Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய ரஜினி!!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ப்ரபரப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று இமயமலைக்கு கிளம்பிய நடிகர் ரஜினிகாந்திடம் தமிழகத்தின் நிலை குறித்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லாமல் இப்பொழுது இந்த கேள்விகள் வேண்டாம் என்று நழுவியுள்ளார். மேலும் இமயமலை பயணம் ஒவ்வொரு வருடமும் செல்வதுதான் என்றும் படப்பிடிப்பில் பிசியாக இர…

  2. ரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட் T3 Lifeஜனவரி 4, 2018 கார்த்திக் ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போகிறார், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது அவர் விருப்பம். சீமான் சொல்வதைப்போல தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால், எடப்பாடி கூட தமிழன் தான், வைகுண்டராஜன் கூட தமிழன் தான், சின்னம்மா கூட தமிழச்சி தான் அந்த இனவாதத்திற்குள் இருந்து ரஜினியை எதிர்க்க முடியாது.காவிரி விடயத்தில் கர்நாடத்திடம் மன்னிப்பு கேட்டார் ரஜினி, அது அங்கு பிறந்ததால் அல்ல அவர் படம் அங்கும் ஓட வேண்டும் என்பதால் மட்டுமே. இங்கு இனவாதத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பண்ண முடியாது. அதன் அரசியல் செல்வாக்கு ஓரளவு தான். ரஜினி பேசிய இரண்டு விடயங்கள் இங்கு முக்கியம…

  3. நாங்கள் கிங் மேக்கர், விஜயகாந்த் கிங்- மநகூ தலைவர்கள் கலகல பேச்சு நாங்கள் கிங் மேக்கராக இருப்போம், விஜயகாந்த் கிங்காக இருப்பார் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேசினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், 2016 சட்டமன்ற தேர்தல் ஒரு அரசியல் போர். மக்கள் நலக்கூட்டணி-…

  4. தமிழ்நாட்டில் 'காப்பி பேஸ்ட்' செய்யப்படும் உடற்கூராய்வு அறிக்கைகள்? என்ன நடக்கிறது? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்த பிரேத பரிசோதனைகளில் குளறுபடி நடப்பதாகவும், வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் தற்போது புகார் எழுந்துள்ளது. குறிப்பாக 'காப்பி பேஸ்ட்' முறையில் பிரேத பரிசோதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று…

  5. அவசர கதியில் நடைபெறுகிறதா சென்னை சங்கமம் நிகழ்ச்சி? கலைஞர்கள் கூறுவது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHENNAI SANGAMAM/ YOUTUBE "கொரோனா காலத்தில் வருமானத்துக்கு கஷ்டப்பட்டோம். சில தன்னார்வ அமைப்புகள் எங்களுக்கு உதவின. ஒரு சிலர் பொருட்களை விற்று குடும்பம் நடத்தும் சூழல் ஏற்பட்டது. கொரோனா நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நிச்சயம் இது வரப்பிரசாதம்தான்,” என்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி குறித்துப் பேசுகிறார் மதுரை அலங்காநல்லூர் வேலு கலைக்குழுவின் ஒருங்கி…

  6. சென்னை: தேசிய அளவிலான 3வது அணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டால் அது குறித்து திமுக செயற்குழு, பொதுக்குழுவில் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இன்றைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை போல இந்தியா முழுவதும் நிறைவேற்றினால் அது இலங்கையிலே உள்ள இலங்கை தமிழர்களுக்கு பெரிதும் ஆதரவாக அமையும். ஏற்காடு…

  7. மகனுக்குத் திருமணம் – ரொபர்ட் பயஸ் பரோல் மனு தாக்கல் September 26, 2019 இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரொபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்தற்காக 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இலங்கை அகதியான தான், ராஜிவ் கொலை வழக்கில் 1991ல் முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், கைதுக்கு பின், தன் மனைவியும், மகனும் இலங்கை சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தற்போது நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் திருமண வயதை எட்டி விட்டதால், தந்தை என்ற முறையில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்து…

  8. தமிழகத்தின் புதிய ஆளுநர் இவர்தானா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கி வருகிறது. இதனிடையே, தற்போது தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பு குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநாராகத்தான் இருக்கிறார். வித்யாசாகர் ராவ் தலைமையில்தான் ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசின் வழிநடத்துதலின் பேரில் வித்யாசாகர் ராவ் தமிழக ஆட்சியில் முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளார். இந்த நிலையில் புதிய ஆளுநர் நியமனத்திற்கான முடிவுகள் எடு…

  9. ஜெயலலிதா, கருணாநிதி சுகயீனம் : அரசியல் வாரிசுகள் யார்? தமி­ழக அர­சி­யலில் அசைக்­க­மு­டி­யாத சக்­தி­க­ளாக தி.மு.க.தலைவர் மு.கரு­ணா­நி­தியும் அ.தி.மு.க பொதுச்­செ­ய­லாளர் ஜெய­ல­லி­தாவும் காணப்­ப­டு­கின்­றனர். இவர்­களை மைய­மாக வைத்தே தமி­ழக அர­சியல் நடை­பெற்று வரு­கின்­றது. இந்த நிலையில் இவர்கள் இரு­வரும் சுக­யீ­ன­முற்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­பது தமி­ழக மக்­க­ளி­டையே பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தமி­ழக முதல்­வரும் அ.தி.மு.க பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான ஜெய­ல­லிதா இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாக சென்னை அப்­பல்லோ வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­பெற்று வரு­கின்றார். அவர் பூரண குண­ம­டைந்து எப்­போது திரு…

  10. செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த செந்தில் வேண்டுகோள் Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 11:28 AM செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உ…

  11. துறைமுகம் தொகுதியில் சீமான் கட்சி விண்ணப்பம் நிராகரிப்பு சென்னை துறைமுகம் தொகுதியில் முகமது கடாபி என்னும் வேட்பாளர் விண்ணப்பம் நிராகரிக்கப்படு விட்டது. ஆயினும், கடந்த பாராளுமன்ற தேர்தலில், உதகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், கிடைத்த அனுபவம் மூலம், இரண்டாவது ஆள் ஒருவரை நியமிப்பதும், முதலாவது விண்ணப்பம், ஏற்றுக் கொள்ள பட்டவுடன், இரண்டாவது விலக்கிக் கொள்வது என்ற சிறு தந்திரம் மூலம், கடாபிக்கு பதிலாக, வேறு ஒருவர் துறைமுகம் தொகுதியில், சீமான் கட்சி சார்பில் போட்டி இடுகிறார். அவரது விண்ணப்பத்துடன், சீமான் கட்சி 234 விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • 2 replies
    • 601 views
  12. திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் வேட்டையாடப்படுவது என்பது நின்றபாடில்லை! தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலும் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஏன் ஒருசில நேரங்களில் மத்திய அரசு இதைப் பற்றி இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதிலும், இலங்கைக் கடற்படை அதைக் காதிலே போட்டுக் கொள்வதே இல்லை. ஆண்டுதோறும் கடலில் மீன் இனப் பெருக்கத்துக்காக 45 நாட்கள் மீன் பிடிக்க விசைப் படகுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கி, கடந்த 1ந்தேதி முதல் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லத் தொடங்கினர். பொதுவாக விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் விட்டு ஒரு நாள்தா…

  13. கல்லெறிந்த அமைச்சர்; 'கற்கால திமுக' என அதிமுக விமர்சனம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நாற்காலியைக் கொண்டுவர நேரமானதால், நாற்காலி கொண்டுவருபவரை நோக்கி பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் கல்லெறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். மொழிப் போர் தியாகிகளை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. கூட்டங்களை நடத்திவருகிறது. இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார். 'இது ஓர் அவசரநிலை' - காங்கிரஸுக்…

  14. எதிர்க்கருத்து சொல்வதே தேச துரோகம்! H.Raja ஆவேசம்

  15. தமிழகத்தில் அண்மைய நாட்களில் இடம்பெறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவாதி, வினுப்பிரியாவை தொடர்ந்து சேலம், தெலுங்கனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காணமல் போன குறித்த சிறுமி, அயல் வீட்டில் மூடி வைக்கப்பட்ட சமயல் பாத்திரம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் அதேபகுதியினை சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது பொலிஸாரையே அதிர வைக்கும் சில தகவல்களை சந்தேகநபர் கூறிய…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 10 அக்டோபர் 2023 வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான பதின்பருவ மாணவர் ஒருவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அந்த மாணவர், நான்கு நாட்கள் தொடர்ந்து விளையாடியதால், அந்த விளையாட்டில் உள்ள சக்தி பொருந்திய ஒரு நபராக தன்னை நினைத்து செயல்பட்ட போது, அவரது நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து, அவரது தாயார் அவரை மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக, அம்புலன்ஸஸில் சென்னை கொண்டுவரப்பட்ட நே…

  17. பிரகாஸ்ராஜை கொல்ல திட்டம்? கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேசை படுகொலை செய்த நபர்கள் நடிகர் பிரகாஸ்ராஜ் உட்பட மேலும் 35 பேரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கவுரிலங்கேஸ் பெங்களுரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கேல் என்ற நபரிடமிருந்து டயறியொன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த டயரி மூலம் பிரகாஸ்ராஜ் உட்பட 35 பேரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது. இதற்காக இந்து மதத்துடன் தீவிர ஆர்வம் கொண்டுள்ள 50 பேரை பயன்படுத்த திட்டமிடப்பட்டமையும் டயரி மூல…

  18. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு 25 ஆண்டுகால சிறை வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள். இவர்களின் விடுதலையை எதிர்நோக்கி நடக்கும் கோரிக்கை பேரணி அரசியல் கலப்பு இல்லாமல் அதிர வைக்கிறது. விசாரித்துவிட்டுக் காலையில் அனுப்பி விடுகிறோம் என்று சொல்லித்தான், கடந்த 1991-ம் ஆண்டு ஜுன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளனை போலீஸார் அழைத்துச் சென்றார்கள். அன்றிலிருந்து இன்று வரையில் பேரறிவாளனுக்கு விடியவே இல்லை. இத்தனை ஆண்டுகால சிறைவாசத்தில் ஒருநாள் கூட பேரறிவாளன் பரோலில் வெளிவரவில்லை. இவருடன் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களும் சிறையில் …

  19. திமுக, அதிமுகவுக்கு அடுத்து... வியூகம் வகுக்கும் பாஜக! மின்னம்பலம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6.47 சதவிகித வாக்குகளையும், 2019 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக 12.7 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட அதிகமான வாக்கு சதவிகிதத்தை பாஜக பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தில் களமிறங்கியுள்ளன. 2017இல் தங்களது பணியைத் தொடங்கிய இந்த அமைப்புகள் குக்கிராமங்கள் முதல் மாநகராட்சி வரையில் பரவலாக காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. …

  20. விலையில்லா மிதிவண்டி: `டோக்கனில் மாணவிகள் பெயரோடு சாதிப் பிரிவு!’ - மயிலாடுதுறையில் சர்ச்சை ஹரீஷ் ம சர்ச்சை மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவிலில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்குத் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட அரசின் விலையில்லா மிதிவண்டிகளில், சாதிவாரியாக டோக்கன் வைக்கப்பட்ட சம்பவம் மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, சர்ச்சையாகியிருக்கிறது. பள்ளியில் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வின்றி, சமத்துவம் நிலைக…

  21. இன்று 23.04.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.) தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஆவணங்களோ, ஆதாரங்களோ தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த், ஒருநபர் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரச…

  22. 15 OCT, 2023 | 03:02 PM சென்னை: "ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சிங்களக் கடற்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் கைது செய்திருக்கின…

  23. டெல்டா விவசாயிகளை சாகடிக்கும் ‘கூஜா’ அரசு . ஒரு பெரும் பேரழிவை டெல்டா மாவட்டங்கள் சந்தித்திருக்கின்றன. கஜா புயல் ஈவு இரக்கமற்று தன் கோரத் தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது. டெல்டா விவசாயிகள் வரலாற்றின் இருண்ட காலத்திற்குள் தூக்கி எறியப்பட்டிருக்கின்றார்கள். குடிக்க தண்ணீர், உண்ண உணவு, உடுக்க ஆடை என எதுவுமே இல்லாமல் உள்நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். பார்த்துப் பார்த்து வளர்த்த தென்னையும், வாழையும், பலாவும் கஜாவால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, உயிரற்ற உடல்களாக வீழ்ந்து கிடக்கின்றன. இனி உயிர் பிழைத்து இந்த உலகில் வாழ்வதற்கு என்ன வழி இருக்கின்றது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்கள் ஊருக்கே உணவளித்து காத்த விவசாய மக்கள். ஆனாலும் என…

  24. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விடம், தே.மு.தி.க., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பேரம் நடத்தி வருவதாக பரவியிருக்கும் செய்தி, அக்கட்சி தலைமையை, கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தே.மு.தி.க., தலைமையால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதலே, சில தொகுதிகளில் பிரச்னை எழுந்தது. நாமக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாநில மாணவரணி செயலர் மகேஸ்வரன், போட்டியில் இருந்து விலகி, பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கடலூர் தொகுதிக்கு பேராசிரியர் ராமானுஜம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் செலவுக்கு நிதி ஆதாரம் இல்லாததால், அவரை மாற்றி விட்டு ஜெயசங்கரை வேட்பாளராக விஜயகாந்த் அறிவித்தார். திருநெல்வேலி தொகுதிக்கு தமிழகத்தில் ஆள் கிடைக்காதத…

    • 0 replies
    • 600 views
  25. 7 பேர் விடுதலை... வைகோ மெளனம்..! - மதுரை சிறையில் நடந்தது என்ன? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கான வாகனப் பேரணி, நாளை மறுநாள் வேலூரில் இருந்து சென்னையை நோக்கி நடைபெற உள்ளது. 'இந்தப் பேரணியில் பங்கேற்பது குறித்து வைகோ இதுவரை வாய் திறக்கவில்லை. அவரது கோரிக்கைக்கு நாங்கள் செவிசாய்க்க மறுத்ததுதான் காரணம்' என்கின்றனர் பேரணி அமைப்பாளர்கள். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் ஏழு பேரின் விடுதலைக்காக, தமிழக அரசின் அனுமதியோடு, வாகனப் பேரணி ஒன்று வேலூரில் இருந்து கிளம்ப இருக்கிறது. 'பேரறிவாளன் உள்பட சிறையில் இருக்கும் ஏழு பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்' …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.