நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
இப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா? ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோய் என்கிறீர்களா? பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள்இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல்போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாகபாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள்ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அனைவருக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்களைப் பற்றி நன்கு தெரியும். இதுவரை அந்த எண்ணெயை கூந்தலுக்கு தடவ மட்டும் தான் செய்வோம். சிலர் அந்த எண்ணெயை வைத்து தலைக்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளிப்பார்கள். அதிலும் எண்ணெயை சூடேற்றி, காய வைத்து, பின் மசாஜ் செய்வார்கள். ஆனால் தற்போது கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, பட்டுப் போன்று மின்னுவதற்கு தேங்காய் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் செய்யலாம். இப்போது அந்த தேங்காய் எண்ணெயை வைத்து எப்படி மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா!!! தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்- கூந்தலை நன்கு ஈரப்பசையோடு வைப்பதில் தேங்காய் எண்ணெயும், தேனும் மிகவும் சிறந்தது. ஆகவே அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, ஸ்கால்ப்பிற்கு தடவி, சிற…
-
- 1 reply
- 654 views
-
-
அலெக்ஸ் தெரியன் & ஜேன் வேக்ஃபீல்ட் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images குழந்தைகள் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக குழந்தை நல மருத்துவர்கள் கூறுகிறார்கள். த…
-
- 1 reply
- 992 views
-
-
-
-
பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப் பின்னால் எத்தனை விதமான தகவல்கள் இருக்கின்றன என்பதை மட்டும் இந்தக் கட்டுரையின் மூலம் பதிவு செய்கிறேன். வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் படுத்து உறங்கிய ஆதிமனிதன், சற்று சுகமாகப் படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன ஆரம்பித்தான் முதன்முதலில் தென்னை ஓலையில் இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப் பிளந்துவிட்டால் மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும். இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும். இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆண்களின் தலை வழுக்கை ஆவதிலிருந்து தப்பித்துக்கொள்ள சில ரிப்ஸ் [Monday, 2012-10-01 22:35:23] இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே தலை கூந்தல் உதிர்ந்து, வழுக்கை ஆகிவிடுகிறது. அதில் ஆண்கள் தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று பார்த்தால், பெண்களில் சிலருக்கும் ஏற்படுகிறது. இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டாலும், சரியான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கூந்தல் உதிர்தலுக்கான காரணத்தை அறிவதில் எவ்வளவு கூர்மையாக இருக்கிறீருகளோ, அதேப்போல் தலை வழுக்கை ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இயற்கையிலேயே அழகாக காணப்படும் ஆண்களின் அழகைக் கெடுப்பதில், வழுக்கை முக்கிய பங்கை வகிக்கிறது. இதனால் சில ஆண்களுக்கு திருமணம் கூட நடைபெறுவது கடினமான விஷயமாகிறது. மேலும் வழுக்கைத் தலை மா…
-
- 1 reply
- 721 views
-
-
சுவாச கோளாறு காரணமாக திடீரென்று ஏற்படும் மூச்சுத்திணறல் தொடர்பான acute respiratory distress syndrome என்ற பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிவதற்காக தற்பொழுது ஸ்மார்ட் ஸ்டெதாஸ்கோப் என்ற கருவி கண்டறியப்பட்டிருக்கிறது. சுவாசப் பாதையில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளால் மூச்சுத் திணறல், இதய பாதிப்பு, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக சிலருக்கு இதயத்துடிப்பு சீரற்றதாக இருக்கும். தற்போதுள்ள நடைமுறையில் இத்தகைய நோயாளிகளை மருத்துவர்கள் தங்களிடமுள்ள ஸ்டெதாஸ்கோப்பினால் தான் இதய துடிப்பை கண்டறிவார்கள். ஆனால் தற்போது கண்டறியப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட் ஸ்டெதாஸ்கோப்பால் நோயாளி தொலைவில் இருந்தாலும் இத்தகைய பாதிப்பை கண்டறிய இயலும். அதே தருணத்தில…
-
- 1 reply
- 324 views
-
-
உடலில் வெண்மை படலம் படருவது ஆபத்தான ஒன்றாகும். இப்படி வெண்மை படலம் படருவதற்கு “லூகோடெர்மா” அல்லது “விடிலிகோ” என்று பெயர். பொதுவாக 12 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இது ஏற்படுகிறது. வெண் படலம் முதலில் கைகள் மற்றும் கால்களில் துவங்குகிறது, சிலருக்கு மூக்கு, வாய், கண்கள், தொப்புள் போன்ற இடங்களில் வெண் படலம் தோன்றும். பிறகு பரவாமல் அந்தந்த பகுதிகளுடன் நின்று விடும், சிலருக்கு உடல் முழுவதும் பரவும். உடலுக்கு மெலனின்(Melanin) என்ற நிறத்தை கொடுக்கும் நிறமி, சரியான முறையில் வேலை செய்யாமல் போவதால், இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதுவும் பரம்பரையாக ஏற்படுவது தான். எனவே தோல் பரிசோதனை செய்தால் மட்டுமே, எந்த வகையான நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும். வ…
-
- 1 reply
- 1.9k views
-
-
பரம்பரைத் தன்மை, நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்து கொள்ளுதல், ரத்தப் பிரிவு, கர்ப்ப காலத்தில் தொற்று நோய்கள் பாதிப்பது, கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குன்றியிருப்பது, கர்ப்ப காலத்தில் சில மருந்துகளைச் சாப்பிடுதல், கர்ப்ப காலங்களில் அடிக்கடி நுண்கதிர் வீச்சு படம் எடுத்தல் ஆகியவை குழந்தைக்கு பிறவி செவித் திறன் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களாகும். குழந்தை பிறந்த பிறகு...: குறை மாதத்தில் பிறப்பது மற்றும் ஆயுதம் மூலம் பிறப்பது, குழந்தைக்கு பிறந்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்படுவது, குழந்தை பிறந்தவுடன் நீண்ட நேரம் அழாமல் இருப்பது, குழந்தையின் எடை 1,200 கிராமுக்கும் குறைவாக இருப்பது ஆகியவை காரணமாக செவித் திறன் குறைபாடு ஏற்படலாம். குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை, அதி…
-
- 0 replies
- 602 views
-
-
அதிக நார்ச்சத்து கொண்ட உணவு மாரடைப்பு மீண்டும் வருவதைத் தடுக்கும் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது. அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும் ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணவுப் பழக்கம் அந்த பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தில் வரக்கூடைய, உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்…
-
- 0 replies
- 504 views
-
-
சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும். 2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும். 3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அம…
-
- 0 replies
- 1.3k views
-
-
இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே. இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, …
-
- 0 replies
- 869 views
-
-
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலுக்கும் ஆரோக்கியம் தருவது கீரைவகைகள் தான். அனைத்துவகை கீரைகளிலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது, அதில் ஒன்றான பசலைக்கீரை மூளைவளர்ச்சிக்கு உதவுகிறது. மருத்துவ பயன்கள் பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது. இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உ…
-
- 0 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் பல தேநீர் கடைகளில் ‘இனிப்பு அதிகமாக போடுங்கள்’ என்று சொல்பவர்களின் முகத்தில் அல்லது சொல்லும் தொனியில் ஒரு மெல்லிய கர்வம் தென்படும். எனக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை அல்லது நான் அதிகமாக இனிப்பு சாப்பிடுவேன், ஆனால் என் உடலுக்கு ஒன்றும் ஆகாது என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக அது இருக்கும். அதுவே நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்த தேநீராக இருந்தால் இன்னும் மனநிறைவுடன் வாங்கிப் பருகுவார்கள். சாதாரண தேநீரை விட விலை அதிகமாக இருந்தாலும், வெள்ளைச் சர்க்கரை என்றால் தானே பிரச்னை, நாட்டுச் சர…
-
- 0 replies
- 621 views
- 1 follower
-
-
[size=4]மது, புகை உள்ளிட்ட பழக்கங்களை நிறுத்தி விட்டு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, சமூகத்துடன் அதிக ஈடுபாடு என்று இருந்தால் ஆயுளை 6 ஆண்டு நீட்டிக்கலாம் என்பது ஆய்வில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. நடுத்தர வயதினர் பலர் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு திடீர் மரணம் அடைகின்றனர்.[/size] [size=4]இதற்கு மது, புகை போன்ற பழக்கங்கள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.75 வயதை கடந்தவர்களையும் இதுபோன்ற பழக்கங்கள் பாதிக்கிறதா என்பது குறித்து ஸ்வீடனை சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆய்வு நடத்தினர்.[/size] [size=4]75 வயதை கடந்த 1800 பேரின் 18 ஆண்டு கால(1987- 2005) வாழ்க்கை முறை குறித்து தீவிரமாக அலசி ஆராய்ந்தனர். அவர்…
-
- 0 replies
- 924 views
-
-
கணுக்காலில் வலி... நிவாரணம் என்ன? அடிக்கடி கணுக்காலில் வலி, குதிகாலில் வலி ஏற்படுகிறதா? `நீங்க அதிக எடையோட இருக்கீங்க. அதுனாலதான் வலி ஏற்படுது’ என்று நெருங்கியவர்கள் சொல்கிறார்களா? இது முழுக்க உண்மை இல்லை. உடல் எடை அதிகமாக இருப்பதால்தான் கணுக்கால் வலி ஏற்படும் என்று இல்லை. கால்வலி ஏற்பட நாம் நடக்கும் தரைகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரமேஷ் குமார். மேலும் என்னென்ன காரணங்களால் கணுக்காலில் வலி ஏற்படும், அதற்கான தீர்வுகள் குறித்து விளக்குகிறார். காலை நேரத்தில், நீண்ட நேரப் பயணத்தில், அதிக நேரம் அமர்ந்து இருந்து பின் எழுந்திருக்கும்போது... என வெவ்வேறு சமயங்களில் குதிகால் தசைநார் (Achilles Tendon) பகுதியில் வலியும…
-
- 0 replies
- 391 views
-
-
நியோகோவ்’ வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை – விஞ்ஞானிகள் ஆறுதல் தகவல் சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று பாதிப்பின் வீரியம் சற்று தணிந்தாலும் அச்சுறுத்தல் முழுமையாக …
-
- 0 replies
- 326 views
-
-
ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் செயலற்றுப் போகும் நிலையை நோக்கி உலகம் -- உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள் சாதாரண தொற்றுக்களாலும், சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகும் நிலை வரலாம் என்று அது கூறுகிறது. சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டிபயாடிக்ஸ்களிடமிருந்துகூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருப்பதாகவும்,இது இப்போது உலக அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதாகவும், உலகச் சுகாதா…
-
- 0 replies
- 473 views
-
-
இரத்தத்தில் உள்ள பில்லியன் கணக்கான கலன்களில் செய்யக்கூடிய ஒரு இரத்த பரிசோதனையுடன் புற்றுநோயை கண்டுபிடிக்கக்கூடிய வசதி உருவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு இல்லை மூன்று வருடங்களில் இந்த இரத்த பரிசோதனை செய்யக்கூடியதாக இருக்கும்.
-
- 0 replies
- 747 views
-
-
மனித உயிரை காவுகொள்வதில் கண்ணுக்கு புலப்படாத கிருமிகள் பாரிய பங்காற்றுகின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. பாம்பு, கரடி, புலி, சிங்கத்தை கண்டு பயந்த நாம் தற்போது கிருமிகளை கண்டும் அஞ்ச வேண்டியுள்ளது. நாம் உண்ணும் உணவு முதல் அனைத்து விடயங்களிலும் இவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன. இந்நிலையில் வீடுகளில் கிருமிகளை பரப்புவதில் தூவாய்கள் மிக மோசமான குற்றவாளியாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமலறை துவாய்கள் மட்டுமன்றி குளியலறை துவாய்களும் நோய்களை மிக வேகமாக பரப்புவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தள்ளனர். துவாய்கள் அதிக நேரம் ஈரத்தன்மையுடன் காணப்படுவதனாலும் வீட்டில் கிருமிகள் அதிகம் காணப்படும் இடங்களில் பயன்படுத்துவதாலும் வீடுகளில் கிருமிகள் பெருகவும் பரவ…
-
- 0 replies
- 597 views
-
-
ஆங்கிலமொழியில் Autophagy;இது ஆங்கிலமேதானா என்றால், இல்லை. ஜப்பானிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட சொல். Phagy என்றால் எரிமமெனப் பொருள். தனக்காகத் தாமாக எரித்துக் கொள்வதால் Autophagy என்றாளப்படுகின்றது. (aw-TAH-fuh-jee) A process by which a cell breaks down and destroys old, damaged, or abnormal proteins and other substances. The breakdown products are then recycled for important cell functions, especially during periods of stress or starvation. நம் உடல் என்பது ஆகப்பெரிய வேதிச்சாலை. இப்பேரண்டத்தில்(universe) நிகழ்கின்ற எல்லாமும் ஒரு மனித உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆக நம் உடலும் ஓர் அண்டம்தான். நம் உடலுக்குள் இல்லாத தொழில்நுட்பம் இல்லை, வேதிநுட்பம் இல்…
-
- 0 replies
- 753 views
- 1 follower
-
-
ஹாய் நலமா? [06 - May - 2008] [Font Size - A - A - A] ஈ.சி.ஜி.பரிசோதனை தேவையா? `நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறினாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறிய பின்தான் தொடர்ந்து ஏற முடிகிறது. பாரம் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியுதில்லை' என்றாள் அவள். அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ்ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்' என்றேன். ஈ.சி.ஜி யா வேண்டவே வேண்டாம்' என்றாள் கோபமாக. `ஏன்?' என்று கேட்டேன். `ஈ.சி.ஜி செய்வதில் பிரயோசனமில்லை' என்றவளது குரல் திடீரென மிகுந்த விரக்தியில் ஆழ்ந்தது. `எங்கட சொந்தக்காரர் ஒருத்தர் சும்மா `செக்அப்' எண்டு ஈ.சி.ஜி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெற்றிகரமாக நடந்த அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மருத்துமனை மருத்துவர்கள், அமெரிக்காவின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இது அறுவை சிகிச்சை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். ஆணுறுப்பு தொடர்பான புற்று நோயால் பாதிப்படைந்த 64 வயதாகும் தாமஸ் மானிங் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது. அண்மையில் அவருக்கு ஆணுறுப்பு தானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. உலகளவில் பரிசோதனை ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள மூன்றாவது நபர் என்ற பெருமையை தாமஸ் மானிங் பெற்றுள்ளார். …
-
- 0 replies
- 332 views
-
-
பக்கவாதத்தை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் முக்கிய வெற்றி கோப்புப்படம் முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எட்டு பேரின் நடமாட்டம் மற்றும் உணர்வுகளை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியில் பாதியளவு வெற்றியடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது அறிவியல் ஆய்வில் மிக முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. செயற்கை உறுப்புக்களை இயக்க மூளைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, மெய்நிகர் மற்றும் உணர்வூட்டும் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி அந்த நோயாளிகளுக்கு ஓராண்டாக அளிக்கப்பட்டது. பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அந்த நோயாளிகளிடம் ஆச்சரியப்படும் வகையில் சில மாற்றங்களைக் கண்டனர். செயற்கை உறுப்புக்களைக் க…
-
- 0 replies
- 278 views
-