தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
தமிழக அரசு நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்- கர்நாடகா எதிர்ப்பு! காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு, காவிரி நதியில் 45 டி.எம்.சி. தண்ணீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்திக் கொண்டு நதிகள் இணைப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது என அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், காவிரி தண்ணீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளமை கண்டிக்கத்தக்கது எனவும் இந்த சட்ட விரோதத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழக முதல்வரைக் கேடுக் கொள்வதாக அவர் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 666 views
-
-
தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் விடுதலை சிறுத்தைகள்! தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளை கேட்டுள்ளதுடன் 25 விருப்பத் தொகுதிகளையும் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தை, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் கொடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியிடம் மட்டுமே தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தவில…
-
- 0 replies
- 543 views
-
-
சென்னை: மரக்காணம் வன்முறையில் பேருந்து உள்பட அரசு சொத்துக்களை சேதம் விளைவித்தது தொடர்பாக பா.ம.க.விடம் இருந்து ரூ.50 கோடி அபராதமாக வசூலிக்க தமிழக வருவாய்த்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி பா.ம.க. சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பங்கேற்க வந்த பா.ம.க.வினர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில், பல வீடுகள் எரிக்கப்பட்டதோடு, அரசு, தனியார் பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனிடையே, விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்க…
-
- 0 replies
- 505 views
-
-
பிப்.16-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஆளுநர் மாளிகை | படம்: ம.பிரபு. 'இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு, குடும்ப அரசியலுக்கு வாய்ப்பில்லை'- இப்படியெல்லாம் அறியப்பட்டதுதான் அதிமுக. ஆனால், இன்று அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் சசிகலாவின் குடும்பத்தினர் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் தலைமையில் ஓரணியினர் பிரிந்திருக்கின்றனர். சசிகலா தலைமையை ஏற்றுப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூவத்தூரிலேயே காத்திருக்கின்றனர். ஆளுநரோ, எத்தனை பேர் எத்தனை முறை சென்று பார்த்தாலும் எந்த முடிவும் அறிவிக்காமல் இருக்கிறார். இதுவரை அவரது மவுனத்துக்கு சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாகக் கூறப்பட்டது.…
-
- 9 replies
- 1k views
-
-
ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும்... விசாரணை வளையத்தில் 9 மருத்துவ உதவியாளர்களும் ! ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், அப்போலோவில் அவருடைய இறுதி நிமிடங்களின்போது நடந்த சிகிச்சைகள் குறித்த தகவல்களை மத்திய உளவுத்துறை சேகரித்து வருகிறது. அதில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன. கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு, ஜெயலலிதா மயக்க நிலையில் அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை, போயஸ் கார்டனிலிருந்து எப்படிக் கொண்டுவந்தார்கள், அப்போலோவின் இரண்டாவது தளத்துக்கு அவரை எப்படிக் கொண்டு சென்றார்கள் என்பது குறித்த பல்வேறு வினாக்கள் இப்போது கி…
-
- 4 replies
- 1.3k views
-
-
கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியின் இ-மெயில் முகவரிக்கு நேற்று பிற்பகல் ஒரு தகவல் வந்தது. அதில் ‘‘அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் கோவையில் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் கோவை விமான நிலையத்தை தகர்க்க போகிறார்கள். இதனை நான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு வந்த 2 பேர் பேசிக்கொண்டிருந்த போது கேட்டேன்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இ-மெயில் தகவல் விமான நிலைய அதிகாரிகளுக்கும், கோவை மாநகர போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. மறு நிமிடமே போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. விமான நிலைய தொழிற்பாதுகாப்பு படையினர் விமான நி…
-
- 0 replies
- 367 views
-
-
“தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” – தோழர் பெ.மணியரசன் உரை! “தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் உரை! தமிழின உணர்வாளர்களுக்கு நாமக்கல் பகுதியில் துணை நின்ற திரு. நா.ப.இராமசாமி அவர்கள் கடந்த 23.09.2013 அன்று நாமக்கலில் காலமானார். அவரது நினைவேந்தல் நிகழ்வு 10.10.2013 அன்று நாமக்கல் – திருச்செங்கோடு சாலை – சுப்புலட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சிலம்பொழி சு.செல்லப்பன் அவர்கள் தலைமையேற்றார். திராவிடர் விடுதலைக் க…
-
- 0 replies
- 786 views
-
-
இலங்கை அமைச்சகத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக கண்டன அறிக்கையும், இலங்கை அதிபருக்கு பிரதமர் நேரடியாக தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் நிலை குறித்தும், இலங்கை கடற்படையினர் செய்து வரும் அட்டூழியம் குறித்தும், உங்களுக்கு பல முறை வலியுறுத்தி கடிதங்களை எழுதியுள்ளேன். தமிழக அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்கவும், தமிழக மீனவர்களுக்கு இந்திய கடல் எல்லையில் இருக்கும் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்…
-
- 3 replies
- 365 views
-
-
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு இலங்கை அரசை கண்டித்தும், கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வரும் 21ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சினை காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடி தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்குச் சென்றதால் மீன்பிடி தொழிலாளர்கள் இன்றி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 183 views
-
-
டெல்லி: இலங்கைத் தமிழர்களுக்கு அந் நாட்டு அரசும் ராணுவமும் இழைத்துள்ள கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். "சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு' (எச்.ஆர்.டி.ஐ.) அமைப்பின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. "புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் மனித உரிமை நிலைமை' எனும் தலைப்பில் இந்திய சட்டக் கல்வி நிறுவன மாநாட்டுக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் வைகோ பேசியதாவது: இலங்கைப் போரின்போது அந் நாட்டு ராணுவம் மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கையால் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் இந்த பூமிப் பந்தின் பழமையான குடிகள் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர், மானுடவியல…
-
- 0 replies
- 559 views
-
-
சசிகலா பரோல் மனு நிராகரிப்பு! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் கோரிக்கை மனுவை கர்நாடகச் சிறைத்துறை நிராகரித்தது. கணவர் நடராஜனின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனக்கு 15 நாள்கள் பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கர்நாடகச் சிறைத்துறைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு சிறைத்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் இருப்பதாகவும், அதுதொடர்பாக அக்டோபர் 5-ம் தேதியன்று கர்நாடகச் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், சசிகலாவின் பரோல் மனு கோரிக்கையைச் சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளன. கணவர் உடல்நிலையைக் காரணம் காட்டி பரோல் கோரியுள்…
-
- 0 replies
- 398 views
-
-
சென்னை: ஏழு பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புதிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி, வைகோ தங்களின் கூட்டணி தலைவர்களின் எதிர்ப்பை வேடிக்கை பார்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததோடு அவர்களது தண்டனையை விரும்பினால் மத்திய - மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டியது. இதன் அடிப்படையில் தமிழக அரசு 7 பேரின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட்டது. தமிழக அரசின் இந்த முடிவை தமிழகத்…
-
- 0 replies
- 494 views
-
-
சசிகலாவின் பரோல் ஓவர்! இன்று என்ன திட்டம்? சசிகலா பரோலில் வந்து நான்கு நாள்கள் ஆகின்றன! அவரின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் சசிகலா தற்காலிகமாகத் தங்கியிருக்கிறார். "இந்த நான்கு நாள்களில், உறவினர்களின் செல்போனில் எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள் ஆறு பேருடன் தொடர்புகொண்டு சசிகலா பேசினார். அதே பாணியில் 25 எம்.எல்.ஏ-க்களுடனும் தகவல் பரிமாற்றம் நடந்தது" என்றெல்லாம் டி.டி.வி. தினகரன் கோஷ்டியினர், மீடியாக்களிடம் தகவல்களைச் சொல்லி வருகிறார்கள். இன்று ஒருநாள்தான் பாக்கி... சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு சிறைச்சாலைக்குப் போகப்போகிறார்...! அவர் கிளம்பும்போது, அவரைச் சந்திக்க, சில அமைச்சர்கள் ரெடியாகிறார்கள் என்று உளவுத்துறையினர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய யாருடனும் 'கை' குலுக்க தயார்: கருணாநிதி. சேலம்: நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய யார் கை கொடுத்தாலும் அவர்களோடு கை குலுக்க தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சேலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: கருணாநிதி தனியாக நிற்கிறார்; அவரை கைவிட்டு விட்டனர் என சிலர் கூறுகின்றனர். யாரும் என்னை கைவிடவில்லை. எதிர்காலத்தில் நாடு போகிற போக்கில், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதை தான் விரும்புகிறேன். மதச்சார்பற்ற அரசுக்கு யார் கை கொடுத்தாலும், அவர்களை கை குலுக்கி வரவேற்க தயாராக இருக்கிறேன். ஜாதி மறுப்பு, மதவாத மறுப்பு போன்ற கொள்கைகளோடு சிறுபான்மையின மக்களுக்கு …
-
- 3 replies
- 968 views
-
-
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: `மொட்டை அடித்தனர், பைப்பால் தாக்கினர், விடிய, விடிய சித்ரவதை` மோகன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் `நாங்க எந்த இடையூறும் இல்லாமல் கிடைத்த வேலையைப் பார்த்துட்டு பிழைச்சிட்டிருந்தோம். எங்களை திருடங்க மாதிரி பிடிச்சுட்டு போயி அடைச்சு வச்சு மொட்டை அடிச்சது மட்டுமில்லாம பைப்பால அடிச்சு சித்ரவதை பண்ணிட்டாங்க` என்று குமுறுகிறார் கோவையில் தெருவோரம் வசித்து வரும் முகமது ஹூசைன். கோவையில் தனியார் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டவர்களுள் முகமது ஹூசைனும் ஒருவர். இவரைப் போல தெருவோரம் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்…
-
- 1 reply
- 454 views
- 1 follower
-
-
செம்மொழி நிறுவன விவகாரம்: கருணாநிதிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் செம்மொழி நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட சந்தேகங்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், இலங்கையில் தமிழ் இனம் அழிந்தபோது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய கருணாநிதி, செம்மொழி குறித்து முதலைக் கண்ணீர் வடித்து அறிக்கை விட்டிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. சென்னையில் அமைந்திருக்கும் செம்மொழி நிறுவனம் ஏதோ தமிழ்நாடு அரசின் நிறுவனம் போலவும், அந்நிறுவனத்தின் ஆட்சி அதிகாரமும், மாட…
-
- 0 replies
- 1.9k views
-
-
விளைநிலங்கள் ஊடாக எரிவாயுக்குழாய் பதிப்பு முயற்சிக்குத் தடை நீட்டிப்பு தமிழகத்தில் விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிக்கு விதிக்கப்பட்ட தடையை, இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மேலும் மூன்று வார காலத்திற்கு நீட்டித்துள்ளது. வேளாண் நிலங்களுக்கு இந்த திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க மூன்று வார காலம் கோரப்பட்டது. இதனால் எரிவாயு திட்டத்திற்கான குழாய்களை தமிழ் நாட்டின் விவசாய வேளாண் நிலங்கள் வழியாக பதிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்த…
-
- 0 replies
- 502 views
-
-
மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லிங்கா பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க டேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் கடந்த புதன்கிழமை மங்களூர் பாஜ்பே சர்வதேச விமான நிலை யத்துக்கு வந்தார். விமான நிலைய நிர்வாகம் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அப்போது அவர் கன்னடத் தில் அளித்த பேட்டி வருமாறு: ‘‘ஷிமோகாவில் நடைபெறும் ‘லிங்கா' ஷூட்டிங்கிற்காக மங்களூர் வந்துள்ளேன். 22 வருடங்களுக் குப் பிறகு மங்களூர் விமான நிலையத்துக்கு வந்தது மகிழ்ச்சி யளிக்கிறது. ‘லிங்கா' ஷூட்டிங் ஏற்கெனவே மைசூர், மாண்டியா, மத்தூர், மேல் கோட்டை என பல இடங்களில் நடந்தது. இப்போது ஷிமோகாவில் ஜோக் அருவி அருகில் 21 நாட்கள் ஷூ…
-
- 2 replies
- 631 views
-
-
ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை கிராம பெண்கள் ஆபத்தை அறியாமல் கழுத்து அளவு தண்ணீரில் இறங்கி உணவுக்காக கைகளால் இறால் மீன்களை பிடிக்கின்ற நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ளது காரங்காடு மற்றும் சேந்தனேந்தல் கடற்கரை கிராமம். அங்குதான் இ…
-
- 4 replies
- 2.5k views
-
-
உள்ளூர் தொழிலாளர்கள் வரத் தயங்குவதால் வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர்' தமிழகம் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்துவந்த 28 பேர் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் அளிப்பது என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட இவர்களுக்கு, பேசியபடி சம்பளம் வழங்கப்படவில்லை என்பதோடு, இவர்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தொழிலாளர்கள் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் இந்தத் தொழிலாளர்களைப் பார்க்க வந்த அவர்களது உறவினர்களுக்கு இந்தத் தகவல் தெரிந்ததும் அவர்கள் நாராயண்பூர் மாவட்ட நிர்வாகத்…
-
- 5 replies
- 699 views
-
-
வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகளைக் கணக்கிட்டபோது, கிடைத்த 'அதிர்ச்சி' விவரம்- என்ன தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் வசிக்கும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. அதில் மிகக்…
-
- 0 replies
- 726 views
- 1 follower
-
-
''மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றி எல்லாம் பேச, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் கிடையாது; காரணம், அவருக்கு, பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கொந்தளித்தார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பிட்ட சில தொழில் அதிபர்களுக்கு மட்டுமே உதவுவது போல இருப்பதாக, ஸ்டாலின் குறிப்பிட்டு, அது ஏழைகளை பாதிக்கும் என, கூறியுள்ளார்.அது குறித்தெல்லாம் சொல்வதற்கு, அவர் எந்த பல்கலைக் கழகத்தில், பொருளாதார பாடம் படித்தார் என, தெரிவிக்க வேண்டும். அவர் எதற்கு, திடீரென, இந்த வேண்டாத வேலையெல்லாம் பார்க்க வேண்டும்.…
-
- 0 replies
- 536 views
-
-
யார் முதலமைச்சராக வரவேண்டும்? - தந்தி டிவி கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும்? என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. #ThanthiTV #ThanthiTVOpinionPoll சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு …
-
- 0 replies
- 867 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பட்டியலின இளைஞர்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் நிர்வாணமாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் கைகளைத் தூக்க இயலாத அளவுக்கு மரக்கட்டை மற்றும் கத்தியைத் திருப்பி வைத்து தாக்கியதாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர் தாக்க…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை Vhg ஜூன் 11, 2024 இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழீழத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பான கோரிக்கையை தாம் அவரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் நேற்று (10-06-2024) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே, இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரண…
-
-
- 9 replies
- 763 views
-