தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக மாற்றும் தி.மு.க - தமிழ்நாடு அரசின் மசோதாவால் என்ன பலன்? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுகாதார உரிமைக்கான மசோதாவை தமிழ்நாடு அரசு கொண்டு வரவுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது. `கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் மருத்துவக் கட்டமைப்பில் பணியாளர் பற்றாக்குறை உள்பட ஏராளமான சிக்கல்கள் உள்ளன. இவற்றைக் களையாமல் சுகாதார உரிமையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என்பது வெறும் வாசகமாக மாறிவிடக் கூடாது' என்கின்றனர், மருத்துவ வல்லுநர்கள். தி.மு.க அரசின் முயற்சிகள், இந்தியாவுக்கு முன்னோடித் திட்டமாக மாறுமா? …
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
சென்னை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பிரச்சாரம் சூடு பிடிக்காமல் முடங்கிப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக தேர்தல் பரப்புரை செய்வேன் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்திருந்தார். தற்போது பாஜக தமிழக தலைவர்கள் பலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர். இந்த நிலையில், சீமான் அமைதி காத்து வருவதாக ஈழ தமிழர்கள் மத்தியில் ஒரு ஆதங்கம் வெளிப்பட்டு வருகின்றது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் சீமானின்…
-
- 18 replies
- 1.8k views
-
-
ராஜ்நாத் சிங்குடன் ரங்கசாமி சந்திப்பு: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அப்போது புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த ரங்கசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எங்கள் அரசாங்கத்தின் முக்கியமான கொள்கையாக இது தொடர்கிறது” என்றார். மாநில அந்தஸ்து வழங்கினால் மத்திய நிதி குறையும் என்று சந்தேகம் நிலவுவது குறித்து கேட்டபோது, அது உண்மையில்லை என்று ரங்கசாமி கூறினார். முன்னதாக நேற்று மோடியை சந்தித்தபோதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மற்றும் கூடுதல் நிதி தொடர்பாக ர…
-
- 0 replies
- 416 views
-
-
சென்னை திருவொற்றியூரில் ரசாயன வாயுக் கசிவு: ஒரு மாத காலமாக மூச்சுத் திணறும் மக்கள் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நடுஇரவில் திடீரென உங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் வாயு கசிவது போன்ற வாசனை வீசினால் எப்படி உணர்வீர்கள்? உடனே சமையலறையில் உள்ள சிலிண்டரை சரிபார்ப்பீர்கள், அது சரியாக இருந்தால், உங்கள் அண்டைவீட்டாரைபற்றி யோசிப்பீர்கள். இதுபோல, ஒரு நாள் அல்ல கடந்த ஒரு மாத காலமாக சென்னை திருவொற்றியூர் பகுதிவாசிகள் தினம் தினம் நடுஇரவில், மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு ரசாயன வாயுகசிவால் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். …
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
“எனக்கும், கருணாநிதிக்கும் மோதலா?” என்பதற்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பதில் அளித்துள்ளார். தி.மு.க. முப்பெரும் விழாவில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தகராறா? பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு, இந்த இயக்கத்தை அழிக்க பலர் சூழ்ச்சி வலை பின்னினார்கள். ஆனால், வலை பின்னியவர்கள்தான் அதில் சிக்கி அழிந்துபோனார்கள். அப்போது சிலர் சம்பத்தை பிரித்து தனி கூடாரம் அமைத்தார்கள். அதனால் தி.மு.க. அழிந்துபோய்விடவில்லை. அதன்பிறகு கலைஞரிடம் இருந்து நாவலரையும், எம்.ஜி.ஆரையும் பிரித்தார்கள். அப்போதும் தி.மு.க. அழிந்துவிடவில்லை. அதன்பிறகு வைகோவை பிரித்தார்கள். அப்போதும் அழிந்துபோய்விடவில்லை. என்றைக்கும் தி.மு.க. கம்பீரமாக நிற்பதற்கு தலைவர் கலைஞர்தான் காரணம். சில பத்திரிகைகள் தொட…
-
- 0 replies
- 327 views
-
-
காரைக்குடி: ஊழல் புகாரினால் தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிட கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வரும் தேர்தலில் இந்த பின்னடைவை பா.ஜ.க பயன்படுத்தி கொள்ளும் என்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் பா.ஜ.க. சார்பில் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிறந்தாள் வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "மோடியின் வெளிநாட்டு பயணம் இந்தியாவை உலக அரங்கில் மதிப்பு மிக்க நாடாக உருவாக்கியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்பது நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனை. அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் அதை காரணமாக வைத்து த…
-
- 2 replies
- 515 views
-
-
ராஜபக்சே பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் – வைகோ அறிக்கை nilavanOctober 27, 2018 in: இந்தியா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான ஈழத்தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய கொடிய குற்றவாளி அதிபர் பொறுப்பிலிருந்த மகிந்த ராஜபக்சே என்பதை ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்தியது. குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பிறகு ராஜபக்சே அரசு நடத்திய இன…
-
- 1 reply
- 600 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 25 செப்டெம்பர் 2023 குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் இன்று தொடர்வதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கான காரணங்கள் என்ன? இதனால் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது? ‘எனக்கு 17 வயது, என் குழந்தைக்கு 2 வயது’ வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2020-ஆம் ஆண்டு 14 வயதான ரம்யா 8-ஆம் வகுப…
-
- 0 replies
- 641 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images கடலூரில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் நீண்ட கால சிறை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் தன் பள்ளிக்கூடம் அருகே தின்பண்டம் விற்றுவந்த லட்சுமி என்பவருடன் நட்புடன் பழகினார். அவர் அச் சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியதோடு, சிறுமியை தொடர்ந்து மிரட்டி, பல நபர்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும்படி வல…
-
- 0 replies
- 446 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் புதுச்சேரி மாநிலத்தில் கழிவறைக்குச் சென்ற இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் மயங்கி இறந்துள்ள சம்பவம் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அவர்கள் விஷ வாயு கசிவால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நேரில் ஆய்வு செய்த, முதல்வர் பாதாள சாக்கடைகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார். என்ன நடந்தது? புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை (வயது 72). இவர் செவ்வாய்கிழமை காலை கழிவறைக்கு சென்றபோது, மயங்…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அதை அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவ…
-
- 0 replies
- 275 views
-
-
வேலூரை 3ஆக பிரித்து.... திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்.. முதல்வர் அறிவிப்பு. வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 73-ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.அவர் அப்போது சுதந்திர தின விழா உரையில், வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என அறிவித்தார். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனிமாவட்ட…
-
- 0 replies
- 574 views
-
-
விகடன் இதழ், முரசொலி, கருணாநிதி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தமிழில் வெளிவரும் பிரபல வாரப் பத்திரிகையான ஆனந்த விகடன், தி.மு.கவின் அதிகாரபூர்வ இதழான முரசொலி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பிரச்சனையில் சிக்கிய விகடன் கட்டுரை சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இது தொடர்பாக இரண்டு வழக்குகளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். கடந்த வாரம் வெளிவந்த நவம்பர் 25ஆம் தேதியிட்ட இதழில், 'என்ன செய்தார் ஜெயலலிதா' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. இந்தக் கட்டுரையில் தமிழக அரசுக்கும், முதல் அமை…
-
- 1 reply
- 720 views
-
-
திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு! சென்னை: தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் மக்கள் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்திபன், சி.எச்.சேகர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து 'மக்கள் தே.மு.தி.க.' என்ற கட்சியை ஆரம்பித்தனர். இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் கூறி, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை நேற்று சந்திரகுமார் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தொகுதிகள் ஒதுக்குவதாக கருணாநிதி கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தி.ம…
-
- 0 replies
- 363 views
-
-
கொரோனா – இந்தியாவில் 80 மாவட்டங்களை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது… March 23, 2020 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசின் அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் ஆகியோர் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சுய ஊரடங்கு அழைப்புக்கு மக்கள் தாங்களாக முன்வந்து பெருமளவில் ஆதரவு அளித்ததாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் அப…
-
- 0 replies
- 351 views
-
-
'ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?' -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. 'நிகழ்ச்சியின் நோக்கம் புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்' என வேதனைப்படுகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவனால் எழுதப்பட்ட, 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல, இனி என்ன செய்யலாம்?' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடக்க இருக்கிறது. இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், திருச்சி வேலுச்சாமி,கெளதமன், காசி …
-
- 12 replies
- 3.1k views
- 1 follower
-
-
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவனால் பரபரப்பு நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 17:17 PM சென்னை, சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. எனினும், இந்த செயலில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு பட…
-
- 0 replies
- 600 views
-
-
சொத்து குவிப்பு வழக்கு – அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு விடுதலை பெங்ளூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து எதிர்வரும் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்ளூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. எனினும் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலையாக வாய்ப்புள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பெங்ளூர் சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்…
-
- 1 reply
- 511 views
-
-
அன்பிற்குரிய தமிழக உறவுகளே, பாண்டிய மன்னன் சிவபெருமானுக்கு அடித்த அடி உலகிலுள்ள எல்லா உயிர்களின் முதுகிலும் வீழந்ததைப் போல சிங்களவன் எங்களுக்கு அடித்த அடி உங்கள் முதுகிலும் எத்தகைய காயங்களையும் வலிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாங்கள் இப்போதுதான் உணர்ந்துகொள்கிறோம். உங்கள் போராட்டங்களைப் பார்த்தே புரிந்துகொள்கிறோம். சிறிலங்காவின் சனத்தொகை தமிழ் மக்களையும் சேர்த்து வெறும் இரண்டு கோடி பத்து லட்சம். ஆனால் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையோ சிறிலங்காவின் ஒட்டுமொத்த சனத்தொகையை விட சில மடங்கு அதிகம். எனவே தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் சிறிலங்காவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துவிட்டனர் என்பதை நினைக்கும் போது சிங்களத்திற்கு சித்தம் கலங்குகிறது. செங்களத்தில் தமிழர் சேன…
-
- 0 replies
- 634 views
-
-
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது . முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர் . மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர் 1. தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் கொள்…
-
- 0 replies
- 542 views
-
-
அஞ்சலி சொல்லக் கூட ஆண்மை இல்லையா...! முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவரின் பிறந்த நாளாகட்டும், தேர்தல் வெற்றி ஆகட்டும், சிறைக்கு போய் திரும்பினாலும் பல நாளிதழ்கள் பக்கம் பக்கமாய் வாழ்த்து விளம்பரங்கள் போட்டு திணறிடிப்பார்கள். தங்கத் தலைவி, புரட்சித்தலைவி, அம்மா, நிரந்தர முதல்வர் என ஆயிரம் ஆயிரம் அடைமொழிகளில் பேப்பரை நனைத்திருப்பார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா தயவில் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் தான். இதை ஏன் இப்போது பதிவிடுகிறேன் என்றால்... அப்பேர்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றோடு 48 மணி நேரத்தை தாண்டி விட்டது. 5ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு அவர் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப…
-
- 0 replies
- 431 views
-
-
தமிழன் தொலைக்காட்சி முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது இன்று காலை சென்னை தி நகரில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு விழாவில் பேசியது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் பிடிவாரண்ட் அளித்துள்ளனர். இதனிடையே ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் இருந்து செல்லும் பெரும்பாலான பேருந்துகள் மூன்றா…
-
- 0 replies
- 452 views
-
-
ஏழு பேர் விடுதலையில் தாமதம் ஏன்? பேரவையில் முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம் சென்னை, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- ஏழு பேர் விடுதலை விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது. 2018 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது. மூவரின் தண்டனையை குறைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக தீர்மானத்தினை எதிர்த்து அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தி…
-
- 12 replies
- 1.3k views
-
-
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கேன் குடிநீர் நிரப்பும் நிறுவனங்கள் தரச்சான்றிதழ் பெற்றுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு பதிலளிக்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தரமற்ற வகையில் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதையடுத்து, பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக கொண்டு பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து தரமற்ற குடிநீர் நிரப்பும் நிறுவனங்களை மூட மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, புறநகர் பகுதிகளில் தரமற்ற 200க்கும் மேற்பட்ட குடி…
-
- 0 replies
- 400 views
-
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம்! முதல்வர் ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது குறித்தும், சென்னையில் போலீஸ் தடியடி தொடர்பாக முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு ப…
-
- 2 replies
- 549 views
-