தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
"மேகதாது" அணை கட்டுவதற்கு... தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் – எடியூரப்பா மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து உரிமைகளும் கர்நாடகத்திற்கு இருப்பதால், அதற்கான திட்டப் பணிகளைத் ஆரம்பிப்போம் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அல்லது வேறு எந்த மாநில அரசுகள் குறித்து எதுவும் பேசவிரும்பவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு எல்லா உரிமையும் கர்நாடகத்திற்கு இருப்பதால் அதற்கான திட்டப் பணிகளை ஆரம்…
-
- 0 replies
- 456 views
-
-
அரசியல் பிரவேசம்:: ரஜினி மீண்டும் ஆலோசனை.! அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், இன்று சந்தித்து பேச உள்ளாா். அதற்கு முன்பாக சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன். மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளேன் என்றார். முன்னதாக தான் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வர முடியவில்லை என கடந்த ஆண்டு அறிக்கை மூலம் ரஜின வருத்தம் தெரிவித்திருந்தாா். ஆனால் தற்போது அவர் தான் அரசியலு…
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்ததாவது, ' தமிழகத்தில் உள்ள 108 அகதி முகாம்களில், 106 முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெற்றார்களா..? என அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, இவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 5.42 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என …
-
- 0 replies
- 461 views
-
-
கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை நோக்கி எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கு கடந்த டிசம்பர் 3-ம் தேதி பதில் சொல்லியிருந்தார் ரஜினி. டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு, 2021 ஜனவரியில் புதிய கட்சி என ட்விட்டரில் அறிவித்திருந்தார் ரஜினி. தொடர்ந்து தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும் நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ` அரசியலில் மாற்றம் வேண்டும். இப்போ இல்லைன்னா... எப்பவும் இல்லை' என்றும் முழங்கினார். இது ரஜினி ரசிகர்களுக்கு …
-
- 40 replies
- 3.9k views
-
-
"கொங்குநாடு".. கொளுத்திப்போட்டது யாரு.. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் அரசு..! Velmurugan PUpdated: Sat, Jul 10, 2021, 17:54 [IST] "மத்திய அரசை" "ஒன்றிய அரசு" (Union of India என்பதன் தமிழ்ப் பதம் அது) என திமுகவினர் கூறி வருவதால் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் . தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை " கொங்கு நாடு " என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாகவும் இன்று காலை பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது (அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. பிரபல நாளிதழ் 'மத்திய அரசை' 'ஒன்றிய அரசு' (Union of India என்பதன் தமிழ்ப் பதம் அது)…
-
- 10 replies
- 1.6k views
-
-
'தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவு ஓர் அபாயமாக உருவெடுக்கிறது': ஆனந்த் ஸ்ரீநிவாஸன் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 10 ஜூலை 2021, 03:49 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறுகிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன். இதன் காரணமாக அடுத்த 20 ஆண்டுகளில் தமிழ்நாடு பெரும் சிக்கல்களைச் சந்திக்கும் என்கிறார் அவர். பிபிசி தமிழிடம் இது தொடர்பாக அவர் பேசியதிலிருந்து.. கே. தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்கும் விகிதம் தொடர்ந்து குறைந்துவருவது குறித்து கவலைப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டதா? ப. …
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்! மின்னம்பலம்2021-07-09 தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்போதைய பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், மீன்வளம் கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, தகவல் ஒளிபரப்புத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால், தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன், விருப்ப ஓய்வு பெற்ற கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பாஜகவில் இணைந்த அண்…
-
- 0 replies
- 789 views
-
-
டாக்டர் மகேந்திரன் திமுக-வில் இணைந்ததை அடுத்து தற்போது பத்மப்ரியாவும் திமுக-வில் இணைந்திருக்கிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அந்தக் கட்சியிலிருந்து அதிரடியாக விலகினார்கள். அதில் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்து, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியாவும் ஒருவர். மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணையாமல் இருந்துவந்த பத்மப்ரியா, தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்திருக்கிறார்.டாக்டர் மகேந்திரன் திமுக-வில் இணைந்ததை அடுத்து தற்போது பத்மப்ரியாவும் திமுக-வில் இணைந்திருக்கிறார். …
-
- 4 replies
- 985 views
-
-
பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா – ஜெயக்குமார் விளக்கம்! உள்ளுராட்சி தேர்தலிலும் பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் தீர்மானிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விளக்கம் அளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்புகளுக்குப் பிறகே மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவை தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவித்தார். https://athavannews.com/2021/1227208
-
- 0 replies
- 423 views
-
-
திருச்சி டு டோக்கியோ: ``கனவு மாறி இருக்கு!" - ஒலிம்பிக் செல்லும் திருச்சி தனலெட்சுமி வெ.கௌசல்யாதே.தீட்ஷித் Dhanalakshmi ( Photo: Vikatan / Dixith ) ``திருச்சி மைதானத்தில் சிறுமி தனலெட்சுமி ஓடத் தொடங்கியபோது, ஒலிம்பிக்தான் அவளின் உச்ச இலக்கு. இன்று அதை வசப்படுத்தியுள்ளது பெரும் நம்பிக்கை தந்திருக்கிறது". விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter திருச்சியைச் சேர்ந்த ஓ…
-
- 10 replies
- 586 views
- 1 follower
-
-
ஒளிப்பதிவு சட்டமூலத்தை திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்து! மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத் திருத்தமூலத்தை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுத்தியுள்ளார். இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், ‘புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்தங்கள், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஒளிப்பதிவு சட்டத் திருத்தமூலம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என திரைபிரபலங்கள…
-
- 0 replies
- 442 views
-
-
``தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும் இப்படித்தான் பேச வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இது சம்பந்தமான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ``புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசாங்கம், இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகிறது. மேலும் இவ்வாறு அழைப்பதை ஊக்கப்படுத்துகிறது. ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது. இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். மேலும் இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்த பின்புலத்தில் தீவிரவாத சக்தியின் உந்துத…
-
- 0 replies
- 598 views
-
-
மதுரையில் காப்பக குழந்தைகளை லட்சக்கணக்கான விலைக்கு விற்ற சம்பவம்; 2 தம்பதியர் உட்பட 7 பேர் கைது மீட்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு. மதுரை மதுரையில் காப்பக குழந்தைகளை லட்சக்கணக்கான விலைக்கு விற்ற சம்பவத்தில் 2 தம்பதியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர், சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில், சுற்றித்திரியும் முதியவர்கள், குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு உதவி செய்வதோடு, காப்பகங்களிலும் தங்க வைக்க முயற்சி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் மதுரை ஆயுதப்பட…
-
- 0 replies
- 518 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்! கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 5 மற்றும் 6 ஆம் அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும், இந்த இரு அணு உலைகளில் எதிர்வரும் 2027 மற்றும் 2028 ஆண்டுகளில் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் தலா 100 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கனவே 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225692
-
- 0 replies
- 642 views
-
-
பேரறிவாளனின் விடுப்புக் காலம் மேலும் 30 நாட்கள் நீடிப்பு June 28, 2021 Share 43 Views ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரில் ஒருவரான பேரறிவாளன் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு சிறையில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியதையடுத்து, பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்த விடுப்பு தற்போது மேலும் 30 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாத காலம் விடுப…
-
- 0 replies
- 621 views
-
-
சாவி தொலைந்துவிட்டதா? பெட்டியே தொலைந்துவிட்டதா?: திமுக ஆட்சி மீது சீமான் விமர்சனம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டர் பக்கத்தில் ‘‘திமுகதான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது. என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவி…
-
- 2 replies
- 650 views
- 1 follower
-
-
சிறப்பு முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகளுடன் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு June 26, 2021 திருச்சி சிறப்பு முகாம் என்னும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 18வது நாளாகவும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தங்களது போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அகதிகள், எங்களின் பிரதான கோரிக்கை இந்தியாவில் அகதிகளாக உள்ள எங்களை சிறப்பு முகாமில் அடைப்பது ஏன் , நீதிமன்றத்தில் தண்டனை முடித்தவர்களை மீண்டும் சிறையில் அடைப்பது ஏன்? அத்தோடு எங்களை விடுதலை செய்ய வேண்டியும் கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து கொ…
-
- 0 replies
- 512 views
-
-
நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி உறுதி தமிழக சட்டசபையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நீட் தேர்வு விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதே திமுக, அ.தி.மு.க.வின் உணர்வு; தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பா.ஜ.க.-குரல் கொடுக்க தயாரா? - என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டத்திற்கு உட்பட்டு விதிவிலக்கு தரப்பட்டால், பா.ஜ.க ஆதரவு தயார் என நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையை போல கோவைக்கு மெட்ரோ கொண்டுவரப்படாதது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். முத…
-
- 1 reply
- 385 views
-
-
மருத்துவக் கல்வியில்... தமிழ் அகதிகளுக்கு இட ஒதுக்கீடு, வழங்க வேண்டும் – ராமதாஸ் மருத்துவக் கல்வியில், இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத் தமிழர்களுக்கு வழங்கப்படுவதில், பெரும்பான்மையான உதவிகள், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்படுகின்றன. ஆனால் மருத்துவக் கல்வி வாய்ப்பு மட்டும் மறுக்கப்படுவது எந்தவகையிலும் அறமல்ல. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளில் பலர் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்தியாவில் வசிக்க விரும்பும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும் என தி.மு.க …
-
- 0 replies
- 372 views
-
-
’ஒன்றிய அரசு’ என்றுதான் சொல்வோம் : முதல்வர்! மின்னம்பலம் ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளதால் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினோம்; பயன்படுத்தி வருகிறோம்; இனியும் பயன்படுத்துவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஒன்றிய அரசு, தமிழ்நாடு என்கிற வார்த்தை பயன்பாடு அரசு அறிவிப்புகளிலும், அறிக்கைகளிலும், ஊடகங்களிலும் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சொல்லாடல் விவாதப்பொருளாகவும் பேசப்பட்டது. இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டில் மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என்று அழைத்தால், நாங்கள் ’பாரத பேரரசு…
-
- 0 replies
- 699 views
-
-
அரச வேலைவாய்ப்புகளில்... தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, முன்னுரிமை – ஆளுனர் அரச வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பாடசாலைகளில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப, உயிர்ப்புள்ள தமிழ் சமூகத்தில் இணைந்திட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்களை அரசு வரவேற்கும். அதேநேரம் தமிழக மக்களுக்கு குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை தமிழக…
-
- 0 replies
- 482 views
-
-
துறைமுக சட்டமூலத்திற்கு... எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை! மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய துறைமுக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதன்படி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய 9 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் “சிறு துறைமுகங்களை ஒழுங்குப்படுத்துவதாக கூறி மத்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக சட்டமூலம் மாநில அரசின் பல அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளது. இதனால் மாநில அரசின் கீழ் இருக்கும் சிறு துறைமுகங்களின் மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படும் என்பதால் நாளை மறுநாள் மத்திய …
-
- 0 replies
- 214 views
-
-
"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்! HemavandhanaPublished:June 21 2021, 13:32 [IST] சென்னை: "கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டிக்கிட்டு வர்றார் சீமான்.. ஆனால், இதுவரைக்கும் சீமான் என் விஷயத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருக்கார்.. அதனால் முதல்வர் ஸ்டாலின்தான், சீமான் விஷயத்தில் தலையிட்டு, எனக்கு ஒரு நியாயம் பெற்று தர வேண்டும் வேண்டும்" என்று நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார். பள்ளி விஜயலட்சுமி அதுதான் சமீப காலமாக, பத்மா சேஷாத்ரி பள்ளி, சிவசங்…
-
- 98 replies
- 5k views
-
-
"நீட்" தேர்வை... இரத்து செய்ய, சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் – பன்வாரிலால் புரோகித் நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து ஜுலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கை நிதிநிலை அறிக்கை குறித்து அறிந்துகொள்ள பயன்படும். மேலும் நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும். அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும்’ எனத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 424 views
-
-
ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை 36 Views தமிழ்நாட்டில் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் இன்று தொடங்கியது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆற்றிய உரையில், ஆளும் திமுக அரசின் நோக்கம், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அதன் முக்கிய அம்சங்களில் ஒனறாக ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும் ஒன்றிய அரருக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத…
-
- 6 replies
- 1k views
-