அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று! இந்தியாவில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த இருவரே மேற்படி கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் மிகப்பெரிய நெருக்கடி நிலையை இந்தியா எதிர்கொள்ளும் எனவும், இங்கு வைரஸ் தாக்கம் எளிதில் பரவும் சாத்தியம் காணப்படுவதாகவும் உலக சுகாதார மையம் அண்மையில் எச்சரித்திருந்தது. கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளது…
-
- 2 replies
- 338 views
-
-
பாகிஸ்தானில் மசூதியில்... நடத்தப் பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், 30பேர் உயிரிழப்பு: 50பேர் காயம்! பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50பேர் காயமடைந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக அதிகாரிகள் தெரித்தனர். மேலும் துப்பாக்கி ஏந்தியவர்கள் உள்ளே, பிரதான மண்டபத்தில் நிரம்பியிருந்த வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அறிய முடிகின்றது. எனினும், எந்த குழுவும் உடனடியாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. மத்திய பெஷாவரில் உள்ள மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள…
-
- 2 replies
- 299 views
-
-
கொரோனா தடுப்பூசித் திட்டத்தை இந்தியப் பிரதமர் இன்று ஆரம்பிக்கிறார் தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை, இன்று 16 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கிறார். இந்த தொடக்கத்தின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3000 க்கும் மேற்பட்ட இடங்கள் காணொளி காட்சி மூலம் இணைக்கப்படும் தொடக்க நாளில், ஒவ்வொரு இடத்திலும், சுமார் 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை இன்று ஜனவரி 16 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு காணொள் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவது…
-
- 2 replies
- 395 views
-
-
இந்திய ராணுவ வீரரின் ஒரே அடியில் வெலவெலத்துப்போன மசூத் அசார்.. அதிகாரி வெளியிட்ட பரபர தகவல் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இந்திய ராணுவ வீரரிடம் கன்னத்தில் அறை வாங்கி வெலவெலத்துப்போன ஒரு சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு ஏற்றுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பின் தலைவன் பெயர் மசூத் அசார். 1968ம் ஆண்டு பாகிஸ்தானின் பஹவல்புர் என்ற ஏரியாவில் பிறந்தவன். ஹர்குத்-அல்-அன்சார் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டு படிப்படியாக அந்த தீவிரவாத அமைப்பில் பெரிய பதவிக்கு வந்தான். இந்த தீவிரவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் கதவு வழியாக கீழே விழுந்த பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். திங்கட்கிழமையன்று காலை, மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிகள் உள்ளே ஏறிய பிறகு, விமானத்தின் நுழைவாயிலை மூடும்போது, 52 வயது ஹர்ஷா லோபோ விமான ஓடுதளத்தில் விழுந்ததில் அவருக்கு அடிபட்டது. கீழே விழுந்ததில் காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட்ட லோபோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந…
-
- 2 replies
- 728 views
- 1 follower
-
-
நூபுர் ஷர்மா விவகாரம்: "உங்களது பேச்சு மொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது" - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HINDUSTAN TIMES படக்குறிப்பு, நூபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக பல மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய பாஜக-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த விசாரணையின்போது, தான் தெரிவித்த கருத்துக்கு மொத்த இந்தியாவிடமும் நூபுர் ஷர்மா…
-
- 2 replies
- 305 views
- 1 follower
-
-
இலங்கை தொடர்பான சர்வ கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு இலங்கை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. \ எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைநெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளிற்கு முன்னதாக இடம்பெற்ற சம்பிரதாயப்பூர்வமான அனைத்து கட்சி கூட்டத்தின் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இந்தியா த…
-
- 2 replies
- 440 views
-
-
இந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ளது ஐ.எஸ்.எஸ். இந்தியாவின் ஒரு பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முதன் முறையாக உரிமை கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.எஸ் அமைப்பின் செய்தி இணையதளமான Amaq News Agency’யிலேயே இவ்விடயம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதில் விலயாஹ் ஈஃப ஹிண்ட் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களது புதிய மாகாணமாக ஐ.எஸ் அமைப்பு தங்களது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர்- சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதியான அகமது சோபி, தமது அமைப்பை சேர்ந்தவர் என்பதையும் ஐ.எஸ் அமைப்பின் இ…
-
- 2 replies
- 580 views
-
-
திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ். ஆந்திர மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இருப்பினும், அதற்கான வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என்பதற்கான ஆய்வக ஆதாரத்தை தெலுங்கு தேசம் கட்சி நேற்று மாலை வெளியிட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின…
-
- 2 replies
- 510 views
-
-
கொரோனா வைரஸ்: இந்த ஜவுளி நகரம் `இந்தியாவின் இத்தாலியாக' ஆகப் போகிறதா? மொஹர் சிங் மீனா பிபிசி இந்தி படத்தின் காப்புரிமை Getty Images மார்ச் 8 ஆம்தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு (கிரீன்விச்நேரப்படி 23.30 மணி) ராஜஸ்தானில் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு 52 வயதானஆண்ஒருவர் நிமோனியா பாதிப்புடன் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்தது. பில்வாராவில் உள்ள பிரிஜேஷ் பங்கார் நினைவு மருத்துவமனையில், இந்தப் புதிய நோயாளியை 58 வயதான டாக்டர் அலோக் மிட்டல் பரிசோதனை செய்திருக்கிறார். நோயாளி வெளிநாடு சென்று வந்தாரா என்பது பற்றி யாரும் கேட்கவும் இல்லை, அவராகவும் சொல்லவும் இல்லை. தீவிர சிகிச்சைப்பிரிவில்…
-
- 2 replies
- 322 views
-
-
கொரோனாவை தொடர்ந்து இந்தியாவில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் இந்தியாவில் மீண்டும் வெட்டுக்கிளிகள் கூட்டம் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலுள்ள விவசாயப் பயிர்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு படையெடுத்து விவசாயத்திற்கு "கடுமையான ஆபத்தை" ஏற்படுத்தும் என, ஐ.நா., உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது. ஜூலை 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 3.6 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, பின்னர் அங்கிருந்து பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் …
-
- 2 replies
- 760 views
-
-
இந்தியா அதிரடி: தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன. இந்நிலையில், இந்தியாவிடம் 1 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவை இலங்கை செய்திருந்தது. திட்டமிட்டதன் பிரகாரம் அந்த தடுப்பூசி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிடைக்குமென நம்பிக்கைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமான, இந்தியாவின் தற்காலிக இடைநிறுத்தம் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார். …
-
- 2 replies
- 626 views
-
-
படத்தின் காப்புரிமை 3DSCULPTOR அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைப் போன்றே இஸ்ரோவின் வழியும் தனிவழி. உலகின் சில முன்னணி நாடுகளைப் போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இஸ்ரோ. அதற்கான சோதனை முயற்சியில் விலங்குகளுக்கு பதிலாக மனித ரோபோக்களை அனுப்பலாம் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ முடிவு செய்துள்ளது. 'ககன்யான் மிஷன்' திட்டத்தின் கீழ் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக இருப்பதாக இந்திய அரசும் இஸ்ரோவும் தெளிவாக கூறியிருக்கின்றன. …
-
- 1 reply
- 502 views
-
-
எல்லைப் பகுதியில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது : முதல் முறையாக ஒப்புக்கொள்ளும் சீன அரசு! அசல் எல்லைக்கோட்டு பகுதியில் இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் திட்டமிட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் அசல் எல்லைக்கோட்டு பகுதியில் நிகழ்ந்து வரும் மோதல் சீன ஜனாதிபதியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக திட்டமிடப்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வமான அரசு ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லைப் பகுதியில் சீன அரசு திட்டமிட்டு தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக இந்தியா பலமுறை குற்றம் சுமத்தியிருந்தது. இருப்பினும் சீனா இதனை மறுத்து வந்தது. இந்த நிலையில், சீனா முதன்முறையாக இந்தியாவின் குற்றச்சா…
-
- 1 reply
- 211 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANI 20 ஏப்ரல் 2023 ஜம்மு காஷ்மீரின்பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை ராணுவ டிரக் தீ பற்றிய எரிந்த சம்பவத்தை, சில மணி நேர தாமதத்துக்குப் பிறகு 'தீவிரவாத தாக்குதல்' என்று அறிவித்திருக்கிறது இந்திய ராணுவம். இந்த சம்பவத்தில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ள தகவலையும் ராணுவம் உறுதிப்படுத்தியிருக்கிறது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காலியில் இருந்து சாங்கியோட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ராணுவ டிரக் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ராகுலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சூரத் நீதிமன்றம் - இனி என்ன நடக்கும்?20 ஏப்ர…
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு தடை! இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பாகிஸ்தானிலுள்ள உள்நாட்டு ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவது தொடர்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழைக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி சகிப் நிசார், இந்தியாவின் அலைவரிசைகளுக்கு தடை விதித்தால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்திய-திரைப்படங்களை-…
-
- 1 reply
- 385 views
-
-
காசியில் மசூதியை அகற்றி காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்படும்.. அடுத்த குண்டை வீசிய சு.சாமி.!! காசியில் மசூதியை அகற்றிவிட்டு காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்படும் என்று சு.சாமி திருச்சியில் புதிதாக ஒரு குண்டை வீசி விட்டு சென்றிருக்கிறார். முஸ்லீம்களுக்கு அடுத்த சிக்கல் காசியில் காத்திருக்கிறது என்கிறார்கள் சு.சாமி ஆதரவாளர்கள். சென்னையில் இருந்து திருச்சி வந்த சுப்பிரமணியசாமி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. “அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி ஏப்ரல் 2ம் தேதி தொடங்க இருக்கிறது. அந்த பணி 2 ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தனியாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கமிட்டி ராமர் கோவில் கட்டும்…
-
- 1 reply
- 335 views
-
-
அசாம், மிசோரம் இடையே ஏற்பட்ட எல்லைத் தகராறில் இரு மாநிலத்தவருக்கும் நடந்த மோதலில் அசாம் போலீஸார் 6 பேர் உயிரிழந்தனர், காவல் கண்காணிப்பாளர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அசாம் முதல்வரும், மிசோரம் முதல்வரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து கொண்டனர். போலீஸாரால் ஏற்பட்ட வன்முறைக்கு இரு முதல்வர்களும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மிசாரம் முதல்வர் ஜோரம்தங்கா ஆகியோருடன் பேசி சமாதானம் செய்தார். வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 164 கி…
-
- 1 reply
- 247 views
-
-
புற்றுநோய்த் தடுப்பே சிறப்பு! By மருத்துவர் சோ. தில்லைவாணன் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய்க் கண்டுபிடித்தலை ஊக்குவிக்கவும், தடுக்கவும், சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2018-ஆம் ஆண்டில் மட்…
-
- 1 reply
- 381 views
-
-
இந்தியாவில் சமூக இடைவெளி சாத்தியமா? இந்தியாவில் சமூக இடைவெளி சாத்தியமா? சீனாவை மையமாகக் கொண்டிருந்த கரோனா தற்போது ஐரோப்பாவைத் தனது கேந்திரமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் கரோனா பாதிப்பு இதுவரை குறைவாக உள்ள இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருப்பதற்கு தனிமனித இடைவெளி பரிந்துரைக்கப்பட்டது. இதுகுறித்த விவாதங்களில் பலரும் ஒரு பிழையான ஒப்பீட்டைச் செய்துவிடுகிறார்கள். அது சீன மக்கள்தொகையுடன் இந்திய மக்கள்தொகையை ஒப்பிடுவது. 143 கோடியுடன் உலகிலேயே மக்கள்தொகை அதிகமாகக் கொண்ட நாடு சீனா. அதன் பரப்பளவு 95,96,961. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 145 பேர் வசிக்கிறார்கள். இந்தியாவின் பரப்பளவோ சீனாவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 2018-ன் க…
-
- 1 reply
- 413 views
-
-
Published By: VISHNU 03 MAR, 2024 | 05:29 PM பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் தேர்தலும் அதன் பின்னரான அந்நாட்டின் நிலைவரங்களும் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/177818
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதை விருந்துகளில் போதைக்காக பாம்பு விஷம் பயன்படுத்தப்பட்டதாக யூடியூபர் எல்விஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி குஜராத்தி குழு பதவி,ㅤ 5 நவம்பர் 2023 போதை விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பாம்பு விஷத்தை வினியோகித்ததாக யூடியூபரான எல்விஷ் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது இது தொடர்பாக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து, எல்விஸ் மற்றும் அவருடன் சேர்த்து ஏழு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விருந்து நிகழ்ச்சியில் பாம்பு விஷம் கொடுத்ததற்காக இந்த முதல் தகவல் அறிக…
-
- 1 reply
- 517 views
- 1 follower
-
-
9000 கோடியில் ஒரு ரூபாய் கூட விஜய் மல்லையா செலுத்தவில்லை – உச்ச நீதிமன்றில் மத்திய அரசு! 9000 கோடி கடனில் ஒரு ரூபாய் கடனில் விஜய் மல்லையா இதுவரை ஒரு ரூபாயைக்கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வங்கியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதையடுத்து, அவரது சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதனை அடுத்து கடன்களை திருப்பி செலுத்த தயாராக இருப்பதாகவும், தனது மற்றும் தனது உறவினர்களின் சொத்துகளை முடக்கும் வேலைகளை நிறுத்தக் கோரியும் விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனு, உச்சநீதிமன்ற த…
-
- 1 reply
- 378 views
-
-
கொரோனா வைரஸ் உலகை உலுக்கிக்கொண்டுள்ள இந்த தருணத்தில மக்கள் மத பொருளாதார வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும் என பாக்கிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களிற்கு நான் விடுக்கின்ற வேண்டுகோள் இதுதான் என தெரிவித்துள்ள அக்தர் கொரோனாவைரஸ் என்பது சர்வதே நெருக்கடி நாங்கள் சர்வதேச சக்திகள் போல சிந்திக்கவேண்டும மதவேறுபாடுகளிற்கு அப்பால் எழவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் முடக்கப்படுதல் என்பது வைரஸ் பாதிக்காமலிருப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் நீங்கள் சந்திப்புகளில் தொடர்பாடல்களில் ஈடுபட்டால் அது உதவிகரமானதாக அi மயப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 302 views
-
-
மிஸ் இந்தியா 2020ன் ரன்னர்-அப் பட்டம் வென்ற ரிக்சா ஓட்டுனரின் மகள் லக்னோ, உத்தர பிரதேசத்தின் குஷிநகரை சேர்ந்த இளம்பெண் மான்யா சிங். பெமினா மிஸ் கிராண்ட் இந்தியா 2020ம் ஆண்டுக்கான அழகி போட்டியில் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ளார். ரிக்சா ஓட்டுனரின் மகளான இவர் கடந்த கால தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அவர் உணவு, தூக்கம் இல்லாமல் பல இரவுகளை கழித்துள்ளார். சில ரூபாய் பணம் சேமிப்புக்காக பல மைல்கள் நடந்து சென்றுள்ளார். அவர் விரும்பிய புத்தகங்கள் மற்றும் உடைகள் அவருக்கு கிடைக்கவில்லை. அவருடைய பெற்றோர் சிறிய நகையையும் மகளின் கல்வி கட்டணத்திற்காக அடகு வைத்துள்ளனர். கல்வி வலிமையான ஆயுதம் என்று நம்புகிறே…
-
- 1 reply
- 530 views
-