கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
ஏமாந்த கடிகாரம் ----------------------------- கையில் கட்டுவதெல்லாம் கடிகாரமே என்னும் பழைய ஒரு பிறவி நான் கடிகாரம் ஒன்றும் இருந்ததும் இல்லை எந்த வேளையிலும் இரவலாகவும் கட்டினதும் இல்லை மாமனார் கொடுத்த ஒன்று தங்கம் போல தகதகத்தது கல்யாணம் முடிந்த அன்றே கழட்டி வைத்தேன் இப்ப அது எங்கேயோ மாமாவிற்கு கடைசிக் காலத்தில் இதுவும் ஒரு கவலை ராத்திரி ஆழ்ந்த தூக்கம் இல்லை என்கின்றான் ஒருவன் எப்படி என்றால் அவனின் கடிகாரம் சொன்னது என்கின்றான் விளையாட்டின் நடுவிலேயே அய்யோ........... இதயம் எக்கச்சக்கமாக துடித்து விட்டது என்று அலறுகின்றான் இன்னொருவன் அதுவும் கடிகாரம் தான் சொன்ன…
-
- 0 replies
- 680 views
-
-
சிறு வயதில், ஊரில் இருந்த நாட்களில், வீட்டிற்கு அப்பாவின் நண்பர்கள் எந்நேரங்களிலும் வருவார்கள். பலர் தேநீர் கேட்பார்கள். கேட்காதவர்களுக்கும் தேநீர் கொடுக்கப்படும், அது ஒரு உபசரிப்பு, மரியாதை போல. சீனியின் அளவு, சாயத்தின் அளவு போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இப்பொழுது காலம் மாறி, இடமும் மாறிவிட்டது. கேட்பதற்கும் தயக்கம், கொடுப்பதற்கும் தயக்கம், அளவுகள் வேறு தனித்தனியாகிவிட்டது. ** ஒரு கோப்பை தேநீர் -------------------------------- வீட்டுத் தவணைக் கட்டணம் வாகன தவணைக் கட்டணம் வீட்டுக் காப்புறுதி பொருள் காப்புறுதி மருத்துவக் காப்புறுதி கண்ணுக்கு த…
-
-
- 2 replies
- 395 views
-
-
ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99 எனக்குப் பேய் பிடித்திருக்கிறது அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள் இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும் எனக்கும் பேய் பிடித்திருக்கிறது அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி, பேய்களுக்குக் கோயில் இல்லை வேளா வேளைக்குப் பூஜை இல்லை அபிஷேகம் அலங்காரம் காணிக்கை உண்டியல் அறவே இல்லை தேர் இல்லை திருவிழா இல்லை சப்பார பவனி கூட இல்லை கடவுளைப் போல் பேய்கள் சாதி மதம் பார்ப்பதில்லை. ஓட்டத்தான் வேண்டுமெனில் கடவுள்களை ஓட்டிவிட்டு பேய்களை ஓட்டுங்கள் ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98 பாத்திரமறிந்து பிச்சையிடுகிறது தெய்வம் தங்கத்தட்டில் வைரக்கற்களையும் அலுமினியத் தட்டில் சில்லர…
-
- 228 replies
- 34k views
-
-
-
- 0 replies
- 393 views
-
-
கடந்த இரண்டு வாரங்களாக இருமல் இருமல் இருமல் தொண்டை கழுத்து முதுகு தலை நுரையீரல் இதயம் எல்லா உறுப்புக்கும் இப்போது வேலை இருமல் இப்போது எனக்குக் கிடைத்த ஒரு நுட்பமான வார்த்தை விளையாட்டு நித்திரை தொலைந்தது மேல் மூச்சு வாங்குகிறது பகலை நீட்டிக்க இருமல் தகுதியானவர்களுக்கு மட்டுமே பரிசளிக்கப்படுகிறது தியா - காண்டீபன்
-
-
- 7 replies
- 714 views
- 1 follower
-
-
என்... கருத்துக்கள்.....!!! சிறுபிள்ளைத்தனமாகவோ ..... குழந்தைத்தனமாகவோ ..... !!! செத்ததாகவோ...... இத்ததாகவோ........ இருக்கலாம்..... !!! என்றாலும் ஒருமுறை பாருங்கள்......! அதிலிருந்து உங்களுக்கு.... புதிய கருத்துக்கள்.. தோன்றலாம்..... !!! @ கவிப்புயல் இனியவன்
-
- 20 replies
- 3.2k views
- 1 follower
-
-
கலிபோர்னியாவில் இடைவிடாமல் மழையும், பனியும் ஆக இருக்கின்றது. போன வருடமும் இவ்வாறே. கொட்டும் பனியிலும், கடும் காற்றிலும் ஒரு சோடி கழுகளின் கூட்டையும், அவைகளின் முட்டைகளையும் இங்கு சிலர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். இது இங்கு செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது ************* ஒரு வழிச் சாலை --------------------------- இரண்டு வெண்தலைக் கழுகுகள் அவற்றுக்கு பெயரும் உள்ளது ஒன்று லிபர்ட்டி மற்றது கார்டியன் மூன்று முட்டைகள் போட்டு மாறி மாறி அடைகாக்கின்றன வாழும் நாள் முழுதும் இவை சோடி மாறுவதில்லை கூடும் மாறுவதில்லை ஒவ்வொரு வருடமும் தண்டும் தடியும் கொடியும் புதிதாக அ…
-
-
- 3 replies
- 431 views
-
-
அனந்தியே.... அன்புக்குரிய... அரசியே.... அகிலத்தையும்.... அண்டதையும்.... அதிரவைக்கும்.... அழகியே..... அன்னமே....... அன்பும்... அடக்கமும்.... அங்கங்களாய் .... அமைந்த....... அதீத.... அற்புதமான.... அபூர்வ..... அமுதே..... அன்னையின்..... அனுமதியோடும்... அயலவரின்.... அரவணைப்போடும்... அம்மனின்.... அலங்காரமாய்.... அவையில்.... அமர்ந்திருப்பவளே.... அன்னையானாய்.. அப்பனானேன்.... அருமையான.... அரவிந்தனை.... அவதரித்தாய்... அவனியில்.... அரண்மனை..... அரசரானோம்..... அன்பானவளின் அங்கம்.... அவதியாகி.... அசையாது.... அடங்கிட.... அல்லல்பட்டு... அமைதியானது.... அடிமடியில்.... அவ்வுயிர்..... …
-
- 0 replies
- 776 views
-
-
உ ஒரேயொரு ....................! ஒரேயொரு வானுயர்ந்த கட்டிடம் - உயரத்தில் ஒரேயொரு நீள்சதுர அறை - உச்சியில் ஒரேயொரு சாரளம் கூரைக்குள் அசையும் - ஆங்கே ஒரேயொரு கட்டிலோடு மெத்தையுடன் தலையணை ......! ஒரேயொரு குறுக்கு மறைப்பில் சமையலறை - எதிரே ஒரேயொரு குளியலறை நாலடி நடையில் ஒரேயொரு மீன்தொட்டி ஒரு பொன் மீனோடு ஒரேயொரு நாய்குட்டி கழுத்தில் கயிறோடு .....! ஒரேயொரு அம்மணி அகவையோ எண்பது - காலையில் ஒரேயொரு முறை திறப்பாள் சாரளத்தை ஒரேயொரு தரம் வரும் தென்றல் தங்கி நிக்கும் ஒரேயொரு துளிகளாய் வரும் மழை முகம் நனைக்கும் ....! ஒரேயொரு தடவை அழைப்புமணி எதிரொலிக்கும் ஒரேயொரு க்கால் திறந்த கதவிடுக்கில் உணவிருக்கும் ஒரே…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஓ அமேசான் (Pray for Amazon) உலகத்தின் உடல் தீ பிடித்து எரிகிறது உன்னோடு சேர்த்தே மனிதப் பிழைகளினால் மண்ணில் மனிதனும் இல்லை மரமும் இல்லை என்றாகிப்போய் விடுமோ ஒரு உலகம் தானே உனக்கும் எனக்கும் ஏதோ பயமாக இருக்கிறது உலகக் குழந்தைகளை நினைக்கையிலே ஓ உனக்காகவே ஆமேசூன் ஒவ்வொரு எங்கள் கண்ணீர் துளிகளும் உன்னை வந்து அணைக்கட்டும் .
-
- 6 replies
- 1.8k views
-
-
ஓடி விளையாடு பாப்பா ஓயாமல் படித்துவிடு பாப்பா கூடி விளையாடு பாப்பா குறைக்கூறலாகாது பாப்பா அகிலத்தில் உயர்ந்தது அன்பு அனைவருக்கும் வேண்டும் நற்பண்பு அன்னைக்கு இணையில்லை எதுவும் ஆசானுக்கு தெய்வமும் பணியும் பசிக்கு உணவிடல் தர்மம் பாவத்தால் தொடரும் கர்மம் பாதகத்தைக் களைத்திடு நீயும் பாருக்குள் செழித்திடும் நேயம் ஆதியில் இல்லையடி சாதி அறவாழ்விற்கு வேண்டுமடி நீதி மெய்க்கு துணையாகும் உயிரும் மெய்ஞானத்திற்கு துணயாகி உயரும் பஞ்சப்பூதத்தின் தனித்துவம் செந்தீ பாரதத்தின் அமரத்துவம் பாரதி பெண்ணுரிமைக்கு வித்திட்டான் மகாகவி பெண்கல்விக்கு அவனே இறைவி அறியாமை அகற்றிடு பாப்பா ஆக்கமாய் உழைத்திடு பாப்பா ஆணவம் நிலைக்காது பாப்பா …
-
- 0 replies
- 548 views
-
-
ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..! (05.08.2020) தேர்தல் திருவிழா முடிந்து தேசம் அமைதியாகிறது உங்கள் கட்சி “தேர்களை” ஊர் ஊராய் கொண்டு சென்று வெண்றும், தோற்றும் விழா முடிவாயிற்று. ஒன்றாக நிற்க்காமைல் ஒவ்வொன்றாய் நின்றாலும் வெண்றவர்கள் நீங்கள் நாங்கள்… வேறு வேறு தமிழர் இல்லை தனிப்பட்ட குரோதங்கள் தலை தூக்கி ஆடாமல்-புல் பனிகாய பகலவனின் கதிர் போலே நீங்கள்-நெல் மணியாக அனைவருக்கும் நிதம் சோறு படைப் பீர். உள்ளக் குமுறலினால் உடைபட்டுப் போனாலும் மக்களை.. அள்ளக் குறையாத அன்போடு பாருங்கள். தெள்ளத் தெளிவாக-எம் …
-
- 14 replies
- 2.5k views
-
-
கறுப்பான கல்லில் சாமியை காண வெறுப்பு கறுப்பான தோழனுக்கு - கறுப்புச் சட்டை. கொரோனாவை விடக் கொடுமை இது.
-
- 6 replies
- 1.2k views
-
-
-
வளையற் குவியல் ஒன்றைக்காட்டி வல்லமை கேட்டதோர் கவிதை. என் நெஞ்சிலுதித்ததை அங்கு பகிர்ந்தேன். இது கவிதையல்ல ஓர் ஏழையின் குமுறல். அது கீழே. ஓர் ஏழையின் குமுறல் கைநிறையப் போடக் கலர்கலராக் குவிச்சிருக்கு பைநிறையப் பணமிருந்தாப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம். ஏழைக நம்பளுக்கு எதுக்கிந்த வளையலெல்லாம் வாழ வழியில்லையாம் வளையலொரு கேடா புதுப் புள்ளத்தாச்சிக்குப் போடுவாங்க வளைகாப்பு எட்டு மாதப் புள்ளத்தாச்சி எம் பொழைப்பு கல்லுடைப்பு கல்லுடைக்கும் கைக்கு காப்பு சரிவருமா? நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான் ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குள…
-
- 6 replies
- 1.2k views
-
-
வைகறை நேரத்தில் கரை தாண்டி கடல் தீண்டி கட்டுமரம் சென்றதே அந்தி மாலை ஆனதே அந்த ஆதவனும் அரைபாதியாக மேற்கு எல்லையில் நின்றதே கரை திரும்புமா கட்டுமரம் அதில் எனை மணம்முடித்த மணவாளனும் பாதுகாப்பாக திரும்பி வந்திடுவானா என காத்திருக்கும் மனைவியின் கன்னத்தில் கண்ணீர் துளிகளும் தாமத்தின் பதற்றத்தில் மங்கை அவள் மனதில் நடுகடலில் ஆழிசுழல் வந்து களத்தினை பாதித்ததோ அண்டை நாட்டு கள்வர்களால் பாவம் நிகழ்ந்திருக்குமோ என எல்லைக்கடந்ததே எண்ணங்கள் என்னவளின் மனதில் என கூறிடும் அலையின் சலனங்கள் அதை என்றும் கைது செய்திட ஆளில்லை என்னவளின் அச்சத்தினால் அதை நிறைவு செய்திட இயலவில்லை கண்ணெதிர கணவனை காணும் வரை....
-
- 0 replies
- 787 views
-
-
-
- 2 replies
- 657 views
-
-
கடலோரம் தென்னம் தோப்பு கரை மீது இரண்டு கிளிகள் கடல் அலையில் சுரம் எடுத்து கனவுகளை பாடுது காற்றினிலே தொட்டில் கட்டி கிளி இரண்டும் ஆடுது தென்றலிலே முகம் நனைத்து தேன்நிலவை தேடுது விழி ஓரம் கவி எழுதி வரம் ஒன்று கேக்குது வாழ்வு தனை வரையுது வசந்தத்தை பாடுது அலை வந்து சுரம் பாட அவள் மடி மீது தலை வைத்து மனதோடு பல ராகம் கிளி இரண்டும் சுக ராகம் அந்தி வானம் சிந்தி விட்ட அழகான மழை துளியில் கிளி இரண்டும் நனையுது கீதங்கள் கேக்குது ஏழு சுரத்தில் கவிதை எழுதி இதயம் இரண்டும் பேசுது எல்லை இல்லா வானத்தருகே ஏதோ கீதம் பாடுது . கிளி இரண்டும் இசை பாட கிண்கிணியின் ராகத்திலே கடல் அலையும் ஆடுது காதல் ம…
-
- 2 replies
- 1.9k views
-
-
கடவுள் நடுச்சபை தன்னிலே உடுக்கை இழந்தவள் - இருகை எடுத்தே அழைத்தாலன்றி இடுக்கண் களையேன் - என்று வேடிக்கை பார்த்திருந்த நீரெல்லாம் என்ன கடவுள்...! கர்ணனின் கொடையையே அவன் வினையாக்கி அவன் வரங்களையே சாபமாக்கி. சூழ்ச்சியால் உயிர்பறித்த நீரெல்லாம் என்ன கடவுள்...! துரோணரை வீழ்த்திடப் பொய்யுரைக்க செய்தீர் ஆயுதம் ஏந்திடாவிடினும் ஒரு பக்கச் சார்புடையீர் இப்படி உம் குற்றப்பட்டியல் கூடிக்கொண்டே போகிறதே நீரெல்லாம் என்ன கடவுள்...! அட..... நான் …
-
- 0 replies
- 658 views
- 1 follower
-
-
கடவுள் ஒரு கைப்பிள்ள! முன்பொரு நாளில்... கடவுளை மனிதன் படைத்தான்... அன்றிலிருந்து கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்... தாயுமானார், தந்தையுமானார்... பின்னொரு நாளில்... "மகனே நந்தனா, உள்ளே வா" சொல்லத் தயங்கினார்... பதிலுக்கு "சற்றே தள்ளி இரும் பிள்ளாய்" திருவாய் மலர்ந்தார்... நிற்க... "எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்" "பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்... தன் பெயராலே ஓர் அதர்மம் தடுப்பதற்கோ அஞ்சினார்... இன்றொரு நாளில்... கடவுளுக்கு மனிதன் தேவையோ இல்லையோ தப்ப முடியாது... மனிதனுக்கு "கடவுள்த்தேவை" மிக அதிகம்... ஏனென்றால் கடவுள் ஒரு கைப்பிள்ள... - பராபரன்
-
- 4 replies
- 1.5k views
-
-
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள் ------------------------------------------------------------------- மேய்ந்து கொண்டும் சாணம் இட்டும் புரண்டு விட்டு சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும் ஆநிரைகளைப் பார்க்க கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள் அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று குட்டிகளுடனும் கருக்களுடனும் ஆடாமல் அசையாமல் கடவுள் வரும் வழியில் ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன நாள் முழுதும் காவலர்களுடன் வரும் கடவுள்கள் கையை அசைப்பார்கள் எழுதி வைத்து வாசிப்பார்கள் இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள் மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள் கடவுள்களின் முன்னேயே ஏதோ நடந்து ஆநிரைகள் சில குட்டிகள் சில கருக்களில் சில எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று இறந்து போகின்றன அ…
-
-
- 6 replies
- 419 views
-
-
என் அன்புள்ள ரசிகனுக்கு இலக்கியக் கவிப்பேரரசு எழுதும் கடிதக் கவிதை 📝📝📝 ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறியச் செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்குத் தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில் வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்குப் புரியும் …
-
- 0 replies
- 1k views
-
-
“கடிதங்களின்” கவலை..! எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை தொழில் நுட்பமென்னும் தூரதேசம் பேச, எழுத.. பல நுட்பம் வந்ததனால் எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை. அந்தக்காலத்தின்-நாம் அன்பின் பாலங்கள்.. பிரிந்து வாழ்ந்தாலும் பிரியமுடன் வாழ்ந்தாலும் எங்களைத்தான் எதிர் பார்த்தே ஏக்கமுடன் இருப்பார்கள். ஊர் விட்டுத் தள்ளிப்போன உறவுகளின் உணர்வுகளை வேர் இருக்குமிடம்பார்த்து விருப்போடு நாம் வருவோம். அந்தகிராமத்தின் அதிகாரிகளை தெரியாது ஆனால்.. குஞ்சு குருமான்கள்,இளம் குடலை, பெரியோர்கள் எல்லோர்க்கும் தெரிந்த முகம் எமை காவும் தபால் காரர் …
-
- 7 replies
- 1.7k views
-
-
கட்டுமரம் மூழ்காது.......! ஆழ்கடல்மேல் அலையில் அசைந்தாடுகின்றது கட்டுமரமொன்று அதிலிருந்து வலையெறிகின்றார் மீன்பிடிக்கும் மீனவர் இருவர் அமைதியை அகற்றியே இடிபோலொரு முழக்கம் அடுத்து ஆர்பரித்துக்கொண்டு வந்ததோர் அலை ஆகாயம் தொட்டு அந்தோ பரிதாபம் அந்தமரம் அவர்களையும் புரட்டிவிட்டு அங்கேயே மூழ்கியது அடுத்து வந்த அலைகளும் மறைய அமைதியானது கடல் மீண்டும் அதில் மிதந்தது அந்த மரம் அதை பற்றியபடி மீனவர்கள் முகம் மட்டும் தெரிய முழுஉடலும் கடலுக்குள் அண்ணாந்து வானம் பார்த்த முதியவன் முக்குகன் பகன்றான் கருமுகிலைக் காணவில்லை மழைக்கறிகுறி ஏதும் இங்கில்லை அ…
-
- 1 reply
- 1k views
-
-
செந்தமிழ் சொல்லெடுத்து சிலேடைகள் தான் புகுத்தி திரைதனில் தவிழ்ந்தவன் தரணியில் தமிழ் கவிஞன் என்பதனால் ஈழத்தில் தமிழன் நிலை கண்டு கண்ணீரால் கவிதை எழுதி கலங்கி நின்றது போதும் உறவுகளுக்காய் அவன் வருந்தியது மெய்யென்றாகாதோ..?! களத்தில் அவன் கட்டுமரத்திலும் ஏறலாம் அண்ணா கழகத்திலும் குந்தலாம்... கவிஞன் அவனுக்கும் வாழ்வும் வயிறும் இருக்குத்தானே..?! நிச்சயம் அது துரோகமில்லை கவிஞன்.. மொழியாய்.. மொழிக்காய்.. வாழ்பவன். ஆட்சிக்கட்டில் அவனுக்கு சாமரம் வீச கவர் கன்னியருமில்லை கறுப்பின் கவர்ச்சில் மொய்க்க சிம் மையீக்களும் இல்லை அருட்டிவிட்டால் அழும் அந்த மீரூ பொம்மைகள…
-
- 1 reply
- 611 views
-