Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெயர் பலகை "தமிழில்" தான் இருக்க வேண்டும்..? "இங்கிலிஷ்" கீழே தூக்கி போடுங்க..! தமிழக அரசு அதிரடி! பெயர் பலகை "தமிழில்" தான் இருக்க வேண்டும்..? "இங்கிலிஷ்" கீழே தூக்கி போடுங்க..! தமிழக அரசு அதிரடி! கடைகள் நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடைகள் மற்றும் நிறுவனங்கள் வைக்கும் பெயர் பலகையில் முதல் எழுத்துக்கள் தமிழில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு அடுத்த படியாக ஆங்கிலமும் அதற்கு அடுத்தபடியாக மற்ற மொழிகளையும் வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாவிட்டால் அந்த நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலார் ஆணையம் தெரிவித்து உள்ள…

  2. சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினை காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த வாரம் நடந்த ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந் நிலையில் ‘சென்னையில் நடைபெறுவதாக இருந்த ‘பிளே–ஆஃப்’ சுற்று போட்டிகளை டெல்லியில் நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசனுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு இந்த மாறுதல் முடிவு எடுக்கப்பட்டதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா டெல்லியில் …

  3. சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக நடராசனுக்கு உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக…

  4. நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள் ஏ எம் சுதாகர் பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மாணவர் தனுஷுக்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி பதாகை நீட் தேர்வில் இரு முறை தோல்வியை கண்ட மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நேற்று (12-09-2021) நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்தாக காவல்துறை தெரிவிக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் அடுத்த கூலையூரைச் சேர்ந்த பி.வி.சி பைப் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஆபரேட்டர் சிவகுமார் இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு நிஷாந…

  5. தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு- கருத்துகணிப்பு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக்கணி;ப்பொன்று தெரிவித்துள்ளது தமிழ்நாட்டை சேர்ந்து; பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளது என பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தெரிவித்துள்ளது அதிமுகவிற்கு 3 முதல் ஐந்து ஆசனங்கள் வரை கிடைக்கலாம் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தெரிவித்துள்ளது. இதேவேளை சட்டமன்ற தொகுதிகளிற்கான இடைத்தேர்தலில் திமுகவிற்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளது எனவும் கருத்துக்கணிப்பின் மூலம் த…

  6. நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 1 #Neutrino 1930 ம் ஆண்டு. சுவிட்சர்லாந்த் நாட்டின் ஜூரிச் நகரத்தைவிட்டு சற்று தூரத்தில் அமைந்திருந்தது அந்த ஆய்வுக் கூடம். வெளியில் பனி பொழிந்துக் கொண்டிருந்தது. கடுமையான குளிர். ஆனால், ஆய்வுக் கூடத்தின் உள்ளே சற்று கதகதப்பாகத் தான் இருந்தது. ஆய்வுக் கூடம் பெரிதாக இருந்தாலும், அங்கு ஒருவர் மட்டுமே இருந்தார். அவருக்கு வயது முப்பதிருக்கலாம். முன் தலையில் சின்ன வழுக்கை இருந்தது. முடியை அழுத்தி பின்புறமாக படியும் வகையில் வாரியிருந்தார். கம்பளித் துணியால் ஆன, கால்வரை நீண்டிருந்த கருப்பு நிற கோட்டை அணிந்திருந்தார். அங்கிருந்த ஒரு டேபிளில், மஞ்சள் நிறத்திலான ஒரு அட்டையைப் படித்துக் கொண்டிருந்தார்.…

  7. ''நான் நலமாக இருக்கிறேன்.. எந்தக் கட்சியிலும் இல்லை!'' - மெரினா வைரல் பெண் (Video) ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற போது, பரவலாக கவனம் ஈர்த்தார் ஒரு பெண். ’தடை செய்... தடை செய்... பீட்டாவை தடை செய்’ என உணர்வும் குறும்புமாக இவர் பேசிய வீடியோக்கள் சகல தளங்களிலும் பரவியது. ஆனால், முதல் நாள் ஆச்சரிய லைக்ஸ் குவித்தவர் குறித்து, மறுநாள் கட்சி சார்பானவர் என சர்ச்சை கிளம்பியது. ’போராட்டத்தில் ஏன் அரசியல் தலைவர்களை விமர்சிக்கிறாய்..? 'உனக்கு ஏன் தேவையில்லாத வேலை? உடனடியாக மன்னிப்பு கேள்’ என்றும் மிரட்டல்கள் வந்ததாம். பத்தாததுக்கு, எதிர்தரப்பு கட்சிகள் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவர் அனுமத…

  8. மிஸ்டர் கழுகு: உட்கட்சி விவகாரம் என்று நான் சொல்லவே இல்லை! தினகரனிடம் பல்டி அடித்த கவர்னர் இரண்டு நாள்கள் இரவு பகலாக தினகரனின் பெசன்ட் நகர் வீட்டை வட்டமடித்த கழுகார், தூக்கமில்லாமல் சிவந்த கண்களுடன் அலுவலகம் வந்தார். திடீரென போனில் அழைப்பு வர, ‘‘ஒரு மணி நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய கழுகார், சொன்னதுபோலவே வந்தார். ‘‘ஒன்றுமில்லை... கவர்னரை தினகரன் சந்தித்த நேரத்தில் கிண்டி கவர்னர் மாளிகையை வட்டமடித்துவிட்டு வந்தேன்’’ என்றார். ‘‘தினகரனின் ஆட்டம் வேகம் பிடித்துள்ளதே?” ‘‘கடந்த வாரம் முழுவதும் தினகரன் தீவிர ஆலோசனையில் இருந்தார். தனக்கு நெருக்கமானவர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்து பல விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.…

  9. தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி! தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக தலைவர்களிடமிருந்து பல கடிதங்களைப் பெற்றாலும், அவர்களில் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை என்றும், அவர்கள் தங்கள் மொழியைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுவார்கள் என்றால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறினார். ராம நவமியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்…

  10. சசிகலா `புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்’ - சசிகலா தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சசிகலா, தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். நம்முடைய பொது…

  11. கோவை : நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து, தான் முதல்வரானால் மாநில தலைநகரை மாற்றுவது உள்ளிட்ட பல மாற்றங்களை தமிழகத்தில் கொண்டுவருவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசினார். கோவையில் பிரசாரம் செய்துவரும் சீமான் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது, "நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. ஓட்டு கேட்டு வரவில்லை. 4 ஆண்டுகள் படித்தோம். இப்போது தேர்வுக்கு நிற்கிறோம். நாங்கள் ஓட்டு கேட்டு வரலை. எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையை கேட்டு வருகிறோம். நாங்கள் குறை கேட்க வரவில்லை. குறை தீர்க்க வந்திருக்கிறோம். பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டு, இப்போது என்ன பிரச்னை என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். இவ்வளவு நாள…

  12. நேர்மையாளர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை – கமல்ஹாசன் ஆவேசம் நீங்கள் யாரை, எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்களின் அடுத்த தலைமுறை கவனித்துக் கொண்டிருக்கிறது என கமல்ஹாசன் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் வியூகத்தை மாற்றி நோட்டீஸ் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். பின்னர் சில இடங்களுக்கு நடந்தே சென்று வாக்குகளை சேகரித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கின்றன. இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர…

  13. New How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi? கொழும்பு : இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முதல் பக்கத்தில் வாசகர் கடிதம் பகுதியில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் தலைப்பிட்டு புகைப்படத்துடன் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அண்டை நாட்டின் தலைவரை இவ்வளவு மோசமாக சித்தரித்து, மற்றொரு நாடு, தன்னுடைய அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இவ்வாறு வெளியிட்டிருப்பது, சர்வதேச நெறிமுறைகளுக்குப் புறம்பானது. இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்துவோம் என்று தற்போதைய மத்திய அரசும் கூறி வரும் சூழ்நிலையில், நமது நாட்டுத் தலைவர்களை இப்படி மோசமாக இலங்கை அரசின் இணையதளம் விமர்சித்திருப்பது அதிர்ச்ச…

  14. இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு தன்னை அழைக்காதது குறித்த கேள்விக்கு, அவர்கள் யார் என்னை அழைப்பதற்கு என சாட்டையடி பதில் தந்துள்ளார் திமுக தலைவரும் திரையுலகின் மூத்த எழுத்தாளருமான கருணாநிதி. தமிழ் சினிமாவில் தன் வசனங்களால் பெரும் மாறுதல்களை உண்டாக்கியவர் என்ற பெருமை மு கருணாநிதிக்கு உண்டு. ஒரு படத்தின் ஹீரோவுக்கு நிகராகப் பேசப்பட்டவை அவரது நெத்தியடி வசனங்கள். தமிழ் சினிமாவில் கதை வசன ரெக்கார்டுகள் ஏராளமாய் விற்க ஆரம்பித்ததே இவர் காலத்தில்தான் என்ற உண்மையை பலர் வசதியாக மறந்துவிட்டனர்.தன் 20 வயதில் ராஜகுமாரி படத்துக்காக முதல் முதலில் வசனம் எழுதினார் கருணாநிதி. அதில் நாயகன் புரட்சி நடிகர் எம்ஜிஆர். தொடர்ந்து எம்ஜிஆர் படங்களுக்கு அவர்தான் ஆஸ்தான வசனகர்த்தா எ…

  15. சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா... ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா! ப.திருமாவேலன் - ஓவியம்: ஹாசிப்கான் வடக்கு நோக்கி வணங்கத் தோன்றுகிறது. தெற்கைக் காப்பாற்றியிருக்கிறது வடக்கு. நேர்மையற்ற மனிதர்கள் எந்தத் திசையில் இருந்தாலும், நீதியின் சுத்தியல் உச்சந்தலையில் நச்சென இறங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் நிரூபித்துள்ளது. ‘மை லாட்’ என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தம் உள்ளது என்பதை, பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகிய இருவரும் மெய்ப்பித்துள்ளார்கள். ‘வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால், கவலை தரக்கூடிய தகவல்களை இங்கு மேடையேற்ற வேண்டியிருக்கிறது’ என்ற தீர்ப்பின் சொற்களுக்குள், தமிழ்நாட்டின் கால் நூற்றாண்டுகால அசிங்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன்…

  16. தமிழக மக்கள் செய்யும் டாப் 5 வீண் செலவுகள்! ஒஹோ என்றிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் சில வருடங்களுக்குமுன் சடசடவென சரிந்தபோது, அதற்கு முக்கிய காரணமாக நிபுணர்கள் சுட்டிக் காட்டியது அந்நாட்டு மக்களின் ஊதாரித்தனத்தைத்தான். கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி வாங்கிக் குவித்ததால் வந்த அவல நிலை இது என்றார்கள். வீண்செலவுகள் ஒரு நாட்டை எப்படி பதம் பார்த்து விடுகிறது என்பதற்கு வாழும் உதாரணமாகிப் போனது அமெரிக்கா. இப்போது இந்தியா விலும் அந்த மனப்போக்கு குடியேறி வருவதாக எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் விஷயம் தெரிந்த நிபுணர்கள். நம் கண்முன்னே நடப்பதைப் பார்த்தால் அது உண்மைதானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்…

    • 0 replies
    • 2.2k views
  17. கடலூர்: இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இன்று பகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியபடியே தமது உடலுக்கு தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப் பற்றி எரிந்த நிலையில் அங…

  18. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..! 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில்தான் குறைந்த அளவிலான பேர் தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் இந்த தேர்வு முடிவடைந்தது. மக்களவை தேர்தல் காரணமாக இந்த தேர்வு வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் பேரும் மாணவிகள் 97 சதவீதம் பேரும் தேர்ச்சி…

  19. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா? Aug 20, 2024 10:54AM வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், தற்போது அக்கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்ற சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி என்று ரசிகர்களால் அழைக்கக்கூடிய பிரபல நடிகர் விஜய் தனது நற்பணி மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதிகாரப்பூர்வமாக ’தமிழக வெற்றிக் கழகம் கட்சி’ பெயரை கடந்த பிப்ரவரியில் அறிவித்தார். கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. மாநாட்டுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திர…

  20. திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி ‘‘நான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும்? இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். நாம் நமக்கான வழியைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்’’ என மன்னார் குடியில் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் மத்தியில் கர்ஜனை செய்திருக்கிறார் திவாகரன். விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில் திவாகரன் இருப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள். இதன் பின்னணி யில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால், பரபரக்கத் தொடங்கியுள்ளது மன்னார்குடி வட்டாரம். …

  21. ``கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்`` - சத்யராஜ் தன்னுடைய வார்த்தைகள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தமிழ் நாட்டின் திரை நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமை facebook ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, நடிகர் சத்யராஜ் பேசியபோது சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனங்களை புண்படுத்தின என்பதால், அவர் மன்னிப்பு கேட்கும்வரை சத்யராஜூம் நடித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக …

  22. தி.மு.க. தலைவராக இன்று 50-வது ஆண்டில் கருணாநிதி... 1969-ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது? `கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்துதான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து விட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது.' ``என்னுடைய 44 வயது பிறந்தநாளைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன். அந்தப் பிறந்தநாள் விழாவில் அண்ணாவின் பேச்சுதான் எனக்குச் சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது. 'தண்டவாளாத்தில் தலைவைத்துப் படு என்று சொன்னாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும், இரண்டையும் ஒன்றாக, சமமாக கருதுபவன் கருணாநிதி' …

  23. மிஸ்டர் கழுகு: இணைப்பு முடிந்தது! கவிழ்ப்பு ஆரம்பம்! கழுகார் முகத்தைப் பார்த்ததும், ‘‘ஒருவழியாக ஒன்று சேர்ந்து விட்டார்களே?” என்றோம். ‘‘ஆம்... இணைப்பு முடிந்தது! அடுத்து கவிழ்ப்பு வேலைகள் ஆரம்பம்” என்றார் கழுகார். ‘‘அதற்குள்ளாகவே கவிழ்ப்பா?” ‘‘ஒன்று சேர்ந்தது எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தானே? தினகரன் இன்னமும் உறுமிக்கொண்டுதானே இருக்கிறார்! ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில் அவருடைய ஆதரவாளர்கள் இறங்கிவிட்டார்களே...” என்று பீடிகை போட்டவரிடம் வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம். ‘‘ஆறு மாதங்களுக்கும் மேலான தர்மயுத்தம் ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது எப்படி?’’ ‘‘தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களிடமும் மக்களிடமும் நியாயம் கேட்டதைவிட, டெ…

  24. தமிழ் கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் அதிரடிப் பேச்சு குடியுரிமை சட்டதிருத்ததிற்க்கு எதிராக இடம்: மேலப்பாளையம் ஜின்னா திடல் நாள்: 29.12.2019

    • 8 replies
    • 2.2k views
  25. மிஸ்டர் கழுகு: 2018- இனி அரசியல் இருவர் கையில்! பிரமாண்டமான கழுகு ப்ளோ-அப் அச்சிட்ட காலண்டருடன் உள்ளே நுழைந்தார் கழுகார். கைகுலுக்கி, ‘‘உமக்கும் ஜூ.வி வாசகர்களுக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்’’ என்றார். அவர் முன்கூட்டியே சொல்லியிருந்த தலைப்பை வைத்து டிசைன் செய்திருந்த ஜூ.வி அட்டையைக் காண்பித்தோம். ‘‘ஸ்டாலினுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் முக்கியமான ஆண்டாக புத்தாண்டு இருக்கப்போகிறது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல்நலமின்றி வீட்டுக்குள் இருப்பது போன்ற காரணங்களால், தமிழக அரசியல் 2017-ல் வித்தியாசமாக இருந்தது. இதுவரை அரசியல் பேசாத பலரும் அரசியல் பேசினார்கள். திடீர் தலைவர்கள் உருவானார்கள். ஆனால், 2018-ல் பழையபடி இருதுருவ அரசியலுக்குத் தமி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.