Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எஸ்பிபிக்கு பத்ம விபூஷண் விருது! மின்னம்பலம் இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) மத்திய அரசு நேற்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது இதில் பத்ம விபூஷண் விருது, முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபே, மறைந்த பின்னணிப்பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏழு பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷணும், 102 பேருக்க…

  2. ஞானதேசிகனுக்கு எதிராக திருச்சியில் திரண்ட மாணவர்கள். பிரிவு: தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் திருச்சி, கரூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை திடீரென்று தனி ஈழத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்தினர். ஞானதேசிகன் திருச்சியை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர், பேனர்களை சேதப்படுத்தியவர்களை கைதுசெய்யக் கோரினர். இதில் இருதரப்புக்கும் வாக்க…

    • 0 replies
    • 637 views
  3. போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு இழப்பீட்டு தொகை செலுத்தப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு மேலும் அறிவித்துள்ளது. மேலும் போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான இழப்பீட்டு தொகையை செலுத்தியது தமிழக அரசு! ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பது தொடர்பில் நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன்படி சென்னை சிவில் நீதிமன்றத்தில் …

  4. அப்போலோவில் ரஜினிகாந்த் முதல்வரின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனை சென்றார். முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். ரஜினியுடன் அவரின் மகள் ஐஸ்வர்யாவும் உடன் வந்தார். உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல் வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து செல்கின்றனர். http://www.vikatan.com/news/tamilnadu/69772-rajinikanth-visits-apollo-to-check-regarding-jayalalithaas-health.art

  5. த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார் நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.இதற்கிடையே கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவி…

  6. புதுவையில் பெய்ட்டி புயலால் 10 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் December 18, 2018 புதுவை மாநிலம் ஏனாமில் ‘பெய்ட்டி’ புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் புயல் கரையை கடந்தபோது, 80 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததுடன் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதனால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பாடசாலைகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள் நிலையில் அவர்களுக்கு கல்வித்துறையின் மத…

  7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உடன் மதுரை மேற்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உ.வாசுகி | கோப்புப் படம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் 4 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்: 1. பெரம்பூர் …

  8. மரியாதையா பேசுங்கள்.. இல்லாட்டி காது சவ்வு கிழிந்துவிடும்.. ஸ்டாலினுக்கு முதல்வர் வார்னிங்! மரியாதை கொடுத்து பேசுங்கள். நான் திருப்பி பேசினால் உங்கள் காது சவ்வு கிழிந்து விடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்தார். திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒட்டன்சத்திரம் பகுதியில் வாக்குச் சேகரித்தார். அப்போது முதல்வர் பேசுகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூலிப்படை தலைவன் போன்று செயல்படுகிறார். தந்தையின் ஆதரவின் அடிப்படையில் அரசியலுக்கு கொல்லைப்புறமாக ஸ்டாலின் உள்ளே வந்தார்.ஆனால் நான் உழைத்து பதவிக்கு வந்தேன். சாதாரண தொண்டன் முதல்வரானால் அதை கேவலமாக பேசுவதா. மரியாதை…

  9. திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார். சென்னை: திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்காக, அங்குள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் பணிகளில், ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். 2ஆவது நாளாக நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தப் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். இதனால…

  10. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி விடுத்த மிரட்டலை, காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றாலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு தொடரும் வரை, அரசுக்கு ஆபத்தில்லை என்பதால், மிகுந்த நம்பிக்கையுடன், காங்., உள்ளது. போர் குற்றங்கள்: இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெ…

    • 0 replies
    • 637 views
  11. பீப் பாடல் விவகாரம்: கோவை போலீஸ் முன் ஜன.11ல் ஆஜராக சிம்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! பீப் பாடல் விவகாரத்தில், கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் நாளை ஆஜராவதற்கு பதிலாக, வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகர் சிம்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகளை ரத்துசெய்யக் கோரி நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் கோவைய…

  12. சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த, 11 அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. கட்டடம் இடிந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளிக்கப்பட்டும், மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டும் வருகிறது. சென்னை காவல்துறை, தீயணைப்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினை சே…

  13. மாஜி முதல்வர் சவுதாலா ஜாமீன் ரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு பாதிப்பா? டெல்லி: தலைப்பை படித்து பார்த்தால், மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டதைப்போலத்தான் தோன்றும். ஆனால், ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிகழ்வு, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுடனும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடனும் பெரிதும் பொருந்திப்போகிறது என்பதே உண்மை. பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு கடந்த 2003ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி சவுதாலா நீதிமன்றத்தில் ஜாமீன் …

  14. சிவகங்கை : நிலத்தடி நீர் பாதாளத்திற்கு செல்வதால் தமிழகம் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளையால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் 7 ஆண்டுகளில் 6 மீட்டர் குறைந்துள்ளது. மழை நீர் சேமிப்பு தீவிரப்படுத்தப்பட்டால் மட்டுமே 'டே ஜீரோ' அபாயத்தில் இருந்து தமிழகம் தப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.நிலத்தடி நீர்மட்டம் வற்றி தண்ணீருக்கு பெரும் பஞ்சம் நிலவுவதை 'டேஜீரோ' என்கின்றனர். தமிழகத்தில் சில ஆண்டுகளாக தொடர்ந்து மழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆறு, கண்மாய், ஓடைகளில் வரைமுறை இன்றி மணல் அள்ளப்பட்டதால் பொழியும் மழைநீர் கூட தேங்குவதில்லை. மழைநீர் சேமிப்பு கானல்நீராகி விட்டது. நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு செல்கிறது. தி…

    • 0 replies
    • 636 views
  15. இன்று இரவு சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார் முதல்வர் ஜெயலலிதா! சென்னை அப்போலோ மருத்துவமனையில் எம்டிசிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று இரவு 2-வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார். கடந்த 22-ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தாெடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் சேர்த்து 42-வது நாளாக முதல்வர் சிகிச்சை பெற்று வருகிறார். 2-வது தளத்தில் உள்ள எம்டிசிசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதல்வரின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2-…

  16. இயக்குனர் சேரனை எதிர்க்க எங்களை பயன்படுத்துகிறவர்களுக்கு. - வ,ஐ,ச,ஜெயபாலன் DIRECTOR CHERAN IS LONG STANDING SUPPORTER OF THE STRUGGLE OF THE EELAM TAMILS. THE MISUNDERSTANDING EXISTED AMOUNG US / BETWEEN EELAM TAMILS AND CHERAN IS NOW CLEARED BY HIS APOLOGY. இயக்குனர் சேரன் ஈழ மக்கள் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் நீண்டகாலாமாக உழைத்த தோழராவார். அவர் எங்கள் குடும்பம். அண்மையில் இயக்குனர் சேரன் ஏதோ கோபத்தில் வாய் தடுமாறி ஈழத் தமிழர் எங்கள் மனதை நோகவைக்கும் வார்த்தைகள் சில பேசிவிட்டார். அதை நாங்கள் குடும்ப உரிமையுடன் கண்டித்தோம். அதுபற்றி சேரன் வருத்தம் தெரிவித்து சகோதர சண்டை எப்பவோ முடிவடைந்து விட்டது. நாளை எங்களுக்குப் பிரச்சினையென்றால்…

    • 0 replies
    • 636 views
  17. படக்குறிப்பு,சிதம்பரம் நடராஜர் கோவிலில் சரஸ்வதி பண்டாரம் இருந்ததை உறுதிப்படுத்தும் கல்வெட்டு. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 25 நிமிடங்களுக்கு முன்னர் "நான் மறைந்த பிறகு என் உடல் மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம்; என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள்'' என்று புத்தகங்கள் மீதான தன் தீரா வேட்கையை வெளிப்படுத்தியவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. உலகில் புத்தகங்களுக்கு எத்தனை சிறப்பு இருக்கிறதோ, அத்தனை பெருமை கொண்டது நூலகங்கள். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல் மையங்களாகவும் நூலகங்கள் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு…

  18. சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை 50 ஆவது முறையாக இடிந்து விழுந்து, தனது அரை சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட்டு 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள, சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில், வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் 2 ஆவது தளத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சென்னை விமான நிலையம் கடந்த 2013 ஆம் ஆண்டு. சுமார் 2,300 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 50 முறை அதன் மேற்கூரை இடிந்து விழுந்து வெற்றிகரமாக தனது அரை சதத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-airport-roof-half-century-0th-tim…

  19. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் - ப.சிதம்பரம் இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை என இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி, சென்னையில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்திற்கு நேற்று (07) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும் போதே ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியபோது, காங்கிரஸ் கட்சி தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியில் இலங்கை தமி…

  20. செருகுடியில் உள்ள சிவலிங்கம் மற்றும் நந்தி. சண்டிகேசுவரர். சோழ மன்னர்கள் நிர்மாணித்த சிவாலயங்களில் சில மட்டுமே இன்னமும் வழிபடும் நிலையில் உள்ளன. பெரும்பான்மையான கோயில்கள் பிற்கால மன்னர்களின் படையெடுப்பு மற்றும் காலவெள்ள த் தில் கரைந்து போய் காணக் கிடைக்காமல் போய்விட்டன. எங்கேயோ எப்போதோ அக் கோயில்களின் சிதிலங்கள் வெளிப் பட்டு அதன் தொன்மைத் தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன. அப்படி ஒரு சிதிலம் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் கிடைத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தார். கும்பகோணம் வட்டத்தில் கோவிலாச்சேரிக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான செருகுடியில் ஒரு குளக்கரையின் ஓரம் சிவலிங்கம், நந்தி, சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகள் காணப்படுகின்…

    • 0 replies
    • 636 views
  21. நடைமுறைக்கு ஒவ்வாத தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் பிரதான திராவிட கட்சிகள் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு தொடக்கம் பெண் பிள்ளைகளுக்கான பலவித ஊக்குவிப்புகள் வரை பயனுறுதியுடைய சமூக நலன்புரி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிவந்திருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்வைத்திருக்கும் விஞ்ஞாபனங்கள் ஏமாற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன. இரு கட்சிகளுமே முன்னைய திட்டங்களை திரும்பத்திரும்ப கூறியிருக்கின்ற அதேவேளை, மத்திய அரசின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் பல முக்கியமான வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றன.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை…

  22. கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திமுகவின் அரசியலில் ஒரு மாத இடைவெளியில் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க முடிகிறது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டப் போவதாக சூளுரைத்த அந்தக்கட்சி, இப்போது சொந்த மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் பிசியாகியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? மாட்டாரா? என்று சந்தேகம் எழும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. அப்படி இந்த ஒரு மாத இடைவெளியில் என்ன நடந்தது? தேசிய அளவில் செயல்படப் புறப்பட்ட திமுக மீண்டும் சொந்த மாநிலமான தமிழ்நாட்டு அரசியலிலேயே ஒட்டுமொத்த கவ…

  23. பெங்களூர் சிறை வளாகம் முன்பு அதிமுகவினர் மோதிக் கொண்டது ஏன்? பெங்களூர் சிறை வளாகம் முன்பு அதிமுகவினர் மோதிக் கொண்டது தொடர்பாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம முன்பு சசிகலா ஆதரவாளர்களின் கார்கள் சில திடீரென தாக்கப்பட்டன. இதன் பரபரப்பு பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கோர்ட்டில் சரணைடந்தனர். இதற்காக சசிகலா உள்ளிட்டோர் கார் மூலமாக சென்னையிலிருந்து பெங்களூரு கிளம்பி வந்தனர். அவர்களுடன் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்தனர். சிறை வளாகம் வந்…

  24. எஸ்.வி.சேகரைக் கைதுசெய்ய தடையில்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி எஸ்.வி.சேகரைக் கைது செய்வதற்குத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தைத் தட்டினார். அதற்கு அந்தப் பெண் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்தச் சம்பவத்துக்கு ஆளுநர் மன்னிப்புக் கேட்ட நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் ஒட்டுமொத்தமாகச் செய்தியாளர்களைக் கொச்சைப்படுத்தும் பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. எஸ்.வி.சேகருக்கு எதிராகச் செய்தியாளர்கள் போராட்டம் நடத்தி…

  25. அன்பிற்குரிய தமிழக உறவுகளே, பாண்டிய மன்னன் சிவபெருமானுக்கு அடித்த அடி உலகிலுள்ள எல்லா உயிர்களின் முதுகிலும் வீழந்ததைப் போல சிங்களவன் எங்களுக்கு அடித்த அடி உங்கள் முதுகிலும் எத்தகைய காயங்களையும் வலிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாங்கள் இப்போதுதான் உணர்ந்துகொள்கிறோம். உங்கள் போராட்டங்களைப் பார்த்தே புரிந்துகொள்கிறோம். சிறிலங்காவின் சனத்தொகை தமிழ் மக்களையும் சேர்த்து வெறும் இரண்டு கோடி பத்து லட்சம். ஆனால் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையோ சிறிலங்காவின் ஒட்டுமொத்த சனத்தொகையை விட சில மடங்கு அதிகம். எனவே தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் சிறிலங்காவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துவிட்டனர் என்பதை நினைக்கும் போது சிங்களத்திற்கு சித்தம் கலங்குகிறது. செங்களத்தில் தமிழர் சேன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.