தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதாகும் இளைஞர் நாகர்ஜூன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்களில் இளம் வேட்பாளராக கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்றத்தின் மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் நாகர்ஜூன். …
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட... சிகிச்சைகள் குறித்து எதுவும் தெரியாது : வாக்குமூலம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் முதன்முறையாக முன்னிலையாகியிருந்தார். இதன்போது வாக்குமூலம் அளித்த அவர், ‘”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் …
-
- 2 replies
- 347 views
-
-
திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை! எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வீட்டில் மகாதேவி என்பவா் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயற்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இங்கு வந்து செல்வர். விடுமுறை நாள்களில் பாா்வையாளா்கள் எண்…
-
-
- 2 replies
- 463 views
-
-
I/A3i என்ற புதிய வைரஸ் பரவுகிறதா? By kisukisu On Thursday, June 11 th, 2020 · புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதாகவும் அதன் பாதிப்பு அதிகமென்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை? தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜுன் 8ஆம் தேதி திங்கட்கிழமை, தமிழ்நாட்டில் I/A3i என புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் அதன் காரணமாகவே பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்தச் செய்தி பெரும் …
-
- 2 replies
- 487 views
-
-
3 கொலையாளிகளை விடுதலை செய்ய என்ன ஒரு அக்கறை, வேகம்.. 7 தமிழர்கள் விடுதலை ஏன் இல்லை ? சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யாத நிலையில், 3 கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துக்கொலை செய்த அதிமுகவை சேர்ந்த தண்டனை குற்றவாளிகளை அவசரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருமே 25 வருடங்களை சிறையில் கழித்தவர்கள். சுமார், இரட்டை ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் கழித்துள்ளனர்.ஆனால், அவர்கள் விடுதலை என்பது தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த 3 பேரை தெரிந்த ஆளுநருக்கு இந்த 7 பேரை தெரியுமா? இவர்களையும் விடுதலை செய்வார…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ்நாடு இழந்த பகுதிகள் முத்தமிழ் வேந்தன் இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர் நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது ‘முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பே…
-
- 2 replies
- 1.1k views
-
-
சென்னை: இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியின் நேரடி தொலைபேசி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தம்மை தரக்குறைவாக பேசிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி போலீசில் புகார் அளித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் டெலிபோன் மூலம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். நேரடி ஒளிபரப்பின் போது எம்.எல்.ஏ. விஜய தாரணியிடம் பேசிய வாலிபர் ஒருவர் அவரை தரக்குறைவான ஆபாசமான வார்த்தையால் திட்டினார். அந்த வார்த்தை நேரடியாக டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்த…
-
- 2 replies
- 538 views
-
-
ரூ.570 கோடி சிக்கிய விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு கோப்புப் படம். திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதாவது கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் பிடிபட்டது. கைப்பற்றப்பட்ட ரூ. 570 கோடி பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) சொந்தமானது என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்கள் காட்டப்பட்டதால் பிடிபட்ட பணம் ரிசர்வ் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. இதனிடையே ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்.பி. டி.கே.…
-
- 2 replies
- 860 views
-
-
முதல்வர் பழனிசாமி அணியில் இன்னொரு விக்கெட் வீழ்ந்தது! சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் கூறியுள்ளது கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நடந்து வரும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து முதல்வர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். மேலும், பதின…
-
- 2 replies
- 965 views
-
-
மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி! சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் கழுகார் நம்முன் ஆஜரானபோது அவருக்காக இளநீர் வைத்திருந்தோம். ஸ்ட்ரா போட்டு மெல்ல உள்ளே இழுத்த கழுகார், ‘‘ரஜினி அரசியல் தொடர்பான அனல், இதைவிட அதிகமாக அடிக்க ஆரம்பித்துள்ளது” என்றார். இளநீரை முடிக்கும்வரை காத்திருந்தோம். ‘‘கடந்த 20 வருடங்களாக பல்வேறு அரசியல் டயலாக்குகளைத் தனது படங்களில் பேசி வந்திருக்கிறார் ரஜினி. ‘நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்’ என்பது அவரது பிரபலமான டயலாக்குகளில் ஒன்று. அவர் சொன்ன ‘வரவேண்டிய நேரம்’ வந்துவிட்டதாகவே அவரது ரசிகர்கள் இப்போது நினைக்கிறார்கள். ‘இதுவரை தலைவர் சொன்னது எல்லாம் சும்மா. யாரோ தூண்டிவி…
-
- 2 replies
- 3.1k views
-
-
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் டி.டி.வி.தினகரன்! பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார். இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாத சிறைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் தினகரன். நேற்று முன்தினம் சென்னை வந்த தினகரனை அவரது ஆதரவாளர்கள் சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ளது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சியில் இருந்து என்னை யாரும…
-
- 2 replies
- 406 views
-
-
"தினத்தந்தி" நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாலையில் அவரது உயிர் பிரிந்தது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன் 27.9.1936 அன்று பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்த அவர், ஆதித்தனார் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். தந்தி டி.வி. தொலைக்காட்சி நிறுவனத்தையு…
-
- 2 replies
- 1.6k views
-
-
விஸ்வரூபம் எடுக்கும் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வெளிநாடு தப்பியுள்ள இர்பானின் தந்தை வேலூரில் கைதுநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் இர்பானின் தந்தை முகமது சஃபி கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சேர்க்கைக்கு நீட் எனும் தகுதி தேர்வு எழுதுவது இந்தியா முழுவதும் கட்டாயமாகும். இந்த தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னர் பிளஸ் 2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு தமிழகம் உள்ளிட்ட மாநில மாணவர்களுக்கு குதிரை கொம்பாக உள்ளது. வினாத்தாள் கடினமாக இருக்கிறது. அதிலும் மாநில பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இதனால் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிற…
-
- 2 replies
- 689 views
-
-
24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த 17 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் படுகாயமடைந்த மீனவர்கள் தாக்குதல் ந…
-
-
- 2 replies
- 533 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
வைகோ, நெடுமா கெளம்பிட்டாங்க டீமா.. போயஸு காலை தொட்டு... வைரலாகும் கோவனின் அதிரடி பாட்டு சென்னை: தனித் தமிழீழம் அமைய தாம் உதவுவேன் என திருச்சியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஈழ நிலைப்பாடு, அவருக்கான வைகோ, நெடுமாறன், சீமானின் ஆதரவு ஆகியவற்றை விமர்சிக்கும் பாடகர் கோவனின் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூடு டாஸ்மாக்கை மூடு.. பாடலைப் பாடியதால் தேச துரோக சட்டத்தின் கீழ்…
-
- 2 replies
- 917 views
-
-
மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துவந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். தன்னுடைய உடல்நிலையின் காரணமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்…
-
- 2 replies
- 831 views
-
-
எதிர்கட்சி தலைவர் பதவி - ஜெ.நினைவிடம் வரை நீண்ட அதிமுக மோதல்.! சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, கூட்டம் முடிவு எதுவும் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபைக்கான எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக எம்எல்ஏக்கள் சார்பாக நடத்தப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தனியாக 66 இடங்களில் வென்றது. இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடந்தது. 63 அதிமுக எ…
-
- 2 replies
- 937 views
-
-
போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டுமென, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யுத்தக்குற்றவாளியான ஷவேந்திர சில்வாவை இலங்கை அரசாங்கம் இராணுவத்தளபதியாக நியமித்துள்ளது.இது தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 2009-ஆம் ஆண்டு நடந்த போரில் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஷவேந்திர சில்வா.இவ்வாறான ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இவரது தலைமையிலான 58-ஆவது படையணியே போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது. தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
உடை, கம்மல் முதல் நாற்காலி வரை கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவாக மாறிவரும் சசிகலா! அரசியல் தலைவர்கள் தங்களுக்கென தனிஅடையாளம் இருக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள். அரசியல் தலைவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் மாறுபட்டு இருப்பார்கள். அதிலும் பெண் அரசியல் தலைவர்கள் என்றால், கண்டிப்பாக குறிப்பிடும்படியான தனித்துவம் இருந்தே தீரும். அதுபோல அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால், அந்த மாற்றங்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பின்பற்றுவதுபோலத் தோன்றுகிறது. அப்படி அவரைப்போலவே சசிகலா பின்பற்றும் மாற்றங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம். உடை: …
-
- 2 replies
- 916 views
-
-
என்னதான் செய்ய...? - புத்தகக் காட்சி ரத்து! மின்னம்பலம்2022-01-02 தலைநகர் சென்னையில் இன்னும் நான்கு நாள்களில் 45ஆவது புத்தகக்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைப்பதாக இருந்தது. ஒமிக்ரான் கட்டுப்பாடுகளில் புத்தகக்காட்சிகளுக்கு 10ஆம் தேதிவரை அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருப்பதால், அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள், புத்தகப் பதிப்பாளர்கள். என்னதான் டிஜிட்டல் உலகம் என்றாலும் தாளைக் கைவைத்துப் புரட்டிப் படிக்கும் மனநிலை கொண்ட தீராத புத்தக ஆர்வலர்களும் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளனர். ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 23ஆம் தேதிவரை இந்தப் புத்தகக் காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்று கூறலாம். மொத்தம் 800 புத…
-
- 2 replies
- 521 views
-
-
எச்.ராஜாவின் சர்சைக்குரிய ட்வீட்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு, தி.மு.க. போராட்டம் கள்ள உறவில் பிறந்த குழந்தை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை குறிப்பிடும் வகையில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் எச். ராசா தெரிவித்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. தி.மு.க. பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. எச். ராஜா இன்று காலையில் பதிவுசெய்த ஒரு ட்விட்டர் குறிப்பில், "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், ப…
-
- 2 replies
- 770 views
-
-
முதுமலையில் பூத்துக் கொட்டும் மூங்கில் அரிசி; மருத்துவப் பலன்கள் நிறைந்த அரிசியைச் சேகரிக்கும் பழங்குடி மக்கள் முதுமலை முதுமலையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏராளமான இடங்களில் மூங்கில் அரிசி பூத்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட மூங்கில் அரிசி கிலோவுக்கு ரூ.800 வரை விற்பதால் உள்ளூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அரிசியைச் சேகரிக்கும் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிகளில் மூங்கில் செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இங்குள்ள மூங்கில் செடிகள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு முக்கிய உணவாக இருந்து வருகின்றன. அதேபோல உள்ளூர் பழங்குடியின மக்கள் மூங்கிலை உணவாகவும், வீடுகளைக் கட்டுவதற்கும் பயன்படு…
-
- 2 replies
- 561 views
-
-
சென்னை: கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையோ, கடைகளையோ நாத்திகர்கள் உபயோகப்படுத்த முடியாது என்று என்று இந்து அறநிலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் இந்து அறநிலைத்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் நிர்வாகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பப்பட்டுள்ளது அதில் கோவில் சொத்துகளை நாத்திகர்கள் பயன்படுத்தவோ, வாடகைக்கு உபயோகிக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையோ, கடைகளையோ நாத்திகர்கள் உபயோகத்திற்கு விடப்படாது என்றும், இறைச்சி, மதுபானம் போன்றைவை பரிமாறப்படும் விருந்துகளும் அந்த மண்டபங்களில் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னால், திருவாரூர் மாவட்டத்தில…
-
- 2 replies
- 429 views
-
-
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி சட்டத்தரணி உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி காங்கிரஸ் சட்டத்தரணி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சி சட்டத்தரணி பிரிவினை சேர்ந்த வழக்கறிஞர் அய்யலுச்சாமி, காந்தி மண்டப வளாகத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று (செ…
-
- 2 replies
- 606 views
-