அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
தெலங்கானாவில் கால் பதித்தது பாஜக: ஹைதராபாத் தேர்தலில் அசத்தல் வெற்றி ஹைதராபாத் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தெலங்கானாவில் பாஜக வலுவாகக் கால் பதித்துள்ளது. கடந்த முறை வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அந்தக் கட்சி தற்போது பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன. பாஜக எத்தனை இடங்களில் வென்றுவிடும் என்று பார்க்கிறேன் என்று பிரதமர் மோடிக்கு ஏஐஎம்ஐஎம் கட்சி…
-
- 1 reply
- 831 views
-
-
மனித மிருகம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவருக்கு அறுவைசிகிச்சை நிகழ்ந்து, ஒக்சியன் வழக்கப்பட்ட நிலையில் icu ல் இருந்த நிலையில், கணவர், இரவு தங்க முடியாது என்று சொல்லப்பட்டதால் வீடு சென்ற நிலையில், அங்கிருந்த வார்டு பாய் அந்த பெண் மீது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். யாருக்காவது சொன்னால், அனைத்தையுமே பிடுங்கி எறிந்து, கொலை செய்து விடுவேன் என்று வேறு சொல்லி இருக்கிறான். இரவு முழுவதும் அழுத படியே இருந்த பெண், காலையில் வந்த கணவருக்கு, தனக்கு நிகழ்ந்ததை சொல்ல, அந்த கயவன், கைதாகி உள்ளான். Source: thatstamil.com
-
- 1 reply
- 830 views
-
-
இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை. 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது என்பதால் அப்போதும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தர முடியாது என்று நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவித்த…
-
- 2 replies
- 829 views
-
-
லடாக்கில் செய்த தவறுக்காக சீனா மிகப்பெரிய விலை கொடுக்கும்’- ராணுவ நிபுணர்கள் கருத்து லடாக்கில் செய்த தவறுக்காக சீனா மிகப்பெரிய விலை கொடுக்கும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பதிவு: ஜூன் 28, 2020 04:15 AM புதுடெல்லி, லடாக்கின் கிழக்கில் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவிய சீன ராணுவம் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதில் கடந்த 15-ந்தேதி நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் கொல்லப்பட்டனர். இதனால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழ்ந்த இந்த மோதல் சம்பவம் சர்வ…
-
- 0 replies
- 828 views
-
-
பிகார்: மகாகத்பந்தன் முன்னிலை! நிதிஷ்குமாருக்கு பின்னடைவு மின்னம்பலம் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (நவம்பர் 10) வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஒருபக்கமும் ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி ஒருபக்கமும், ராம் விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி ஒரு பக்கமும் என மூன்று முனைப் போட்டியாக இந்த தேர்தல் நடந்தது.எனினும் முக்கியப் போட்டி தேஜகூவுக்கும் மகாகத்பந்தனுக்கும்தான் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக்கியுள்ளன. இன்று காலை 9.30 மணி …
-
- 8 replies
- 827 views
-
-
சீனாவுடனான மோதலை தொடர்ந்து ஆயுதக்கொள்வனவை அதிகரிக்கின்றது இந்தியா July 8, 2020 இந்திய சீன படையினர் மத்தியில் எல்லையில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து இந்தியா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு கொள்வனவு பேரவை 6பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு பேரவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூழ்நிலையில் நாங்கள் எங்கள் எல்லைகளின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு படையினரை பலப்படுத்தவேண்டியுள்ளது என தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு…
-
- 0 replies
- 827 views
-
-
கொவிட் -19 க்கு இடையில் காஷ்மீரில் வருடாந்த 'கீர் பவானி மேளா' அனுஸ்டிப்பு மத்திய காஷ்மீரின் காண்டர்பால் மாவட்டத்தின் துல்முல்லா பகுதியில் ஆண்டுதோறும் இடம்பெறம் 'கீர் பவானி மேளா' இடம்பெற்றது. கொவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் பெருந்தொகை மக்கள் கூட்டங்கள் இன்றி இந்த அனுஸ்டிப்புகள் இடம்பெற்றன. இருப்பினும், சிலர் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். துல்லமுல்லா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரக்னியா தேவியின் கோவிலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள் சுகாதார முறைகளை பின்பற்றி திரண்டனர். தெய்வத்தின் புனித சடங்குகள் மற்றும் ஆரத்தி ஆகியவை கோவிலில் குருக்கள் பாரம்பரிய முறையில் நடத்தப்பட்டன. இந்த மத சடங்கினை சமூக ஊடகங்கள் மூலம் கோவிலுக்கு வரமுடியாமல…
-
- 0 replies
- 824 views
-
-
விக்ராந்த் கப்பலின், சோதனை ஓட்டம் நிறைவு! உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும், கப்பலின் செயல் திறன் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 40 ஆயிரம் டன் எடையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது விமானம் தாங்கி கப்பல் விரைவில் கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதன் சோதனை ஓட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233208
-
- 4 replies
- 822 views
-
-
காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மோடி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இம்ரான் கான், பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் ஏற்படுத்த நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு பதிலடி தருவோம். 18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும். ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்…
-
- 3 replies
- 822 views
- 1 follower
-
-
ரவி பிரகாஷ் பிபிசி ஹிந்தி படத்தின் காப்புரிமை EPA இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்…
-
- 2 replies
- 821 views
-
-
இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு – 2 நாட்களில் 2.72 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்தனர். இந்தியாவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தையில் தளம்பல் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் முதலீட்டாளர்கள் 2.72 லட்சம் கோடியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் அமெரிக்க டொலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணயங்கள் சரிவினை சந்தித்து வருகின்ற நிலையில் , இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் …
-
- 1 reply
- 821 views
-
-
30 AUG, 2023 | 10:59 AM அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. லடாக்கில் குறிப்பிட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் கிழக்கில் பல சதுர கிலோ மீட்டர் பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது. சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது புதிய வரைபடம் ஒன்றை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை ‘அக்ஷ்யா சின்’ என குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் என்றும், தைவானையும் தம்முடைய நிலப் பகுதி என்றும் வரைபடத்தில் சீனா குறிப்ப…
-
- 9 replies
- 817 views
- 1 follower
-
-
பிற மதத்தவர்களை கட்டாய மத மாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது - இம்ரான் கான் மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அதாவது பிற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் விழாக்களை, பண்டிகைகளை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடி மகிழும் வகையில் அவர்…
-
- 2 replies
- 814 views
-
-
சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்கலாம்: ராகுல் காந்தி சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகவும் இவ்விரு நாடுகளும் இணைந்து இந்தியா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். புது டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் இராணுவ வீரா்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே ராகுல் காந்தி இவ்வாறு கூறினார். இந்திய ராணுவ வீரா்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் கல்வான் மற்றும் டோக்லாம் பகுதிகளில் நடைபெற்ற மோதல்கள் ஒன்றுடன் ஒன்று தொடா்புடையவை என்றும் குறிப்பிட்டார். பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவைத் தாக்குவதே சீனாவின் உத்தி …
-
- 11 replies
- 814 views
-
-
பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் 629 பேர் திருமணத்திற்காக சீனர்களுக்கு விற்கப்பட்டுள்ளதும், அவர்கள் சீனாவுக்கு அழைத்து செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2018 முதல் இவ்வாறு பாகிஸ்தான் பெண்கள் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் விசாரணைக்கு பாதியிலேயே தடை விதிக்கப்பட்டது. சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என்பதால், திருமணத்திற்காக பெண்கள் விற்கப்படும் விஷயத்தை விசாரிப்பதற்கு உயரதிகாரிகள் தடை விதித்தனர். இதனால், அக்டோபர் மாதம், பெண்கள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 31 சீனர்களை பாகிஸ்தான் கோர்ட் விடுதலை செய்தது. இந்த வழக்கில், தொடர்புடைய பெண்களுக்கு மிரட்டல் விடப்பட்டன. சிலருக்கு பணம் கொ…
-
- 1 reply
- 814 views
-
-
-
லண்டனில் வசித்து வரும் புஷ்பம் பிரியா சௌத்ரி என்ற பெண், பீகாரின் புதிய முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவித்து பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. பீகார் என்றால…
-
- 14 replies
- 812 views
-
-
"வெள்ள சேதத்திற்கு தமிழக அரசுதான் காரணம்" - கேரளா சாடல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி - "வெள்ள சேதத்திற்கு தமிழக அரசுதான் காரணம்" - கேரள அரசு குற்றச்சாட்டு படத்தின் காப்புரிமைGETTY IMAGES முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திடீரென்று அதிக அளவில் தண்ணீரை தமிழகம் …
-
- 2 replies
- 809 views
-
-
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அலட்சியம் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோதி பேசினார். சென்னை அருகே புதன்கிழமை நடந்த அதிமுக தலைமையிலான கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி, "தமிழகம் நலம்பெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஜெயலலிதா கனவு கண்ட முன்னேற்ற பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்" என்று பேசினார். சென்னை சென்ட்ரலு…
-
- 0 replies
- 809 views
-
-
மியூகோர்மைகோசிஸ்: இந்தியாவில் கோவிட் நோயாளிகளைத் தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’ பட மூலாதாரம், GETTY IMAGES சனிக்கிழமை காலை, மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அக்ஷய் நாயர், மூன்று வாரங்களுக்கு முன்பு கோவிட் -19 தொற்றிலிருந்து மீண்ட 25 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யக் காத்திருந்தார். அறுவை சிகிச்சை அறையின் உள்ளே, காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் ஒருவர் ஏற்கனவே அந்த நீரிழிவு நோய் பாதிப்புள்ள நோயாளிக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவர் அவரது மூக்கில் ஒரு குழாயைவிட்டு, அரிதான ஆனால் ஆபத்தான பூஞ்சை தொற்றான மியூகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றிக் கொண்ட…
-
- 4 replies
- 807 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து தொடங்கிய விவாதம் தற்போது மாலத்தீவை எட்டியுள்ளது. பிரதமர் மோதி மற்றும் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களை அந்நாட்டு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இந்த கருத்துக்கு இந்தியாவை சேர்ந்த பல தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்தீவு தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அங்குள்ள சுற்றுலாத் துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அக்ஷய் குமார், சல்மான் கான், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் பலரும் சுற்றுலாப் பயணத்த…
-
- 3 replies
- 806 views
- 1 follower
-
-
சீனாவை வம்பிழுத்து அவமானப்பட்டது இந்தியா..!! பாகிஸ்தான் அமைச்சர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்தியா, பாகிஸ்தான் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லை பிரச்சினையை பாகிஸ்தானை நோக்கி திசை திருப்ப இந்தியா முயற்சித்து வருகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவத்தினரு…
-
- 1 reply
- 804 views
-
-
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை! அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்று நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் (Attaullah Tarar) இன்று (30) காலை கூறினார். ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்திய ஆயுதப்படைகளுக்கு “முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை” வழங்கிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது தொடர்பில் அட்டாவுல்லா தரார் எக்ஸ் தளத்தில் பதவிட்ட ஒரு அறிக்கையில், எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் தீர்க்கமான பத…
-
-
- 23 replies
- 804 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவார் சந்த் கேலாட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. …
-
- 1 reply
- 803 views
-
-
ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் (J&K Public Safety Act) அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருப்பதற்கு மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி கண்டனம் தெரிவித்துள்ளது. ஃபரூக் அப்துல்லா மீது இந்த சட்டத்தை ஏவியிருப்பது, இந்திய அரசு அப்பட்டமாக சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை காட்டுவதாக அம்னஸ்டி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடந்துவரும் மனித உரிமை மீறல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இது நடந்துள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. "ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் உள்ள ஃபரூக் அப்துல்லா பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக அவரது கைது ஆணை குறிப்பிடுகிறது. மாற்றம் வரும் என்ற வாக்குறுதிக்கு மாற்றாக, அரசிய…
-
- 1 reply
- 803 views
-