Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள ‘கடுகளவு‘ நியாயமும் ஆர். அபிலாஷ் சீமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது சமீபமாக கூறியது இதுதான்: “முன்னாள் பிரதமர்ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்றுகுவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம்என்ற வரலாறு வரும்”. ராஜீவின் அயலுறவு முடிவுகள் முன்னுக்குப் பின் முரணானவை, நிதானமான தெளிவானநோக்கற்றவை, அதன் பலனாகத் தான் ஈழத்தில் கடுங்குற்றங்களை நமது அமைதிப்ப…

  2. ராஜீவ் படுகொலை: பதற வைக்கும் 10 மர்மங்கள் -அதிர வைக்குமா ஆவணப்படம்? ' ராஜீவ் காந்தி படுகொலையின் நேரடி சாட்சியான 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்' என விகடன்.காம் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அவர் 'உயிரோடு இருக்க வாய்ப்பில்லை' என மறுப்பு தெரிவித்து பலரும் கருத்துக்களைப் பதிவிட்டனர். இதையே, ராஜீவ் கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மற்றும் தடயவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று காலையில், ஈரோட்டில் வைத்து ராஜீவ் படுகொலை தொடர்பான மர்மங்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது ஆவணப்படக் குழு. ராஜீவ் காந்தி படுகொலையின் மர்மங்கள் குறித்து 'பைபாஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்ற…

  3. சென்னையில் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காகக் காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தி ``ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான்” என்று நாம் தமிழர் தலைவர் சீமான் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் மீது ஒருபுறம் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து வரும் நிலையில், விடுதலைப்புலிகளே இந்த விவகாரத்தில் அமைதிகாக்கும்போது, எதற்காக சீமான் இப்படி கருத்து சொன்னார் என்று தமிழீழ ஆதரவாளர்களும் கொந்தளித்து வருகிறார்கள். சீமான் தேர்தல் ந…

  4. ராஜீவ் மரணம்: தொடரும் பரமபத விளையாட்டு! “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்பட்ட வெடிகுண்டு குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்... அதுபற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை முகமை (MDMA) இத்தனை ஆண்டுகளில் நடத்திய விசாரணைகள் என்ன? இதுபற்றி மத்திய அரசு முழுமையான அறிக்கை தரவேண்டும்’’ என இப்போது கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு குறித்த விசாரணை அறிக்கையை, கடந்த 23-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. ராஜீவ் மரணம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அந்த வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசியாக இருக்கும் பேரறிவாளன் தொடுத்த வழக்கில்தான் இப்படிப் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். உ…

  5. ராஜீவ் வழக்கு தள்ளுபடி. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் பேரறிவாளவன், முருகன் மற்றும் சாந்தனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசு தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனுவை இந்திய உச்சநீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்துள்ளது. மேலும், 3 மேற்படி மூவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது சரியானதே என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது http://www.jvpnews.com/srilanka/118510.html

  6. படத்தின் காப்புரிமை Getty Images Image caption ராஜீவ் காந்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது உடன் இறந்த ஒருவரது மகனான எஸ்.அப்பாஸ் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதா என்…

  7. ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகளின் உளவாளி இருந்தார் என்று முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட் டுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.டி.பிரதான், 1998 முதல் 2003 வரை சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் எழுதிய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அண்ட் சோனியா’ என்ற புத்தகம் அண்மையில் வெளியானது. அந்தப் புத்தகத்தில் ஆர்.டி. பிரதான் கூறியிருப்பதாவது: 1991 மே 21-ம் தேதி பெரும் புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்…

  8. ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு [ Wednesday,20 April 2016, 05:00:48 ] இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை இரண்டாவது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்குமுன்னர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2014 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிர…

  9. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை கோருவது சரியல்ல: நாராயணசாமி பேட்டி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை கோருவது சரியல்ல என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் திடீரென்று மாற்றுக் கருத்துக்களை கூறிவருகின்றனர். அரசு உயர் அதிகாரிகள் பதவியில் இருக்கும்போது ஒரு மாதிரியும், ஓய்வு பெற்ற பிறகு வேறு மாதிரியும் மாற்றி, மாற்றி பேசி வருவது சரியல்ல. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை முழுவதும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென மறு விசாரணை கோருவது சரியல்ல என்றார்.…

  10. ராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் வரவு செலவு திட்டத்தின் மீது நேற்று (புதன்கிழமை) விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது இடம்பெற்ற விவாதம் வருமாறு… துரைமுருகன் – ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயற்படுகிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. கட்சிக்காரர் மாட்டிக்கொண்ட வ…

  11. ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினி வைத்தியசாலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி இன்று காலை திடீரென வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சைபிரிவில் பரிசோதனை நபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பில் சிறைத்துறை மற்றும் மருத்துவ வட்டாரத்தில் வினவியபோது, அவர் நரம்பு மற்றும் இதயம் சம்மந்தமான சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். திடீரென நளினி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டமை சிறைத்துறை மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. http…

  12. ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினியின் மனு தள்ளுபடியானது! March 11, 2020 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், ரொபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் சிறை வைக்கப்பட்டனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முன்கூட்டியே அவர்களை விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த தீர…

  13. ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது ஏற்புடையதல்ல- காங்கிரஸ் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/11/rajivu.jpg முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை அரசியல் காரணங்களுக்காக விடுதலை செய்ய கோருவது ஏற்புடையதல்ல என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஏழு பேரை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுவற்கு வாய்ப்பு உள்ள…

    • 0 replies
    • 741 views
  14. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ராபர்ட் பயாஸ் பிணையில் செல்ல அனுமதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருந்துவந்த ராபர்ட் பயாஸ், தனது மகனின் திருமணத்திற்காக ஒரு மாதம் பிணையில் விடுதலையாகியுள்ளார். ராபர்ட் பயாஸ், தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய பிணை வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை நீதிபதிகளான சுந்தரே‌‌ஷ், ஆர்.எம்.டி.டிக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தியது. இதன்போது விசாரணையின் நிறைவில் குறித்த அமர்வு தெரிவித்துள்ளதாவது, “ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது. அரசியல் கட்சி தலைவர்களை சந்திக…

  15. ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 4 இலங்கையர்களின் நிலை என்ன? பகிர்க படத்தின் காப்புரிமைSHARAD SAXENA/THE INDIA TODAY GROUP/GETTY IMAGES முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. ஆனால், இவர்களில் நான்கு பேர் இலங்கை குடிமக்களாக இருக்கும் நிலையில் விடுதலைக்குப் பிறகு அவர்கள் எங்கு செல்வார்கள்? ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானம் தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் …

  16. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த வக்கீல் சாந்தகுமரேசன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள் அதிகம் உள்ளன. எனவே மீண்டும் விசாரித்தால் முழு விவரம் தெரியவரும். இல்லையெனில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் வழக்கை போல ராஜீவ் கொலையும் "மர்ம"மாக இருக்கும். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. இயக்குநர்கள் க…

    • 0 replies
    • 565 views
  17. ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு தமிழ்நாடு Sinekadhara Published : 23,Dec 2021 01:05 PM ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. Advertisement முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதான நளினிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் …

  18. ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராகுல் காந்தியை சந்திக்கிறார் அற்புதம்மாள் மக்களவை தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்குச் செல்லவுள்ளார். இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று ராகுல் காந்தியை சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாவட்டமாக, ஊர்வலமாக சென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று ராகுலை சந்தித்து தமது மகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்த கோரிக்கை…

  19. ராஜீவ்காந்தி கொலை விவகாரம்: வாகனப் பேரணி நடத்த பரிசீலனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி இரு சக்கர வாகனப்பேரணி நடத்த அனுமதி கோரும் மனுவை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவிடுமாறு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நேற்று உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவென்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிபதி மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக டிஜிபியிடம் புதிதாக மனு அளிக்க வேண்டுமென்றும், அந்த மனுவை டிஜிபி மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்ற…

  20. Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 12:07 PM ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கடந்த 2019-ம் ஆண்டு மறைந்த நிலையில் கடந்த வாரம் அவரின் சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகம் வெளியானது. அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு ஒருவாரம் முன்பு ராஜீவ் காந்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காஞ்சி சங்கர மடத்திலிருந்து எச்சரிக்கப்பட்டதாக சேஷன் குறிப்பிட்டுள்ளார். புத்தகத்தில் இது குறித்து டி.என்.சேஷன் குறிப்பிட்டுள்ளதாவது ”1991-ம் ஆண்டு…

  21. ராஜீவ்காந்தி தனக்கு மரணம் விடுதலைப்புலிகளால் தான் ஏற்படும் என அறிந்திருந்தாரா? ராகுல்காந்தி தெரிவித்திருப்பது என்ன? Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 01:59 PM ராஜீவ்காந்தி தனது மரணம் விடுதலைப்புலிகளால் தான் ஏற்படும் என அறிந்திருந்தாரா என்பது தனக்கு தெரியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். என் பாட்டியைப் போலவே என் தந்தையும் தனது மரணம் சமீபமாக இருந்ததை உணர்ந்திருந்தார். அது விடுதலைப் புலிகளால் தான் ஏற்படும் என்று அவர் அறிந்திருந்தாரா என்று தெரியாது. ஆனால் ஏதோ சில சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. அவை தன் உயிருக்கு உலை வைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார்.என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார் இந்த…

  22. ராஜீவ்காந்தி நினைவு தினத்தில் தமிழகத்தில் அமைதி ஊர்வலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறுகின்றது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழ…

  23. ராஜீவ்காந்தி வழக்குல Subramanian Swamy-ய விசாரிக்காதது ஏன்?- RTD Thilagavathi IPS Interview

  24. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கர்நாடகாவில் தனிப்படை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 18 நாள்களாக நடந்து வந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இதன் பின்னணியில் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரும் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்தப் புகாரின் அடிப்டையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக மேலும் ஒன்பது புகார்கள் அவர் மீது கூறப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.