யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
71 topics in this forum
-
வெற்றிலைத் தட்டம் இல்லாத வீடுகளே அன்று இல்லை எனலாம். இளம் பச்சை நிற கொழும்பு வெற்றிலை, ஊர்ப் பாக்கு, கும்பகோணம் ரோஸ் கலர் சுண்ணாம்பு தட்டத்தில் சுற்றிவர இருக்கும். அப்படியே ஒரு பாக்குவெட்டியும் தட்டின் நடுவில் இருக்கும். சீவல் பாக்கு பலருக்கும் பிடிப்பதில்லை. தாங்களே சீவி எடுத்தால் தான் திருப்தி. பாக்கை சீவுவதை விட இந்தப் பாக்குவெட்டியால் வேறு ஏதாவது பயன் இருக்கின்றதா? ********************************* பாக்குவெட்டி --------------------- எங்கள் வீட்டில் ஒரு பாக்குவெட்டி இருந்தது நான் பிறக்கு முன்னேயே அது அங்கே இருந்தது ஒரு தட்டத்தில் எப்போதும் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு சுற்ற…
-
-
- 8 replies
- 665 views
-
-
பிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திரும…
-
-
- 9 replies
- 983 views
-
-
எனது மனைவியின் அறுபதாவது பிறந்தநாளை பிரான்சில் உறவுகளுடன் கொண்டாட போகிறீர்களா? வெளியே எங்காவது போவோமா என்று மக்கள் கேட்டனர். எனக்கும் ஓய்வு தேவை வெளியில் போவோம் என்றேன். கடையை பூட்டவேண்டும் என்றால் எத்தனை நாட்களுக்கு முன் உங்களுக்கு சொல்லவேண்டும் என்றபோது ஒரு கிழமை போதும் என்றிருந்தேன். போன கிழமை இதிலிருந்து இத்தனை நாட்கள் கடையை பூட்ட அறிவியுங்கள் 15 இலிருந்து 25 வரையான வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடுப்புக்களை தயார் செய்யுங்கள் என்றனர். என் மக்களுக்கு மிக மிக சவாலான விடயம் எனக்கு தெரியாமல் எதையாவது செய்வது. தமிழிலோ பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ ஏன் சிங்களத்தில் கூட எனக்கு தெரியாமல் செய்வது கடினம். இது surprise பயணம். அதிலும் இது வெளிநாடு. (பாஸ்போர்ட் கேட்டிருந்தார்கள்) …
-
-
- 14 replies
- 1.4k views
-
-
அழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள். எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அ…
-
-
- 37 replies
- 3.4k views
- 2 followers
-
-
புதியன புகுதலே வாழ்வு! ***************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிசு எனிவரும் நாட்களும் புதிசு புதிதே! பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும் சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்த்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வு கதைகள் சொல்வதும் இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு-இவைகள் எல்லாம் வெறும் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை... இவர்களின் வாழ்வ…
-
-
- 4 replies
- 725 views
-
-
நாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது. தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன. சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது. ******************** புலம் பெயர்ந்த புகை …
-
-
- 6 replies
- 680 views
-
-
புளுகுப் போட்டி -------------------------- மேடைப் பேச்சு சம்பந்தப்பட்ட எல்லாக் கலைகளும் யுத்த காலத்தை தாண்டியும் நன்றாகவே வளர்ந்து விட்டிருந்தாலும், 'புளுகுப் போட்டி' என்ற கலை வடிவம் ஏறக்குறைய முற்றாக அழிந்து போனது நெடுங்காலம் ஒரு கவலையாக இருந்தது. எந்த எந்த ஊர்களில் இந்தக் கலை வடிவம் அந்நாட்களில், 80களின் தொடக்கத்தில், இருந்தது, வளர்ந்தது என்று தெரியவில்லை, ஆனால் நான் வளர்ந்த ஊரில் அன்று மிகவும் செழிப்புடன் இது வளர்ந்து கொண்டிருந்தது. மூளையிலுள்ள நியூரான் நெட்வொர்க் போன்றதொரு மிகச் சிக்கலான ஒழுங்கைளின் வலைப்பின்னலால் உருவாக்கப்பட்டது என்னூர். ஊரில் சில ஒழுங்கைகளின் முடிச்சுகளில் காணாமல் போய், அப்படியே இன்னுமொரு முடிச்சில், நேர விரயம் ஏது…
-
-
- 2 replies
- 458 views
-
-
உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்…
-
-
- 8 replies
- 1.2k views
-
-
பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அ…
-
-
- 8 replies
- 1.5k views
- 2 followers
-
-
உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வரு…
-
-
- 66 replies
- 5.3k views
- 2 followers
-
-
2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, …
-
-
- 32 replies
- 2.9k views
- 1 follower
-
-
மழைப் பாடல்கள் ---------------------------- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ..... என்று சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஆரம்பித்திருப்பார். மங்கல வாழ்த்தில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய பின், மழையைப் போற்றி, பின் சிலம்பின் காப்பியம் கதையை ஆரம்பிக்கும். இங்கு இப்பொழுது ஒவ்வொரு திங்களில் இருந்து ஞாயிறு வரையும் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மாமழை கண்டு, இளங்கோவடிகள் இப்பொழுது இருந்திருந்தால், அவரே சலித்துப் போய் 'மாமழை போதும், மாமழை போதும்' என்று பாடியிருப்பார். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இங்கு தினமும் …
-
- 2 replies
- 667 views
-
-
அண்மையில் Plam Spring California என்ற இடத்தில் போய் 4 நாட்கள் தங்கியிருந்தோம். இந்த தேசம் முழுவதும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் நன்றாக காற்று வீசக் கூடிய இடத்தில் Windmills Farm என்று சிறிய காற்றாலைகளில் இருந்து பெரிய பெரிய காற்றாலைகள் வரை பூட்டி மின்னுற்பத்தி பண்ணுகிறார்கள். ஒருநாள் இதைப் பார்க்க போயிருந்தோம். அவர்களின் உத்தரவுடன் வாகனத்திலேயே பயணித்தபடி பார்வையிடலாம். அவர்களின் அலுவலகத்துக்குள் போனால் காற்றாலை எப்படி இயங்குகிறது.எவ்வளவு மின்சாரத்தை பெற முடியும்.காற்றே இல்லை என்றால் எப்படி மின்சாரம் வழங்குவது. மிக முக்கியமாக இதில் பிரச்சனை வரும்போது எப்படியெல்லாம் திருத்த வேலைகள் செய்யலாம்.உள்ளே போவதற்கு எப்படி போவது. இது…
-
-
- 6 replies
- 877 views
- 1 follower
-
-
முடிவிலி ------------- சமீபத்தில் இங்கே ஒரு பாதிரியாருக்கு பெரிய மாரடைப்பு வந்து கொஞ்ச நேரம் இறந்து போய்விட்டார். பின்னர் அவருக்கு உயிர் திரும்பவும் வந்துவிட்டது. இப்படித்தான் வைத்தியசாலையில் சொன்னார்கள். இது செய்திகளிலும் வந்து இருந்தது. பாதிரியாரும் இடைப்பட்ட, அவர் இறந்திருந்த, நேரத்தில் அவர் வேறு ஒரு இடத்திற்கு போய் வந்ததாகச் சொன்னார். இதை Near Death Experience (NDE) என்று சொல்கின்றனர். இந்த வாழ்வின் முடிவில் இருந்து சாவின் விளிம்பு வரை போய் வருதல். அடிக்கடி உலகில் எங்காவது நடக்கும் ஒரு நிகழ்வு இது. பொதுவாக இந்த அனுபவம் பெற்றவர்கள் அநேகமாக வெளிச்சமான, பிரகாசமான, பூந்தோட்டங்கள் நிறைந்த, வாசனைகள் பரவும், ஒளி சுற்றிச் சுழலும், தெரிந்த…
-
-
- 6 replies
- 795 views
-
-
மேய்ப்பன் ---------------- ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று நாங்கள் ஊரில் சொல்வதுண்டு. ஒருவர் உருப்படி இல்லாமல் இருக்கின்றார் அல்லது உருப்படவே மாட்டார் என்று தெரிந்தால், அவரின் வீட்டில் குறைந்தது ஒரு ஆமையாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாமாக்கும். ஒரு தடவை இங்கு ஒரு அயலவரின் வளர்ப்பு ஆமை காணாமல் போய்விட்டது. நேரடியாக என் வீட்டுக் கதவைத் தட்டினார். 'என்னுடைய ஆமை வீட்டை விட்டு ஓடிவிட்டது, உங்கள் வீட்டிற்கு அது வந்ததா?' என்று கேட்டார். அவரின் கேள்வி விளங்க எனக்கு சில விநாடிகள் எடுத்தது. அவரின் ஆமை இரவோடிரவாகவே ஓடியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். ஒரு ஆமை ஒரு இரவில் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நான் கணக்குப் போடத் தொடங்கினே…
-
-
- 1 reply
- 509 views
- 1 follower
-
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார்…
-
-
- 364 replies
- 38.9k views
- 2 followers
-
-
புலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை. அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது.. வல்லை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்லை சந்தியில்.. தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார். வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இரா…
-
-
- 12 replies
- 1.4k views
- 1 follower
-
-
நேரான நீண்ட ஒரு நடைபாதை. நேர் என்றால் அடிமட்டம் வைத்து கோடு போட்ட ஒரு நேர். இரண்டு பக்கங்களிலும் அடுக்கி வைத்தது போல வீடுகள் அடுக்கடுகாக இருக்கின்றன. நான் தினமும் கடந்து நடக்கும் வீட்டு வாசல்கள். வாசல்கள் அதன் உள்ளிருக்கும் வீடுகளை மறைத்து வைத்திருப்பது போல, முகங்களும் அகங்களை பெரும்பாலும் மறைத்து வைத்து இருக்கின்றனவோ என்று தோன்றும். அகத்தின் அழகோ அல்லது சிக்கல்களோ முகத்தில் அவ்வளவாக வெளிப்படுவதில்லை. தேடித்தான் கண்டறிய வேண்டியிருக்கின்றது. ***** வாசலும் வீடும் ----------------------- வாசல்கள் அழகானவை ஒழுங்கானவை நேர்த்தியாக அடுக்கப்பட்டவை வாசல்களின் உள்ளிருக்கும் வீடுகள் உள்ளே தலைகீ…
-
-
- 6 replies
- 650 views
-
-
நீங்கள் எப்போதாவது பசித்திருந்திருக்கிறீர்களா ஆம் பசித்திருத்தலின் கொடுமையை நான் அனுபவித்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது வெறுங் காலுடன் நடந்துள்ளீர்களா ஆம் பாதணிகள் இன்றி நான் பல நாட்கள் நடந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உடுத்த உடையின்றித் தவித்திருக்கிறீர்களா ஆம் நான் மாற்றுத் துணியின்றிப் பல நாட்கள் இருந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உங்கள் வீடு பிரிந்ததுண்டா ஆம் அகதியாகிப் பலமுறை நான் அலைந்திருக்கிறேன் ஆம் வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல பல நேரம் சுமையாகிறது சில நேரம் சுகமாகிறது …
-
-
- 5 replies
- 587 views
-
-
27.02.2024, அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்த கிளவ்டியாவுக்கு (65) ஆச்சரியமாக இருந்தது. சிறப்பு அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் நின்றனர். அதிர்ந்து போன அவளுக்கு இமைகளை மூடித் திறக்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. அவளது கைகளில் விலங்கை மாட்டிவிட்டார்கள். கிளவ்டியா பெர்னாடி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவள். கடந்த இருபது வருடங்களாக யேர்மனியில்தான் வாழ்கிறாள். கிழக்கு - மேற்கு யேர்மனியைப் பிரித்திருந்த சுவர் உடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகாமையில், 1962 இல் எந்த இடத்தில் சுரங்கம் அமைத்து கிழக்கு யேர்மனியில் இருந்து மேற்கு யேர்மனிக்கு தப்பிக்க முயன்றார்களோ அதற்கு அருகாமையில் உள்ள செபஸ்ரியான் வீதியில் இருக்கும் குடியிருப்பில் ஐந்தாவது மாடிதான் அவளது இருப்பிடம். அவளுக்குத் து…
-
-
- 2 replies
- 603 views
-
-
தலை நிறைய முடி இருந்தாலும் பிரச்சனை. இல்லையென்றாலும் ஒரு சின்னக் கவலை. ***** விழல் ----------- சிவாஜியும் எம்ஜிஆரும் வைத்திருப்பது அவர்களின் தலைமுடி அல்ல என்று அன்று தெரியாது முடி நெற்றிக்கு மேல ஒரு சின்ன மலையாக ஏறி நெற்றியில் சுருண்டு விழ என்ன என்ன செய்ய வேண்டும் என்று அப்படி தலைமுடி இருந்தவர்களிடம் ஆலோசனை கேட்டேன் இரும்புக் கம்பி ஒன்றை மெதுவாக சூடாக்கி அப்படியே சுற்று என்றும் ஒருவன் கொடுத்தான் யோசனை பள்ளிக்கூடத்தில் சூடு அதிகமாகி புரதம் கருகி மணந்தது தான் மிச்சம் படும் பாட்டைப் பார்த்து அம்மா சொன்னார் உனக்கு வாழைக்காய் பட்டை முடி வளையவே வ…
-
-
- 4 replies
- 582 views
- 1 follower
-