நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும். எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மரு…
-
- 0 replies
- 676 views
-
-
தொப்பையை குறைக்க வழி - 3 எப்ப டெலிவரின்னு கிண்டல் பண்றாங்களா? இதோ தொப்பையை குறைக்க வழி... * உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோர…
-
- 1 reply
- 909 views
-
-
-
- 0 replies
- 681 views
- 1 follower
-
-
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது எவர்ஸில்வர் என்றழைக்கப்படும் உலோகப் பாத்திரங்கள் இந்தியச் சமையலறைகளில் இன்று பெருமளவு இடம் பிடித்திருக்கின்றன. முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்தவை செப்பு, பித்தளை, இரும்பு, மண் பாத்திரங்கள். இவற்றில் பழைய சம்பிரதாயங்களை விடாமல் கைப்பிடிக்கும் குடும்பங்களில் குடிநீரை செப்புப் பாத்திரங்களில் (குடங்கள்) வைத்திருப்பார்கள். அவை சுத்தம் செய்யச் சிறிது உழைப்பு தேவைப்படுபவை. ஆற்றுப் படுகையில் நீர் சேந்தி வர வேண்டிய வேலையைச் சிறுமிகளும், சிறுவர்களும் மேற்கொள்ளுவர். ஆனால் கூட வரும் அம்மாக்களும், அத்தைமாரும், புளியைப் போட்டு அந்தக் குடங்களைத் தேய்த்துக் கழுவிப் பொன் போல மின்ன வைத்த பின்னரே அவற்றில் நீர் சேந்தப்படும். அவை ஏன் செப்புப் பாத்திரங்…
-
- 0 replies
- 2k views
-
-
சிறுநீரக தொற்று குறித்து விளக்கும், பெண்கள் சிறப்பு மருத்துவர் டாக்டர் கலைவாணி ராமலிங்கம்: 'இகோலை' என்ற கிருமிகள், எப்போதுமே குடலில் இருக்கும். சிறுநீர்ப் பாதையில் சுத்தமின்மை, தண்ணீர் போதிய அளவு குடிக்கவில்லை என்றால், அந்தக் கிருமிகள், கிட்னிக்கு உள்ளே போகிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுகாதாரம் சரியில்லாத காரணத்தால், பெண்கள், சிறுமியர் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதால், 'யூரின் இன்பெக்ஷன்' ஏற்படுகிறது. உடல் ரீதியாக, ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்திற்குமான இடைவெளி, 15 செ.மீ., என்றால், பெண்களுக்கு அது வெறும், 4 செ.மீ., மட்டுமே. அதனால், மிகச் சுலபமாக கிருமிகள், பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. நம் உடலில் மிக முக்கியமான பகுதி சிறுநீரகம். ரத்தத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல முகம் பளிச் என்று இருக்க வேண்டுமா? திராட்சை சாப்பிடுங்கள் என்கின்றனர் என்று அறிவுறுத்துகின்றனர் அழகியல் நிபுணர்கள். திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது. பளிச் முகத்திற்கு தின…
-
- 7 replies
- 1.1k views
-
-
தொலைபேசி பாவனையினால்... 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின், மூளை வளர்ச்சிக்கு பாதிப்பு! கையடக்கத் தொலைபேசி பாவனையினால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கும் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதற்கமைய 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு 02 மணி நேரம் மட்டுமே கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள், எரிச்சல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் …
-
- 0 replies
- 187 views
-
-
கூடல் - 10 June, 2011 சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே: நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை. எலும்புகளை வலுவாக்குபவை: இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, …
-
- 0 replies
- 514 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சருமத்தை வெளுப்பாக்கும் சில க்ரீம்களில் அதீதமான அளவில் பாதரசம் இருப்பதால், அவை சிறுநீகர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தற்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது? சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில க்ரீம்களில் பாதரசம் போன்ற நச்சு உலோகங்கள் இடம்பெற்றிருப்பது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிறுநீரகம் தொடர்பான ஆய்விதழான Kidney Internationalல் "NELL-1–as…
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 56 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கொசு கடித்தால், எறும்போ அல்லது ஒரு பூச்சியோ உடலில் ஊர்வது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனே ஏற்படும் அரிப்பை விரல்களால் சொறிந்துகொள்வது நமக்கு ஒரு வித ஆறுதலைக் கொடுக்கும். நிச்சயம் சொறிந்தே தீர வேண்டும் எனும் உணர்வு, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து நம்மை தன்னிச்சையாகச் சொறியத் தூண்டிவிடும். அந்த ஆறுதல் உணர்வுக்குப் பிறகுதான், நம்மை யாரும் பார்த்தார்களா என்பதைக் கவனிப்போம். சிலருக்கு பிறர் சொறிந்து கொள்வதைப் பார்த்தாலே, அவர்களுக்கும் அரிப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். …
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
தோல் நோய்கள் குறைய Published March 15, 2012 | By sujatha வேப்பமரத்து பிசினை எடுத்து சுத்தம் செய்து தண்ணீருடன் கலந்து குடித்து வந்தால் தோல் நோய்கள் குறையும். வேப்பம் பிசின் வேப்பம் பிசின் வேப்பம் பிசின் அறிகுறிகள்: தோலில் ஏற்படும் அரிப்பு புண். தேமல். படை சொறி சிரங்கு. தேவையான பொருட்கள்: வேப்பம் பிசின். செய்முறை: வேப்பமரத்து பிசினை எடுத்து சுத்தம் செய்து அதை தண்ணீருடன் கலந்து குடித்து வந்தால் தோல் நோய்கள் குறையும். Rating: 5.0/5 (1 vote cast) http://www.grannythe...88%E0%AE%AF-16/
-
- 2 replies
- 2.4k views
-
-
மனிதர்களுக்கு தோல் பளபளப்பு உபயத்தை அளிப்பது செல்கள்தான். வறட்சியான செல்கள்தான் தோலின் சொரசொரப்புக்கும், பளபளபின்மைக்கும் காரணமாக இருக்கின்றது. வெண்மையாக்கும் சிகிச்சைக்கு (Whitening treatment) அடுத்தபடியாக, இளம் பெண்களின் மனங்கவர்ந்த சிகிச்சை என்னும் அந்தஸ்தைப் பெற்றிருப்பது ஸ்கின் - பாலிஷ் சிகிச்சை தான். இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தச் சிசிச்சை அறிமுகமாயிருந்தாலும், இப்போதுதான் இளம் பெண்களிடையே உச்சக் கட்ட கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்தச் சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவமனைகளிலும் சில குறிப்பிட்ட அழகு நிலையங்களிலும் செய்யப்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் சுருக்கம், பொலிவிழப்பு ஏற்படுகிறது. ஸ்கின் - பாலிஷ் செய்வதன் மூலம் சருமத்திற்குப் பொலிவும், புத்த…
-
- 56 replies
- 11.7k views
-
-
தோல் புற்றுநோயால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 1985 ஆம் ஆண்டு முதல் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தோல் புற்றுநோயால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதாகவும் கிளாஸ்க்கோவில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் அயர்லாந்து மற்றும் குரோஷியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதுடன் ஸ்பெயினிலும், இங்கிலாந்திலும் 70 சதவிகிதமும், நெதர்லாந்தில் 50 சதவிகிதமும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் 60 சதவிகிதமும் அமெரிக்காவில் 25 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியிலிருந்து ஆண்கள் தம்மை பாதுகாப்பதற்…
-
- 0 replies
- 286 views
-
-
பட மூலாதாரம்,PERSONAL FILE 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு முக்கியமான பயணம் செய்வதற்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்ததால், பயணத்திற்கு முந்தைய நாள் ‘Facial’ எனப்படும் அழகு சிகிச்சை செய்துகொள்வதற்காக பார்லருக்கு சென்றார் டையானே லிமா என்ற 27 வயது பெண். ஆனால் அந்த ‘Facial’ தனக்கு மிகப்பெரும் உதவி செய்யப்போகிறது என்பதை அப்போது அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். ஏனெனில் முகப்பொலிவுக்காகச் செய்யப்படும் அந்த அழகு சிகிச்சை, டேயின் லிமாவிற்கு அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள உதவியது. எப்படி தெரியுமா? முகப்பொலிவுக்காக அவ்வபோது ‘Facial’ செய்துகொள்ளும் வழக்கம் உடையவர் லிமா. அந்த வகையில் 2022ஆம் ஆண…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சுவரிலிருந்து வண்ணப்பூச்சை நீக்கும் ரசாயனம் போன்று செயல்படும் தோலை வெண்மையாக்கும் கிரீம்களை (களிம்பு) பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற தயாரிப்புகளை 'எந்த வகையிலும்' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டனின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் எல்ஜிஏ எனும் உள்ளூர் நிர்வாக அமைப்பு மக்களை அறிவுறுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பல களிம்புகளில் வெளுத்துப்போக செய்யும் ரசாயனமான ஹைட்ரோகுவினோன் இருந்தது. இத…
-
- 3 replies
- 635 views
-
-
ஜூலை 16 `குமுதம் சிநேகிதி' இதழில் நடிகை த்ரிஷா தன் அழகு ரகசியம் பற்றிக் கூறுகையில், `நான் சோப்பே யூஸ் பண்றதில்லை, ஒன்லிஃபேஸ்வாஷ்தான்' என்றிருக்கிறார். இதில் என்ன ஒரு சிறப்பம்சம் என்றால், இப்படிச் சொல்லும் த்ரிஷாவே ஒரு குளியல் சோப் விளம்பரத்தில் மாடலாக நடித்திருக்கிறார் என்பதுதான். `சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்' என்று சந்தையில் புதிது புதிதாக குளியல் சோப்புகள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்போது, த்ரிஷா போன்ற பிரபலங்கள் குளியல் சோப்பை அவாய்ட் செய்வதன் காரணம் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் முரளீதர் ராஜகோபால் முன் வைத்தோம். ``த்ரிஷா சொல்றது கரெக்ட் என்பதைவிட, பொதுவாக குளியல் சோப்புகளுக்குப் பதில் ஃபேஸ்வாஷ் யூஸ் பண்…
-
- 2 replies
- 4.7k views
-
-
அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு. நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படிஇ குழந்தைகள்இ சிறுவர்கள் மட்டுமன்றிஇ வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில்இ தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இ…
-
- 20 replies
- 4.7k views
-
-
22:56 ராஜ் தியாகி உடலில் காணப்படும் நகங்கள் தேவையற்றது தான் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு. சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர். மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும். நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலம் நகத்தில் …
-
- 0 replies
- 3.3k views
-
-
நச்சுக்கொடி அல்லது நஞ்சுக்கொடி தொடர்பாக அண்மையில் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது அதில் ஒருவர் இப்படி கூறுகின்றார். நஞ்சுக்கொடியை நம் முன்னோர்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஆலமரம் அல்லது அரசமரத்தின் கிளைகளில் கட்டிவிடுவார்கள் இதற்கான காரணம் மண்ணில் புதைத்ததால் அதன் நஞ்சு மண்ணில் பரவி எந்த செடி கொடிகளும் அங்கே முளைக்காது ஆனால் ஆலமரத்தில் கட்டிவிடடால் ஆலமரம் அதில் இருக்கும் விஷத்தை உறிஞ்சிவிடும். சரி வாருங்கள் இவர் கூறுவது உண்மைதானா? உண்மையில் நஞ்சுக்கொடி என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். தாயின் வயிற்றினுள் இருக்கும் கர்ப்பப்பையை குழந்தையுடன் சேர்த்து இணைக்கும் பகுதிகளை நச்சுக்கொடி என்று சாதாரண மக்கள் அழைக்கின்றார்கள் உண்மையில் …
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
நஞ்சுக் கோழிகளை விற்கும் பன்னாட்டு உணவகங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு உணவு மிகவும் அவசியமானது. தனது உணவை தானே உற்பத்தி செய்து கொள்ளக் கற்றுக் கொண்டதால் தான் மனித இனம் இன்று மாபெரும் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இல்லை எனில் காடுகளில் தான் அலைந்துக் கொண்டிருப்போம். அத்தகைய உணவுக்குப் பல்வேறு சமூகங்களும், கலாச்சாரங்களும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. உணவுகள் இல்லாத கொண்டாடட்டங்களோ, வைபவங்களோ உலகில் எங்குமே இல்லை எனலாம். ஒரு தாய் தனது மகவுக்குப் பால் புகட்டுவதன் பாசப் பிணைப்பு, குடும்பங்களின் ஒற்றுமை, உறவுகளுக்கு இடையிலான சுமூகம், சமூகக் கட்டமைப்பு என அனைத்துமே உணவை ஆதாரமாகக் கொண்டே இயங்குகின்றது அல்லவா. நாம் உயிர் வாழ உணவு இன்றியமையாதது ஆகும். அதுவும் சந்தைப் பொருளாதாரத்தில…
-
- 0 replies
- 416 views
-
-
நடந்து பாருங்கள், நண்பர்களே...! நடக்க, நடக்க... நமக்குள், நடப்பது... என்ன? நம்ப முடியாத, ஆச்சரியங்கள் !!! அடுத்தடுத்து நிகழும் அற்புதங்கள் !!! அனைத்தும் ஆதாரபூர்வ... அறிவியல் உண்மைகள் !!! நிமிடம் ஒவ்வொன்றிலும்... நீங்களே உணரலாம்; நாள் ஒவ்வொன்றையும்... நலமாய்த் தொடங்கலாம்... ஒன்றாம் நிமிடத்திலேயே ஒவ்வொரு செல்லுக்குள்ளும்... ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது !!! அடுத்த நிமிடத்தில் அங்கம் எங்கும் ஊக்கத்துடன்... அருவி போல் குருதி பரவுகிறது !!! மூன்றாம் நிமிடத்திலேயே மூட்டுக்களின் இறுக்கம்... முற்றிலுமாகத…
-
- 4 replies
- 327 views
-
-
இன்று விகடனில் வாசித்த ஒரு தொடரில் வந்த குறிப்பு ஒன்று: சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே... நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை. எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது. ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனா…
-
- 5 replies
- 2.8k views
-
-
நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள். அதில் சிலருக்கு உண்மையான காரணம் தெரிந்தாலும் பலருக்குத் தெரிந்திருக்காது. பொதுவாக வாக்கிங் மேற்கொள்வதாலும், இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறைவதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும். தினமும் ஒருவர் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து கொண்டு, இனிமேல் வாக்கிங் செல்லுங்கள். * தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தால் அபாயம் குறையும் ஆய்வுகளும் வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன. * நடைப்பயிற்சி இரத்த …
-
- 42 replies
- 4.8k views
- 2 followers
-
-
நடைப் பயிற்சி எனும் அற்புதம் வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம் என்கிறார் கவிஞர் தாராபாரதி. எத்தனை விரல்கள் இருந்தாலும் கட்டை விரல்தான் பிரதானம். அதுபோலத்தான் பருத்த உடலைக் குறைக்க கார்போ வேண்டாம், புரோட்டீனைக் கூட்டு, கொழுப்பைக் குறை, நொறுக்குத் தீனிகளுக்கு டாட்டா என்று எத்தனை ரகசியங்களைச் சொன்னாலும், ‘உடற்பயிற்சி’ என்கிற ரகசியம்தான் ரொம்பவும் அவசியம். ஆனால், அதற்குத்தான் பலருக்கும் இல்லை அவகாசம். நலம் நல்கும் நடை உடற்பயிற்சிகளின் அரசன் நடைப்பயிற்சி. காசு செலவில்லை; தனிக்கருவி தேவையில்லை; காலையில் சீக்கிரம் எழுந்தால் போதும். துணைக்கு ஓர் ஆள் கிடைத்தால் நல்லது. ‘காரியம்’ கைகூடும். ஆனால், ‘காலையில் எழுந்தால் சமைக்கவும் …
-
- 0 replies
- 478 views
-
-
இது தெரிந்தால் தினமும் கண்டிப்பாக நடப்பீங்க | Dr.Sivaraman speech on walking நிணநீர் கழிவுகள் வெளியேறணும் என்று புதிதான ஒரு தகவலை கூறுகிறார். @Justin அண்ணா இது பற்றிய உங்கள் பதிலை அறிய ஆவல்.
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-