நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3022 topics in this forum
-
உடல்நலத்தை காக்கவல்ல அற்புத மருத்துவ மூலிகை நீர் முள்ளி...!! இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. சிறுநீரை பெருக்கும். வியர்வையை தூண்டும். உடலை ஊட்டம் பெறவைக்கும். நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருக தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். நீர்முள்ளிச்செடியின் விதைகள் உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவை. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய நச்சு …
-
- 0 replies
- 1k views
-
-
இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கை! இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் போன்றவைகளே இந்த நோயின் அறிகுறிகள் என வைத்தியர் தெரிவித்துள்ளார். தும்மல் ஊடாக இந்த தொற்று மற்றவருக்கு பரவுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்புளூவன்ஸா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அன்டிபயட்டிக் மருந்துகளை பெறுவதில் எந்த மாற்றமும் ஏற்பட…
-
- 0 replies
- 271 views
-
-
மிச்செல் ராபர்ட்ஸ் சுகாதார பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் மாதத்தில் ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால், கருத்தரிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது பெண்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் கூறுகின்றனர். மாத்திரையை விழுங்கி…
-
- 0 replies
- 855 views
-
-
இன்றைய காலகட்டத்தில் stress என்ற வார்த்தையை உபயோகிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். தினம் தினம் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகமானால் மன நோயை தூண்டி மன உளைச்சலை உண்டாக்கும். இவையெல்லாம் இப்பொழுது சர்வசாதாரணமாக அனைத்து வயதினருக்கும் ஏற்புடையதாகிவிட்டது. பள்ளியில் படிக்கும் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்வார்கள் stress என்பதற்கான அர்த்தத்தை... மன அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் என்ன? அதனை தடுப்பதற்கு என்ன வழிமுறைகளை கையாளலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்... மன நோய் என்றால் என்ன ? ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளில் இருந்தே தொடங்குகிறது மன அழுத்தம். சிறு வயதில் நமக்கு பிடித்த ஒரு பொருளை அப்பா வாங்கிதராமல் இருப்பின் எழும் பிடிவாத தன்மையும் எ…
-
- 0 replies
- 487 views
-
-
எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் எச்.ஐ.வி / எய்ட்ஸ் அடிப்படைகள் எய்ட்ஸ் என்றால் என்ன? பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ். எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக…
-
- 6 replies
- 55.7k views
-
-
படத்தின் காப்புரிமை FAMILY PHOTO Image caption மார்பக புற்றுநோய் அறிகுறிகளை ஆண்களும் சோதித்து பார்க்க வேண்டும் என்கிறார் வின்ஸ் கிட்சிங். ஆண்களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து உள்ளதால், தங்கள் உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். 69 வயதுடைய வின்ஸ் கிட்சிங் தனது மார்பின் இடது பக்கத்தில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெற உடனடியாக தனது மருத்துவரை அணுகினார். பரிசோதனையில் அந்த கட்டியின் ஆபத்தை அறிந்த பிறகு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. மே மாதம் கண்டறியப்…
-
- 1 reply
- 449 views
-
-
புற்றுநோயிலிருந்து சிகிச்சை பெற்று தேறுவோரை அதிகம் பாதிக்கும் இதய நோய்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 10 சதவீதத்தினர் உயிரிழப்பதற்கு இதயம், இரத்தக் குழாய் தொடர்பான சிக்கல்களே காரணம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக 28 சதவீதமான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 30 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட குறித்த ஆய்வைப் பற்றி BBC உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 3 லட்சத்து 23 ஆயிரம் புற்றுநோயாளிகளில் 38 சதவீதமானவர்கள் நோய்த் தாக்கம் காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 சதவீதமானவர்கள் இதயம், இரத்தக் குழாய் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்தனர். சிறுநீரகம், குரல்வளை, …
-
- 0 replies
- 393 views
-
-
எனது நண்பன் கேட்டான் , மச்சி வண்டியை எப்படியடா குறைக்கிறது என்று , யாழ் உறவுகளுக்கு தெரியுமா சுகமான முறையில் வண்டியை எப்படி குறைப்பது என்று / தெரிந்தா பதிவுடுங்கோ நன்றி
-
- 31 replies
- 4.6k views
- 1 follower
-
-
எம்மில் பலருக்கு கோடை காலம், குளிர் காலம், பனிகாலம், மழைக்காலம் என ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ற வகையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆஸ்மா பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறியும் பரிசோதனையை செய்து, அதன் மூலம் ஒவ்வாமையையும் தூண்டும் காரணிகளை தவிர்த்தால் ஆஸ்மா பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம். பொதுவாக கோடை காலங்களில் காற்றில் மாசு பறக்கும். அதிலும் குறிப்பாக வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள புறச்சூழலில் தூசுகள் காற்றில் மிதக்கும். இவற்றை சுவாசிக்கும் பொழுது ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆஸ்மா பாதிப்பு உருவாகிறது. சிலருக்கு கோடையில் மலரும் மலர்களால் அதன் மகரந்தங்களால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் கார…
-
- 1 reply
- 456 views
-
-
'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange 20 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழுப்புணர்வு ஏன் முக்கியம்? #iamthechange (Be the Cha…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
பௌலா மிக்கிராத் சுகாதார பிரிவு, பிபிசி பெண்ணுறுப்பு பற்றி பல தவறான கட்டுக் கதைகள் சமூக ஊடகங்களில் உள்ளன. அத்தகைய தவறான தகவல்களை இனம்கண்டு திருத்துவதை தனது பணியாக ஒரு பெண் செய்து வருகிறார். அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த 25 ஆண்டுகளாக மகப்பேறு மற்றும் பெண்கள் நல சிறப்பு மருத்துவராக இருக்கிறார் ஜென் குன்டர்.…
-
- 1 reply
- 967 views
-
-
மனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்! மனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், மனித குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான பயன்மிக்க நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை, முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரிய கதிரிலுள்ள புற ஊதா கதிர்கள், தோலின் மீது படும்போது, விற்றமின் – டி, நம் உடலில் உற்பத்தியாகிறது. குடலில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதற்கு, இந்த விற்றமின் – டி மிகவும் அவசியமாகின்றது. அந்த வகையில் குடலின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக, குடலில…
-
- 0 replies
- 263 views
-
-
குழந்தையின் விநோத நோயால் கைவிட்ட பெற்றோர்; உதவ முன்வரும் முகம் தெரியாதவர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇத்தாலியின் டூரின் நகரில் நான்கு மாதங்களாக செவிலி தாய்மாரால் இந்த குழந்தை பராமரிக்கப்பட்டது. விநோதமான தோல் பாதிப்புள்ள, நேரடி சூரிய வெளிச்சத்தில் காட்டாமல் வைக…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
டெங்கு காய்ச்சலானது கொசுக்கள் மூலமாக மட்டுமல்ல, டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு கொண்டாலும் பரவும் என்பது ஸ்பெயினில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டெங்கு வைரசானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு பரவுகின்றது. ஏடிஸ் என்ற கொசுக்கள் கடிப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த காய்ச்சல் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர். இந்நிலையில் டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு வைத்துக்கொள்வதாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதை ஸ்பெயின் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர், கடந்த செப்டம்பரில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்…
-
- 0 replies
- 784 views
-
-
போதை தெளிவதற்கு உலகில் பின்பற்றப்படும் சில விசித்திரமான வழிகள்.! தற்போது விடுமுறை நாட்கள் வந்தாலே, பலர் பார்ட்டி அல்லது நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாடுகிறேன் என்று மது அருந்துவார்கள். சிலர் உடல் அலுப்பு நீங்குவதற்கு சரக்கு அடிப்பதாக கூறுவார்கள். அப்படி ஒரு நாள் வார விடுமுறையில் வயிறு நிறைய மது அருந்திவிட்டு, மறுநாள் அலுவலகம் செல்ல முடியாதவாறு பலர் ஹேங்ஓவரால் கஷ்டப்படுவார்கள். பொதுவாக ஹேங்ஓவர் பிரச்சனை அல்லது போதை தெளிவதற்கு எலுமிச்சை ஜூஸ், ப்ளாக் டீ போன்றவற்றை குடிப்போம். இது அனைவருக்குமே தெரிந்த பொதுவான வழிகள். ஆனால் உலகின் சில பகுதிகளில் இந்த ஹேங்ஓவரில் இருந்து விடுபட பல வித்தியாசமான மற்றும் விசித்திரமான வழிகளைப் பின்பற்றுகின்றனர். உங்களுக்கு அந்த வழிக…
-
- 9 replies
- 6.9k views
-
-
அமெரிக்காவில் பருமனான மாகாணம் எது தெரியுமா? – வித்தியாசமான ஆய்வின் முடிவை பாருங்கள்! அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் பருமனானவர்கள் அதிகம் வாழ்கின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. பருமன் பிரச்சினை சார்ந்த ஆய்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள வொலட் ஹப் என்ற இணையத்தளம் அமெரிக்காவில் பருமனானவர்கள் அதிகம் உள்ள மாகாணங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியுள்ளது. குறித்த ஆய்வில், “அமெரிக்காவின் வொஷிங்டன் உட்பட 30இற்கும் அதிகமான மாகாணங்களில் உடல் பருமன் மற்றும் எடை அதிகரித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தினோம். இதில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் எடை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 315 views
-
-
ஆஸ்திரேலியா முழுக்க கழிவுநீரை ஆய்வு செய்ததில், பணவசதி உள்ளவர்கள் மற்றும் ஏழைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்ற வித்தியாசத்தைக் காண முடிந்தது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் ஆய்வகத்தில், வழக்கத்திற்கு மாறான சில சோதனைப் பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன: ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மேற்பட்டோரின் மனிதக் கழிவுகள் அங்கு சேமித்து, பத்திரப்படுத்தப் பட்டுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உறைய வைக்கப்பட்டு இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வேறுபட்ட சமூக வர்க்கத்தினரின் உணவுப் பழக்கங்களைப் பற்றி அறிவதற்கு உதவும், புதையல்க…
-
- 0 replies
- 681 views
-
-
இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகெங்கிலும் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உடல் உள ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மதுசாரப் பாவனை விளங்குகின்றது. இப்பாவனை காரணமாக வருடமொன்றிற்கு உலகளாவிய ரீதியில் கிட்டத்திட்ட 3மில்லியன் மக்கள் மரணிக்கின்றனர். அதாவது உலகில் வருடம் ஒன்றிற்கு ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 6வீதமான மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாக மதுசார பாவனை உள்ளது. அத்தோடு உலகில் ஏற்படும் நோய்களில் 5.1வீதமான நோய்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையைப் பொறுத்தவரையில் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 23000பேர் மதுசார பாவனையினால் மரணிக்கின்றனர். 297மில்லியன் இலங்கை ரூபாய் மதுசார பாவனைக்காக எமது மக்களால…
-
- 1 reply
- 1.2k views
-
-
மனிதன் ஒரு பாலூட்டி குரங்கு வகையை சார்ந்தவன்...அதனால் மனிதனால் பிற விலங்கினங்களின் பால்களை(மாடு, ஆடு, எருமை) இன்னமும் முழுமையாக ஜீரணிக்க பழகவில்லை... இந்தியாவில் மட்டும் 10 இலட்ச மக்களால் பிற விலங்குகள் பாலை ஜீரணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்...மேலும் பலருக்கு வயது கூட கூட பால் ஒரு செரிக்க முடியாத உணவாகவே மாறி விடுகிறது... காரணம் பல பாலூட்டிகள் போல நம்மால் வயது கூடியவுடன் பாலிலுள்ள 'லேக்டோஸ்' (Lactose) எனப்படும் பால்சர்க்கரையை செருமிக்க முடியாது... மதங்கள் பெரும்பாலும் பாலை தெய்வத்தின் அருட்கொடையாக மக்களுக்கு போலியாக காட்ட முனைந்தாலும் அறிவியல் மனிதனும் பரிணாமத்திலிருந்து வந்த ஒரு விலங்கினம் என்ற உண்மையான வரலாற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது... ஆக வயது க…
-
- 0 replies
- 577 views
-
-
படத்தின் காப்புரிமை Jeff J Mitchell அதிக எடை மற்றும் உடல் பருமனான நபர்களின் நுரையீரலில் கொழுப்பு திசுக்களை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர். 52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பிஎம்ஐ எனப்படும்உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதை கண்டறிந்தனர். உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமா அபாயம் அதிகரிக்கிறது என்பதையும், இந்த கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். …
-
- 0 replies
- 834 views
-
-
வளர்ந்த நாடுகளில் 4.6 மில்லியனும், வளர்ந்து வரும் நாடுகளில் 5.4 மில்லியனும், புற்றுநோயின் தாக்குதலுக்கு உட்படுகின் றனர். பொதுவாக இந்தியாவில் 1 லட்சம் ஜனங்களில் 110 ஆண்களும், 120 பெண்களும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது. உலகில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில், உணவுக்குழாய் புற்றுநோயும் ஒன்று. உணவுக்குழாய் என்பது (Esophagu) தொண்டை முதல் வயிற்றின் மேல்பகுதிவரை (cardia) அமைந்துள்ள ஒரு குழாய். இக்குழாயைத் தாக்கும் புற்றுநோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உணவுக்குழாயின் அடிப்பகுதி, ‘லைன் ஆஃப் கன்ட்ரோல்’ போல் செயல்படுகிறது. வாயில் சுரக்கும் உமிழ்நீரை (எச்சில்), அல்கலைன் அல்லது காரம் என்று சொல்லலாம். இரைப்பைக்குள் உருவா…
-
- 3 replies
- 15.3k views
-
-
உடல் எடை அதிகமாக உள்ளதா? - இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான் படத்தின் காப்புரிமை Getty Images மன உறுதியுடன் இருந்தால் உடல்பருமனை குறைக்க முடியும் என மக்கள் நம்பலாம் ஆனால் ஆராய்ச்சிகள் வேறு சில உண்மைகளை சொல்கின்றன. உடல்பருமன் உண்மைகள் எனும் ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உடல் எடையை பாதிக்கும் ஐந்து ஆச்சர்ய உண்மைகளை இங்கே படிக்கலாம். படத்தின் காப்புரிமை J…
-
- 0 replies
- 846 views
-
-
சிலிரிப்பு என்பது பொதுவாக அனைத்து மனிதர்களும் உணர்ந்திருக்கக்கூடிய ஒரு உடல் மாற்றமாகும். இதன்போது உடலின் தசைப் பகுதிகள் இறுக்கமடைவதுடன், உடலிலுள்ள உரோமங்கள் நிமிர்ந்த நிலையில் காணப்படும். ஆச்சரியம் மற்றும் பீதி ஏற்படும் சந்தர்ப்பங்களில் இதனை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். இந்த உணர்வுக்கான ஆச்சரியம் தரும் காரணம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஆழ்மனத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிரீனலின் எனப்படும் ஹோர்மோன் வெளிவிடப்படும்.இது சிறுநீரகங்களுக்கு மேலாக காணப்படும் இரு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹோர்மோன் ஆகும். இந்த ஹோர்மோன் ஆனது தோல் தசைகளில் ஏற்படும் சுருக்கத்திற்கு காரணமாக இருக்கின்றமை மாத்திரமன்றி பிற உடல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இதன்…
-
- 0 replies
- 404 views
-
-
மூளைக்கு ஓய்வு ஆயுளுக்கு நீட்சி! மனிதர்களிலும் உயிரினங்களிலும் ஆயுள் என்பது வரையறை உடையது! இது எப்படி வரையறுக்கப் பட்டிருக்கிறது என்ற விளக்கம் தெரிந்தால் ஆயுளை நீட்டிக்கும் வல்லமை சாத்தியமாகும் என்ற கோணத்தில் தான் வயதாவது, ஆயுள் நீட்டிப்பு தொடர்பான ஆய்வுகள் நகர்கின்றன. ஏற்கனவே சில உயிரியல் காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்வுகாலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இனங்காணப் பட்டிருகின்றன. விலங்குக் கூட்டத்தில், அனுசேப வீதம் (இது சக்தியை உடல் எரிக்கும் வேகம்) குறைந்த விலங்குகளான யானை, ஆமை போன்றவை அதிக அனுசேப வீதம் கொண்ட எலி, பூனை போன்றவற்றை விட ஆயுள் காலம் கூடியவை. இதை அடிப்படையாக வைத்து நடந்த ஆய்வுகளில், எலிகளில் கூட அவை உள்ளெடுக்கும் கலோரிகளை உணவுக் கட்டுப் பாட்டினால் குறைத்…
-
- 0 replies
- 921 views
-
-
மெதுவாக நடப்பவர்களுக்கு 45 வயதுக்கு மேல் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது மெதுவாக நடந்து பழகியவர்களுக்கு அல்சைமர் போன்ற நோய்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மெதுவாக நடப்பவர்களின் நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு மூளையின் மேற்பரப்பில் சிறிய புள்ளிகள் இருப்பது தெரியவந்தது. இந்த அறிகுறிகள் வயதானவர்களுக்கு ஏற்படுவதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மேலும் வேகமாக நடப்பவர்களை விட மெதுவாக நடப்பவர்களுக்கு ஐ.க்யூ திறன் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே நடப்பதெல்லாம…
-
- 1 reply
- 557 views
-