நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
கொலஸ்ட்ராலை மாத்திரையே இல்லாமல் குறைப்பது எப்படி ??
-
- 0 replies
- 512 views
-
-
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சூப்பர் உணவுகள்! நொறுக்குத்தீனிகளை விரும்பாதவர்கள் யார்? ஒருகாலத்தில் சுண்டல், வேர்க்கடலை, முறுக்கு... என நீண்ட நொறுக்குத்தீனிப் பட்டியல், இன்றைக்கு வேறு ஒரு வடிவம் கொண்டிருக்கிறது. பானிபூரி, பேல்பூரி, பாவ்பாஜி, சிக்கன் பக்கோடா என நீளும் அந்தப் பட்டியலில் பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் போன்ற மேற்கத்திய உணவுகளும் அடக்கம். இவை கொலஸ்ட்ராலை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை. இளம் வயதில் சாப்பிடும் கொழுப்புகள் உடலில் அப்படியே தங்கி, உடல்பருமனை ஏற்படுத்தும். அப்படித் தங்கும் கெட்ட கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் படிந்துவிடும். இது ரத்தஅழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்புக்கு வழிவகுக்கும். சரி.. அது என்ன கொலஸ்ட்ரால்? …
-
- 1 reply
- 472 views
-
-
`கொழுப்பைக் குறைக் கிறேன் என்று இடைவிடாமல் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டும போதாது. உண்ணும் உணவிலும் கட்டுப்பாடு அவசியம். உணவின் மூலம் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து... உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்” என்று சொல்லும் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சில உணவுகளைச் செய்து நமக்காக வழங்கியிருக்கிறார். ‘‘உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். கல்லீரலில் இருந்து கொலஸ்ட்ராலை உடலில் உள்ள செல்களுக்கு எடுத்துச் செல்வது எல்.டி.எல் (Low Density Lipo protein). செல்களுக்குத் தேவைப்படாத அதிகப்படியான கொலஸ்ட்ராலைத் திரும்பவும் கல்லீரலுக்கே எடுத்துச் செல்வது எச்.டி.எல் (High Density Lipo protein). எச்.டி.எல்-ஐ…
-
- 4 replies
- 4.9k views
-
-
what is human Endogenus cholesterol? கொலஸ்ட்ரால் என்றால் என்ன? கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது. ச…
-
- 1 reply
- 495 views
-
-
what is human Endogenus cholesterol? கொலஸ்ட்ரால் என்றால் என்ன? கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol 80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது. சரி …
-
- 0 replies
- 595 views
-
-
கொலஸ்ட்ரோல் பற்றி சில தகவல்கள் உங்கள் கவனத்திற்கு http://www.youtube.com/watch?v=DdeMJiQ2NO4
-
- 2 replies
- 3.2k views
-
-
கொலஸ்டரோல் என்பது என்ன? இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது. ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன. கொழுப்புக்கள் நீரில் கரைய முடியாதவை. எனவே அவற்றை உடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல குருதியால் முடியாது. இதனால் இவை ஒரு வகைப்புரதத்துடன் இணைவதால் நீரில் கரையக் கூடியதாகின்றன. இவ…
-
- 9 replies
- 4.5k views
-
-
கொலெஸ்ட்ராலைக் குறைக்கும் புதிய தடுப்பு மருந்து இதய நோய்களை தடுக்க உதவும் கொலஸ்ட்ரோலை குறைக்கும் தடுப்பு மருந்தை மனிதர்களில் சோதிக்க விஞ்ஞானிகள் ஆரம்பித்துள்ளனர். இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் கொழுப்பு படிவதை தடுப்பதற்காக இந்த மருந்து ஊசி மூலம் ஏற்றப்படும். பக்கவாதம், இதயவலி மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக தினமும் மாத்திரை உண்பதற்கு பதிலாக இது அமையும். BBC
-
- 1 reply
- 398 views
-
-
கொள்ளும்,பப்பாளியும் கொழுத்தவனுக்கு கொள்ளு....................! கொள்ளு என்றும், காணம் என்றும் அழைக்கப்படும் பயறு . ஒரு காலத்தில் நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமங்களில் கூட ஒதுக்கப்பட்ட பயறாகும். குதிரை தின்பதை மனிதன் தின்பதா என்று வெறுத்து ஒதுக்கியவர்கள் ஏராளம். ஆனால் இன்று ஊட்டச்சத்து நுண்ணுயிர்ச்சத்து ஆகியவை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், நகர்களில் உள்ள பெரும் அங்காடிகளில் (மால்கள்) கூட இவை கட்டம் கட்டி விற்கப்படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இது மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பைக் கரைப்பதில் இதற்கு ஈடிணையான பயிறு எதுவும் இல்லை. இளைத்தவன் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் அவன் உடல் பெருக்கும் என்றும், ஊளை…
-
- 3 replies
- 1.2k views
-
-
படித்ததில், இவை யாழ் களத்திலுள்ளோருக்கு பயனுள்ளவையாக இருக்குமேயென இங்கே பதிகிறேன். கொலஸ்டரோல்(கொழுப்புச் சத்து) என்பது என்ன? இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது. ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன. கொழுப்புக்கள் நீரில் கரைய முடியாதவை. எனவே அவற்றை உடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு ப…
-
- 11 replies
- 6.5k views
-
-
வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது. வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை, அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. கெட்டித் தயிருடன் சே…
-
- 0 replies
- 594 views
-
-
கொழுப்பை அகற்றும் நவீன சிகிச்சை எம்மில் பலரும் சுவைக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு பதார்த்தத்திற்கோ அடிமையாகி மூன்று வேளையும் அதையே சாப்பிட்டிருப்போம். அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு தானே அதனால் நாம் உடற்பருமனுக்கு ஆளாகி வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். இந்நிலையில் எம்மைப் போன்றவர்களுக்காகவே ஒரு நவீன சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது. BTL Vanquish MEஎன்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிகிச்சையைப் பற்றி காண்போம். இது சத்திர சிகிச்சையற்ற வலியற்ற ஒரு சிகிச்சை ஆகும். இதன் போது, உடலில் எங்கு அதிகப்படியான கொழுப்பு உள்ளதோ அப்பகுதியில் உள்ள சதையை 42 டிகிரி செல்ஷியஸ் வரை சூடு படுத்தியும், அதன் அடியில் இருக்கும் கொழுப்பை 46 டிகிரி வரையிலும் வெப்பமா…
-
- 0 replies
- 407 views
-
-
கொழுப்பை கரைக்க இசையை கேளுங்கள் அதுக்காக ரகுமானின் இசையை கேளுங்கள் என்று சொல்ல வில்லை நன்றி வீரகேசரி இசை கேட்டால் உடல் கொழுப்பு கரையும் யாராவது ஏதாவது செய்து விட்டால், 'என்ன கொழுப்பா?' என்று நாம் கேட்பதுண்டு. உண்மையில் நம் உடலில் கொழுப்பு அதிகமானால் அது உயிருக்கே உலை வைத்துவிடும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க என்ன செய்யலாம்? இதோ ஒரு சிறந்த ஆலோரனை உங்களுக்கு : உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்புக்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் 'ரிலாக்ஸ்' ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்…
-
- 10 replies
- 3.4k views
-
-
கொழுப்பை கரைக்கும் “காளான்” [ மக்களின் விருப்ப உணவான காளானில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் தான் காளான். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான, காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இதில் மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான டி அதிகம் உள்ளது. காளானின் மகத்துவங்கள் காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.…
-
- 4 replies
- 905 views
-
-
கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். அதுபோல் ஒரு வகை தான் கொண்டைக்கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. கொண்டைக்கடலை சுண்டல் கடலையை 6 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய்…
-
- 13 replies
- 13.8k views
-
-
உலகம் முழுவதுமே இன்று 'ஒபிசிட்டி' (Obesity ) எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம். உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே: மஞ்சள்: மஞ்சளை நாம்…
-
- 10 replies
- 2.3k views
-
-
கொழுப்பை குறைத்தால், எளிதாக உடல் எடையை குறைக்கலாம்! ஒவ்வொருவரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைத்து அழகாக இருக்க விரும்புவார்கள். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும். உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், சரியான உணவுகள் கண்டிப்பாக தேவை. அவைகள் ஈரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும், உங்கள் மெட்டபாலிசம் அளவை ஊக்குவிக்கவும் உதவும். இதனால் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க அது உதவும். கொழுப்புக்…
-
- 0 replies
- 707 views
-
-
கொழுப்பை குறைத்து உடல் எடையைக் கட்டுப்படுத்தும் கொடாம்புளி: உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகம் கொண்டது! [Monday, 2011-08-08 20:43:47] உடல்பருமன் என்பது இன்றைக்கு அனைவரையும் பாதிக்கும் ஒன்றாகிவிட்டது. பாஸ்ட் புட் காலமாகிவிட்டதால் உண்ணும் உணவானது தேவையற்ற கொழுப்பாக மாறி ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு உடலானது பருமனடைகிறது. இதனால் ஏராளமானோர் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடக்கின்றனர். சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழக்கின்றனர். பட்டினி கிடந்தாலே, மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலோ உடல் எடை குறையாது. உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும். கொழுப்பை கரைப்பதில…
-
- 1 reply
- 2.2k views
-
-
கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்! தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மரு…
-
- 24 replies
- 5k views
-
-
கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்! என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?' என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம். 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை. நம் உடல் செல்கள் உற்பத்திய£வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவ…
-
- 2 replies
- 23.2k views
-
-
"மாதுளை, சப்போட்டா, கொய்யா போன்ற இலங்கை இந்திய பழங்களுக்குப் பதிலாக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெளிநாட்டில் மட்டுமே விளையக்கூடிய பழங்களை, பெரும்பாலானோர் வாங்குவது இல்லை. நம் ஊரில் விளையாமல் இறக்குமதியாகும் அவகேடோ, கிவி போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம்தான்'' என்கிற தஞ்சையைச் சேர்ந்த உணவு நிபுணர் ஜெயந்தி தினகரன், வைட்டமின்கள், தாது உப்புகளின் 'பவர் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் கிவிப் பழத்தின் மருத்துவப் பலன்கள் பற்றிச் சொல்கிறார். 'வைட்டமின் ஏ, சி, கே, புரதம், கார்போஹைட்ரேட், நீர்ச் சத்து என மனிதனுக்குத் தேவையான ஒன்பது சத்துக்கள் நிறைந்த ஒரே பழம் 'கிவி’த…
-
- 5 replies
- 919 views
-
-
உடலுக்குச் சக்தியும் வலுவும் தரும் உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனியிடம் உண்டு. ஒவ்வொரு தானியத்துக்குக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டு உடலை வலுப்படுத்தலாம். சோளம்: உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண், வாய் துர்நாற்றத்தைப் போக்கும். கோதுமை: நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். வரகு: உடல் எடையை குறைக்கும். மாதவிடாய் கோளாறுகளைத் தடுக்கும். கொண்டைக்கடலை: பக்கவாதநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. சோயாபீன்ஸ் : அனைத்து வைட்டமின் பி வகைகளும் உள்ளன. இவை இதயம்,…
-
- 1 reply
- 633 views
-
-
கொழுப்பைக் குறைக்கும் வெண்டைக்காய்! வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்பது சிலநாட்டவர்களின் தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. இவை இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு. வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது. பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து கு…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 383 views
-
-
கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! பைசர் (Pfizer), மொடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வாக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 99 மில்லியன் மக்களிடம் குறித்த ஆய்வு நடத்த…
-
-
- 4 replies
- 748 views
- 1 follower
-