Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உள்ளூர் தொழிலாளர்கள் வரத் தயங்குவதால் வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர்' தமிழகம் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்துவந்த 28 பேர் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் அளிப்பது என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட இவர்களுக்கு, பேசியபடி சம்பளம் வழங்கப்படவில்லை என்பதோடு, இவர்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தொழிலாளர்கள் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் இந்தத் தொழிலாளர்களைப் பார்க்க வந்த அவர்களது உறவினர்களுக்கு இந்தத் தகவல் தெரிந்ததும் அவர்கள் நாராயண்பூர் மாவட்ட நிர்வாகத்…

  2. மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் சீமான் போட்டியிடாமல், 40 தொகுதிகளுக்கும் தமிழர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் சென்று சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். தூத்துக்குடியில் நாம் தமிழர் சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் என்னும் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார் சீமான். அப்போது பேசிய அவர், ''தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் மலராது. குளத்தில் வேண்டுமானால் மலரலாம்; தமிழன் நிலத்தில் தாமரை ஒருபோதும் மலராது. என் அம்மா சொல்வார். நம் தமிழர்கள் உடம்பில் படர்தாமரை வேண்டுமானால் மலரும்; பாரதிய ஜனதா தாமரை மலரா…

    • 5 replies
    • 846 views
  3. ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், ஈழத்தமிழர் படுகொலையில் இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 10 பேர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதற்கிடையே திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே இன்று மதியம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் கே.கே.நகர் சபரி மில்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக…

  4. சென்னை: இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் இன்று (30ஆம் தேதி) நடந்தது. இதில் கலந்து கொண்டு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ''இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் உள்ள ஷரத்துக்களை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதேவேளையில், 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 13வது சட்டத் திருத்தத்தையும், இலங்கைத் தமிழர்களையும் மத்திய அரசு என்றுமே கைவிடாத…

  5. ‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்!’’ பூத் கமிட்டிகள் அமைக்கும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்து நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், ‘‘தான் அரசியலுக்கு வருவதற்கான அடிப்படை வேலைகளை நடிகர் விஜய் சத்தமின்றி செய்துவருகிறார்’’ என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். சமீபத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “உறுப்பினர்களைச் சேர்க்க, தனது இணையதள முகவரியை ஜனவரி 2-ம் தேதிதான் ரஜினி வெளியிட்டார். ஆனால், உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சேர்ப்பதற…

  6. பட மூலாதாரம்,SIVASUBRAMANIAM படக்குறிப்பு, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த தமிழ் நாடு காவல்துறைக்கு அக்டோபர் 18, 2004 ஆம் தேதி மறக்க முடியாத நாளாக அமைந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2023, 02:56 GMT “வீரப்பன் காட்டிற்குள்ளேயே இருந்திருந்தால், அவரை வீழ்த்தியிருக்க முடியாது.” இப்படிச் சொல்பவர், வீரப்பனின் கூட்டாளி இல்லை. வீரப்பனை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படையில் முக்கியப் பங்காற்றிய அப்போதைய காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன். “அவருக்…

  7. கோவை மாணவி பாலியல் பலாத்காரம்.. 3 பேரை சுட்டு பிடித்த காவல்துறை 4 Nov 2025, 1:54 AM கோவையில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதி அருகே கடந்த ஞாயிறன்று இரவு கல்லூரி மாணவி தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர். சிறிது தொலைவில் வைத்து மாணவியை கொடூரமான வகையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு நிர்வாண நிலையில் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த நிலையில் மாணவியின் நண்பர் அளித்த தகவல…

  8. விரிவடைகிறது சென்னை மாநகரம்: எங்கிருந்து எதுவரை? Sep 19, 2022 13:26PM IST சென்னை பெருநகர எல்லையை அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் இன்று (செப்டம்பர் 19) மூன்றாம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் (Master Plan-3) பயிலரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பயிலரங்கத்தில் உலக வங்கியின் நிதியில் மூன்றாவது முழுமை திட்டம் ச…

  9. நெல்லை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கல்லூரியில் உள்ள லேப், கம்ப்யூட்டர் அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ரூ. 30 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.நெல்லை மாவட்டம் பிரான்சேரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மாணவி ஒருவரிடம் பேசியது தொடர்பாக இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு விடுதியில் தங்கியுள்ள கேரள மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் உ…

    • 5 replies
    • 986 views
  10. ஜெயலலிதா மரணத்தில் இன்னும் விலகாத 16 மர்மங்கள்! 'தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்' என்று அந்த மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்கப்படும்' என அறிவித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'எந்த நீதிபதி விசாரணையைத் தொடங்கப் போகிறார்?' என தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ‘75 நாள்களாக ஜெயலலிதாவைச் சுற்றி என்ன நடந்தது? அவர் இயற்கையாகத்தான் இறந்தாரா?' என்ற சந்தேகம் இன்றளவும் பொதுமக்கள் மத்தியில் உலவி வருகிறது. 'எங்கள் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்…

  11. மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று! மறைந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவுக்கு சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால், சில காலத்தில் 'ஜெயலலிதா' ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர். அவரது அம்மாவுக்கு 'அம்மு'. அ.தி.மு.க-வினர் அனைவருக்கும் 'அம்மா'! சர்ச் பார்க் கான்வென்ட் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில்…

    • 5 replies
    • 2.1k views
  12. கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் Aug 01, 2022 18:19PM IST கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் அரசு சார்பில் கலைஞருக்கு, நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2.23 ஏக்கர் பரப்பளவில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கலைஞரின் எழுத்தாற்றலைச் சிறப்பிக்கும் வகையில் அவருடைய நினைவிடத்திலிருந்து 650 மீட்டர் தொலைவில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா போன்ற நினைவுச் சின்னத்தை நிறுவ தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவ…

  13. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே இடம்பெறும் – பழனிசாமி உறுதி! தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை. இரு மொழிக் கொள்கையே தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு …

  14. சேது சமுத்திரம்: தடையை நீக்க மத்திய அரசு மனு… பழைய வழித்தடத்திலேயே திட்டத்தை தொடர முடிவு. டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள மத்திய அரசு, அத் திட்டத்தை பழைய வழித்தடத்திலேயே செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சேதுசமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடை விதிக்க கோரியும் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ராமர் பாலம் வழியாக சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும். ராமர் பாலத்தை சேதப்…

  15. ஆபத்தானவர்களின் பட்டியலில் பெயர்.. மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்குத் தடை!! மலேசியாவுக்குள் நுழைய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு விமானத்தில் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார் அவர். விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ம.தி.மு.க தலைமைக் கழகம், 'மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு ஜூன் 10 சனிக்கிழமை மாலை பினாங்க…

  16. வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சென்னை : தேச துரோக வழக்கில் வைகோவை 15 நாள் சிறைக்காவலில் வைக்குமாறு எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ல் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாக தேச துரோக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இன்று வைகோ கோர்ட்டில் ஆஜரானார். இவரை 15 நாள் நீதிமன்றகாவலில் வைக்குமாறு 13 வது குற்றவியல் நடுவர் மன்ற கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவிட்டார். இதனையடுத்து வைகோ இன்று புழல் சிறையில் அடைக்கப்டுகிறார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1744242

  17. 14 வயது சிறுமியை சீரழித்த சாமியார்... சிறுமியின் தாயாரே உடந்தையான கொடுமை! சென்னை: சென்னையில் 14 வயது சிறுமியை ஒரு சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துள்ளார். இந்த கொடும் செயலுக்கு அந்த சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை பரப்பியுள்ளது. சாமியார் மற்றும் தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சிறுமி மேலும் சீரழிந்து போக காரணமாக இருந்த 4 பேர் தலைமறைவாகி விட்டனர். பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமி. 14 வயதாகிறது. அவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு அறவழி சித்தர் என்ற குறி சொல்லும் சாமியா…

    • 5 replies
    • 1.1k views
  18. புதுடெல்லி: டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியின் சுல்தான்பூரி என்ற இடத்தில் கெஜ்ரிவால் இன்று தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வ வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் கட்சியினர் குவிந்தனர். அவருக்கு மாலை அணிவித்து உற்சாகப்படுத்தி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும் தொண்டர்கள் கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அடையாளம் தெரியாத ஒரு நபர், கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்தபடியே, 'பளார்' என்று அவரது கன்னத்தில் இரண்டு …

  19. வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என கர்நாடகா மாநிலம் பெல்காமில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில்நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சத்தில் 4 பேரது உறவினர்களும் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். மேலும் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கோரியிருந்தனர். ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக விசாரிக்க மறத்து விட்டது. மேலும் நாளையே தூக்கு நிறைவேற்றடுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் இருக…

    • 5 replies
    • 1.4k views
  20. அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி.,க்கள் கூட்டம் தொடங்கியது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் |படம்: க.ஸ்ரீபரத் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் |படம்: க.ஸ்ரீபரத் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்துள்ள சூழ்நிலையில் தினகரன் தரப்பினர் தணி அணியாக செயல்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூடிவரும் நிலையில் இருத…

  21. நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். மாலை 4 மணிக்கு சிறுவன் மீட்பு மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் (ரோபோ) மூலம் சிறுவன் மாலை 4 மணிக்கு பத்திரமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டான். சிறுவன் மீட்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கருணாகரன், "மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் மூலம் சிறுவன் மீட்கப்பட்டான். தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்புப்பண…

  22. சென்னை கனமழை: கடந்த 72 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை 1 நவம்பர் 2022, 07:17 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் சென்னையில் கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் ஒன்றாம் தேதியன்று மூன்றாவது முறையாக கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று மாலை முதல் தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னை நுங்கம்பாக்கத…

  23. தமிழ்நாடு ஆளுநர் ரவி இங்கு வந்த நாள் முதல் சநாதனம், ரிஷி அல்லது முனிவர்களால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியம், நீட் தேர்வின் சிறப்பு, புதிய கல்விக் கொள்கை என்று தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கேவலமான விஷயங்களையே பேசித் திரிகிறார். ஒன்றிய அரசின், இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின், தூதுவராக முழுநேரப் பணி செய்கிறார் என்பதைத் தமிழ்நாட்டில் அறம் அறிந்தோர் அறிவர். சமீபத்தில் இந்தியத் தொலைக்காட்சித் துறையில் (தூர்தர்ஷன்) கடைப்பிடிக்கப்பட்ட 'இந்தி மாத' (!!!) நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய ஒருவர் "தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல்திருநாடும்" எனும் வரியினை விலக்கிப் பாடினார். தமிழ்ச் சமூகத்தில் அது பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியதும், பாடியவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.