நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் கூட, செக்ஸ் இன்பத்தி்ற்கு தேவையான சக்தி உள்ளது என்பதை பலரும் அறியாத தகவல். அதை அறிந்து நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், செக்ஸ் கலையில் நாம் வெற்றி பெறுவது உறுதி. ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. அந்த உணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றினால் தான், செக்ஸ்-ல் நாம் வெற்றி பெற்றதாதக அர்த்தம். கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு உள்ளது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும் கூட காரணமாக இருக்கலாம். திருமணமான அனைவரும் மனநிறைவுடன் உள்ளார்களா என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான செக்ஸ் ம…
-
- 1 reply
- 775 views
-
-
அசைவ உணவுகளில் ஒன்றான ஆட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆட்டிறைச்சியில் கொழுப்புச்சத்து நிறைந்திருந்தாலும், அதில் சில ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன. ஆட்டிறைச்சியில் உள்ள சத்துக்கள்: விட்டமின் பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளான சோடியம், பொட்டாசியம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மருத்துவ பயன்கள்: ஆட்டிறைச்சியில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்ப…
-
- 0 replies
- 856 views
-
-
வாழையடி வழை என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். வாழைக்கு அழிவே கிடையாது, அதன் தண்டு, காய், பழம், பூ, இலை, நார், பட்டை என எல்லாவற்றையும் நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் வழையின் மருத்துவ குணங்கள் பல. இதில் வாழைப்பூ பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கின்றது, ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். * வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். * பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ள…
-
- 1 reply
- 677 views
-
-
பழங்களின் அரசனான மாம்பழத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை இருப்பதாக லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளனர். மனிதனை மிரட்டும் முக்கியமான வியாதிகளில் புற்று நோய் முதன்மையானது. இதற்கு சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு தெரியாது எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தம் ஒரு கொடிய நோயாக உள்ளது. இந்த நோயால் பாதித்தால் குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் வந்தாலும் அவை முழுமையாக குணப்படுத்தும் என்பதை உறுதியாக கூற முடியாது. இந்நிலையில் லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் மாம்பழத்திற்கு புற்று நோய் கட்டிகளை குறைக்கும் சக்தி இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு புற்று நோய் மற்றும் மாம்பழம் ஆராய்ச்சியாளர்கள…
-
- 0 replies
- 291 views
-
-
மத்தி மீனில் உள்ள சத்துக்கள் தெரியுமா? கண்டிப்பாக சாப்பிடுங்கள் சிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் உள்ள சத்துக்கள் புரதச்சத்து - 20.9 கிராம் கொழுப்பு சத்து - 10.5 கிராம் சாம்பல் சத்து - 1.9 கிராம் நீர்ச்சத்து - 66.70 கிராம் மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.…
-
- 0 replies
- 315 views
-
-
உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான். ஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும். உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும். ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத…
-
- 0 replies
- 303 views
-
-
பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்டது பேரிச்சம்பழம். சிறந்த சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளில் அதிகமாக விளைகிறது. இந்த பேரிச்சம்பழம் மனிதனின் பல்வேறு உடல் சுகவீனங்களை சரி செய்கின்றன.தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும். மூட்டு வலி, கர்ப்ப கால பிரச்சனை, குடல் பிரச்சனை, பார்வை பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு இது வரப்பிரசாதமே.மூட்டு வலி30 வயது தாண்டிவிட்டாலே இன்றைய காலத்தில் பலருக்கும் மூட்டு வலி தொடர்பான பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள கால்சியம் குறைபாடே. இதை சரி செய்ய தினமும் கொ…
-
- 0 replies
- 782 views
-
-
புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் பெரும்பாலும் நுரையீரல் தான் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். மற்றும் நிகோடின் எனும் மூலப்பொருள் தான் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் முதல் கருவியாக இருக்கிறது. நீங்கள் மனம் திருந்தி புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும் கூட, அதன் பிறகு நுரையீரலில் புகையின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அந்த பாதிப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகளை, நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய உடனே தினந்தோறும் உட்கொள்ள பழக்கிக் கொள்வது உங்கள் உடல் நலம் மேலோங்க வெகுவாக உதவும்…. வைட்டமின் சி சத்துள்ள உணவுகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க …
-
- 0 replies
- 870 views
-
-
நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெயை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். மேலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அதில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். நவ நாகரீகம் என்கிற பெயரில் இதையெல்லாமல் மறந்ததன் விளைவால் தான், முடி உதிர்வதோடு, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. வாரமொரு முறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்…
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
காபி குடித்தால் தூக்கம் பாதிக்கப்படும என்பது எல்லோருக்கும் தெரிந்து விஷயம் தான் என்றாலும் உடலின் ஒழுங்குணர்வையும் மாற்றிவிடுகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். காபியில் உள்ள கெஃபெயின் என்ற ரசயாம் உடலில் தூக்கத்தை ஏற்படுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோன் தயாரிப்பதை தடுத்துகிறது என்று பிரிட்டனின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தகவல் தெரிவிக்கின்றனர். தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் ஒரு இரட்டை எஸ்ப்ரஸ்ஸோ குடிப்பது உடல் இயற்கையாகவே மெலடோனின் என்ற இந்த ஹார்மோனை உற்பத்தி செய்வதை 40 நிமிடங்கள் வரை தாமதப்படுத்தி விடுவதாக இந்த ஆய்வு மூலம் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்ற…
-
- 1 reply
- 379 views
-
-
நம்மூர் வாசிகள் நியூஸ் பேப்பர் இல்லாமல் பஜ்ஜி சாப்பிடமாட்டார்கள். எண்ணெய்யுடன் கூடிய பஜ்ஜியை நியூஸ் பேப்பரில் அமுக்கி தேய்த்து அவர்கள் சாப்பிடும் அழகே தனி தான். பஜ்ஜி சாப்பிடுவதால் பல்வேறு கெடுதல் வரும்னு சொல்வாங்க ஆனால் அதை விட கெடுதல் பஜ்ஜி சாப்பிட நியூஸ் பேப்பரை பயன்படுத்துவது.செய்தி தாள்கள் செய்திகளை படிப்பதற்காக பயன்படுத்துவதை விட அதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சாப்பிட்டு விட்டு கைகளை துடைப்பதற்கு அதை அதிகமாக பயன்படுத்துகிறோம். சிறிய உணவகங்கள், தெருவோர கடைகளில் அதிகமாக செய்தி தாள்களையே கை துடைக்க பயன்படுத்துகின்றனர்.செய்தி தாள்களை இப்படி பயன் படுத்துவதால் பல்வேறு ஆபத்துகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். செய்தித்தாளில் கை துடைப்பது சிறிய ஓட்டல்கள், தெருவோ…
-
- 4 replies
- 403 views
-
-
தினமும் சாப்பிடும் உணவில் மீனை சேர்த்துக்கொண்டால் மன அழுத்தம் நீக்கி மகிழ்ச்சியாக வாழலாம் என சமீபத்தில் சீனாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் மீன் சாப்பிட்டா கண்ணுக்கு மட்டுமில்ல மனதுக்கும் ரொம்ப நல்லதுனு இந்த ஆய்வு சொல்லுது. சீனாவின் கிழக்கில் உள்ள ஷாண்டோன்ங் மாகாணத்தில் இருக்கும் க்விங்டாவ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் ஆய்வுக் குழு இந்த ஆய்வை நடத்தியது.அவர்கள் தினசரி உணவில் மீன் உண்ணும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்டு இந்த ஆய்வை நடத்தினர். அவர்களின் ஆரோக்கியம் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய 2001-2014-ம் ஆண்டுகளுக்குள் உள்ள பட்டியலை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அவர்களின் மன அழுத்தம் குறைந்தி…
-
- 1 reply
- 627 views
-
-
யு.எஸ்.- நவீன அறிவியல் அறுவை சிகிச்சை மூலம் 87வயதுடைய முதியவர் ஒருவரின் படு மோசமாக எரிந்த கையை வைத்தியர்கள் சரிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் ஹியுஸ்ரனில் உள்ள ஹியுஸ்ரன் மெதடிஸ்ட் வைத்தியசாலையில் நடநதுள்ளது.இவரது பாதிக்கப்பட்ட கையை வயிற்றிற்குள் வைத்து இந்த சத்திரசிகிச்கை செய்யப்பட்டது. இவரது வயிற்றில் உள்ள திசு பைக்குள் மூன்று வாரங்களிற்கு வைக்கப்பட்டது. சுகமடையவும், ஒரு புதிய இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்பட்டது.விறாங் றேய்ஸ் என்ற இவரின் கை தற்காலிக வீடான வயிற்றிற்குள் இருந்து வெட்டி வெளியே எடுக்கப்பட்டது.கடந்த கோடைகாலத்தில் ரயர் ஒன்றை மாற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கையின் முழு பாவனையையும் விறாங் இழந்து விட்டார்.ஒரு ஓய்வுபெற்ற கால்நடை பண்ணை தொழில…
-
- 0 replies
- 1.2k views
-
-
நீங்கள் நாற்பது வயதை கடந்துவிட்டீர்களா?? அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வாலிப வயது மட்டும் தான் கல்லையும் கரைக்கும். வயதாக வயதாக, பஞ்சை கரைக்க கூட சிரமப்படும் நமது உடலியக்கம். அந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம். உதாரணமாக, வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு. எனவே, நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்…
-
- 0 replies
- 359 views
-
-
வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே தலைத்தெறித்து ஓடுவோர் பலர். ஆனால் அந்த பாகற்காயை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதனால் தற்போதைய மக்கள் அதிகம் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். அந்த அளவில் பாகற்காயில் சத்துக்களானது நிறைந்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், கட்டுப்பாட்டுடன் வைத்துக கொள்ளலாம். நீரிழிவு அதுமட்டுமின்றி, வேறு பல நன்மைகளும் பாகற்காயில் அடங்கியுள்ளது. அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்: கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், அதில் உள…
-
- 0 replies
- 304 views
-
-
வியர்வை.... ஏன் துர்நாற்றம், வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!வாயுப் பிரச்சனைக்கு பிறகு ஓர் மனிதன் பொது இடங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவது இந்த வியர்வை துர்நாற்ற பிரச்சனையின் காரணத்தினால் தான். பொதுவாக வெயிலில் அலைந்து, திரிந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்க வாய்ப்புகள் இருக்கின்றன. வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது? ஆனால், சிலருக்கு சாதாரண வேலைகள் செய்யும் போது கூட அளவிற்கு அதிகமாக வியர்வை வெளிப்படும். வியர்வை வெளிவருவது நல்லது தான், ஆனால் வியர்வையோடு சேர்ந்து அதிகமாக துர்நாற்றம் வெளிப்படுவது தான் இவர்களுக்கு ஏற்படும் சிக்கலே. அதிகமாக வியர்வை வெளிபடுதல் இந்த நோய்களுக்கான அறிகுறிகள் என்று உங்களுக்கு தெரியுமா? அனைவருக்கும் தான் வியக்கிறது…
-
- 7 replies
- 6.8k views
-
-
இயற்கை நமக்கு தந்த ஓர் வரப்பிரசாதம் தான் சீரகம். சமையலில் பயன்படுத்தும் சீரகம் தன்னுள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் உடலின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய சீரகம் பயன்படுகிறது. அதில் செரிமான பிரச்சனை, நோயெதிர்ப்பு சக்தி குறைவு, ஆஸ்துமா, சளி, இரத்த சோகை, தூக்கமின்மை, பைல்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.அதுமட்டுமின்றி, சீரகம் தற்போது பலரும் அவஸ்தைப்படும் அசிடிட்டி பிரச்சனைக்கும் நல்ல தீர்வை வழங்கும். இதனை இயற்கை மருத்துவ வைத்தியர்களும் பரிந்துரைக்கின்றனர். மேலும் சீரகம் இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்தியினால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதையும் தடுக்கும். சீரகத்தில் உள்ள சத்துக்கள் :- சீரகத்தில் புரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்ட…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
தற்போது பலரும் செரிமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி, அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பதை முக்கிய காரணமாக சொல்லலாம். எனவே வயிற்றில் தங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். செரிமான மண்டலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!! குறிப்பாக ஸ்நாக்ஸ் நேரத்தில் பழங்களை சாப்பிட்டால், மிகவும் எளிமையாக வயிற்றை மட்டுமின்றி, உடலின் அனைத்து உறுப்புக்களையும் சுத்தப்படுத்தலாம். மேலும் உடல்நல நிபுணர்கள், தினமும் ஒரு ஃபுரூட் பௌல் சாப்பிட்டு வந்தால், உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர். செரிமான பிரச்சனைகளைத் தடுக்க ஆயுர்வேதம் ச…
-
- 0 replies
- 397 views
-
-
நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்? நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும். காரணம் என்ன? நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழன் கண்ட தோப்புக்கரணம் ..! சொந்தம் கொண்டாடி காப்பி ரைட் வாங்கிய அமெரிக்கா.! கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள். ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார…
-
- 0 replies
- 687 views
-
-
பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது.? சாத்தியக்கூறுகள் என்ன .? மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு “ஐசெமிக் ஸ்ட்ரோக்” (Ischemic stroke) என்று பெயர். மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்” என்று பெயர். எனவே, பக்கவாதம்…
-
- 0 replies
- 699 views
-
-
கல்லீரல் சுருக்கம்...தடுப்பது எப்படி? "என்.முருகன்" கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை அன்றாடம் காய்கறிகளை விற்றுப் பிழைப்பு நடத்திவந்த செல்வத்துக்கு, திடீரென வயிற்றில் கடுமையான வலி. அதனைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை, அடுத்த சில நாட்களிலேயே கல்லீரல் முற்றிலும் செயல் இழப்பு ஏற்பட்டு, இறந்துபோனார். இன்று, அவர் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் ஆதரவு இன்றித் தவிக்கின்றனர். செல்வத்தின் மரணத்துக்குக் காரணம், கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) நோய். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மது அருந்தியதன் விளைவுதான், கல்லீரல் செயல் இழப்புக்குக் காரணம். மது அருந்தியதன் காரணமாக், கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரமா…
-
- 0 replies
- 2k views
-
-
உயிர்ச்சத்துகளில் வைட்டமின் டி முக்கியமானது. அதேநேரம் அதிகக் கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று. வைட்டமின் டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது என்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தைச் சமாளிப்பதிலும் வைட்டமின் டி உதவுவதாகக் கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களைப் பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப் பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின் ‘டி'…
-
- 0 replies
- 1.7k views
-
-
இளம் வயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை சகலரும் பொதுவாக கவலைப்படும் ஓர் விடயம் தலைமுடி உதிர்வு அதிலும் அண்மைய நாட்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் கவலைப்படுகின்றனர். காரணம் தலைமுடி என்பது ஒருவரது பால் வேறுபாட்டை வெளிக்காட்டும் ஆளுமை மற்றும் கம்பீரத் தன்மை என்பதனை மற்றவருக்கு தெரியப்படுத்தும் ஊடகமாகவும் அமைகிறது என்கிறார் வைத்தியர் சிவஞான சுந்தரம். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: பொதுவாக நம்மில் பலர் தமது பற்களுக்கு கொடுக்கும் கவனிப்பையே தமது தலைமுடிக்கு கொடுக்கின்றனர். அதாவது பல்வலி வரும்வரை அவர்கள் தமது பற் சுகாதாரம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை அதை போல் தான் தலைமுடி அதிகம் உதிரத் தொடங்கும் வரை தலை முடியின் பராமரிப்பை பற்றியோ அதன் நிலையைப் பற்றியோ அதிக கவனம் ச…
-
- 1 reply
- 4.6k views
-