தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
மீண்டும்... அரசியலுக்கு, வருகிறாரா சசிகலா! கடந்த சில நாட்களாக சசிகலா குறித்த செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த சசிகலா தற்போது விடுதலையாகி உள்ளார். நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவரின் ஆதிக்கம் இருக்கும் என்றே பல விமர்சனங்கள் எழுந்திருந்தன. பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்களுக்கு அரசியலில் இருந்து விலகபோவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியே மலர வேண்டும் எனவும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து அவரது அரசியல் வாழ்க்கை நிறைவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. இருப்பினும் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி தோல்வியை தழுவவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரபோகிறார் என்ற கருத்…
-
- 0 replies
- 408 views
-
-
மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? இன்று புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் ஜி.கே. வாசன்! சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியை உடைத்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிடக் கூடும் என்று தெரிகிறது. காங்கிரஸ் மேலிடத்துடன் கடந்த சில ஆண்டுகளாக முட்டி மோதிக் கொண்டிருந்தார் ஜி.கே.வாசன். அவருக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கவும் காங்கிரஸ் மேலிடம் மறுத்தது. அத்துடன் லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த வாசன், தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டார். அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபோட்டுப் பார்த்தார். பிரச்சனைக்கு…
-
- 3 replies
- 525 views
-
-
மீனவ சமுதாயத்திற்கு தொடரும் துயரம்... விடிவு தருமா 2016? இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களால் தமிழக மீனவர்கள் அடைந்து வரும் இன்னல்கள் கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதி நாளான் இன்றுடன் இந்த இன்னல்கள் தீருமா? பிறக்க போகும் புதிய ஆண்டில் தங்கள் வாழ்வில் புதுவசந்தம் வீசுமா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழக மீனவர்கள் புத்தாண்டின் விடியலை நோக்கியிருந்த நிலையில், இன்று (31-ம் தேதி) காலை நாகை மாவட்டம் அக்கரை பேட்டை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 29 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் விடுதலைபுலிகள் மற்றும் ராணுவத்தினர் இடையேயான மோதல் கடந்த 1983-ம் ஆண்டில் தீவிரமடைந…
-
- 1 reply
- 588 views
-
-
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தற்சமயம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதாகவும் அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய இராஜதந்திர வழிமுறைகளை முன்னெடுத்து, அனைத…
-
- 2 replies
- 254 views
- 1 follower
-
-
தமிழகம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இந்திய கடற்படையினரின் பணி என்னவாக உள்ளதென பாஜக கேள்வியெழுப்பியுள்ளது. காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை புதுவை மாநில பாஜக செயலர் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் ராஜவேலு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். பிறகு அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறியது : ஜெனீவாவில் ஐ.நா. கவுன்சிலில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய ஆதரிக்கவேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை தங்களது நிலைபாட்டை ஆதரிக்கவேண்டுமென இந்தியாவை மறைம…
-
- 0 replies
- 520 views
-
-
மீனவர் படகுகள் விவகாரம்.. அந்தர்பல்டி அடித்தார் சுப்பிரமணியன் சுவாமி! டெல்லி: தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கைக்கு நானே ஆலோசனை கூறியதாக பேட்டியளித்திருந்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தற்போது தாம் அப்படிக் கூறவில்லை என்று மறுத்துள்ளார். பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்த போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.. அவர்கள் தொழிலாளர்கள். அதனால் விடுவித்துவிடுங்கள். ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள். அதை விடுவிக்க வேண்டாம் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது என்று கூறியி…
-
- 5 replies
- 726 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 250 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமரைக் கேட்டுக் கொண்டு வழக்கம் போல முதல்–அமைச்சர் ஜெயலலிதா 7–1–2014 அன்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம், அதுபற்றிய தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதி, நாளேடுகளில் வெளியிடச் செய்வதோடு தன்னுடைய கடமை முடிந்து விட்டதெனக் கருதுகிறார். ஏற்கனவே, மீனவர் பிரச்சினைக்காக நாகை மீனவர்களும், பாம்பன் மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது நாகை மீனவர்கள் உண்ணாவிர…
-
- 0 replies
- 312 views
-
-
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றமை மற்றும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமை என்பன அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. குறித்த மீனவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகின்றமையினால் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவாகத்…
-
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
தமிழக காங்கிரஸ் தலைவர்ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இந்திய ஜனநாயகத்தின் மாண்பை சிதைத்து ஒரு தனிநபருக்கு முழு அதிகாரம் என்ற தத்துவத்தை பாஜ அரசு அரங்கேற்ற முயலுகிறது. தேர்தலின் போது தமிழகம் வந்த மோடி, மீனவர் பிரச்னை, தான் ஆட்சிக்கு வந்த பிறகு தீர்ந்துவிடும் என்றும், தமிழக மீனவர்கள் எந்தவித பாதிப்புமின்றி மீன்பிடிக்க செல்லலாம் என்பதை போல பேசினார். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் 93 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 62 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களும் படகுகளும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் வாக்குறுதி வேறு, நடைமுறை வேறு என்பதை பாஜ வ…
-
- 2 replies
- 358 views
-
-
மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வுக்காக பாஜக போராடி வருகிறது: தமிழிசை செளந்தரராஜன் தமிழக மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண்பதற்காக பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர். மிரட்டலையும் மீறி 80-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பல்வேறு அசாதாரணச் சூழல் உருவாகியுள்ளதால் உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்து, …
-
- 0 replies
- 305 views
-
-
மீனவர்களுக்கு தூக்கு- பற்றி எரியும் ராமேஸ்வரம்- ரயில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு! ராமேஸ்வரம்: 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தை நடத்தி வருவதால் அப்பகுதியில் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்து போயுள்ளன. 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை என்ற செய்தி வெளியானது முதல் ராமேஸ்வரம் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டது. ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன. தங்கச்சிமடத்தில் 500 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. இதனால் ராமேஸ்வரம் வரும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன. ராமேஸ்வரத்தில் சென்னை எழும்பூர், கன்னியா…
-
- 4 replies
- 537 views
-
-
நாகப்பட்டினம் மீனவர்கள் அரிவாளால் வெட்டி இலங்கைக் கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோது இன்று அதிகாலையில் சுற்றிவளைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படையினர் தாக்கியதில் படகின் உரிமையாளர் கண்ணையா, மீனவர்கள் சக்திகுமார், செல்வகுமார், பொன்னுசாமி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை சிறைப்பிடித்ததை எதிர்த்து கடலில் 4 மீனவர்களும் வாக்குவாதம் செய்துள்ளனர். மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் அரிவாளால் வெட்டியதாக இலங்கை கடற்படை மீது தமிழக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13469:nagapattinam&catid=36:tamil…
-
- 1 reply
- 451 views
-
-
இலங்கை அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,இந்திய பெருங்கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமையுடன் அங்கு தங்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாவதை நான் மிகுந்த வேதனையுடன் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.இலங்கை அரசால் இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலை…
-
- 0 replies
- 426 views
-
-
15 SEP, 2024 | 10:20 AM ராமேசுவரம்: விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறை தண்டனைக்குப்பின் இவர்களின் வழக்கு கடந்த 5-ம் தேதி மன்னார் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் இன்னாசி, ராஜா, சசிக்குமார், மாரி கிங்ஸ்டன், மெக்கான்ஷ் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா ரூ.50 ஆயிரம் அபதாரம் செலுத்தவும் உத்தரவிட்டார். மே…
-
-
- 70 replies
- 4.1k views
- 1 follower
-
-
மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிப்பு! தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 12 மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும், விடுவிக்கப்பட்டவர்கள் விரைவில் இந்தியா திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாவும், மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். மீதமுள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை…
-
- 0 replies
- 260 views
-
-
14 Aug, 2024 | 05:33 PM இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை வரையிலும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில்…
-
- 0 replies
- 131 views
-
-
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி இந்தியமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2024-ம் ஆண்டில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்இ என்று முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் நவ.9ம் தேதி அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (நவ.12) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
மீனவர்கள் கைது விவகாரம்: தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்! இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 29 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்: இலங்கைக் கடற்படையினரால் கடந்த சில வாரங்களுக்குள் அப்பாவி இந்திய மீனவா்கள் மூன்றாவது முறையாகக் கைது செய்யப்பட்டிருப்பதை தங்களது தனிப்பட்ட கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கடந்த 7 ஆம் திகதி அன்று மூன்று மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து, அந்த நாட்டின…
-
- 0 replies
- 211 views
-
-
சென்னை: மத்திய அரசு நம்பிக்கை அளிக்கும் வகையில் போதுமான அளவுக்கு கண்டிக்காததே இலங்கையின் தொடர் அடாவடிக்கு காரணம் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா சாடியிருக்கிறார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 275 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே பலமுறை பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்நிலையில் இன்று மீண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீண்டும், மீண்டும் சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் சொல்…
-
- 0 replies
- 290 views
-
-
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்படுவது என்பது நின்றபாடில்லை. தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலும் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஏன் ஒருசில நேரங்களில் மத்திய அரசு இதைப்பற்றி இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும், இலங்கை கடற்படை அதை காதிலே போட்டு கொள்வதே இல்லை. ராமேஸ்வரத்தில் இருந்து 5-6-2013 அன்று 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மதியம் சுமார் 3 மணியளவில், நெடுந்தீவு அருகில் இவர்களில் ஒரு பிரிவினர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே…
-
- 0 replies
- 436 views
-
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்! இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தளபதி விஜய்யும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தவராம் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான அனுமதியை தமிழக வெற்றி கழகம் பொலிசாரிடம் முன்வைத்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424675
-
-
- 64 replies
- 2.6k views
- 1 follower
-
-
சீர்காழி, மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்தை தனிமைப்படுத்துகிறது என்று சீர்காழியில் சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார். ஆலோசனைக்கூட்டம் நாகை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு அருகில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நாகை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கராத்தே.ஏபி.ராஜா தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் ஐஸ்ஹவுஸ்தியாகு, கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், பொதுச்செயலாளர் கருநாகராஜன், துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– வெற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளி…
-
- 0 replies
- 411 views
-
-
மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு Published By: RAJEEBAN 24 FEB, 2023 | 11:16 AM மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக மூன்று பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன், அருண், குமார், மாதவன் ,கார்த்தி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நேற்ற…
-
- 0 replies
- 589 views
- 1 follower
-
-
கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம். மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். கடந்த சில நாட்களாக விசைப்படகு மீனவர்களுக்கு மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்கி வந்தன. இதனால் குறைந்த அளவு விசைப்படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல்மழை பெய்து வருகிறது. இந்த சாரல்மழையின் காரணமாக கடலில் மீன்கள் அதிக அளவு கிடைக்க தொடங்கி உள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 300-க்கும்…
-
- 0 replies
- 432 views
-
-
30 SEP, 2024 | 11:39 AM இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய வெளிவிவகார அமைச்சர்ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது : “ராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து இரண்டு படகுகளில் நேற்று( 28.09.2024 ) தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்து நிலையில் இன்று (29.09.2024) நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீன…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-