Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ’ஜெயலலிதாவை பார்த்து பேசியதாக பொய்தான் சொன்னோம்’ - திண்டுக்கல் சீனிவாசன் பல்டி ’ஜெயலலிதாவை பார்த்து பேசியதாக பொய் சொன்னோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபனாக பேசியுள்ளது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் இன்று இரவு நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அண்ணா, எம்.ஜி.ஆர் பற்றி சிறிதுநேரம் பேசிவிட்டு, விஷயத்துக்குள் வந்தார். '' டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் வாக்கு சேகரிக்கும்போது சசிகலா படத்தை போடாதது ஏன்?. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. எங்களை பார்க்க சசிகலா குடும்பம் …

  2. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5890 பேருக்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 120 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தில் மட்டும் 5,870 பேருக்கும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3 இலட்சத்து 43 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த வாரங்களில் ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு பதிவான நிலையில் இன்று ஆயிரத்து 185 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா தொ…

    • 0 replies
    • 683 views
  3. ஜூன் 30-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் பதில் திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கொரோனாவை தடுக்க உலக நாடுகள் திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இர…

    • 1 reply
    • 683 views
  4. பா.ஜ.க.வின் தலைவர்கள் கிங் மாஸ்டர்கள்: தமிழிசை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகிய இருவரும், கிங் மாஸ்டர்கள் என, மாநிலங்களவை தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இருவரும் ரிங் மாஸ்டர்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் தெரிவித்த கருத்திற்கு நேற்று (புதன்கிழமை) பதில் கருத்து வழங்கிய அவர் மேற்படி கூறியுள்ளார். பா.ஜ.க.வின் தலைவராக அமித்ஷா பொறுப்பேற்பதற்கு முன்னாள், நான்கு மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியை தாம் பொறுப்பேற்ற பின்னர் 22 மாநிலங்களுக்கு விரிவுபடுத்திய கிங் மாஸ்டர்கள் குறித்த தலைவர்கள் எனக் கூறியுள்ளார். அதேபோன்று இன்று காங்கி…

  5. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனந்தூர் எனும் கிராமத்தில் தலித் இளைஞர் ஒருவர் சாதி இந்துப் பெண் ஒருவரை, திருமணம் செய்து கொண்டதால், அவர் வசித்து வந்த தலித் குடியிருப்பில் 30 வீடுகள், நான்கு வாகனங்கள் மற்றும் பிற சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டு, ஊரைவிட்டு வெளியேறியது. புதன்கிழமை காலை சாதி இந்து ஆண்கள் சுமார் 300 பேர், ஒன்பது மணியளவில் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்கத் தொடங்கியதாகவும், அது 10.30 மணி வரை தொடர்ந்ததாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிர…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "தமிழ்நாட்டில் குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு மாணவர் பிளஸ் 2 முடித்த பின்னர், எந்தக் கல்லூரியில் சேர்ந்தார் என்பதை எவ்வாறு கண்டறிவது?" என்று கல்வி அதிகாரிகளிடம் கேட்டால், "யுமிஸ்" (UMIS) எனப் பதில் வரும். அதென்ன யுமிஸ்? பள்ளிக்கல்வியில் சேரும்போது ஒவ்வொரு மாணவருக்கும் எமிஸ் (EMIS - Educational Management Information System) என்ற எண் கொடுக்கப்படுகிறது. அந்த மாணவர் உயர்கல்வியில் சேரும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், அரசின் யுமிஸ் (University Managment Information System) செயலிய…

  7. தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சண்டையில் இரண்டு இளைஞர்கள் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறை பிடித்து விசாரணை நடத்தி வருகிறது. அரக்கோணத்திற்கு அருகில் உள்ள சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் புதன்கிழமையன்று மாலையில் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள குருவராஜப்பேட்டையில் இருந்த கடை ஒன்றில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த பக்கத்து ஊரான பெருமாள் ராஜப்பேட்டையைச் சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தல் தொடர்பான பேச்சு வார்த்தை முற்றியதே இந்த மோதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அன்று…

  8. பிப்.11-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | கோப்புப் படம்: வி.கணேசன் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் மத்திய அரசிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் 3 பக்க அறிக்கை தாக்கல் செய்ததாக நேற்றிரவு தகவல் வெளியானது. தொலைக்காட்சி செய்தி சேனல்களில் இ…

  9. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான்! சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதற்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கடலூரில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று(வெள்ளி) பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தமிழகத்தில் தீய ஆட்சிமுறை ஒழிய, தூய ஆட்சி முறை மலர, பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகம் காக்க ‘எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சி’ என்ற பொது முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணியிலும் சேராமல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போ…

  10. லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1758849 தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது

  11. தி.நகரும் தீபாவளி கொண்டாட்டங்களும்! #Infographics மாம்பலம், தியாகராய நகர் பகுதியை சென்னையின் நியூயார்க் எனலாம். 24 மணி நேரமும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய நகரங்களில் தியாகராய நகரும் ஒன்று. இப்பகுதியின் வருடாந்திர வருவாய் மட்டும் 2,00,000 மில்லியன் ரூபாய் எனக் கணக்கிட்டுள்ளனர். இது புதுதில்லியின் முக்கிய வியாபார மையமான கன்னாட் ப்ளேஸையும், மும்பையின் லிங்க் ரோடு பகுதிகளின் வியாபாரத்தை விடவும் இரண்டு மடங்காகும். சாதாரண நாட்களே இப்படி என்னும் நிலையில் பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் சீசனில், குறிப்பாக 75 சதவீதம் அளவுக்கு ஜவுளி வியாபாரத்தை மட்டுமே நம்பி இயங்கும் இப்பகுதியில் இரண்டு மடங்கு விற்பனை அதிகரிக்கும் என்பதுதான் அனைவரது கணிப்பாகவும் இர…

  12. காற்றில் பறக்கிறது தமிழ்நாட்டு அரசியல் (பன்னீர்) மானம் !!! https://www.facebook.com/video/video.php?v=746979372037033

  13. “சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர் Halley KarthikPublished: Sunday, July 13, 2025, 19:33 [IST] சென்னை: காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களத்தில் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த தவெகவினர், சீமானையும், உதயநிதி ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த பிரச்சனை தொர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோராப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதியை மறுத்திருந்தது. இதனையடு…

  14. இலங்கை போர்: தமிழ்நாடு இல்லனா செத்துருப்போம்-மனம் திறக்கும் நடிகர் போண்டா மணி(கேதீஸ்வரன்) தமிழ் மக்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள் என சிங்கள மக்களும் இப்போது உணர்கின்றார்கள். தமிழர் பிரதேசங்களில் விவசாயம் இருப்பதினால் அவர்கள் கஸ்ரப்பட மாட்டார்கள். இப்போது சிங்களவர் மட்டுமே பிரச்சனைகளை அனுபவிக்கின்றார்கள். புலம்பெயர்ந்த ஈழமக்கள் ஏழைமக்களல்ல.வசதியாக வாழ்ந்தவர்கள். பிரபாகரன் இருக்கும் வரைக்கும் இலங்கைக்குள் யாரும் வரமுடியவில்லை. தமிழ்நாட்டிற்கும் பாதுகாப்பாய் இருந்தது. வெள்ளைக்கார நாட்டில் வாழும் தமிழ் அகதிகள் சகல உரிமைகளுடனும் வாழ்கின்றார்கள். தமிழ்நாட்டில் வாழும் ஈழ அகதிகளுக்கு எவ்வித உரிமையுமில்லை.

  15. பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை காவல்துறை தலைமைக் காவலர் ஒருவர், தனது மகளுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அந்தக் குழந்தைக்கு உறுப்புக் குறைபாடு ஏற்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டுகிறார். இதற்குக் காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 13) அன்று தலைமைச் செயலக வாசலில் மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால்தான், அவரது புகாரை மருத்துவத்துறை மற்றும் காவல்துறை ஏற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கா…

  16. ராம மோகன ராவ் அதிரடி! என்ன பின்னணி? ரெய்டு... துணை ராணுவம் குவிப்பு... கோட்டையில் சோதனை... மருத்துவமனை அட்மிட் என தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை சுற்றி நடந்த நிகழ்வுகளின் க்ளைமாக்ஸ் பிரஸ்மீட்டில் முடிந்திருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கொளுத்திப் போட்ட திரி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. அவர் பேட்டியில் சொன்ன விஷயங்களின் பின்புலங்கள் என்ன? உதய் திட்டம், காவிரிப் பிரச்னை, மதுரவாயல் - துறைமுகத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா இல்லாத நிலையில் ‘மத்திய அரசுக்கு ஆமாம் சாமி’ போட்டு வந்தது அ.தி.மு.க. அரசு. தலைமைச் செயலாளரின் தலையை உருட்டியதோடு கோட்டையில் புகுந்து சோதனை …

  17. சுவாதி கொலை வழக்கில் மர்மம் விலகியது: கொலையாளி ராம்குமார் பிடிபட்டது எப்படி? போலீஸிடம் பிடிபட்ட ராம்குமார் (பழைய படம்) மற்றும் சுவாதி செங்கோட்டை அருகே கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த போலீஸ் படை சுற்றிவளைத்தது சென்னையில் பெண் இன்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் பிடிபட்டது எப்படி என்பது குறித்த பரபரப்புத் தகவல்கள் தெரியவந் துள்ளது. கொலை செய்த பின்னர் செங்கோட்டை அருகே உள்ள தனது சொந்த ஊரான மீனாட்சிபுரம் கிராமத் துக்குச் சென்று ஆடு மேய்த்துக் கொண்டு திரிந்துள்ளார். பிளேடால் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்ற அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாமல் போலீஸார் காத்திருக்கின்றனர். …

  18. தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரை கைது செய்த சிபிஐ - என்ன குற்றச்சாட்டு? படக்குறிப்பு, ஆசிரியர் ராமச்சந்திரன் 22 நிமிடங்களுக்கு முன்னர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளது சிபிஐ. வருமான வரித்துறை கணக்குத் தாக்கல் செய்து, பணம் திரும்பப் பெறும் விவகாரத்தில் பலருக்கும் முறைகேடு செய்ய உடந்தையாக இருந்ததாக சிபிஐ இவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலுர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரன் தினமும் மாணவர்களைப் போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருவது,…

  19. விஸ்வரூபம் எடுக்கும் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வெளிநாடு தப்பியுள்ள இர்பானின் தந்தை வேலூரில் கைதுநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் இர்பானின் தந்தை முகமது சஃபி கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சேர்க்கைக்கு நீட் எனும் தகுதி தேர்வு எழுதுவது இந்தியா முழுவதும் கட்டாயமாகும். இந்த தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னர் பிளஸ் 2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு தமிழகம் உள்ளிட்ட மாநில மாணவர்களுக்கு குதிரை கொம்பாக உள்ளது. வினாத்தாள் கடினமாக இருக்கிறது. அதிலும் மாநில பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இதனால் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிற…

    • 2 replies
    • 681 views
  20. ‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்? ப.திருமாவேலன், ஓவியம்: பாரதிராஜா `அம்மா’வை வாழ்த்தி எழுதிய பாசுரங்களை, `சின்ன அம்மா’வுக்காகச் சின்னத் திருத்தங்களுடன் ரத்தத்தின் ரத்தங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதே கதை, அதே காட்சி, அதே நடிப்பு, அதே பாட்டு... விசிலடிக்கும் ரசிகர்களும் ஒன்றுதான். நடிக்கும் ஆள் மட்டுமே மாறியிருக்கிறார். முன்னர் ஜெயலலிதா; இதோ இப்போது சசிகலா! ‘நமது எம்.ஜி.ஆர்’ சித்ரகுப்தனுக்குச் சொல்லியா தர வேண்டும்? ‘வங்கக் கடலோரம் உறங்குகிற தாய்க்கு வரமாகக் கிடைத்தவர் வலக்கரமாய் வாய்த்தவர் வல்லூறுகள் வாலறுந்த நரிகள் ஏவுகின்ற பழிகளை வாழ்வெல்லாம் சுமப்பவர் வரும்பகை தூவிய வசவுகளை வாழ்வெல்லாம் சகித்தவர் தாயே உலகமென தவம்க…

  21. தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை September 7, 2019 தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முத்தமிழ் முதல்வன் என்பவரை அந்த சமயத்தில் வெளியான தினமலர் நாளிதழில் ‘டீக்கடை பெஞ்ச்’ பகுதியில் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு மதுபானம் கடத்துபவர்களிடம் முத்தமிழ் முதல்வன் லஞ்சம் பெற்றார் எனவும், சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் வாங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது இதனையடுத்து, தனக்கு எதிராக அவதூறு பரப்பு விதமாக செய்தி வெளியிட்டதாகக் கூறி 10 லட்ச…

  22. மகள் வருகை தராதமையினால் ஏமாற்றத்துடன் சிறைக்கு திரும்புகிறார் நளினி லண்டனிலிருக்கும் மகள் வருகை தராதமையினால் அவரது திருமண ஏற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் சிறைக்கு செல்வதனால் நளினி மன வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி-முருகன் தம்பதியரின் மகளான ஹரித்ரா லண்டனில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு, திருமணம் செய்து வைக்கவே ஆறு மாதங்கள் பிணையில் செல்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி அனுமதி கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், கடந்த ஜூலை 25 ஆம் திகதி சிறையிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் வெ…

  23. அதிகாலை வடபழனி பயங்கரம்.. மின்கசிவால் தீவிபத்து.. உறக்கத்திலேயே பலியான நால்வர். வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதில் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் மூச்சுத்திணறி உறக்கத்திலேயே விழிக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து இரு சக்கர வாகனங்களுக்கு பரவியது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.இன்று அதிகாலை 4.54 மணிக்கு கீழ்த்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 இரு சக்கர வாகனங்கள் எரிந்து…

  24. 5 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை - குற்றவாளியை சிக்க வைத்த அதிர்ச்சி வீடியோ 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குளிர்பானக் கடை நடத்தி வரும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ` இரண்டு பெண்களோடு ஏற்பட்ட தவறான நட்பின் காரணமாக, அவர்களுக்கு வேண்டிய சிறுமிகளை இந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்' என்கின்றனர் காவல்துறையினர். சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பான் வகைகளை வியாபாரம் செய்யும் கடைகள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் டி.பி.சத்திரம் அருகில் உள்ள ஆர்.வி.நகரில் செயல்பட்டு வரும் பெட்டிக் கடையொன்றில…

  25. நான்கு நாட்களுக்கு முன்பு அத்துமீறி இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்தபோது 11 இலங்க‌ை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு நாட்டு கடல் எல்லைக்குள் செல்கிறோம் என்ற அச்சம் சற்றும் இல்லாமல் இந்திய நாட்டு கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்த காரணத்தாலேயே இந்திய கடலோரக் காவல்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோரக் காவல்படையினர், இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த இலங்கை மீனவர்களை காக்கிநாடா கடலோரப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கிழக்கு கோத‌ாவரி மாவட்டம் தும்முலபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் காவல் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இரண்டு போலீஸ்கார்கள காவலுக்கு இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மின் சப்ளை கட் ஆனதை தொடர்ந்து காற்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.