தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10261 topics in this forum
-
தொகுதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு எதிராக மதிமுகவில் கலகக்குரல்: கிருஷ்ணகிரி மா.செ.மாதையன் ராஜினாமா ! கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மாதையன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.சட்டசபை தேர்தலை மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்துடன் சந்திப்போம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகோ அறிவித்ததார். இந்த அறிவிப்பு அந்த கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மதிமுகவின் மாநில பொருளாளராக இருந்த மாசிலா மணி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்டச் செயலாளர் கு.சீ.வெ. தாமரைக் கண்ணன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட மு…
-
- 0 replies
- 411 views
-
-
தொகுதி மாறிய விஜயகாந்த் - உளுந்தூர்பேட்டையில் களம் இறங்குகிறார்! தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுவரை 5 கட்டமாக வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. இன்று 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. அதன் விவரம்: 1) உளுந்தூர்பேட்டை - விஜயகாந்த் 2) சங்கராபுரம் - கோவிந்தன் 3) உடும…
-
- 0 replies
- 741 views
-
-
தொழில் பெற்றுத் தருவதாக கூறி வெளிநாடு சென்ற தமிழர்களின் அவலம் நோர்வேயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி தமிழர்கள் 54 பேரிடம் தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் மொத்தம் ஒருகோடியே 62 இலட்சம் ரூபாவை பெற்று அவர்களை மோசடிக்காரர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இராமநாதபுரம், சிவகங்கை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 54 பேருக்கு நோர்வே நாட்டில் இராணுவத்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, விழுப்புரத்தைச் சேர்ந்த ஹரி, நாகர் கோயிலைச் சேர்ந்த முனியசாமி ஆகியோர் அவர்களிடம் தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் 1 கோடியே 62 இலட்சம் ரூபா வாங்கியுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட இவர்கள் குறித்த 54 பேரையும் நோர்வேக்கு அனுப்பி வைக…
-
- 1 reply
- 1k views
-
-
தே.மு.தி.க விஷயத்தில் ஜெயலலிதா செய்வது சரியா? ஒரு மாநிலத்தின் முதல்வரை எதிர்கட்சியினர் தன் தொகுதி நலனுக்காகவும், தனக்கு வாக்களித்த மக்களின் மேம்பாட்டிற்காகவும் சந்திப்பது சகஜம்தான். ஆனால், அது இப்போதல்ல..... முன்பு, அதாவது அரசியல் ஓரளவு நாகரீகமாக நடந்துகொண்டிருந்த கால கட்டத்தில். ஆனால் இப்போது அப்படி சந்திப்பது என்பது தீண்டத்தகாத காரியம் போல் ஆகிவிட்டது தமிழகத்தில். ஆளுங்கட்சியினரை இப்போது ஒரு எதிர்கட்சி எம்.எல்.ஏ.,சந்தித்தாலே ஆச்சர்யமாக பார்க்கப்படும் கால கட்டத்தில், இதுவரை எதிர்கட்சியான தே.மு.தி.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி வளர்ச்சி(?) பற்றி பேசியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்ச…
-
- 1 reply
- 618 views
-
-
தே.மு.தி.க. தலைமையில் கூட்டணி?: விஜயகாந்த் அறிவிப்பார் என்கிறார் பிரேமலதா! காஞ்சிபுரம்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதையும், அந்தக் கூட்டணி தே.மு.தி.க. தலைமையில் இருக்குமா என்பதையும் கட்சித் தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமத்தில், தே.மு.தி.க. மாநில மாநாடு, வருகின்ற 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தே.மு.தி.க.வின் தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்டணி குறித்த அறிவிப்பை மாநாட்டின்போதோ, மாநாடு முடிந்த ஒரு வா…
-
- 0 replies
- 721 views
-
-
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் மற்றும் பெண்ணாடம் நகர தே.மு.தி.க. சார்பில் பெண்ணாடத்தில் தே.மு.தி.க. கட்சியின் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:– எம்.ஜி.ஆர். விசுவாசிகள் யாரும் இன்று அ.தி.மு.க.வில் இல்லை. தே.மு.தி.க.வால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தே.மு.தி.க. போட்டியிட்ட ஒரு தொகுதியில்கூட ஜெயலலிதா பிரசாரம் செய்ய வரவில்லை. ஆனால் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. மின் பிரச்சனை, காவேரி நீர் பிரச்சனை எதுவும் தீர்வு காணப்படவில்லை. தே.மு.தி.க. தெரியாதனமாக அ.தி.மு.க.விடம…
-
- 0 replies
- 409 views
-
-
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள்! -விஜயகாந்துக்கு மா.செ.கள் உருக்க கடிதம் சென்னை: உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் என்று 14 தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன், கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டனர் என அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.,…
-
- 3 replies
- 519 views
-
-
தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைவதில் இழுபறி ஏதும் இல்லை: கருணாநிதி தமிழக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைவதில் இழுபறி ஏதும் இல்லையென தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். தி.மு.க. - தே.மு.தி.க கூட்டணி நிச்சயம் அமையுமென கருணாநிதி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் (கோப்புப் படம்). சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி முடிவாகிவிட்டதா என்று கேட்டபோது, பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று தெரியவில்லையெனக் கூறினார். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கண்டிப்பாக சேரும் என்று நம்புவதாகவும் கருணாநிதி தெரிவித்தார். வேறு எந்தக் கட்சிக்கும் தி.மு.க. கூட்டணியில் சேர்வதற…
-
- 1 reply
- 438 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். மதிமுகவுடனான தொகுதி பங்கீட்டிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறாக கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகளும், இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1 தொகுதியும், கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு 1 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 311 views
-
-
தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதும், முதலிடத்தில் இருந்த கேரளா 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்தது. கணக்கெடுப்பு முடிவுகள் வருமாறு:-தமிழ்நாட்டில் 465.11 ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடக்கிறது. இதில் ஹெக்டேருக்கு 14,873 தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 33.84 சதவீதம் ஆகும். கர்நாடகத்தில் ஹெக்டேருக்கு 9,982 தேங்காய்கள் வீதம் 515.03 ஹெக்டேரிலும் (25.15 சதவீதம்), கேரளாவில் ஹெக்டேருக்கு 7,535 தேங்காய்கள் வீதம் 649.85 ஹெக்டேரிலும் (23.96 சதவீதம்) தென்னை சாகுபடி நடக்கிறது.இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு…
-
- 0 replies
- 782 views
-
-
தேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்.! சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோரின் டிவிட்டர் அக்கவுண்ட்டை டேக் செய்து, ட்வீட் வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்ட ட்வீட்டுகளில் கூறியிருப்பதை பாருங்கள்:இலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுகால இன்னல்களை துடைக்க ஒப்பந்தம் கண்டவர்#ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கபட்டு தமிழர் தாயகபகுதி, வரதராஜ பெருமாள் தலைமையில் தமிழர் ஆட்சி என பல்வேறு உரிமைகளை பெற்று தந்தவர் ராஜீவ்காந்தி…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எதியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களின் நலனை பாதுகாக்க வேண்டுமானால், வலுவான மாநில கட்சிகள் அவசியம். தேசிய அளவிலும் மாநிலக்கட்சிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைத்தால்மட்டுமே மாநில நலன்களை பாதுகாக்க முடியும். மாநிலக்கட்சிகளை வலுப்படுத்த வேண்டிய வரலாற்று தேவை மலர்ந்து வருகிறது. தேசிய அளவில் 3-ஆவது அணி ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப், உத்திரபிரதேசம் உ…
-
- 3 replies
- 997 views
-
-
தேசிய அளவில் ஏற்றுமதிக்கு ஏற்ற சிறந்த மாநிலமாக தமிழகம் தெரிவு! தேசிய அளவில் ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய அரசின் கொள்கைத் திட்டங்களை வகுக்கும் நிதி ஆயோக் அமைப்பு போட்டித்திறன் மையத்துடன் இணைந்து, ஏற்றுமதிக்கு தயார் நிலையில் உள்ள மாநிலங்களின் குறியீட்டு பட்டியலை தயாரித்துள்ளது. இதன்படி, கடலோர மாநிலங்களான குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. அரசு கொள்கை, வர்த்தக நிலைவரம், ஏற்றுமதிச் சூழல், ஏற்றுமதி செயற்பாடு ஆகிய 4 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், மாநிலங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதனிடையே, மாநில அரசுகள் ஏற்றும…
-
- 0 replies
- 398 views
-
-
தேசிய இனத் தாயக அழிப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த் தேசியப் பேரியக்கம். ஒருங்கிணைப்பாளர் – காவிரி உரிமை மீட்புக் குழு 119 Views நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் அழிப்பு சட்டங்களுக்கு எதிராக, புதுதில்லியில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. மிகக்கடும் குளிரிலும், பனியிலும் சீக்கிய உழவர்களும் வடநாட்டுப் பொதுமக்களும் தொடர்ந்து 23 நாட்களைக் கடந்து தில்லியை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் உழவர்களின் போராட்டங்கள் ஆங்காங்கு நடந்து வருகிறது. இந்திய நாட்டின் உழவர்களை ஒட்டுமொத்தமாக நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, நிலம், வேளாண்மை, வேளாண் விளைபொர…
-
- 0 replies
- 327 views
-
-
தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறியது. இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. துவக்கத்தில் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் அறிக்கையின் பல அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் கேள்விகளை …
-
- 1 reply
- 481 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மாநிலகல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜவஹர் நேசன், முதலமைச்சரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற விமர்சனத்தை அவர் வைத்துள்ளார். எனினும் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டை மாநில கல்விக் கொள்கை குழு மறுத்துள்ளது. இதேபோல் பிபிசியிடம் பேசிய உதயசந்திரன் ஐஏஎஸ் இந்த க…
-
- 0 replies
- 716 views
- 1 follower
-
-
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.27 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய இந்த மாநாட்டை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார். மாநாட்டில் 30 மாநிலங்களில் இருந்தும், 6 ஆசிய நாடுகளில் இருந்தும் இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து முப்பது ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 2 ஆய்வுகள் மட்டும் மாநாட்டுக்கு தேர்வு …
-
- 0 replies
- 421 views
-
-
-
(facebook)
-
- 1 reply
- 333 views
-
-
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரை கைது செய்த சிபிஐ - என்ன குற்றச்சாட்டு? படக்குறிப்பு, ஆசிரியர் ராமச்சந்திரன் 22 நிமிடங்களுக்கு முன்னர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளது சிபிஐ. வருமான வரித்துறை கணக்குத் தாக்கல் செய்து, பணம் திரும்பப் பெறும் விவகாரத்தில் பலருக்கும் முறைகேடு செய்ய உடந்தையாக இருந்ததாக சிபிஐ இவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலுர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரன் தினமும் மாணவர்களைப் போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருவது,…
-
- 0 replies
- 682 views
- 1 follower
-
-
தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி த.சத்தியசீலன் கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் | படம்: ஜெ.மனோகரன். 234 தொகுதிகளில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சென்னை மாநாட்டில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம், கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, கோவை மேற்கு மண்டலத்தில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள வே…
-
- 30 replies
- 3.4k views
-
-
தேனியில் ஓ.பி.எஸ். கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தேனி: தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அருகே உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினர். மேலும் இந்த தாக்குதலில் ஓ.பி.எஸ் உட்பட கட்சி நிர்வாகிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வே…
-
- 0 replies
- 342 views
-
-
தேமுதிக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. 4 தொகுதிகள் ஒதுக்கீடு. லோக் சபா தேர்தலுக்கான அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று வாரமாக தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தது. அதிமுகவுடன் தேமுதிக பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகமல் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் தற்போது கூட்டணி ஒப்பந்தம் சுமுகமாக நடந்து முடிந்து உள்ளது.இதுவரை தேமுதிக சார்பாக 6க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேமுதிக தனது லோக்சபா கூட்டணி முடிவை எடுக்க ஆலோசன…
-
- 0 replies
- 770 views
-
-
ஒரு திருமண நிகழ்வில் வாசனுடன் வைகோ மற்றும் திருமாவளவன் | படம்: ஃபேஸ்புக். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முடிவு குறித்து இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என பல நாட்களாக வாசன் கூறிவந்த நிலையில், இன்று ஒருவழியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமாகா கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. கூட்டணி தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் ஆலோசனை நடைபெற இருப்பதாகவும். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் 3 மணியளவில் கூட்டணி குறித்து ஜி.கே.வாசன் அறிவிப்பார் எனவும்…
-
- 0 replies
- 586 views
-
-
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் | படம்: சிறப்பு ஏற்பாடு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், ம.ந.கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதால் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் முகநூல் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு விவரம்: தேமுதிக - 104 தொகுதிகள் மதிம…
-
- 1 reply
- 646 views
-