நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலகளவில் முழங்கால் மூட்டுவலியால் 240 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தெற்காசிய நாடுகளில் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை காட்டிலும், பெண்கள் இரண்டு மடங்கு கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முழங்கால் மூட்டு வலி பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளில் நான்காம் இடத்தைப் பிடித்திருப்பதாகவும், இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததால் 20 மில்லியன் மக்களுக்கு மூட்டு மாற்று …
-
- 8 replies
- 1.6k views
-
-
உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்க்கான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், பா.ஜ.க பிரமுகர்கள் வழக்கம்போல் பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா வைரஸுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர். எங்கோ சீனாவில்தானே பாதிப்பு என்றிருந்த கொரோனா வைரஸின் வீரியம் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி விட்டது. இந்தியாவில் மட்டும் 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய நிலவரம். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்க்கு இன்றுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 95,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சீனாவைத் தாண்டியும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3,286 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவ…
-
- 0 replies
- 336 views
-
-
கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பு: மனிதர்களிடம் பரிசோதனை செய்ய முடிவு! உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ்க்கு (கோவிட்-19) அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூலையில் வணிகரீதியாக மருந்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்துக்கு புதிய மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில், கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் பயணிக்கு மருந்து வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக…
-
- 0 replies
- 279 views
-
-
மனிதனின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் முக்கியமானது இதய செயலிழப்பாகும். அதிலும், நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளவர்களின் இதயமானது சாதாரணமானவர்களின் இதயத்தைவிடவும் மும்மடங்கு பலவீனமானதாகக் காணப்படும். அதன் காரணத்தினால் இதயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியம். அதேநேரம், இதயப் பாதிப்புகளானது வயதானவர்களுக்கு மாத்திரமல்லாமல் பிறந்துள்ளவர்களுக்கும் வரலாம். சிறுவயதிலும் வரலாம். நடுத்தர வயதிலும் ஏற்படலாம். இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் ஏற்படும் இதய நோய்கள் குறித்து தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு இதயப் பாதிப்புக்கள் ஏற்பட உடல்பருமன், உடல் உழைப்பின்மை, நீரிழிவு நோய் கட்டுப்பாடின்மை, தொடர் மனச்சிதைவு நோய், தொடர் மருத்துவப் புறக்…
-
- 0 replies
- 571 views
-
-
உலகம் முழுவதும் பெப்ரவரி 27ஆம் திகதியன்று உலக மோப்ப உணர்வின்மைக்கான விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தற்போது இந்த பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது. உலகில் மிகவும் அரிதாக இருக்கும் பாதிப்புகளில் மோப்ப உணர்வின்மை என்ற பாதிப்பும் ஒன்று. இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டுமென்றால், அண்மையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான அருவம் என்ற தமிழ் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கேத்தரின் தெரசாவிற்கு இத்தகைய பாதிப்பு இருப்பதாக இயக்குநர் சித்தரித்திருப்பார். தலையில் எதிர்பார விதமாக அடிபடுதல் அல்லது தீவிர வைரஸ் கிருமியின் தொற்று ஆகியவற்றால் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது அனோஸ்மியா எனப…
-
- 11 replies
- 1.2k views
-
-
இரண்டு நாட்களாகச் சிறிது மயக்கமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்த நபரொருவர் வீட்டில் வழமைபோன்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டார் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது நாடித்துடிப்பு குறைவாக இருந்ததால், ஈ.சி.ஜி எடுத்துப் பார்த்தனர். அப்போது அவரது இதயத் துடிப்பு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அவரது இதயத்தின் வலது மேல் அறையிலிருந்து கீழ் அறைகளுக்கு வருகின்ற இலத்திரன் ஒட்டப் பாதையில் முழுமையாகத் தடை ஏற்பட்டதால் அவர் மயங்கிக் கீழே விழுந்துள்ளார் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளனர். இந்த உபாதை தான் ‘இதயத் துடிப்பு முடக்கம்’ (Comple…
-
- 1 reply
- 809 views
-
-
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தோல் வங்கி மூலம் இதுவரை 51 பேருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர். உடலின் மற்ற உறுப்புகளை தானம் செய்வது போலவே தோலையும் தானம் செய்வதன் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..... மனித உடலில் ரத்த நாளங்கள், இதயம், இதயத்தின் வால்வு பகுதிகள், நுரையீரல், சிறுகுடல், சிறுநீரகம், கண், தோல், எலும்பு, முதுகெலும்பு, கல்லீரல், கை என உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தானமாக அளிக்கலாம். இவற்றில், அதிக விழிப்புணர்வின்றி இருப்பது, தோல் தானம்தான். ரத்த வங்கி, கண் வங்கி, எலும்பு வங்கி வரிசையில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சென்னை அர…
-
- 1 reply
- 387 views
-
-
நமது உடல் உறுப்புகளிலேயே, தோலும், அதைச் சார்ந்த முடியும், நகங்களும் மட்டுமே, முழுக்க முழுக்க மரபணுக்களைச் சார்ந்தது என்பது, நம்மில் பலர் அறியாத அறிவியல் உண்மை. ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் ஒருவர், தோல், முடி, நகம் போல், இன்னொருவருடைய தோல், முடி, நகம் இருப்பதில்லை. இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும், அவர்களுடைய தோலும், முடியும், நகங்களும், அவரவர் மரபணுக்களுக்கேற்ப தனித்துவம் வாய்ந்தவை.எனவே தான், என்றென்றும் கைவிரல் ரேகை, மனிதர்களின் தன்னிகரற்ற, யாராலும் மாற்றவியலாத தனித்துவமிக்க அடையாளமாக, உலகெங்கும் சட்ட ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.கரு உருவான எட்டாவது வாரத்தில் உருவாகி விடும், தோலும், முடியும், நகமும், நம் மரபணுக்களோடு இரண்டறக் கலந்திருப்பத…
-
- 0 replies
- 338 views
-
-
தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு! மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் துலானே பல்கலைக்கழக ஆய்வாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புகளை உடலில் கலக்காமல் தடுப்பதில், நமது ஜீரணப் பாதையில் உள்ள பக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அசைவ உணவுகளை உண்பதற்குப் பதில், தாவர உணவுகளை உள்கொள்வதன் மூலம், அந்த பக்டீரியாக்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, உடலில் கொழுப…
-
- 17 replies
- 1.8k views
-
-
உடலில் ஹோர்மோன்கள் சீரற்ற நிலையில் காணப்படுமாயின் அதன் விளைவாக உடல், உள மற்றும் உணர்வு ரீதியாகப் பலவிதமான பிரச்சினைகள் வெளிப்படும். அதன் காரணத்தினால் போஷாக்கான உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதன் ஊடாக ஹோர்மோன்கள் சீராக இயங்கவும் வழிவகுக்கும். அதன் காரணத்தினால் அன்றாட உணவில் புரதச் சத்தைக் கொண்ட உணவு வகைகளை சேர்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக பசியின்மையைத் தவிர்த்துக் கொள்ளலாம். புரதச்சத்தானது பசி உணர்வை சீராக இயங்க வைக்கப் பெரிதும் உதவதோடு ஹோர்மோன் தொழிற்பாட்டுக்கும் பக்க துணையாக அமையும். அதனால் நாளாந்தம் ஒவ்வொரு உணவு வேளையிலும் 20 -, 30கிராம் அளவு புரதச்சத்து உடலுக்…
-
- 0 replies
- 370 views
-
-
மருத்துவ உலகில் நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது ஸ்மார்ட் பேண்டேஜ்கள். அடிபட்டால் காயத்தின் மீது போட்டு கொள்ளும் Bandage-களில் தான், தற்போது புதிய தொழிநுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. காயத்திற்கு போடப்படும் கட்டுகள் இனி மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக இருக்காது. மாறாக ஏற்பட்டிருக்கும் காயத்தை முற்றிலும் குணப்படுத்தும் வகையில் இருக்கும். இதனை சாத்தியப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது SMART BANDAGE-கள். சீன அறிவியல் அகாடமி மற்றும் சீன அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து இந்த ஸ்மார்ட் பேண்டேஜ் வகையை கண்டறிந்துள்ளன. விஞ்ஞானிகளால் கண்டுப…
-
- 2 replies
- 401 views
-
-
பல கலாசாரங்களில் சிறுவர்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும், சிறுமிகள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதுவே பரவலாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து பல சுகாதார அதிகாரிகள் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மனதில் கொண்டு ஆண்கள் எவ்வாறு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கோரப்பட்டாலும், பலருக்கும் இது சம உரிமை சார்ந்த விஷயமாக உள்ளது. எனவே எது சரி? அதைவிட எவ்வாறு சிறுநீர் கழித்தால் ஆணுக்கு சிறந்தது? பல ஆண்களுக்கு நின்று கொண்டே சிறுநீர் கழிப்பது சிரமமாகதான் இருக்கும். ஆனால் அதே சமயம் அதுதான் உடனே செய்யக்கூடியது, அதாவது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதற்கு அதிக நேரம் தேவைப்ப…
-
- 20 replies
- 2.8k views
- 1 follower
-
-
எப்பொழுதும் இளமையாக இருப்பது எப்படி ?
-
- 0 replies
- 400 views
-
-
சீனா உட்பட பல உலகநாடுகளை கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிர் பலி அதிகரித்து வருகிறது. சீனாவை மையமாக கொண்டு பரவி வரும் இந்த உயிர்கொல்லி வைரஸ் விலங்கிடமிருந்தது, மனிதர்களுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. உறுதி இல்லை: சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவ துவங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்நகரில் விற்கப்பட்ட வெளவால்கள் மூலம் இந்த கொடிய வைரஸ், மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் என வலுவாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. அச்சுறுத்தும் வெளவால்கள்: சார்ஸ் மற்றும் மெர்ஸ் உள்ளிட்ட பல கொடிய வைரஸ்கள் வெளவால்கள் மூலமே பரவியதாக கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதே போல நிபா , எபோலா போன்ற வைரஸ்கள், பழம்தின்னி வெளவால்கள் மற்றும் மற…
-
- 0 replies
- 709 views
-
-
உலக மக்களில் கணிசமானோரின் உயிரைப் பறிக்கப்போகும் புற்றுநோய்: எச்சரிக்கை அறிக்கை! எதிர்வரும் இரு தசாப்தங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் தொகை 60 வீதத்தால் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, புகைத்தல், கல்லீரல் அழற்சி மற்றும் எச்.பி.வி.வைரஸ் தொற்று என்பவற்றைக் குறைக்க உரிய நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. புகையிலைப் பாவனையிலான மாற்றம், நோய்களுக்கு சிறப்பான எதிர்ப்பு மருந்துகளை வழங்குவது என்பவை மூலம் 7மில்லியன் பேரின் உயிரைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும் என அந்த அமைப்பு கூறுகிறது. அத்துடன், குறைந்த மற்றும் ந…
-
- 0 replies
- 280 views
-
-
அண்மைக் காலமாக நோயாளர்களிடம் ‘மீள் அபிப்பராயம் பெறுதல்’ என்னும் சொல்லாடல் பிரபலமாகி வருகிறது. எந்தவொரு உடல்நலப் பிரச்சினைக்கும் முதலில் ‘குடும்ப மருத்துவரிடம்’ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு மாறாக ‘சிறப்பு மருத்துவரிடம்’ நேரடியாகச் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வழிமுறைக்கு மக்கள் மாறிய பின்னர், பல நேரங்களில் ஒரு மருத்துவர் கூறும் ஆலோசனையை அப்படியே அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஊடகங்கள் வழி அவர்கள் தெரிந்து வைத்திருப்பதையும் இணையதளங்களில் தேடித் தெரிந்து கொண்டதையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். சந்தேகமோ குழப்பமோ ஏற்படும்போது முதலில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனை சரியா தவறா என்பதைத் தெரிந்துகொள்ள மற்றொரு மருத்துவரிடம் கருத்துக் கேட்க விரும்புகின்றனர். இப்படி ‘இரண்டாம் மருத்துவ ஆலோசனை’…
-
- 0 replies
- 667 views
-
-
மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் உடலின் பிற பாகங்களில் உண்டாகும் புற்றுநோயை குணப்படுத்தும் முறை ஒன்றை கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த முறை இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் சோதிக்கப்படவில்லை என்றாலும், இது புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் மிக்கது என்று 'நேச்சர் இம்யூனாலஜி' எனும் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள இதன் முடிவுகள் கூறுகின்றன. புதிய கன்டுபிடிப்பு என்ன? உடலின் நோய் எதிர்ப்பு அ…
-
- 0 replies
- 286 views
-
-
வைரஸ் பரவும் போதெல்லாம் மக்கள் முகத்துக்கு சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து மூடிக் கொள்ளும் படங்களைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அவற்றைப் பயன்படுத்துவது உலகம் முழுக்க பல நாடுகளில் இது வழக்கமாகிவிட்டது. சீனாவில் அதிகமான மாசுபாட்டில் இருந்து காத்துக் கொள்வதற்காக பலர் இதை அணிந்து வந்த சூழ்நிலையில், இப்போது கரோனா வைரஸ் பரவும் ஆபத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக அதிகமானோர் இதைப் பயன்படுத்துகின்றனர். காற்றில் வரும் வைரஸ் பரவுவதைத் தடுக்க இது எந்த அளவுக்கு திறன்மிக்கதாக இருக்கும் என்று வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். கைகளில் இருந்து வாய் மூலமாக தொற்று பரவாமல் தடுப்பதில் இந்த முகத்திரைகள்…
-
- 0 replies
- 297 views
-
-
சீனாவின் ஹுபே மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் ஆரம்பித்த உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தாக்கம் இன்று முழு உலகத்துக்கும் ஓர் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச மருத்துவ அமைப்புக்கள் திணறிக் கொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து மீண்டு வருவது என்பதே இன்று உலக வாழ் மக்கள் மத்தியில் பாரிய சவாலாகமாறியிருக்கின்றது. வுஹான் நகரில் நபரொருவர் ஒருநாள் காலையில் எழுந்தபோது மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு வைத்தியரிடம் சென்று தன்னைப் பரிசோதித்திருக்கின்றார். அப்போது அவரை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த நபரின் உடலில் தொற்றியிருக்கின்ற வைரஸ் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போதிருந்து பரவிய இந்த உயி…
-
- 1 reply
- 809 views
-
-
சாப்பிட்டு கொண்டிருக்கும்போது புரையேறினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள் என வேடிக்கையாக சொல்லி கொள்வோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் குறித்து தற்போது பார்ப்போம். பொதுவான கருத்து: சாப்பிட்டு கொண்டிருக்கும் போதோ, மடக்கு மடக்கென்று வேகமாக தண்ணீர் குடிக்கும் போதோ திடீரென்று புரை ஏறி அவஸ்தைபடுவோம். அவசரகதியில் சாப்பிட்டால் இப்படித்தான் நேரும் என பொதுவாக தெரியுமே தவிர்த்து, புரை ஏறுவதற்கு உரிய காரணம் குறித்து நிறைய பேருக்கு தெரியாது. அருகருகே இருக்கும் குழாய்கள்: மனிதனின் உடல் அமைப்பு மற்றும் உள்ளுக்குள் இருக்கும் உறுப்புகளின் அமைப்புகள் வியக்கத்தக்க அதிசயங்களாக உள்ளன. அந்த வகையில் நாம் சாப்பிடும் அனைத்தையும் உள்வாங்கி அனுப்பு…
-
- 0 replies
- 446 views
-
-
கிழங்கு வகையைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா? மின்னம்பலம் உருளைக்கிழங்கு சிப்ஸுக்கும் ரோஸ்ட்டுக்கும் மயங்காதவர் உண்டா? சேனை சாப்ஸைத் தட்டில் வைத்தால் ஒதுக்கிவிடத்தான் முடியுமா? அத்துடன், வீட்டுக்குக் காய்கறிகள் வாங்கும்போது கண்ணில்படும் கிழங்கு வகையையும் சேர்த்தே வாங்கி வருவோம். ஆனால், ‘மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடானவை. எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும்’ என்று பலரும் ஆலோசனை சொல்வதைப் பார்க்கிறோம். இன்னொருபுறம் கேரட், பீட்ருட் போன்றவற்றில் சத்துகள் அதிகம் என்று சொல்வதையும் கேட்கிறோம். எது சரி... எது தவறு? ‘‘நம்முடைய அன்றாட உணவில் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றை நேரடியா…
-
- 0 replies
- 526 views
-
-
இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்களும் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர். நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும். நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் த…
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
ஜெனிஃபர் கோப்ரெட்ச்க்கு தனது 17 வயதில்தான் 'தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது' என்ற செய்தி தெரிய வந்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்ணான ஜெனிஃபர் கோப்ரெட்ச் சமீபத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். இறந்த பெண் ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கர்ப்பப்பை மூலம் ஜெனிஃபருக்கு இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் "அமெரிக்காவில், இறந்த கொடையாளரிடமிருந்து பெற்ற கர்ப்பப்பைமாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பிறந்த இரண்டாவது குழந்தை" என்ற சிறப்பையும் இந்தக் குழந்தை பெற்றுள்ளது. ஜெனிஃபர்-ட்ரு தம்பதியினர் அமெரிக்காவில் கர்ப்பப்பைமாற்று அறுவைசிகிச்சையில் பிறந்த முதல்…
-
- 0 replies
- 1k views
-
-
நீண்ட ஆயுளையும், உடல்நலத்தையும் பெற நீங்கள் செய்ய வேண்டியவை… வாழ்க்கைமுறை ஆரோக்கியமானதாக இருந்தால் புற்றுநோய், இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் இல்லாமல், ஆயுள் பெண்களுக்கு 10 ஆண்டுகளும், ஆண்களுக்கு ஏழு ஆண்டுகளும் அதிகரிக்கும் என்று உடல்நலம் குறித்த ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், மது குடிப்பதை மிதமான அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும், உடல் எடை ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும், உணவு வகைகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும், புகைபிடிக்கக் கூடாது என்று பல ஆலோசனைகள் இதில் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 111,000 பேரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வந்தனர…
-
- 0 replies
- 371 views
-
-
இன்றைய அவசர உலகில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல், அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை, எல்லோருமே காலைச் சிற்றுண்டியை தவிர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. வேலையில் செயல்திறன் குறையும்; மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என காலைச் சிற்றுண்டியின் முக்கியத்துவத்தை மருத்துவர்கள் எடுத்துக் கூறியும், அரைகுறையாகத்தான் காலையில் சாப்பிடுகிறார்கள். இதற்குத் தீர்வாக, ஒரு முழுமையான உணவு என்று பார்த்தால் அது முட்டைதான். உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.நிறைய பேருக்குப் பிடித்த உணவும்கூட. முட்டையில், உடலுக்குத் தேவையான அனைத்து தாதுப்பொருட்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது என்பதோடு, உயர்ந்த செரிமான…
-
- 0 replies
- 493 views
-