... !!! @ கவிப்புயல் இனியவன்
-
- 0 replies
- 943 views
-
-
நம் வாழ்வில் நாம் மறக்க முடியாத பலநாட்களை பலமுறை நாம் கடக்கின்றோம் சில நாட்கள் நம் வாழ்வில் - நாம் மறக்கவே முடியாமல் சிதளூரும் காயங்கள் போல் நித வருத்தம் தருவன 2009, சித்திரை 27 கடற்கரை மணலில் குளிரூட்டப்பட்ட திடலில் காலைச் சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட விடுமுறையில் மூன்று மணி நேரம் கலைஞரின் நாடகம் அரங்கேறிய நாள் தியா காண்டீபன் கலைஞரின் உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றப்பட்ட பின்னரே ஐம்பதாயிரம் வரையான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் https://www.vinavu.com/2009/05/11/congress-dmk-drama/ https://www.keetru.com/.../10-sp.../8834-2010-05-22-01-32-26
-
-
- 7 replies
- 941 views
- 1 follower
-
-
எங்கேயோ இருக்கிறீர்கள் எனக்குத்தெரியும் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் கடைசியாக நீங்கள் வேலையால் வந்து கழற்றிப்போட்ட ஆடைகள் உங்களில் நான் கிறங்கும் அதே வியர்வை மணத்துடன் கொழுக்கியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.. அன்றிரவு அவர்கள் உங்களை அடித்து இழுத்துச்சென்ற போது நான்கதறிய கதறல் இப்போது ஒவ்வொரு வீடாய் கேட்கத்தொடங்கி இருக்கிறது காலையில் எழுந்து அப்பா எங்கே என மகன் கேட்டான் எப்படித்தான் காணாமல் போனமை பற்றி அவனுக்கு நான் விளக்க முடியும்..? வருடங்கள் உருண்டோடி விட்டன காலமும் மனிதர்களும் எதுவுமே நடந்து விடாதது போல் போய்க் கொண்டிருக்கிறார்கள்...! உங்கள் நெஞ்சில் இருந்து துள்ளுவது போலவே நேற்றைக்கு மாலையும் என் மா…
-
- 5 replies
- 940 views
-
-
வன்னி மக்களும் முள்ளிவாய்க்காலும் அது தந்த வலிகளும்
-
- 2 replies
- 932 views
-
-
மண்டியிடும் மன்னர்கள் ------------------------------------- இரண்டு சிறு குழந்தைகளுடன் இருவர் நாங்கள் இந்த வீட்டிற்கு அநேக வருடங்களின் முன்னொரு நாள் குடி வந்தோம் பன்னிரண்டு வீடுகள் உள்ள தெருவில் பதினொரு மன்னர்கள் குடி இருந்தனர் சில மன்னர்கள் பேசினர் சிலர் வெறும் புன்னகை மட்டும் சிலர் எங்களைக் காணவேயில்லை அடைமழை நாளென்றில் கடும் காற்றில் என் முன் நின்ற பெரும் மரம் காற்றின் முன் மண்டியிட மறுத்து முறிந்து விழுந்தது மன்னர்கள் ஓடி வந்தனர் அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை என் வீட்டிற்கும் சேத…
-
-
- 7 replies
- 929 views
-
-
போலி ஜனநாயகவாதிகள் மத தீவிரவாதமும் ஏகாதிபத்திய நல சுரண்டல்களும் இன படுகொலைகளும் இருக்கும் வரைக்கும் இரத்தக்களரியை எந்த ஒர் தனி அரசாலும் நிறுத்தமுடியாது அணு குண்டோடும் ஆயுத விற்பனையோடும் மனிதர்கள் இருப்பதால் யாருக்கு தான் இருக்கப்போகிறது அன்பும் கருணையும் போலி ஜனநாயகத்தின் பெயரால் வந்து ஒரு பூவை வைத்து விட்டு போங்கள் எங்கள் இரத்தத்தின் நடுவில் . பா .உதயகுமார்
-
- 0 replies
- 928 views
-
-
எப்படிச் சொல்வோம் எம் இழப்பை ஏதிலியாகி நாம் ஊரூராய் அலைகையில் எப்படிச் சொல்வோம் எம் இழப்பை பத்து ஆண்டுகள் பறந்தே போனது நடந்தவை அனைத்தும் மறந்தும் போனது நமக்கேன் நாடு என்றும் கேட்கிறார் நாடு காட்டிப் பிழைக்கும் எம்மவர் நன்றாய் இருக்குது நாடும் ஊரும் என்று சொல்லி எங்கும் திரிகிறார் எந்த இழப்பும் அற்ற எம்மவர் நாவாந்துறையில் பிடித்த மீனும் நண்டு கணவாயும் நல்லாய் தின்று நாடு நல்லாய் இருக்கென்று நாம் கூறலாமோ??? கோழைகள் போல் ஓடிவந்தவர் கோடிகளாய்க் கொட்டிக் கொடுத்து கொலிடே போக மட்டும் நாடாம் வெட்கம் கெட்ட தமிழர் நாங்கள் வேருடன் அழித்தவர் ஊர்கள் பார்க்க வெளிநாட்டில் இருந்து விருப்பாய் போகிறோம் வெடிகள் பட்டவர் முடமாய் இரு…
-
- 3 replies
- 928 views
-
-
புளிய மரமும் பொற்க்காலமும்.! ************************* முற்பது வருடம் கழித்து என் மண்ணுக்கு போனபோது-என்னை யாருக்கும் தெரியவில்லை. சொந்த மண்ணிலே என்னை சுற்றுலா பயணியாக.. எந்த நாடு ,எந்த ஊர் எங்கு போகவேண்டும் இங்கு.. யாரைத்தெரியுமென ஏதேதோ கேள்விகள் என்னைச்சுற்றி குவிந்தன.. ஊர்ப்பற்றோடு உறுதியாக வாழ்ந்து.. மறைந்துபோன எம் தாய்,தந்தையைக்கூட தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால்.. அந்த ஊரில் வசித்திராத புது முகங்கள். அங்கு ஓடித்திரியும் பிள்ளைகளை பார்க்கிறேன் அவர்களும் மூண்றாவது தலைமுறையினர் அவர்களை எனக்கோ என்னை அவர்…
-
- 9 replies
- 925 views
-
-
-
- 5 replies
- 920 views
-
-
உறைந்த உலகம் உருள வேண்டும்..! ***************************** நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீழ் துயர் எமை விட்டு அகலவேண்டும் உலகத்து நாடனைத்தும் உயர வேண்டும் உயர்வான எண்ணங்கள் தோன்ற வேண்டும். அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம் அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும் உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும் ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும். விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். விண் மேகம் கடலோடு உரச வேண்டும்-பூமி விளைநிலத்தில் தென்றலது பாடவேண்டும் இருள் வெளுக்க சூரியனும் ஒளிர …
-
- 2 replies
- 918 views
-
-
கொரோனா என்ற ஓர் கொலைக்காரி-பா.உதயன் கொரோனா என்ற ஓர் கொலைக்காரி எம்மை கொடுமை செய்யப் பிறந்தாளா அடி தடியோடு திரிகின்றாள் அனைவரும் வீட்டுக்குள் பதுங்கின்றார் மேட் இன் சீனா என்கின்றாள் கடை தெரு எல்லாம் கிடக்கின்றாள் காணும் இடம் எல்லாம் விற்கின்றாள் காசு இல்லாமலும் தருகின்றாள் குழந்தை குஞ்சு என்று தெரியாமல் கட்டை கிழடு என்று காணாமல் காலனைப் போலே தினம் வந்து கயிறு வீசித் திரிகின்றாள் கொரோனா என்று ஒரு கொலைக்காறி எம்மை கொல்லத் தான் பிறந்தாளோ யாருக்கும் அடங்கா சண்டியரும் அவளுக்கு பயந்து பதுங்கின்றனர் அடுத்த வீட்டு அமீர் அண்ணை குடும்பம் ஆறு புள்ளை பிஞ்சோட பள்ளிக்கூடம் இல்லாம படுத்தும் தொல்லை தாங்காதாம் கொரோனா …
-
- 2 replies
- 914 views
-
-
ஊதாரி ஊடகங்கள் ************************ எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள் எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள். உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர் விலைக்கு விற்கும் வேடதாரிகள். தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே தரமில்லா செய்தியால் மடையராக்குவார் ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார் ஒருசில நாட்களில் ஏறியும் மிதிப்பார். செய்திகள் பற்றி கவலையே இல்லை சேரும் பணம்தான் அவர்களின் எல்லை ஆளுக்கொரு கமறா கிடைத்தால் அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார். ஏழை மக்களின் படங்களைக் காட்டி எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில போக்கிரியர்களும் இணையத்தில்…
-
-
- 12 replies
- 914 views
-
-
என் "யாழ்"அன்பு இதயங்களுக்கு! பறந்து வந்த குருவிகள் சொன்ன பாசக் கதையிது.. “எழு எல்லாம் இயலும்” ************************* இயற்கை தந்த அழகிய வாழ்வு ஏன் தான் புரியவில்லை- மனிதா எம்மினம் போல வானில் பறக்க ஏன் தான் முடியவில்லை. துக்க சுமையை சுமந்து சுமந்து சோர்ந்துகிடக்காதே! தூத்துவார் கதையை கேட்டு கேட்டு துணிவை இழக்காதே! பக்கத்துவீட்டைப் பார்த்து பார்த்து பரிதவிக்காதே! படித்த வேலை இல்லை இலையென படுத்துறங்காதே! உண்ண உணவு தேடித் தேடியே ஊரிடம் கெஞ்சாதே! உலகமெல்லாம் கடன் கடனென்று உயிரை மாய்க்காதே! இயற்கை தந்த அழகிய வாழ்வு ஏன் தான் புரியவில்லை- …
-
- 7 replies
- 906 views
-
-
செக்கச் சிவந்த முகம் எப்பவுமே சிரித்த முகம் எங்க ஊரு சொந்தக்காறி தங்கமான உதட்டுக்காறி இவளை விட அழகுராணி எவள் இருப்பாள் அந்த அழகு ரோசா தோத்துப்போகும் இவள் ஆடிப்பாடி சிரிக்கும் போது .
-
- 0 replies
- 904 views
-