தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
சசிகலா உடல்நிலை: `அரசியல் உள்நோக்கம் இருக்கலாம்!’ - தஞ்சையில் சீமான் பேச்சு கே.குணசீலன்ம.அரவிந்த் சீமான் ( ம.அரவிந்த் ) `நாங்கள் காசு கொடுத்து வாக்குக் கேட்பவர்கள் அல்லர். சிறந்த ஆட்சியைக் கொடுப்போம் என மக்களிடம் கூறி வாக்குகளைப் பெறுவோம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ``சசிகலா நான்கு ஆண்டுகளில் ஒரு முறைகூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை. சிறையிலிருந்து வெளியே வரவிருக்கும் நிலையில், திடீரென அவருக்கு கொரோனா, நிமோனியா காய்ச்சல் எனக் கூறப்படுவதில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என நான் கருதுகிறேன்'' என்று தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். …
-
- 0 replies
- 771 views
-
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்! Digital News Team 2021-01-22T16:00:19 நடிகர் கமல்ஹாசன் கடந்த 18ஆம் திகதி தனியார் வைத்தியசாலையொன்றில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்த கமல், தொண்டர்களுக்கு காரில் இருந்தபடியே நன்றி தெரிவித்து விட்டு சென்றார். சில வாரங்கள் ஓய்வுக்குப் பின் தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது சுற்று பயணத்தை கமல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. Thinakkural.lk
-
- 1 reply
- 825 views
-
-
கூடியம் குகைகள்... 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த குகைக்குள் ஒரு திக் திக் பயணம்! வெ.நீலகண்டன் கூடியம் குகைகள் "இவ்வளவு பழைமையான இடம் இருக்குன்னு இந்தப் பகுதியில இருக்கிற பலபேருக்குத் தெரியாது. அப்பப்போ வேண்டுதல் வச்சு கிடாவெட்டு நடத்துறதுக்காக குகைக்குப் போறதோட சரி. எப்பவாவது ஒன்னு ரெண்டு பேரு, 'குகை எங்கேயிருக்கு'னு கேட்டு வருவாங்க." இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகி…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது; 4 மீனவர்களைக் காணவில்லை வைகோ கடும் கண்டனம் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை மூழ்கடித்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ இந்திய மீனவர்களின் நிலை என்ன என்பதை இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 18 .01.2021 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. …
-
- 3 replies
- 996 views
-
-
"நடராஜனை வரவேற்று விழா நடத்தக்கூடாது!"- ஏன் தடை போடுகிறது தமிழக அரசு?! எம்.விஜயகுமார் நடராஜன் | #AUSvIND ( Tertius Pickard ) ஒரே தொடரில் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டிருக்கும் நடராஜன் இன்று மாலை தனது சொந்த ஊரான சேலம், சின்னப்பம்பட்டிக்கு வருகிறார். நடராஜனை வரவேற்க நண்பர்கள் பலரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய நடராஜன், இத்தொடரில் முதல்முறையாக பவர்ப்ளே ஓவரில் விக்கெட் எடுத்த பெளலர் என்கிற பெருமையைப் பெற்றார். லாபுசேன், அஷ்டன் அகார் என இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். டி…
-
- 0 replies
- 707 views
-
-
சமீபத்தில் நடத்தப்பட்ட ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க வரும் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்பதுதான் கருத்துக் கணிப்பின் இறுதி முடிவாக வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணி! தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில் 158 முதல் 166 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு வங்கி 1.7 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. *(ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி) அ…
-
- 1 reply
- 913 views
-
-
நன்கொடை வேண்டாம்! 3,000 மாடுகளைப் பராமரிக்கும் வெள்ளியங்கிரி கோசாலை! குருபிரசாத்தி.விஜய் கோசாலையின் வெளிப்புறத் தோற்றம் பசுமடம் பிரீமியம் ஸ்டோரி ’இவ்விடம் வெள்ளியங்கிரி ஆண்டவருடைய கருணையால், எந்தவித நிதிப் பற்றாக்குறையும் இல்லாமல் நன்றாகச் செயல் படுகிறது. அதனால் பார்வையாளர்கள் யாரும் எந்தவித நன்கொடையும் அளிக்க வேண்டாம். நாங்கள் நன்கொடையை வாங்குவதும் இல்லை. யாராவது நன்கொடை அளிக்க விரும்பினால், அடிமாட்டுக்குச் செல்லும் எந்தவித உபயோகம் இல்லாத ஒரு மாட்டைக் கசாப்புக் கடையிலிருந்து வாங்கி இங்கு அளிக்கலாம். இறுதி மூச்சுவரை அந்த மாட்டை நாங்கள் நன்றாகப் பராமரிப்போம்.’ கோசாலையின் வெளிப…
-
- 0 replies
- 1k views
-
-
ஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வினை முதலமைச்சர் தலைமையேற்று திறந்து வைக்க இருப்பதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்.கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜெயலலிதாவின்-நினைவிடம்-27/
-
- 0 replies
- 354 views
-
-
`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை!’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர் பிரேம் குமார் எஸ்.கே. எடப்பாடி பழனிசாமி `முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா கட்சியிலே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க வில் இணைந்து விட்டனர்’ - முதல்வர் பழனிசாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார். டெல்லியில் அ.தி.மு.க எம்.பிக்கள் முதல்வரை வரவேற்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. …
-
- 5 replies
- 2.4k views
-
-
சிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி? மின்னம்பலம் ராஜன் குறை கடந்த வாரம் துக்ளக் ஆண்டு விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய சில கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. நீதிபதிகள் யார் காலையோ பிடித்து பதவிகளைப் பெறுகிறார்கள் என்று பேசியது ஒரு சர்ச்சை. வீடு பற்றி எரியும்போது சாக்கடை நீரையும் பயன்படுத்தி தீயை அணைக்கலாம் என்று ஒரு உவமையைச் சொல்லி, சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவையும் அ.இ.அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பது சசிகலா மற்றும் அ.இ.அ.தி.மு.க-வை சாக்கடை நீரென்று குறிப்பிட்டதாகக் கருதி இன்னொரு சர்ச்சை. இந்தச் சர்ச்சைகளைக் குறித்து அ…
-
- 2 replies
- 915 views
-
-
ராணிப்பேட்டை: எம்.எல்.ஏ குடும்பத்தில் மல்லுக்கட்டு - வாரிசு அரசியலால் தடுமாறும் தி.மு.க! லோகேஸ்வரன்.கோச.வெங்கடேசன் ஸ்டாலினுடன் காந்தி, வினோத் `காந்தியின் இரு மகன்களும் ராணிப்பேட்டை தி.மு.க-வில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரிசு அரசியலால் ஒதுங்கி நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்கள், தி.மு.க நிர்வாகிகள். ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளரும் அத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஆர்.காந்தியும், அவரின் மூத்த மகன் வினோத்தும் பதவிக்காக மல்லுக்கட்டுகிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், துரைமுருகனுக்கு அடுத்த நிலையில் பவர்ஃபுல்லானவர் காந்தி. தி.மு.க ஆட்சிக்கட்டிலில் இருந்த சமயத்தில், காந்திக்கு அமைச்சர்…
-
- 0 replies
- 392 views
-
-
புதுச்சேரி: `அடம்பிடிக்கும் கிரண் பேடி; அசராத அமைச்சர்!’ - போராட்டக்களமான கவர்னர் மாளிகை ஜெ.முருகன்அ.குரூஸ்தனம் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரண் பேடியின் அழைப்புக்காக சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த 9 நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய அமைச்சர் கந்தசாமி, இன்று கவர்னர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். புதுச்சேரி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியின் முதல்வராகப் பத…
-
- 0 replies
- 413 views
-
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயற்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் …
-
- 0 replies
- 864 views
-
-
மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துவந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். தன்னுடைய உடல்நிலையின் காரணமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்…
-
- 2 replies
- 827 views
-
-
54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.) எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது," என்று கூறியுளளார். இந்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு…
-
- 40 replies
- 3.9k views
-
-
கொரோனா தடுப்பூசி: 15 நிமிடம் யோசித்தேன், ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்: ஊசி போட்டுக்கொண்டோர் உணர்வுகள் படக்குறிப்பு, சுஜாதா ராஜீஷ் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி இன்று (ஜனவரி 16) தொடங்கியது. தமிழ்நாட்டில், புதுச்சேரியில் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எப்படி உணர்கிறார்கள்? புதுவையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ தொழில்நுட்ப ஊழியர் சுஜாதா ராஜீஷ் பிபிசி தமிழிடம் தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். 'இந்த தடுப்பூசியைப் போடுவதற்கு முன்பு இதை நாம் எடுத்துக்கொள்ளலாமா? வேண்டாம…
-
- 0 replies
- 775 views
-
-
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது – விஜயபாஸ்கர் by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-720x450.jpg கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் திகதி முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 16 ஆம் திகதி 307 மையங்களில் தடுப்பூசி செலு…
-
- 1 reply
- 526 views
-
-
ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க வாழ்க்கையையே அர்ப்பணித்த மதுரை செல்வராணி! அருண் சின்னதுரைஎம்.கணேஷ்சி அரவிந்தன் செல்வராணி தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு மாடுகளை கவனித்துக்கொள்ள, அதனுடன் நேரம் செலவிட என இருந்த பெண் ஒருவர், தன் வாழ்நாளில் திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ''ஜெயிச்சா மட்டுமில்ல மாடுக தோத்தாலும் கவனமா வளக்கணும்'' என்கிறார் செல்வராணி. மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ளது சென்னகரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் 45 வயதுடைய செல்வராணி என்ற பெண், தன்னிடம் உள்ள ஜல்லிக்கட்டுக் காளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என திருமணமே செய்து கொள்ளாமல் காளைகளுக்காக தனது வாழ்க்…
-
- 0 replies
- 709 views
-
-
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு மதுரை, உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டுள்ளன. நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும். கலப்பின மாடுகள் அனுமதிக்கப்படவில்லை. போட்டியில் பங்கேற்கும் மாடுகள் அனைத்திற்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே காளைகள் வாடிவாசலில் களமிறங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. அவ்வாறு பங்கேற்கும் மாடுகளின…
-
- 15 replies
- 1.4k views
-
-
தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது : வைகோ குற்றச்சாட்டு தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஆனால், கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற ஹிட்லர், காந்தியைக் கொன்ற கோட்சே, ஈழப் படுகொலைக்குக் காரணமானவர்களின் படங்களைப் பகிர்பவர்களுக்குத் தடை இல்லை என வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 26ஆம் நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். அதையொட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர…
-
- 0 replies
- 678 views
-
-
திண்டுக்கல் :: மாட்டுப் பொங்கலை போல குதிரை பொங்கல்.! திண்டுக்கல் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ளது சிறுமலை கிராமம் இங்கு பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர் புரம், தென்மலை, உள்ளிட்ட ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளது இந்த மலை கிராமங்களில் சாலைவசதி கிடையாது. இங்கு உள்ள விளை நிலங்களில் வாழை, எலுமிச்சை, அவரை, காப்பி, ஏலக்காய், பலாப்பழம் போன்றவற்றைப் பயிரிடப்படுகிறது. மலைப்பகுதியில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை நகர்ப் பகுதிக்கு எடுத்துவர இக்கிராம மக்கள் குதிரைகளைப் பயன்படுத்துகின்றனர். குதிரையின் முதுகில் மூட்டையாகக் கட்டி காய்கறிகளை எடுத்து வந்து விற்பனை செய்வது அவர்களது வழக்கம். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் இரண்டு குதிரையாவத…
-
- 0 replies
- 735 views
-
-
இலங்கைக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவில் போராட்டத்திற்கு முஸ்தீபு (ஆர்.யசி) இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி தமது மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கச்சத்தீவு நோக்கி சென்று போராட்டம் நடத்தவுள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 26 இந்திய இராமேஸ்வரம் மீனவர்களை நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் வி…
-
- 1 reply
- 729 views
-
-
234-ல் 117 தொகுதிகள் பெண்களுக்கு... சீமானின் `சீர்திருத்தம்’ எடுபடுமா?#TNElection2021 இரா.செந்தில் கரிகாலன் நாம் தமிழர் கட்சி சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தும் சீமானின் இந்த முடிவு, தொடர்ச்சியாக கமல்ஹாசனின் கருத்து ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும் பெரிய கட்சிகளை இவர்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்வது சரியல்ல என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார் சீமான். ஒரு தொகுதியில் மட்டும் வேட்புமனு நிராகரிக்கப்பட, 19 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட காளி…
-
- 0 replies
- 753 views
-
-
ஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாக அறிந்துகொண்டேன்- ராகுல்காந்தி by : Litharsan ஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாகக் கண்டு புரிந்துகொண்டதாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மதுரையில் அவனியாபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரடியாகக் கண்டுகளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன். ஜல்லிக்கட்டால் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படுவது சரியில்லை. அத்துடன், தமிழ் மொழியைச் சிதைக்கவும் தமிழ் கலாசாரத்தைச் சீர்குலைக்கவு…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாரிச்சுருட்டும் தி.மு.க வாரிசின் நட்புகள் முதல் திட்டித் தீர்த்த வேலுமணி வரை..! - கழுகார் அப்டேட்ஸ் கழுகார் கழுகார் அப்டேட்ஸ்... ``பொங்கல் வாழ்த்துகள்... ஊருக்குக் கிளம்பிவிட்டேன். தகவல்கள் வாட்ஸ்அப்பில் வந்துசேரும்” என்று சொல்லிவிட்டு கழுகார் கிளம்பிய சில நிமிடங்களில் வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தன தகவல்கள்! ``மூணு மாசத்துல நம்ம ஆட்சிதான்!” வாரிச்சுருட்டும் தி.மு.க வாரிசின் நட்பு வட்டாரம்... தி.மு.க-வின் வாரிசு பிரமுகருக்கு நட்பு வட்டாரம் அதிகம். சமீபகாலமாக வாரிசின் நட்புப் புள்ளிகள், முக்கியத் தொழிலதிபர்கள் பலருடனும் நட்சத்திர விடுதிகளில் சந்திப்புகளை நடத்திவருகிறார்கள்…
-
- 0 replies
- 870 views
-