Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை… February 18, 2019 ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதனையடுத்து ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட்…

  2. போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறார் சசிகலா?! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் வசித்த போயஸ் கார்டன் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறாராம் சசிகலா. கடந்த 5-ம் தேதி இரவு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்த மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதி மற்றும் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, கட்சியை வழிநடத்தும் அதிமுகவின் அடுத்த பொது செயலாளர் யார் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. எதிர்பாரா திருப்பமாக கட்சியின் சீனியர் தலைவர்கள், சசிகலா பொது செயல…

  3. சசிகலாவை அதிரவைத்த ஆன்லைன் சர்வே முடிவு ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானதற்கும், முதல்வராகும் முடிவுக்கும் பொது மக்களிடையே கருத்துக் கணிப்பை சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆன்லைன் மூலம் நடத்தியது. இதன் முடிவு சசிகலாவுக்கு பாதகமாகவே வந்துள்ளதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செந்தில் ஆறுமுகம் கூறுகையில், "சசிகலா முதல்வராவதற்கும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானது தொடர்பாக கடந்த டிசம்பர் 28-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம். அதன்படி ஆன்-லைன் மூலம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பவர்களிடம் அவர்களின் வயது, மாவட்ட…

  4. சிக்கன்கடை சலாவூதீன்... உளவுத்துறை சொல்லிய ஒசாமா பின்லேடன் அனுதாபி இவர்தான்! #VikatanExclusive ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடனின் அனுதாபிகள் பங்கேற்றதாக மாநில உளவுப்பிரிவு போலீஸார், அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்தனர். பின்லேடன் படத்தை ஓட்டிய வாகனத்தில் சென்ற சிக்கன்கடை சலாவூதீன் அந்த ரிப்போர்ட் தவறு என்று தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஒற்றுமையுடனும், அறவழியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தால் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. சென்னையில் ஜல்லி…

  5. சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி! சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உறுதிசெய்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா மரணமடைந்துவிடவே, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு கடந்த மே மாதம்…

  6. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் 945 காளைகள் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மாடுப்பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 945 அதிகமான காளைகள் பங்கேற்றுள்ளன. இதில் கலந்துக்கொண்ட அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமரின் காளை பத்து நிமிட்ங்களுக்கு மேல் களத்தில் நின்று வென்றுள்ளது. …

  7. 2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழி தொடர்புடைய 2ஜி வழக்கில் தினசரி விசாரணை நடத்த சிபிஐ புதிய மனு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக, சிபிஐ தரப்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கு குறித்து தினசரி விசாரணை நடத்தக் கோரியுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செய்தியின்படி, 2ஜி அலைக்கறை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்…

  8. சசிகலா புஷ்பாவை இன்று கைது செய்ய போலீஸ் தீவிரம் தனது ஆதரவாளர்களுடன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக வந்த சசிகலா புஷ்பா | கோப்புப் படம்: எஸ்.ஜேம்ஸ் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது இவர்களது வீட்டில் பணி புரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற போலி வக்காலத்து நமுனா தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகவும், இதற்காக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிசியல்) கோ.புதூர் போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதன்பேரில் போலீஸார…

  9. கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம் இன்றும் தீவிரமாக நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல் முற்றுகை என பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் இன்றும் மாணவர் போராட்டம் பல இடங்களில் நடைபெற்றது.கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்‌ஷே படத்தை எரித்த மாணவிகள் அவர்களுக்கு ஆதரவாக சட்ட கல்லூரி மாணவிகள் ராஜபக்சேவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறால் அடித்தும் தீ வைத்து எரித்தனர்.அப்போது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கேர…

    • 1 reply
    • 1.1k views
  10. இதற்கு மேலும் பேசினால்..; கருணாநிதிக்கு வைகோ எச்சரிக்கை! கூட்டணி என்பதற்காக எல்லாவற்றுக்கும் உடன்பட்டு போக மாட்டோம். எங்கே உடன்பட வேண்டுமோ அங்கே மட்டும் உடன்படுவோம் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர். பச்சமுத்துவை ஆதரித்து வைகோ சனிக்கிழமை பெரம்பலூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: நடக்க விருக்கும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தமிழக வெற்றியின் அவசியமின்றியே பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார். ஆனால் 39 தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் நமக்கான நீதி கிடைக்கும். முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை, இலங்கையுடனான மீனவர் பிரச்சினை என பல்வேறு …

  11. பட மூலாதாரம்,JAGATHRATCHAGAN 3 மணி நேரங்களுக்கு முன்னர் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமாந ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்பட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறில் உள்ள வீடு, தியாகராய நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டல், ஆழ்வார்கள் ஆய்வு மையம், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி பல் மருத்துவமனை, ஆவடி அருகே பட்…

  12. பட மூலாதாரம், TN Forest Department படக்குறிப்பு, ரோலக்ஸ் யானை கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2025 கோவை அருகே 4 பேரைக் கொன்றதாகக் கருதப்படும் ரோலக்ஸ் என்ற ஆண் யானையை, 3 கும்கி யானைகளைக் கொண்டும், மயக்க ஊசி செலுத்தியும் பிடிப்பதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. ஆனால் கடந்த 7, 8 ஆண்டுகளில் இந்த யானையால் தாக்கப்பட்டு 8 பேருக்கும் மேல் இறந்திருப்பதாகக் கருதப்படுவதால் இதைப் பிடிக்கும் முயற்சியை வனத்துறை தீவிரமாக்கியுள்ளது. யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சியின் போது யானை தாக்கியதில் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த யானையால் உயிரிழப்பு…

  13. ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி: பிரதமர் மோடி பாராட்டு மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். அவரது எட்டாம் வகுப்பு படிக்கும் மகளான நேத்ரா, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து, மகளின் படிப்பு செலவுக்கு சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அவரது செயலை பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியது, தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நேத்ரா கூறினார். https://www.dailythanthi.com/News/State/2020/05/31172644/Madurai-girl-who-helped-poor-people--P…

  14. நல்லகண்ணு என்றொரு நல் மானுடன்! சாவித்திரி கண்ணன் முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பார்த்துப், பேசி, பழகி வருகிறேன்! அப்பவெல்லாம் கட்டுமஸ்தானாக இருப்பார் நல்லகண்ணு! பேச்சுல கிண்டல்,கேலி, எள்ளல் தெரித்து விழும்! அச்சு அசல் கிராமத்து வெள்ளந்தி குணம் நிறைந்திருக்கும்! அப்ப இவரைவிட ,பெரிய தியாகிகள்,வயது முதிர்ந்த போராளிகள் கட்சியில் இருந்த காலம்! கே.டி.கே.தங்கமணி, முருகேசன், எம்.வி.சுந்தரம், எம்.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயிருடன் இருந்தனர். அப்ப கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் தான் இவரை அதிகமாக பார்க்க முடியும்! அந்த காலத்தில் ஜனசக்தி பத்திரிகையின், …

  15. காங்கிரஸ் மேலிடம் மீது கடும் அதிருப்தியில் இருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், த.மா.கா., தலைவர் வாசனை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் பரவி உள்ளது. அதனால், த.மா.கா.,வில் அவர் சேரலாம் என்றும் வதந்திகள் உலாவரத் துவங்கி உள்ளன. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த பின், கட்சியில் பெரும் மாற்றம் ஏற்படும் என, சிதம்பரம் எதிர்பார்த்தார். அத்துடன், கட்சியின் தேசிய ஊடக பிரிவு தலைவர் அல்லது பொருளாளர் பதவி, தனக்கு கிடைக்கும் என நம்பினார். ஆனால், காங்., தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும், சிதம்பரத்திற்கும் பதவி கொடுக்க விரும்பவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த சிதம்பரம், தன் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும், தமிழக காங்கிரசில் முக்க…

  16. 16 AUG, 2023 | 11:50 AM சென்னை: விமான டிக்கெட் இல்லாமல் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமுலில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் விமானடிக்கெட் சிறப்பு அனுமதி பாஸ் எதுவும் இல்லாமல் விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து குடியுரிமை சோதனை நடக்கும்பகுதி வரை சென்று அங்கு சுற்றிக் கொண்டிருந்தார். இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றுள்ளார். இதையடுத்து அந்த இள…

  17. சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம் HemavandhanaUpdated: Wednesday, October 1, 2025, 12:03 [IST] திருவண்ணாமலை: போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்று காவல் துறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. அந்தவகையில், திருவண்ணாமலை சம்பவம் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.. அதுவும், வேலியே பயிரை மேய்வதும், வடமாநிலங்களை போலவே நம்முடைய தமிழ்நாட்டிலும் இத்தகைய பயங்கரங்கள் நடப்பதும், மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. நேற்று வி…

  18. பிணையில்... விடுதலையானார், பேரறிவாளன்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியிருந்தார். இதற்கமைய இன்று அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன்படி புழல் சிறையில் இருந்து வேலூர் மத்தியச் சிறைக்கு அழைத்து செல்லப்படும் பேரறிவாளன் அங்கிருந்து ஜோலார்போட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1218778

  19. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் இந்த உலகமே அறிந்தது. அப்பாவி மக்களை மேலும் தம் சொந்த நாட்டு மக்களை போர் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. இதை உணர்ந்த அனைத்து நாடுகளும் இலங்கையைக் கண்டித்து வரும் நிலையில் இந்தியா மட்டும் உறவை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். தமிழர்கள் மீது அக்கறை கொண்டு இந்தியா காமன்வெல்த் மாநாட்டு புறக்கணிப்பு முடிவை எடுப்பது, அங்கே வாழும் தமிழர்கள் மீது மேலும் கவனத்தையும், பாதுகாப்பையும் அதிகரிக்கும் என்பது உறுதி. எனவ…

  20. சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதாவின் செயலுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. அவரைப் பார்த்து உலகத் தமிழர்கள் காரித் துப்புவார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ன அவரது போயஸ் தோட்ட வீடு என்று நினைத்துக் கொண்டாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு…

  21. மறைந்த கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாடமி விருது; யூமா வாசுகிக்கு மொழிபெயர்ப்புக்கான விருது மறைந்த கவிஞர் இன்குலாப் எழுதிய 'காந்தள் நாட்கள்' கவிதைத் தொகுப்புக்காக 2017ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடெமி எனும் மத்திய அரசின் இலக்கிய அமைப்பு வருடந்தோறும் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2017ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் இன்குலாப் மறைந்து ஓராண்டு ஆனநிலையில் 'காந்தள் நாட்கள்' கவிதை நூலுக்…

  22. மனைவியுடன் குடியரசு தின விழாவை சிறப்பித்த முதல்வர் பன்னீர்செல்வம்! தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் மனைவியுடன் பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இதுவரை முதல்வரின் மனைவி பொது நிகழ்வில் பங்கற்றது இல்லை. முதன் முறையாக முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனைவி, பொது நிகழ்வில் கலந்து கொண்டது, அரசு ஊழியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிதியமைச்சராக இருந்த பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே பல பிரச்னைகள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தன. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாதான், முதல்வராக பொறுப்பேற்க வ…

  23. ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த வைகோவின் கோரிக்கையை நரேந்திரமோடி ஏற்றுக்கொண்டார். [sunday, 2014-02-09 11:24:58] தமிழக மீனவர்கள் பிரச்சினையில் வாஜ்பாய் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மோடியிடம் வைகோ கேட்டுக்கொண்டார். அதற்கு மோடி, "அப்படியே செய்வோம்" என்று ஏற்று கொண்டுள்ளார். வண்டலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு பின் நேற்று இரவு தனியார் ஹோட்டலில் நரேந்திர மோடியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது, காலையில் இம்பாலில் பேசிவிட்டு, பகலில் கெளஹாத்தியில் பேசிவிட்டு, மாலையில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் உணர்ச்சிமிக்க உரையாற்றுவது என்பது அனைவராலும் இயலாது. "இந்தியில் நீங்கள் உரையாற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.