தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
தன்னை உயிருக்குயிராக காதலிப்பதாக கூறிய காதலி, திடீரென பெற்றோர் சொல்படி திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த காதலன், காதலிக்கும் போது தான் செய்த செலவை திருப்பித் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அந்த இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக பூங்கா, திரையரங்கம், ஷாப்பிங் மால்கள், கோயில், குளங்கள் என சந்தோஷமாக சுற்றினர். காதலன் தன் அன்பின் அடையாளமாக காதலிக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கினாராம். இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை…
-
- 7 replies
- 861 views
-
-
விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி(23). இவர் அந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகனும் கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். கனிமொழி மற்றும் வேல்முருகன் காதல் பள்ளிப் பருவத்திலேயே ஆரம்பித்துள்ளது. பின்பு இருவரின் வீட்டிற்கும் தெரியவந்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரும் மேற்படிப்புக்காக வெவ்வேறு ஊர்களுக்கு சென்றுள்ளனர். இருப்பினும் இவர்களது காதல் மொபைல்போன் வழியாக தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கனிமொழி 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து இவர்களின் காதல் …
-
- 5 replies
- 931 views
-
-
திருநெல்வேலி : பொறியியல் படிப்பை முடிக்காமல் ஜவுளி கடையில் வேலை பார்த்ததால் என் காதலை சுவாதி உதாசீனப்படுத்தினார்.. இந்த ஆத்திரத்தில் சுவாதியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கொலையாளி ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த ராம்குமார், நெல்லையில் நேற்று இரவு சிக்கினார். அப்போது போலீசிடம் இருந்து தப்பிக்க பிளேடால் கழுத்தை அறுத்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிகிச்சையில் முன்னேற்றமடைந்த நிலையில் ராம்குமாரிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றிருக்கின்றனர். அதில் ராம்க…
-
- 5 replies
- 788 views
-
-
தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர் சேரன். அவரது மனைவி செல்வராணி. அவர்களுக்கு நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். தனது தந்தை தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன் பிறகு அவர் …
-
- 0 replies
- 380 views
-
-
மனைவியின் தம்பியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதால் தி.மு.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்தவர்கள், பெண்ணின் வீட்டுக்குத் தீ வைத்தனர். சென்னை குன்றத்தூர் அருகே உள்ள சிறுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிராஜன். தி.மு.க-வைச் சேர்ந்த இவர், ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கிரிராஜனின் மனைவியின் தம்பி காதலித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணின் அப்பா பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிக்கு கிரிராஜன் அடைக்கலம் கொடுத்துள்ளார். அதோடு பாபுவிடம் இருவர…
-
- 0 replies
- 414 views
-
-
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: மருமகனை வெட்டிக் கொன்று விட்டு மாமனார் சரண் படக்குறிப்பு, ஜெகன், சரண்யா 21 மார்ச் 2023 கிருஷ்ணகிரியில், மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை, உறவினர்கள் சிலரது உதவியுடன் தமது மருமகனை சாலையில் வழிமறித்து படுகொலை செய்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெகன் என்பவர் டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார் .இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். …
-
- 2 replies
- 750 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TN POLICE 3 நவம்பர் 2023, 06:23 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த மூன்றே நாளில் இளம் தம்பதி தூத்துக்குடியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை: ஆணவப் படுகொலையா? என போலீசார் விசாரணை. தூத்துக்குடியில் காதலித்த பெண்ணை பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கரம்பிடித்து மண வாழ்க்கையைத் துவங்கி 3 நாள் கூட முழுமையடையாத நிலையில் வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளம் ஜோடியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து தப்பியது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கி உள்ளனர். ஒரே சமூகத்தில் திருமணம் செய்தும் தூத்துக்குடியில் நடந்தது ஆணவப் படுகொலையா? சம்பவத்தின் பிண்ணனி என்ன? ஒ…
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
லவ் மேரேஜ் பண்ணியவர்களா நீங்கள் ? உங்களுக்கு தனி ரேஷன் கார்டு !! எடப்பாடி அதிரடி !! காதல் திருமணம் செய்து கொண்டோர் , தங்களது பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து பெயர்களை நீக்குவதற்கான அறிவுரைகள் குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு சிரமமின்றி ரேஷன் அட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழகம் முழுவதும், தற்போது ஆதார் அடிப்படையிலேயே மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காதல் திருமணம் புரிந்து கொண்டோர், புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு ஏதுவாக, அவர்களது பெயர்களை சம்பந்தபட்ட நபரின் பெற்றோர், தங்களது குடு…
-
- 0 replies
- 668 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காத்தவராயன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிறகு தெய்வமாக்கப்பட்டதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் & ரக்ஷனா. ரா பதவி, பிபிசி தமிழ் 6 ஏப்ரல் 2025, 02:07 GMT காத்தவராயன் என்ற நாட்டார் தெய்வம் குறித்து கிட்டத்தட்ட அனைவருக்குமே நன்கு தெரியும். ஆனால், இந்தக் காத்தவராயன் என்ற தெய்வமும் அதற்கான வழிபாட்டு முறையும் தொடங்கியதன் பின்னணியில் ஓர் ஆணவக்கொலை சம்பவம் இருக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். காத்தவராயன் மட்டுமில்லை, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் நாட்டார் தெய்வங்கள் பலவற்றின் தோற்றுவாயாக ஆணவக்கொல…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
காத்திருக்கும் கப்பல்... கைகள் கட்டப்பட்ட சென்னை மேயர்! - 'ரண' களமாகும் நிவா'ரணம்'! சென்னை மீது இரக்கம் கொண்டு மழையே வெறித்துவிட்டது. ஆனால், அரசு இயந்திரத்துக்கு அந்த இரக்கம் ஏனோ தோன்றவில்லை. சென்னை ரிப்பன் மாளிகையில் குவிந்து கிடக்கும் வெள்ள நிவாரணத்துக்கான உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் ஏக குழப்பம் நிலவுகிறதாம். ஒருபுறம், சென்னை துறைமுகத்தில் மக்களின் தேவைக்கான பொருட்களுடன் மூன்று பிரமாண்ட போர்க்கப்பல்கள் ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் வந்து இறங்கியிருக்கிறது. ஆனால், போதுமான ஆட்கள் இல்லாததால் கப்பல்களில் வந்த பொருட்களை இன்னும் முழுமையாக இறக்காமலே இருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கும் மேல் காத்திருந்த பிறகே, இர…
-
- 1 reply
- 697 views
-
-
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி,உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி சசிபெருமாள், இன்று போராட்டத்தை கைவிடக்கூடும், எனத்தெரிகிறது. சேலத்தை சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள்,57, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே, கடந்த ஜன., 30 முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவர மறுத்து, சிறையில் அவர் உண்ணாவிரத்தை தொடர்ந்தார். உடல்நிலை மோசமானதால், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக காங்., கட்சியினர் கோர்ட்டில் ஜாமின் பெற்றனர். வெளியே வந்த சசிபெருமாள் தொடர்ந்து, சென்னை கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்நிலையில், அவரை பரிசோதித்த டாக்டர்கள், உ…
-
- 3 replies
- 730 views
-
-
கான்ஷியஸ்... அன்கான்ஷியஸ்? சிகிச்சைஓவியம்: கார்த்திகேயன் மேடி செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அக்டோபர் 22 முடிந்து நவம்பரும் தொடங்கிவிட்டது. ஆனால் ஜெயலலிதா நலம்பெற்று எப்போது அழைத்துவரப்படுவார் என்ற குழப்பம் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு, ‘‘ஜெயலலிதா நன்கு பேசுகிறார்” என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு பீதியை அதிகப்படுத்தியது. ‘‘நன்கு பேசுகிறார்” என்று மருத்துவமனை இப்போது அறிவிக்கிறது என்றால் இதுவரை அவர் பேசாமல் இருந்தாரா? என்ற கேள்வி கிளம்பி தொண்டர்களை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுத…
-
- 0 replies
- 889 views
-
-
காபந்து, குதிரை பேரம்.... தமிழக அரசியலை இயக்கும் 10 வார்த்தைகள்! #HallOfShameADMK “அரசியல் அபிலாஷைகளை வளர்த்துக்கொள்வது பெரும்பாவம்... அரசியல் பேசுவது பெருங்குற்றம்... அரசியல் கட்சிகளில் சேர்வது மனித தன்மையற்றச் செயல்...” என்று பேசி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறை இப்போது விழிப்படைந்துவிட்டது. இனியும் அரசியலை யாரோ ஒருவரின் தனிப்பட்ட சொத்து என்று கருதி விலகிச் செல்லக்கூடாது என்பதைத் தெளிவாக புரிந்துகொண்டுவிட்டது. அரசியல் பயில விரும்புகிறது. அரசியல் குறித்து உரையாட பேரார்வம் கொள்கிறது. தேர்தல்... வாக்கு வங்கி அரசியலைக் கடந்து களத்தில் இறங்கி மாற்று அரசியல் செய்ய விரும்புகிறது. அவர்களுக்கு ஏற்றார் போலத்தான் இப்போது தமிழக அரசியல் களமும் இருக்கிறது. இப்பட…
-
- 0 replies
- 467 views
-
-
காப்பாற்ற போராடிய வனத்துறை... காயம் எப்போது ஏற்பட்டது..? பரிதாபமாக உயிரிழந்த யானை...
-
- 0 replies
- 430 views
-
-
படத்தின் காப்புரிமை A Pavendhan காமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது. யானை, புலி உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, பட்டாம்பூச்சிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக புதிதாக கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வை சேலம் மாவட்ட வனத்துறையோடு சேர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்படுத்திவருகின்றனர். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படும் கவனத்தில் பாதியளவு கூட கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். ஒடிஷாவில் தொடங்கி, ஆந்திர பிரதேசம், தமிழக…
-
- 0 replies
- 503 views
-
-
சென்னை: பாகிஸ்தானை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இரு முறை நீக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, இலங்கைக்கு எதிராக அதே நடவடிக்கையை எடுப்பதற்கு மட்டும் தயங்குவது ஏன்? பாகிஸ்தானுக்கு ஒரு நீதி.... இலங்கைக்கு ஒரு நீதியா? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 23ம் தேதி நான் தான் முதன்முதலில் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் மற்ற கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் …
-
- 0 replies
- 406 views
-
-
சென்னை: காமல்ன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து, தமிழர் இனபடுகொலைக்கு காரணமான இலங்கையை நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க மாணவர் அணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ம.தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை தாயகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்: 'நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் மாணவர்களிடையே மாவட்ட, மாநில அளவில் போட்டி நடத்துவது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் பரிசு மற்றும் விருதுகளை வைக்கோ மூலம் வழங்குவது. 18 வயது ஆகும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி…
-
- 1 reply
- 405 views
-
-
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..... http://www.puthiyathalaimurai.tv/
-
- 7 replies
- 808 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திமுகவும், ‘டெசோ’ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர். பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆ…
-
- 1 reply
- 286 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் இந்திய அரசு சார்பில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்போது சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் சுந்தரவதனம், ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்று மத்திய அரசு எடுத்த முடிவும், வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்…
-
- 0 replies
- 384 views
-
-
காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லக்கூடாது: பிரதமரிடம் வாசன் வலியுறுத்தல்! புதுடெல்லி: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று பிரதமரை நேரில் சந்தி்த்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 33க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. கனடா இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளது. இதனிடையே, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தியுள…
-
- 1 reply
- 393 views
-
-
1st November 2013 சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள காங்கிரஸ் உயர்மட்ட குழு அனுமதியளித்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தும், தமிழக சட்டமன்றத்திலே வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்ற முடிவை பார்க்கும்போது, 2011–ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவத…
-
- 1 reply
- 582 views
-
-
காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் நல்லக்கண்ணு ஆகியோர் வலியுறுத்தியுள்ளார்கள். காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி யினரும் ஒன் றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் பழ.நெடு மாறன் நல்லக்கண்ணு வலியுறுத்தி யுள்ளனர். பொதுக்கூட்டம் இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என வலியுறுத்தி விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் தமிழீழ விடு தலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்…
-
- 0 replies
- 478 views
-
-
சென்னை: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவை இன்று (12ஆம் தேதி) மாலை 6 மணிக்கு கூடியது. அப்போது, பேரவைத் தலைவர் ''அரசினர் தீர்மானம் ஒன்றை முதல்வர் கொண்டு வருவார்'' என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவர் உரைக்குப் பிறகு அரசினர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்ததில் உள்ள வாசகம் வருமாறு:- ''இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட பங்கேற்க கூடாது என்று இந்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், மத்திய அரசு அதை ஏற்காதது தமிழர்களுக்கு ஆழ…
-
- 3 replies
- 547 views
-
-
முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதி மறுத்ததாக வரும் செய்திகளை இளைய தலைமுறையினர் நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை என்ன என்று அப்போதைய காங்கிரஸ் செயலாளர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். இன்று இலங்கை பிரச்சினை, தமிழனப்பிரச்சினை முதல் அனைத்திலும் முன்னிற்கும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவர் என்பது இன்றைய இளம் தலைமுறை அறியாத ஒன்று. காமராஜர்பால் பற்றுக்கொண்டு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர் பழ.நெடுமாறன். இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார். …
-
- 3 replies
- 1.5k views
-