நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
கற்றுக் கொண்டால் குற்றமில்லை - சோம்பல் அறுங்கள் ஆக்கம்: 'எழுத்துச் சித்தர்' பாலகுமாரன் சங்கருக்கு தூக்கம் என்பது மிக மிகப் பிடித்தமான விஷயம். குறிப்பிட்ட நேரத்தில் சோறு இல்லாமல் இருந்துவிடலாம். தூக்கமில்லாமல் இருந்துவிட முடியுமா? தூங்கினால் தானே சோம்பல் நீங்கும். சோம்பல் நீங்கினால் தானே சுறுசுறுப்பாக இருக்க முடியும். சுறுசுறுப்பாய் இருந்தால் தானே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எனவே, வாழ்வை ஜெயிப்பதற்ககு தூக்கம் அவசியம் என்பது சங்கரின் வாதம். வாதம் சரிதான். ஆனால், எப்போது தூக்கம்... எவ்வளவு நேரம் தூக்கம் என்பது மிகப் பெரிய கேள்வி. எட்டரை மணிக்கு பள்ளிக்கூடம் என்றால், ஏழு ஐம்பத்தைந்து வரை தூங்குவது சங்கரின் வழக்கம். ஒன்பது மணிக்கு கல்லூரி என்றால், எட்டு நாற்பது வரை…
-
- 0 replies
- 17.8k views
-
-
[size=5]சோம்பு (Anise Seeds)[/size] அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும். நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள். வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது. சோம்பு: பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு ச…
-
- 1 reply
- 1.3k views
-
-
சோயா உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம் என அண்மைய ஆராய்சிகள் தெரிவிக்கிறன. சோயா உணவை உட்கொள்ளும் ஆண்களில் காணப்படும் விந்து கலங்களின் எண்ணிக்கை சோயா உணவை உட்கொள்ளாத ஆண்களிலும் குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 15 வகையான சோயா உணவுகளை கொடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சோயா உணவை உட்கொண்ட ஆண்கள் 41 மில்லியன் விந்து கலங்கள் / மில்லி லீற்றர் விந்து பாயத்தில் (திரவத்தில் )காணப்படுவதாகவும் , இது பொதுவாக ஆண்களில் காணப்படும் சராசரி விந்து எண்ணிக்கையான 66 மில்லியன் விந்து கலங்கள்/ மில்லிலீற்றர் விந்து பாயத்திலும் கணிசமான அளவு குறைவாகும். சோயா உணவுகளில் உள்ள ஐசோ பிளேவோன்கள் (isoflavone)இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. சோயா உண…
-
- 10 replies
- 2.8k views
-
-
தாவர உணவுகளில் மிகவும் ருசியான சோயா பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒர் உணவாகும். சோயா பீன் (Bean) (சோயா அவரை) மிக அதிக புரதச் சத்து நிறைந்த தானியமாகும். உணவுகளில் உள்ள புரதத்தின் அளவுகள் ( 100g இற்கு கணக்கிடப்பட்டுள்ளது. உணவு வகை புரதத்தின் அளவு (கிராம் இல்) அரிசி 6.4 சோயா பீன 43.2 கௌபி 24.1 பயறு 24.0 உழுந்து 24.0 மிகையான புரதச் சத்தும், விற்றமின்களும் உள்ளடங்கியிருப்பதனால் சோயா பீன், வளரும் பிள்ளைகளுக்கு ஒரு நிறை ஆகாரமாகும். அது மட்டுமல்லாமல் அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்தியையும் கொடுக்கின்றது. பால் ஒவ்வாமை நோய் உள்ள குழந்தைகளுக்கு…
-
- 0 replies
- 753 views
-
-
இவ்வளவு நாளும் ஓடி ஓடி உழைச்சாச்சு. போதும் என்று ஆகிவிட்டது. இனி வீட்டோடை கிடக்கப் போறன். இதுவரை பார்க்காத ரீவி சீரியலுகளைப் பார்த்து நெட்டிலும் உலாவுவன். கட்டிலும் கதிரையும் எண்டு சந்தோசமாக இனி இருக்கப் போறன்." மனைவியும் ஒத்துப் பாடினா. "ஓம் பாவம் அவர். வேலை வேலை என்று ஓடித் திரிஞ்சார். பிள்ளைகளையும் கரை சேர்த்தாச்சு. இனியாவது பேசாமல் ஓய்வா வீட்டை இருக்கட்டும்" என்றாள். அவர் ஒரு முதியவர். ஆனால் தளர் வயசு அல்ல. வயசு 65 தான் ஆகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அவருக்கு இனி முழு ஓய்வு தேவையா? வீட்டோடு பேசாது கிடந்தால் மகிழ்ச்சியும் நலமான வாழ்வும் கிட்டுமா? "இல்லை" என்கிறார்கள் சுவீடிஸ் தேசத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். ஆண் பெண் என 3800 பேரை 12 வருடங்களாக அவதானித்த …
-
- 1 reply
- 622 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 12 அக்டோபர் 2025, 01:34 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியர்கள் தங்கள் தினசரி ஆற்றல் தேவைகளில் 62 சதவீதத்தை கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து பூர்த்தி செய்துகொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது. வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆய்வுக்குப் பின் ICMR இதனை தெரிவித்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றலுக்காக சோறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைச் சார்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. உலகில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் இந்தியாவில் உள்ளத…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனிதர்கள் நிற்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு இந்த சோலியஸ் தசை மிகவும் அவசியம். கட்டுரை தகவல் எழுதியவர், ரஃபேல் அபுசைப் பதவி, பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாக சோலியஸ் தசை (சோலியஸ் தசை - Soleus) குறித்து மக்களுக்கு அதிகம் தெரிவதில்லை. ஆனால் அதன் செயல்பாடுகள் சக்தி வாய்ந்தவை. நிற்கவும் நடக்கவும் உதவுவதை தாண்டி உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு சோலியஸ் துணைப்புரிகிறது. காலின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சோலியஸ் தசை, கெண்டைக்கால் தசையின் (Calf) ஒரு பகுதியாகும். பன்முக இயக்கங்களை மேற்கொள்ளும் உறுப்புகளில் ஒன்றாகும், நாம் நிமிர்ந்து நிற்பதற்கு உதவ…
-
- 0 replies
- 642 views
- 1 follower
-
-
சின்ன சின்ன முத்துக்களாக, உண்ணக்கூடிய வகையில் இருக்கும் ஒரு பொருளை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. சமைக்கும் முன் வெண்ணிறத்தில் பளிச்சிடும் இது சமைத்த பின் கிட்டத்தட்ட ஒளிஊடுருவும் வடிவத்தை பெற்றுவிடும். ஆம், நீங்கள் யூகித்தது சரியே - இந்த சின்ன முத்துக்களை நாம் 'ஜவ்வரிசி' என்று அழைப்போம். பொதுவாக விரதம் இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பல வகை உணவு தயாரிப்பின் போது பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையான பலகாரங்களிலும் இது சேர்க்கப்படுகிறது. மேலும் அனைவராலும் ரசித்து ருசித்து உண்ணப்படும் பொருளாகவும் இது விளங்குகிறது. ஜவ்வரிசி பாயாசம் என்றால் யாருக்காவது எச்சில் ஊறாமல் இருக்குமா? ஆம், குழந்தைகள் முத…
-
- 1 reply
- 3.9k views
-
-
ஜெனிடிக் ஸ்கிரீனிங் செய்து கொள்ளவேண்டுமா..? இன்றைய திகதியில் பெரும்பாலான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் மார்பகங்களில் கட்டி ஏற்பட்டு வலி வந்த பிறகே மருத்துவர்களை அணுகுகிறார்கள். இதனால் இதற்கு சரியான தருணத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாத நிலை உருவாகிறது. இதைக்களைய தற்போது ஜெனிடிக் ஸ்கிரீனிங் என்ற பரிசோதனை அறிமுகமாகியிருக்கிறது. சிறு வயதில் பூப்படைதல், மாதவிடாய் தள்ளிப்போவது, கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது, 30 வயதுக்கு மேல் திருமணம் அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது, மது குடிப்பது, புகைபிடித்தல், கொழுப்பு உணவு சாப்பிடுவது, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை போன்றவை மார்பகப் புற்றுநோய் வருவதற்…
-
- 0 replies
- 293 views
-
-
பெண்களே உங்கள் முகம் அழகாய் மாற வேண்டுமா>?ஜொலிப்பாய் இருக்க வேண்டுமா.. இதோ நான் குடுக்கும் செய் முறைய பண்ணி பாருங்கள்.. உங்கள் முகம் ஒரு வாரத்தில் ஜொலிப்பாய் பள பளப்பாக வருவிர்கள்.. மற்றவர்களே உங்களை பார்த்து கேட்பார்கள்.. என்ன நீங்கள் பண்ணுறிர்கள்..முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளும் மாறும். இதோ நீங்கள் பண்ண வேண்டியது பச்சை பயறு இருக்கு இல்லை இதை மிக்ஸில் போட்டு அரைத்து அதன் மாவை அரித்து எடுங்கள்.. அத்துடன் கஸ்தூரி மஞ்சள் போட்டு மிக்ஸ் பண்ணி வயுங்கள்.. படுக்க போக முதல் பாலில் மிக்ஸ் பண்ணி ஒரு அரை மணித்தியாலம் போட்டு விட்டு கழுவி விடுங்கள் ..சோப்பு போடதிர்கள்.. விடிந்து முடிய உங்கள் முகம் பாருங்கள்.. ஜொலிப்பாய் இருக்கும்.. இயற்க்கை செய் முறை சருமத்துக்கு ந…
-
- 6 replies
- 2.7k views
-
-
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலநேரங்களில் சொல்வது மறந்திட்டேன் என்பதாகத்தான் இருக்கும். சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இ…
-
- 2 replies
- 11.6k views
-
-
ஞாபக சக்தியை அதிகரித்துக்கொள்ள மிக முக்கியமான 4 விஷயங்கள் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஆரோக்கியம் ஞாபக சக்தியை அதிகரித்துக்கொள்ள மிக முக்கியமான 4 விஷயங்கள் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி பிரச்சனை என்பது பெரும்பாலானவருக்கு இருக்கத்தான் செய்கிறது. மாணவர்களாக இருந்தால், நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட தேர்வுக்கு செல்லும் சமயத்தில் கேள்வித்தாளை பார்த்தவுடன் படைத்தது அத்தனையையும் மறந்து விடுவார்கள். பெரியவர்களாக இருந்தால் அவர்கள் செய்யும் தொழிலில் அல்லது பணிக்குச் செல்பவர்களாக இருந்தால் அவர்கள் ஈடுபடும் வேலையில் பலவகையான நுணுக்கங்களை மறந்துவிடுகிறார்கள். நன்றாக படித்த அறிவாளிகள் கூட நேர்காணலில் போது தடுமாறு…
-
- 0 replies
- 351 views
-
-
ஞாபக மறதி டாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப் பிரச்னை வயது காரணம் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவ ஆய்வாளர்கள் வயதானாலும் நிதானமாக இருக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் நினைவுக்குக் கொண்டு வருவதில் சற்று தாமதம் உண்டாகலாம் என்று கூறுகின்றனர். ஞாபக மறதி வெவ்வேறு அளவில் இருக்கலாம். சிலருக்கு சிறிய அளவிலும் வேறு சிலருக்கு பெரிய அளவிலும் இருக்கலாம். இது ஆபத்தான அளவை எட்டினால்தான் ஒருவேளை மூளையில் பாதிப்பு உள்ளதா என்பது சந்தேகிக்கப்படும். மூளையில் ” டீமென்ஷியா ” என்ற நோய் இருக்கலாம். இது உண்டானால் அவர்களால் தங்களது அன்றாட வேலைகளைச் செய்வதில்கூட சிரமத்தை எதிர்நோக்குவர். இதில் ” ஆல்ஸைமர் நோய் ” என்பது ஒரு வகை. இதில் தங்களையே யார் என்பதைக்கூட…
-
- 1 reply
- 728 views
-
-
ஞாபக மறதிக்கு சாக்லேட் மருந்தாகுமா? பகிர்க எழுத்தாளர் ஜேன் சீப்ரூக் உருவாக்கிய ஃபர்ரி லாஜிக் தொடரில் இப்படியாக ஒரு வரி வரும், "சொர்க்கத்தில் சாக்லேட் இல்லையென்றால் நான் அங்கு செல்லமாட்டேன்" என்று. ஆம், இங்கு சாக்லேட் சுவையை விரும்பாமல் இருப்போர் வெகு சிலரே. பல்வேறு இசங்களை பின்பற்றுவோர் இணையும் ஒரு புள்ளி சாக்லேட்தான். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பால்யகால நினைவுகளை நாம் அசைபோட்டால், ஏதோவொரு ஒரு சாக்லெட்டின் வாசனை நம் நாசியில் வந்து செல்லும். பால்யத்தில் சாக்லெட்டை கடந்து வராதவர்கள் யாரும் இலர். நாளை உலக சாக்லேட் தினம். அதனால், சாக்லேட் குறித்து ஐந்து தகவல்களை இங்கு பகிர்கிறோம். சாக்ல…
-
- 0 replies
- 442 views
-
-
நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது. தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேய…
-
- 0 replies
- 1.9k views
-
-
நினைவாற்றல் அல்லது ஞாபக சக்தி எனப்படுவது. தான் அனுபவித்த, கற்றறிந்த விடயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும். நினைவாற்றல் குன்றுவதனால் பல விடயங்களில் தோல்வி ஏற்பட்டு பின்தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு பரிட்சை நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் மறந்து போனாலே டென்சன் ஆகிவிடுவார்கள். அதன் பின்பு அவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. அதே போன்றுதான் நேர்முக பரீட்சைக்கு தோன்றும் ஒருவருக்கும் உரிய நேரத்தில் சரியான பதில் தெரிந்திருந்தும் நினைவாற்றல் குறைவினால் பதில் கூற முடியாது தோ…
-
- 1 reply
- 15.1k views
-
-
காய்கறிகளில் மிகவும் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும், அனைவருக்கும் பிடித்ததுமாக இருப்பது கேரட். அந்த கேரட் இந்த காலத்தில் தான் கிடைக்கும என்று சொல்ல முடியாது. ஏனேனில் அது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. மேலும் அந்த கேரட்டின் வேர் சற்று மொறுமொறுப்புடனும், சுவையாகவும் இருக்கும். சொல்லப்போனால் இது ஒரு சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் அதில் அந்த அளவு ஊட்டச்சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதனை டயட்டில் இருப்பவர்கள், தங்கள் உணவுப் பொருட்களில் தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டால் போதும், உடல் எந்த ஒரு நோயும் வராமல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் நன்கு பிட்டாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். * பார்வை குறைபாடு : கேரட்டை சாப்பிடும் போது, அதி…
-
- 1 reply
- 625 views
-
-
எட்டு மணிக்கு மேல் சாப்பிடாதீர்கள்! இரவு வெள்ளையாக இருக்கும் எதையும் சாப்பிடக் கூடாது! வாழைப்பழம், உருளைக்கிழங்கைத் தவிருங்கள்! காபி, தேநீர் குடிப்பதை நிறுத்திவிடுங்கள்! இத்யாதி, இத்யாதி... உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்படும்போதெல்லாம், இந்த மாதிரி உணவுக் கட்டுப்பாடு ஆலோசனைகளைக் நண்பர்களும் உறவினர்களும் வாரி வழங்குவார்கள். ஆனால், இந்த மாதிரி ஆலோசனைகளைக் கட்டுப்பெட்டித்தனமாகப் பின்பற்றுவது, உடல் எடை குறைய முழு பலனளிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் நம்மைச் சுற்றி இந்த மாதிரி நிறைய தவறான கருத்துகள் நிரம்பியிருக்கின்றன. அதனால்தான் தீவிரமாக ‘டயட்’டில் இருப்பவர்களால்கூட, நினைப்பதை முழுமையாகச் சாதிக்க முடிவதில்லை. ‘டயட்…
-
- 0 replies
- 352 views
-
-
வெளி தோற்றத்தின் மேல் அதீத அக்கறை காட்டுவதில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதனால் கொஞ்சம் உடல் எடை கூடினாலும் டயட் மேற்கொள்கிறேன் என எதையாவது பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். பெண்கள் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் தங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கின்றனர். அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் எந்த ஒரு உணவும் உங்கள் உடலுக்கு கெடுதல் தரும் என்பதை பெண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். அதேபோல உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் உங்கள் உடலிற்கு தேவையான உணவுகளை அறவே ஒதுக்குவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆலிவ் ஆயில் ஆலிவ் எண்ணெய் உடல் நலத்திற்கு நல்லது தான். ஆனால் நிறைய பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் அளவிற்கு அதிகமாக ஆலிவ் எண்ணெயை சேர்த்துக்…
-
- 0 replies
- 521 views
-
-
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம். அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும். மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எ…
-
- 0 replies
- 568 views
-
-
நவீன மருத்துவ உலகில் இன்று பாவிக்கப்படும் சொற்களில் டயாலிசிஸ் (dialysis) உம் ஒன்று. இதுபற்றி கேள்வி பதில் வடிவில் இப்போ அறிந்து கொள்வோம்..??! டயாலிஸிஸ் என்றால் என்ன..??! வெளியக குருதி சுத்திகரிப்புச் செயன்முறை என்று சொல்லலாம். இதனை குருதி மாற்றீடு (blood transfusion) என்று சொல்வதில்லை. அது வேறு. இது வேறு. டயாலிசிஸின் தேவை..?! குறிப்பாக சிறுநீரக பாதிப்பு நிகழ்ந்திருந்தால் இந்த டயாலிசிஸ் குறித்து மருத்துவர்கள் சிந்திப்பார்கள். சிறுநீரகம் என்றால் என்ன..??! சிறுநீரகம் என்பது எமது வயிற்றுப் புற பின்பகுதியில் அவரை வடிவில் உள்ள இரண்டு வடிகட்டி அங்கங்கள். இவை இரத்தத்தில் உள்ள யூரியா போன்ற நச்சுக்களையும் மேலதிக உப்பு மற்றும் நீரையும் வடிகட்டி சிறுநீராக …
-
- 11 replies
- 18.3k views
-
-
-
- 4 replies
- 704 views
-
-
தமிழகத்தின் தொழில் நகரமாக விளங்கும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள கோவை மெடிக்கல் சென்டர் ஹொஸ்பிட்டல் மருத்துவமனையில், பற்சிகிச்சை முதல் மிகுந்த சிக்கல் வாய்ந்த இருதய, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் வரை அனைத்து சிகிச்சைகளும் உன்னத தரத்தில் வழங்கப்பட்டுவருகிறது. இங்கு, உயிராபத்து விளைவிக்கக் கூடிய புற்றுநோயை குணப்படுத்துவதற்கென்றே 800 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சைப் பிரிவு ஒன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழகத்திலேயே முதன்முறையாக பெட் சிடி ஸ்கேன் (PET CT Scan) பரிசோதனையையும் அறிமுகப்படுத்தியுள்ளது கே.எம்.சி.எச். இம்மருத்துவமனையின் தரத்தை முன்வைத்து, தென்னிந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக கே.எம்.சி.எச். தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இம்மருத்து…
-
- 0 replies
- 919 views
-
-
டினிட்டஸ்: நடிகர் அஜித்குமார் காதுகளைப் பாதுகாக்க சொன்னது ஏன்? அவ்வளவு முக்கியமான பிரச்னையா? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SURESH CHANDRA படக்குறிப்பு, அஜித்குமார் காதுக்குள் ஒலி கேட்கிறதா? இது சாதாரண பிரச்னை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது முற்றிலும் உண்மையல்ல. உயிருக்கு ஆபத்தாகும் அளவுக்கு விளைவுகளைக் கொண்ட பிரச்னையாகவும் இது இருக்கலாம். நடிகர் அஜித்குமார் மேலாளரின் ட்வீட்டுக்குப் பிறகு, பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது இந்த விவகாரம். நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட ஒரு ட்வீட்டுக்கு பிறகு டினிட்டஸ் என்ற சொல் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அ…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Hindustan Times/Getty Images 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு என்று எல்லாமே பாதிக்கப்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் அனைத்து தேவைகளுக்கும் மற்றவரின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். டிமென்ஷியாவை முழுமையாக குணப்படுத்தக் கூடிய மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வரும் காலங்களில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ மற்றும் சமூக நெருக்கடியாக டிமென்ஷியா என்கிற இந்த நோய் உருவாகியிருப்பதாக அல்சைமர்ஸ் நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது. …
-
- 1 reply
- 988 views
-