Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "வரலாறு தன்னைத் தானே திருப்பிச் சொல்லும்" இலங்கையின் வடமேல் மாகாணக் கரையோரத்தில் சிறந்து விளங்கும் நகரம் சிலாபம் என்று சொல்லலாம். அங்கிருந்து 16 மைல் தூரத்தில், இந்துமகா சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்து இருக்கும் எழில் மிகும் கிராமம் தான் உடப்பு. இங்கு தற்சமயம் அண்ணளவாக 10 ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இக்கிராமம் நெய்தல் நிலத்தைச் சார்ந்ததால், இங்கு மீன் பிடித் தொழிலே முதன்மையாக இருந்தாலும், நெசவுத் தொழிற்சாலை, கயிற்றுத் தொழிற்சாலை, பனை ஓலை குடிசைத் தொழிற்சாலைகள் போன்றவையும் உள்ளன. இந்த அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம் பரப்பும் உடப்பு அல்லது உடப்பூர் கிராமத்தை, கட்டாயம் புத்தளம் மாவட்டத்தின் குட்டித் தமிழகம் என்று சொல்லலாம். இங்கு இன்று வாழும் பெரும…

  2. மூன்றாவது காலை விடிந்திருக்கின்றது. காய்ச்சல் கொஞசம் குறைந்திருக்கிறது. இன்னமும் எழுந்து நிற்க முடியவில்லை. எனது அணியோடு தொடர்பில்லை. திசையும் சரியாகத் தெரியவில்லை. சாதுவாகப் பசிக்கிறது. மனிதநடமாட்டம் மருந்திற்கும் இல்லை. நகர்ப்புற மக்கள், வேடர்களைக் கதைகளிற் தான் கேட்டிருப்பர். ஆனால் கதிர்காமத்திலிருந்து தென்தமிழீழம் வழியாக வன்னியை இணைக்கும் பிரதேக்காடுகளிற்குள் வேடர்கள் இன்னமும் வாழ்கி;றார்கள். அவர்களை முன்னர் நான் கண்டுள்ளேன் என்பது மட்;டுமன்றி, ஒரு வேலைத்திட்டத்தில் வேடர்களோடு வேடர்களாக நான் எதிரி நாட்டிற்குப் பயணித்தும் உள்ளேன். என்னால் வேடர்போன்று பேசமுடியும். வேடர்களோடு பேசமுடியும். ஆனால் நான் பேசுவதற்கு வேடர் எவரையும் தற்போது காணவில்லை. காடு முற்றாக விழித்திரு…

  3. என் விழியே......... என்று ஆரம்பித்த அந்த கடிதத்தின் ஆரம்ப வரிகளை வாசித்தபோது அவளின் மனதில் இருந்து எழுந்த மெல்லிய நடுக்கம் உடலெங்கும் பரவி பெருமூச்சாக வெளிவந்தது. கடிதம் முழுவதையும் வாசிக்கவேண்டும் போலவும், அப்படியே அந்த கடிதத்தை கண்களில் வைத்து சத்தமிட்டு அழவேண்டும் போலவும் இருந்தது ரேவதிக்கு. தன்னுணர்வில்லாமல் கடிதம் கிடந்த அந்த கொப்பியை மூடியவள், ஒரு உந்துதலால் கொப்பியின் முதல் பக்கத்தை திறந்து பார்த்தாள். "மறத்தல் கொடுமையானது அதிலும் கொடுமையானது மறந்தது போல நடிப்பது" என அவளின் கையெழுத்தில் எழுதப்பட்டு இருந்தது. தனக்கு மட்டும் கேட்கக்கூடியவாறு அந்த வரிகளை வாசித்தவளுக்கு, முகத்தில் அறைந்தது போல இருந்தது அந்த வரிகள். அறையின் புழுக்கமும், ப…

  4. "தந்தை எனும் தாய்" [இன்று 15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல்] தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக, “அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“ “எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“ மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்] அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம…

  5. "காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை "காலம் மாறினால் அன்பு மாறுமா? கோலம் கலைந்தால் அன்பு போகுமா? ஓலம் எழுப்பினால் பிணம் எழும்புமா? நிலம் வறண்டால் பயிர் துளிர்க்குமா?" நீங்கள் ஒருவருடன் உண்மையான அன்பு அல்லது காதல் வசப்படும் போது, அந்த அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையுடன், வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் ஒன்றாக பயணிப்பதுடன், அதில் பெரும் மகிழ்வையும் கண்டு, ஒருவருக்கு ஒருவர் கொண்ட அன்பு முழுமையாக வாழ்வதை உணர்வீர்கள்! சொந்த நாட்டை விட்டு வெளிநாடு போனாலும், மாற்று கலாச்சாரத்தின் சில தாக்கங்கள் உங்களை வசப்படுத்தினா…

  6. 23.04.2017 தமிழினி அவர்களின் 45வது பிறந்தநாள்.தமிழினி அவர்கள் பற்றி பல்லாயிரம் கேள்விகள். தமிழினி அவர்களுக்கும் எனக்குமான உறவு பற்றியும் அவளது திருமணம் , ஒரு கூர்வாழின் நிழல் நூல் பற்றிய சர்ச்சைகள் என பெரிய பட்டியல் நீளம். எனது மௌனம் கலைத்து தமிழினி பற்றிய உலகம் அறியாத பலவியடங்களை பகிர்ந்திருக்கிறேன். இது பெரிய பகிர்வு. நேரமெடுத்து வாசியுங்கள். ------------------------------------ Saturday, April 22, 2017 தமிழினி.ஒருமுனை உரையாடல். முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது.…

  7. கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01 பகுதி: 01 - நல்லூர் திருவிழாவுக்கு வருகையும் & சந்திப்பும் ஆகஸ்ட் 2025 சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது பொன்னிறமாக பிரகாசித்தது. அதன் குறுகிய பாதைகளில் மாலைகள், இனிமையான கற்பூரப் புகை மற்றும் தவில் மேளங்களின் இன்னிசை ஒலிகளால் அதன் அரவணைப்பு நிரம்பியிருந்தது. நல்லூர் முருகன் திருவிழா அதன் உச்சத்தை எட்டியிருந்தது - ஆயிரக்கணக்கானோர் பிரகாசமான வேட்டிகளையும் அழகு மின்னும் புடவைகளையும் அணிந்து கொண்டு தெருக்களில் திரண்டனர். அவர்களின் கண்கள் அலங்காரமாக அலங்கரிக்கப்பட்ட தமிழ் கடவுளான, 'அலங்காரக் கந்தனைச்' சுமந்து செல்லும் தேரை நோக்கி உயர்ந்தன. “பஞ்சம் படை வந்தாலும் பட்டினி தான் வந்தாலும்…

  8. அவனுக்கு வயது ஒரு பூக்கும் காலத்துடன் சேர்த்து இருந்தது இளமை வசீகரமும் அவனை நன்றாக வளப்படுத்தி இருக்க தன்னை இன்னும் மெருகேற்ற அடிக்கடி ஜிம்மிலும் போய் இருக்க தவறுவது இல்லை. என்ன ஆளும் வடிவு கெட்டிக்காரனும் வேற. முதல் பார்க்கும் எந்தப்பெண்ணும் ஒருமுறை இருமுறை திரும்பி பார்க்கும் அழகன். பழைய இதிகாச கதாநாயகன் போல வர்ணிக்கும் அளவு அழகு இருத்தும் என்ன பண்ணுறது. பிறக்கும் போது அவனுடன் கூடி பிறந்தது வெட்கம். எவரையும் திரும்பி பார்க்க அவன் கண்கள் தயங்கும். அவனுடன் போவது அவனை பார்க்கும் பெண் நம்மளையும் பார்ப்பாள் என்கிற நட்பாசை. சரி விசயத்துக்கு வருவம். ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூ சக்கரை என்பதைபோல நம்ம ஏரியாக்கு நாம்தான் கீரோ. லுமாலா சைக்கிள மடக்கி வெட்டுற வெட்டில நாலு பெட்ட…

  9. அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற புத்தகத்தை வாசிக்கும் பொழுது அடியேன் அறிந்து கொண்ட ஒரு சில விடயங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் அந்த வகையில் 1.தென்கிழக்காசியாவின் முதல் வானோலி இலங்கை வானோலி 2.இங்கிலாந்தில் மார்க்கோனி ஆரம்பித்த முன்றாண்டுகளுக்குள் இலங்கையில் வானொலி ஆரம்பமனது. 3.முதலாவது உலக மகாயுத்தம் (ஜூலை 28, 1914‍_ நவம்பர் 11,1918)முடிவடைந்த் பின்னர்,யுத்த காலத்தில் தரை தட்டியிருந்த ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலில் சிதிலமடைந்திருந்த வயர்லஸ் ரேடிஜோக் கருவியின் பாகங்களை ஒன்றிணைத்து முதலாவது பரீட்சார்த்த ஒலிபரப்பு 1923 ஆண்டிலயே கொழும்பு தந்தித் திணைக்களத்தில் நடைபெற்றது. 4.ஏட்வேர்ட் கார்பர் என்பவரின் த…

  10. நிகழ்ச்சி நிரலில் இல்லாத இந்த அவதியான இரவு எப்படி தனது கடிகாரத்துக்குள் நுழைந்தது என்று நினைத்தவன், இந்த இரவு மட்டுமா நிகழ்ந்த, நிகழுகின்ற காலமும் தான் நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லையே என, எண்ணியபடி மேசைமீதிருந்த கடிகாரத்தை எட்டிப் பார்த்தான் முகிலன். இன்னும் சரியாக ஆறுமணி நேரம். குளிருக்காக போர்த்தியிருந்த கம்பளிப் போர்வையை நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையில் இறக்கி விட்டுக்கொண்டவன் இரவை எப்படி கடந்துவிடுவது என யோசித்தபடி, தலையணைக்கு கீழாக தடவி போனை எடுத்து பேஸ்புக்கை பார்க்கத்தொடங்கினான். மாட்டன் என்று சொல்லி இருக்கலாம். என்ர லீவுநாளில் நான் ஏன் போகணும். இவர் நெடுக இப்படிதான் விளையாடுறார். ஒரு வேலையை எடுத்துத் தந்துபோட்டு தான் நினைச்சநேரமெல்லாம் வா , போ …

  11. 2000ம் ஆண்டுக்கு முதலான யாழ்ப்பாணம், பல பொருட்கள் பொருளாதார தடை காரணமாக யாழ்ப்பாணத்து வராத காலகட்டம், பண்டிகைக்காலங்களில கொழுத்தும் "சீன வெடி" கூட அந்த காலத்தில தடைசெய்யப்பட்ட ஒன்று . அதால ,பண்டிகைகளுக்கு வெடி நாங்களே செய்யவேண்டிய கட்டாயம் , அப்ப எங்களுக்கு வெடி செய்ய தேவையான பொருட்கள் எண்டு பார்த்தால் , சைக்கிள் ரியூப்பில இருக்கிற வால்கட்டை (இது பேச்சுவழக்கு ,ஆங்கிலத்தின்ர VALVE எண்டததான் சொல்லுறது) நெருப்பெட்டி வால்கட்டைக்க பட்டும்படாமலும் போய்வரக்கூடிய ஆணி பொதுவாக ,கருக்கு மட்டைலயோ ,சைக்கிள்ட முன் பிறேக் கட்டை கம்பியிலயோதான் வால்கட்டைய பூட்டுறது ,கருக்குமட்டை கொஞ்சம் பாதுகாப்பு எண்டதால அதில செய்தால் வீட்டில கொஞ்சமா பேச்சுவிழும். அதுக்குள்ள குட்டி வால்…

  12. "நேர்மைக்கு கிடைத்தப் பரிசு!" அது ஒரு அழகிய குக்கிராமம். அதனூடாகத்தான் தூர இடத்து பேரூந்துகள் போவது வழமை. பேரூந்து தரிப்பு நிலையம் முன்பாக பல வகையான பழத் தோட்டம் ஒன்று இருந்தது. அதன் முதலாளி அதற்கு முன்னால் ஒரு பெட்டிக் கடை திறந்து வெவ்வேறு பழங்களுடன், சிற்றுண்டிகளும், தேநீர் மற்றும் பானங்களும் விற்கத் தொடங்கினார். அதுமட்டும் அல்ல, மக்களை கவருவதற்காக அவர்களின் அடிப்படை தேவையான கழிப்பறை வசதியும் அங்கு அமைத்து இருந்தார். அதனால், பேரூந்து வந்து நிற்கும் ஒவ்வொரு தடவையும் அவரின் பெட்டிக் கடை மிக ஆரவாரமாக இருக்கும். இந்த ஆரவாரத்தை பாவித்து, அந்த கிராமத்து சில இளைஞர் யுவதிகள் அங்கு பழங்களை களவெடுத்து போகத் தொடங்கினர். அவரின் கடைக்கு அ…

    • 3 replies
    • 642 views
  13. மீன்கொத்திப் பறவை மீன் கொத்தும் லாவகம் அவள் தேனீர் தயாரிப்பதில் இருக்கும். சிப்பந்தி வேலையென அவள் தன் வேலையினைக் கருதியதாய்த் தோன்றவில்லை. வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் பாங்கில் அந்தத் தேனீர்ச்சாலையில் அவள் நடந்துகொண்டாள். நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் எங்கள் காணிகளை நானே சென்று பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நாட்டாமைக் குணம் எனக்குள் விளித்துக் கொள்ள வீட்டில் சொன்னேன். கொடுப்பிற்குள் பெருமை சிரிப்பாக அம்மா ஒரு தொழிலாளியுடன் என்னை அனுப்பி வைத்தாள். தென்னங்காணிக்குள் ஒளிந்திருந்த ஒரு துரவோரம் நின்ற காட்டுமரம் என்னைக் கட்டிப்போட்டது. அது என்ன மரமென்று தொழிலாளியிடம் கேட்க அவர் 'ஓம் தம்பி அது வெட்டோணும், நெடுக நினைக்கிறது நேரம் கிடைக்கிறதில…

    • 3 replies
    • 1.3k views
  14. "வேலைக்காரியின் திறமை" வேலைக்காரி என்ற சொல்லுக்கு நாம் பணிப்பெண், ஏவற்பெண் அல்லது தொழுத்தை இப்படி பலவிதமாக கூறினாலும் சிலவேளை அவள் ஒரு அடிமை போல நடத்தப்படுவதும் உண்டு. இது மலருக்கு நன்றாகத் தெரியும். அவள் சாதாரண வகுப்பில் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது, தாயையும் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு தம்பியும் இரண்டு தங்கையும் உண்டு. ஒரு சிறு குடிசையில், அப்பா, அம்மாவின் கூலி உழைப்பில் ஒருவாறு சமாளித்து குடும்பம் இன்றுவரை போய்க்கொண்டு இருந்தது. இந்த திடீர் சம்பவம், அவளுக்கு முழுப்பொறுப்பையும் சுமத்திவிட்டது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கூலி வேலைக்கு போகும் பக்குவம் அனுபவம் அவளுக்கு இன்னும் இல்லை என்றாலும், சமையல், த…

  15. மனம் சாய்ந்து போனால்........ 'டேய் மச்சான் ஏதும் பிரச்சினை வராது தானே?' ஜந்தாவது தடவையாக கண்ணனிடமிருந்து கேட்கப்பட்ட அதே கேள்வியால் சிறிது எரிச்சலடைந்த ரமேஸ், 'டேய் சும்மா இரடா, இதோட எத்தனையாவது தடவையா இதே கேள்வியை கேட்பாய்?' என்றான் சலிப்புடன், 'உனக்கென்னடா? எனக்கு பயமா இருக்கடா ' 'பயமா, இது எப்பவோ இருந்திருக்க வேண்டியது, இப்ப பயந்தா வேலைக்காகாது. மாப்பிளையா இலட்சணமா இரு' 'சொன்ன மாதிரி கவிதா வந்திருவாளாடா?' 'இங்க பாரடா, நீயும் ரென்சனாகி எங்களையும் ரென்சனாக்காத, ஆனந் வரும்போது கவிதாவோடதான் வருவான்' 'எதுக்கும் ஒருக்கா போன் பண்ணிப் பாரடா' கண்ணன் முள்மேல் நிற்பதுபோல் அவஸ்தைப்படுவதை அவதானித்த ரமேஸ் 'சரி சரி நான் போன் பண்ணுறன் நீ ரென்சனாகாத' 'டேய் ஆனந் என்னடா? எங்…

  16. இதயங்களின் மொழி -------------------------------- அண்ணனைப் பார்க்கும் போது அவருக்கு சத்திர சிகிச்சை முடிந்து பத்து நாட்கள் ஆகியிருந்தது. அண்ணனின் இதயத்தை திறந்து சிகிச்சை செய்திருந்தார்கள். அண்ணன் எப்போதும் மிகவும் தெளிவானவர். வாழ்வை இலேசாக எடுத்துக் கொண்டவரும் கூட. இப்போது சத்திர சிகிச்சையின் பின் முகத்தில் தெளிவு இன்னமும் கூடியிருந்தது, சந்தோசத்தையும் நன்றாகவே காட்டினார். அண்ணனுக்கு மூன்று அடைப்புகள் இருக்கின்றதென்றே இதயத்தை திறந்தார்கள். திறந்த பின் நான்காவதாக இன்னொன்று இருப்பதையும் கண்டுகொண்டார்கள். அதையும் சரிசெய்தார்கள். அது கூட அண்ணனின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணமோ தெரியவில்லை. அதற்காக எல்லோரும் இப்படித்தான் இந்த விடயத்தை இலகுவாக எடுத்துக் கொள்வார்கள் என்றும் இல்லை. எ…

  17. கிறிஸ்துமஸ் மரம் --------------------------- ஒரு ஒழுங்கான கூம்பு வடிவில் இருக்கும் சின்ன சவுக்கு மரமே கிறிஸ்துமஸ் மரம் என்று தான் மனதில் ஒரு நினைப்பு இருந்தது. ஊரில் இருந்த நாட்களில் இதை எங்காவது நேருக்கு நேரே பார்த்ததாக ஞாபகம் இல்லை. படங்களில் அல்லது கதைகளில் மட்டுமே நான் இதை பார்த்திருக்கவேண்டும். அப்படியே வெள்ளைப் போர்வையாக அந்த வீடுகளைச் சுற்றி பனி கொட்டிக் கொண்டிருப்பதாகவும் மனதில் பதிந்து இருந்தது. ஆகவே நிச்சயம் இது படமோ அல்லது கதையோ உண்டாக்கிய தோற்றம் மட்டுமே. ஊரில் கிறிஸ்தவ மக்கள் இருந்தார்கள். மற்றைய ஊர்களை விட என்னுடைய ஊரில் அதிகமாகவே இருந்தார்கள். அதில் ஒரு சிலர் என்னுடைய வயது உடையவர்களாவும், தெரிந்தவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். ஆனாலும் இந்தப் பண்டிக…

      • Like
      • Thanks
    • 3 replies
    • 167 views
  18. இம்மாத ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகையில் வெளிவந்த என் சிறுகதை சிவாவுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. இரவு அடித்த வொட்காவின் தாக்கம் தலையிடியாய் மாறி அவனை எழுப்பியிராவிட்டால் இன்னும் கன நேரமாக அவன் தூங்கியிருப்பான். அப்பவும் எழும்ப மனமின்றிப் புரண்டே படுத்தான். இதமாக இளங்காலையில் வீசிய காற்றினால்கூட அவனை எழுப்ப முடியவில்லை. அதற்காக அவன் இரசனை அற்றவனும் அல்ல. மதுவையும் பெண்களையும் எப்படி இரசிக்கின்றானோ அதுபோல் இயற்கையின் விந்தைகளையும் தன்னை மறந்து இரசித்துமிருக்கிறான். வேலை அற்ற நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏனோ அவனுக்கு வெள்ளனவே விழிப்பு வந்துவிடும். அந்த நாள் முழுவதையும் அமைதியாக வீட்டிலிருந்தபடியே கரைப்பதான அவனின் அந்தத் தீர்மானத்தை யாராலும் கலைக்க முட…

  19. "பெண்ணை மதித்திடு" கி.மு. 500க்கு முன்னர் திருகோணமலையில் பாரிய சனத்தொகையையோ, கட்டமைக்கபட்ட ஆட்சிமுறையையோ கொண்டிருந்திருக்காத சில மனித குழுக்கள் - அவர்களை இயக்கர், நாகர் என்ற இனமாக - தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். மேலும் 1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்…” …

  20. "காணாமல் போன கணவனை இன்னும் தேடுகிறாள்" இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதே மிகக் கூடுதலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அது யுத்தம் மௌனித்த பின்பும் இன்னும் தொடருவது தான் ஆச்சரியமான விடயம். மேலும் உலக அளவில் இலங்கையில்தான் அதிகமா…

  21. "யாழ் மீனவனின் துயரம்" "தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்." கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் காணப்படுகிறது. இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு புராணங்களிலும் பண்டைய இலக்கியத்திலும் புகழ் பெற்ற பரதவ சமூகம், மருதம் வளம் பெற்று அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் இ…

  22. "வெள்ளந்தி மனிதர்கள்" கள்ளங்கபடமற்ற அப்பாவியாக, வெள்ளந்தியாக அல்லது காலத்திற்கு ஏற்ற புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத, பழைய சம்பிரதாயங்களைக் கைவிடாத பழம்போக்கு கொண்டவர்களாக, பத்தாம்பசலியாக, அதிகமாக கிராம புறங்களில் வாழும் மக்கள் இருப்பதாக பலர் கூறுவதை கேள்விப்பட்டுள்ளேன். இன்றைய தொழில் நுட்ப வசதிகள் மற்றும் நவீன போக்குவரத்து வாய்ப்புகள் நிறைந்த உலகிலும் உண்மை நிலை இன்றும் இதுதானா? என்னை சிலநாளாக வாட்டும் கேள்வி இது! நான் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கேயே இப்ப வேலையும் செய்கிறேன். எனவே ஒரு சில நாளாவது கிராமத்தில் இருந்து உண்மையை அறிய வேண்டும் என்ற அவா உந்த, ஒருவாறு தற்காலிக இடமாற்றம் பெற்று இன்று, அந்த குக்கிராமத்துக்கு, …

  23. வணக்கம் சேர் ..... இந்த வருட இறுதி பரீடசை நல்ல படியாக பாஸ் செய்யவேண்டுமென குல தெய்வம் கருப்புசாமியிடம் வேண்டுதல் செய்துள்ளேன். எனது அடுத்த கல்லூரி நுழைவுக்கு ஆங்கிலம் கடடாய பாடம் . தயவு செய்து 40 புள்ளியாவது போட்டு பாஸ் பண்ணி விடவும். எப்படியும் மற்ற பாடங்களில் தேறி விடுவேன். ஆங்கிலம் மட்டும் ஏறவே ஏறாது பக்கத்துவீட்டு ராமு டுஷன் வகுப்புக்கு போகிறவன் பாஸ் செய்து விடுவான். நான் பெயிலானால் அவன் அம்மா , என் அம்மவை ஏளனமாக கதைப்பார் . நாங்க வறுமை படட குடும்பம் அம்மா களை எடுக்க போய் தான் எங்களுக்கு சாப்பாடு தந்து வளர்கிறா. அப்பா கோவித்துப்போய் மூணுவருஷங்களாகிறது . எனக்கு கீழே இரண்டு தங்கைமார். நான் படிச்சு வேலைக்கு போய் அம்மா வுக்கு ஓய்வு கொடுக்கவேண்ட…

    • 3 replies
    • 1.7k views
  24. ஒர் அகதியின் கதை என் ஈழத்திரு நாட்டிலே யுத்தகால வேலைகளில் ...நம்மவர்கள் அடைந்த துயரங்கள் உயிரிழப்புகள் சொத்து இழப்புகள் உறவுகளைத் தொலைத்த சோகங்கள் சொல்ல வார்த்தையில்லை . சொந்த மண்ணிலே அகதியாகிய சோகம் ஏழேழு தலைமுறைக்கும் வரலாறாய் இருக்கும். கண்ணீரோடும் செந்நீரோடும் கலைந்து போன உறவுகள் . உயிரிலும் மேலாக மதிக்கும் போராளிகள் அவர்களை ஈந்த பெற்றோர் கணவனை இழந்த மனைவி , தந்தையை ,தாயை இழந்த குழந்தைகள், உறவுகளை இழந்த உள்ளங்கள் , படட துன்பங்கள் வார்ததையில் வடிக்க முடியாத சோகங்கள் இத்தனையும் சந்தித்த ஒரு அகதியின் கதை. 1990இல் ஒரு ஆவணி மாதத்தில் யாழ் நகரையும் அதன் சூழ உள்ள தீவுகளையும் இலங்கையின் ராணுவத்தினர் தரையாலும் கடலாலும் ஆகாயத்தின் பரப்பி…

    • 2 replies
    • 1.8k views
  25. மதி.சுதா மீள்பதிவு- எல்லா இயக்குனர்களிடமும் தாம் ஆசைப்பட்டும் செய்ய முடியாத கதை ஒன்று இருக்கும். அப்படியான ஒரு குறுங்கதை தான் இது. இங்கு இதை படமாக எடுக்க முடியாவிட்டாலும் இந்தியாவில் யாராவது குறும்படமாக எடுத்தாலும் சந்தோசமே.... ஆர்வமுள்ள யாருக்காவது பகிர்ந்து விடுங்கள்.... எந்தளவு வன்மமுள்ள போராளிக்குள்ளும் ஒரு மென் உணர்வு இருக்கும் அதே காதலாக இருந்து விட்டால்.... படியுங்கள்... சில நினைவுகளை மீட்டிப் பார்த்த போது வந்த குறுங்கதை... மன மறைவில் ..... ”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே” கேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான். ”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல்லு” சற்றே தயங்கியவனாக.. ”திருமகள் வீரச்சாவாமடா” அரைவாசியை விழுங்கிக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.