நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
அல்சைமர் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு அல்சைமர் நோய்க்கான சிகிச்சையாக அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று டொனனெமாப் என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது. அல்சைமர் நோய் படிப்படியாக மனித நினைவாற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து பயன்பாடு சுமார் 60 சதவிகிதம் மெதுவாக்கும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. நோயின் ஆரம்ப கட்டத்தில் மூளையில் படிந்திருக்கும் புரதத்தை இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் அகற்ற முடியும் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், மரபணு காரணங்களால் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு பக்கவிளைவாக மூளை வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மற்ற பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. http…
-
- 0 replies
- 683 views
-
-
பொடுகைப் போக்க சில வழிமுறைகள் - அறிந்து கொள்வோம் மண்டை ஓட்டை போர்த்தியிருக்கும் தோலில் பொதுவாக புதிய தோற்கலங்கள் உற்பத்தியாக தோலின் வெளிப்படையாக அமைந்த இறந்த கலங்கள் தள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்படும். தோற்கலங்கள் புதுப்பித்தல் பல மடங்கு வேகத்தில் நடைபெறுமாயினின் அதிகளவு இறந்த கலங்கள் வெளித்தள்ளப்படும். இதுவே தலை சீவும் பொழுது ஆடைகளில் கொட்டிக்கிடக்கும். சில சமயங்களில் சொறியவும் நேரிடும். சில சமயங்களில் தலை மயிரில் மா தூவி விட்டது போன்று படிந்துமிருக்கும். எக்சிமா என்பது சொடுகு நோயின் தீவிரமடைந்த நிலையாகும். இது கண்புருவமி மூக்குஇ காது நெற்றி போன்ற இடங்களிலும் தோன்றக்கூடும். தோல் வியாதியும் சொடுகு போன்றே தலைத் தோலைப் பாதிக்கின்றது. இதன் பொழுது …
-
- 0 replies
- 3.3k views
-
-
வெட்கத்தை விட்டு பேச வேண்டிய ஒரு விடயம், ஆனாலும் பலர் முகம் சுழிப்பார்கள் என்று நினைகிறேன். நான் UKல் படிக்கும் போது, ஒரு நாள் ஒரே கடி. ஊரில் வைத்தியரிடம் போனால் மருந்து தருவார். அப்படித்தான் இங்கயும் என்று நினைத்துகொண்டு வெளிகிட்டு போனன். டாக்டர் கேட்டார், கையாலயோ கழுவினனிர் என்று. நானும் வெக்கபடாமல் சொன்னன் வடிவாக துடைச்சு போட்டு குளிக்கேக்கை சோப்பு போட்டு கழுவினனன் என்று. அவர் சொன்னார் தொடுறதை நிப்பாட்டும், கடி தானால் நிக்கும் என்று. அன்று பேப்பர் பாவிக்க தொடங்கின எனக்கு இன்னும் கடி வரவுமில்லை, மருந்து பாவிக்கிறதும் இல்லை. உங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் மற்றவர்களின் ஆரோக்கியத்துக்கு வளமாக இருக்கும்.
-
- 42 replies
- 5.4k views
-
-
வாரத்திற்கு 4 முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மனித குலத்திற்கு எதிரியாக விங்கும் நீரிழிவு நோய்க்கான தீர்வு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அவர்களுக்கான உணவுகளும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், முட்டை சாப்பிடுவதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயின் தாக்கம் குறையும் என்று தெரியவந்துள்ளது. கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப்–2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. முட்டைய…
-
- 10 replies
- 1.1k views
-
-
Posted by சோபிதா on 19/08/2011 in புதினங்கள் | 0 Comment “நாளும் ஒரு அப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது. கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய அய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார். அப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய அப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின. அப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போன…
-
- 2 replies
- 1.1k views
-
-
'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா? அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனித வாழ்வில் நட்பு, காதல் இரண்டும் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இவற்றில் சிலரது நட்பு ஆரோக்கியமானதாகவும், சிலரது நட்பு ஆரோக்கியமற்றதாகவும் காணப்படுகின்றது. எது எவ்வாறெனினும் இளம் வயதினரின் நட்பானது வயதான காலத்தில் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உதவுவதாக அமெரிக்காவிலுள்ள Rochester பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்காக 20 வயதை அடைந்த பட்டப்படிப்பை மேற்கொள்பவர்கள் 30 வயதை அடையும் வரை கண்காணிக்கப்பட்டுவந்தனர். ஆரம்பத்தில் இவ் ஆய்வில் 222 பேர் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் ஆய்வு முடிவடையும் தருணத்தில் 133 நபர்களே கண்காணிக்கப்பட்டிருந்தனர். இவ் ஆய்வின் முடிவில் நண்பர்களுடன் குதூகலமாக நேரத்தை செலவிடுபவர்கள் தமது பின்னைய காலத்தில் உடல், உள ஆரோக்கியத்தில் சி…
-
- 1 reply
- 857 views
-
-
துளசியின் மருத்துவ குணங்கள்! துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். இதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசி…
-
- 1 reply
- 683 views
-
-
04/08/2012 Dr.M.K.Muruganandan ஆல் நாற்றம் மூக்கைப் பிடுங்கியது. குடலைப் பிரட்டிக் குமட்டிக் கொண்டு வந்தது. அவரைப் படுக்கையில் விட்டு அவரது வயிற்றைப் பரிசோதிக்க முனைந்த நான் எனது எண்ணத்தை மாற்றினேன். ‘சொக்சைக் கழற்றுங்கோ’ என்றேன். இப்பொழுது என் முன்னுரிமை வேறாயிற்று. பாதத்தில் கண்கள் மேய்ந்தன. கல்லும் குளியுமான தெருவைப்போல அவரது பாதம் பள்ளமும் திட்டியுமாக அசிங்கமாத் தோற்றமளித்தது. பிற்றட் கெரெட்டோலைசிஸ் (Pitted keratolysis) என்பது பாதத்தைப் பாதிக்கும் சரும நோயாகும். தோலை அரித்து நாற்றத்தை எழுப்பும் பாத நோய் (Pitted keratolysis) நோயாளி பரிசோதனை அறைக்குள் நுழையும் முன்னரே இது என்ன நோயென மோப்ப சக்தி குறைவில்லாத மருத்துவரால் நிர்ணயிக்க முடியும். அறிகுறிகள்…
-
- 0 replies
- 1.6k views
-
-
பப்பாளியின் சிறப்புக்கள் பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப
-
- 22 replies
- 13.3k views
-
-
ஆபீஸ் சிண்ட்ரோம்: இளமையில் முதுமையை ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இளைஞர்கள் பலர் ஆபீஸ் சிண்ட்ரோம் என்ற நோய் குறியீடால் அவதிப்படுவதாகவும், அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் பணியாற்றுவதால் இளமை காலத்தில் முதுகெலும்பு தேய்மானம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர் பி.ஆர்.அஸ்வின் விஜய் கூறுகிறார். 'ஆபீஸ் சிண்ட்ரோம்' பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகக் கூறும் அவர், அலுவலகங்களில் எர்கோனாமிக் நாற்காலி தேவை என்றும் அத்த…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள். Posted by: on Sep 5, 2011 ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத…
-
- 24 replies
- 2.7k views
-
-
தினமும் சாப்பிடும் உணவில் மீனை சேர்த்துக்கொண்டால் மன அழுத்தம் நீக்கி மகிழ்ச்சியாக வாழலாம் என சமீபத்தில் சீனாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் மீன் சாப்பிட்டா கண்ணுக்கு மட்டுமில்ல மனதுக்கும் ரொம்ப நல்லதுனு இந்த ஆய்வு சொல்லுது. சீனாவின் கிழக்கில் உள்ள ஷாண்டோன்ங் மாகாணத்தில் இருக்கும் க்விங்டாவ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் ஆய்வுக் குழு இந்த ஆய்வை நடத்தியது.அவர்கள் தினசரி உணவில் மீன் உண்ணும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்டு இந்த ஆய்வை நடத்தினர். அவர்களின் ஆரோக்கியம் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய 2001-2014-ம் ஆண்டுகளுக்குள் உள்ள பட்டியலை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அவர்களின் மன அழுத்தம் குறைந்தி…
-
- 1 reply
- 627 views
-
-
உடற்பயிற்சி செய்தாலும் தொப்பை குறையாதாமே?! உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? இதைப்பற்றி ஒருவர் புத்தகம் எழுதியதாக படித்தேன்.ஆனால் அப்போது எனக்கு சரியாக புரியவில்லை.ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.நாணயத்தின் இருபக்கம் போலத்தான்! இரண்டு வித கருத்துக்களும் இருக்கும்.பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு பெரும் வயிற்றை பார்த்தேன்.வியாதியெல்லாம் இல்லை.சந்தேகமில்லாமல் பெரும் தொப்பைதான்.உடல் உழைப்பு உள்ள பலருக்கும் தொப்பை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அந்த தொப்பை கொஞ்சம் உறுதியானது.அலுத்துக் கொள்ளும் பலரை நான் பார்த்திரு…
-
- 23 replies
- 5.1k views
-
-
'ஆண்குறியை பெரிதாக்க ஒரே ஒரு வழி தான்' - Dr Karthik Gunasekaran
-
- 6 replies
- 1.2k views
-
-
19/09/2010 Dr.M.K.Muruganandan ஆல் >’…காதலிக்க நேரமுண்டு காதலிக்க ஆளுமுண்டு…” எனப் பாடித் திரிந்த காலங்கள் இனிமையானவை. மறக்க முடியாத அந்த நினைவுகள் மனத்துள் துள்ளிக் குதிக்கின்றன. ‘காதலிக்க நேரமில்லை’ என்ற அந்தப் படம் நான் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது பார்த்தது. கஷ்மீர் அழகும், இளமையின் துள்ளலும், கமெடியும் இணைந்த வித்தியாசமான படம். ஸ்ரீதர் நெறியாள்கை. ரவிச்சந்திரன் ஆடிப்பாடுவார். சுற்றுலாக்கள் செல்லும்போது பஸ்சில் எங்கள் வாயில் அப் பாடல் ஓங்கி ஒலிக்கும். சகமாணவிகளும் இருப்பார்கள் அல்லவா? சேர்ந்து பாடும் துணிவும் அவர்களில் சிலருக்கு இருந்தது எம் அதிர்ஷ்டமே. பின்னோக்கிய பார்வை அன்று அது கிளுப்பூட்டும் வெறும் காதல் பாடலாகத்தான் இருந்தது. ஆன…
-
- 1 reply
- 840 views
-
-
கொரோனா என்பது தற்சமயம் உலகில் அதிகம் வருத்தத்துடனும் வலியுடனும் பயத்துடனும் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக விளங்குகின்றது. இதற்கு கோவிட்- -19 (civid --19) என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரும் இட்டுவிட்டது. ‘Middle East respiratory Disease, Spanish flu’ என ஊர் பெயரிலோ, ‘Swine flu’ என விலங்கு பெயரிலோ, இனி இந்த வைரஸை அழைக்கக் கூடாது. ‘பழைய பெயர்கள் தேவையின்றி ஊரையும் விலங்கையும் பழித்து, தேவையற்ற சமூக விலக்கலை ஏற்படுத்துகின்றன. வைரஸுக்குக்கூட இன, மொழி, சாதிய அடையாளம் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது. இப்படியான அடையாளங்கள் தேவையற்ற பிரிவினையையும் விலக்கலையும் சமூகத்தில் உண்டாக்கிவிடும் என்பதே இதற்குப் பின்னுள்ள காரணமாகும். கடந்த இரண்டு மாத காலமாக உலகம் ம…
-
- 0 replies
- 780 views
-
-
நீங்கள் மன அழுத்தத்தில் தள்ளப்படிருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இங்கே !!இன்றைய கால கட்டங்களில் அழுத்தம் என்பது சொல்ல முடியாத அளவிற்கு குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் வரை எல்லாரிடமும் இருக்கிறது. ஏதேனும் ஒரு வகையில் எல்லாரும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. செய்யப்படும் வேலைகளிலும் சுற்றுபுற சூழலிலும் அழுத்தம் என்பது தேவைப்படுவதே. அப்போதுதான் நம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். ஆனால் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டுக் கொண்டிருந்தால், அல்லது அதிக அழுத்ததுடன் வேலை செய்து கொண்டிருந்தால், இறுதியில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தத்தின் அறிகுறிகள் : உணர்ச்சிவயப்படுதல் : தொட்டதெற்கெல்லாம் வேகமாய் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? திடீரெனெ கோபம் அழ…
-
- 1 reply
- 459 views
-
-
லிச்சிப் பழத்தின் மருத்துவம் சீனாவை பூர்விகமாகக் கொண்ட லிச்சி பழம், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. இவை தவிர நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, லெபனான், கனடா, ரஷ்யா மற்றும் ஏமன் நாடுகளில் இந்தப் பழம் விளைகிறது. பலாப்பழம் போல வெளிப்புறம் பரபரவென கூர்மையான சிவப்பு நிற தோலைக் கொண்டிருக்கும். உள்புறம் நுங்கு போல கொழுகொழுவென இருக்கும் இந்த பகுதிதான் சாப்பிடக்கூடியது. இது இனிப்புச் சுவையுடன் இருக்கும். உடலுக்கு சக்தி அளிக்கக்வல்லதோடு இப் பழம் வைன் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பழத்தின் உள்ளே, 2-3 செ.மி. நீளத்தில் இதன் வித்து இருக்கும். அதை சாப்பிடக்கூடாது. லிச்சி பழத்த…
-
- 0 replies
- 391 views
-
-
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. 1. முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால், அசதி நீங்கும். 2. முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாகப் பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும். 3. முருங்கைக் கீரையை உணவுடன் அதிகம் வேகவிடாத பொறியலாக சமைத்து உண்ண கழுத்து வலி படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். 4. முருங்கைப் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப்படுத்தி, அதை 250 மி.லி. பசும்பாலில் கொதிக்க வைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து, ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் குடித்து வர ஆண்மை பெருகும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். 5. …
-
- 3 replies
- 987 views
-
-
அக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகிச்சை அளிப்பதே அக்குபஞ்சர் சிகிச்சை முறை. சமீப காலமாக இயற்கை சார்ந்த மருத்துவங்களை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளை நாடத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இயற்கை முறை மருத்துவத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் கூடுதல் தகுதியாக அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான படிப்பை மேற்கொள்கின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அக்குபஞ்சர் மருத்துவமனைகளும் மாவட்டங்கள் தோறும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடு…
-
- 0 replies
- 4k views
-
-
மதுரை வாசகர் ஒருவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ரத்த வங்கிப் பிரிவில், "டெக்னீஷியனா'க பணியாற்றுகிறார். இவரும், இவருடன் பணிபுரியும் சில நண்பர்களும், வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அதன் முடிவையும் எனக்கு எழுதியுள்ளனர். ஆய்வு: ஒவ்வொருவருடைய ரத்த வகையின் அடிப்படையில் அவர்களுடைய செயல்பாடுகள், குணங்களை கண்டுபிடிப்பதுதான்! ஆய்வின் முடிவு இதுதான்: "ஏ' குரூப் ரத்தம் கொண்டவர்கள்: பிடிவாத குணம் அதிகமாக இருக்கும், காரியம் சாதிக்கத் தெரிந்தவர்கள். கோபம் காட்டத் தயங்கமாட்டார்கள், சென்டிமென்ட் பார்க்கக் கூடியவர்கள். வாக்குவாதம் பிடிக்காது. எங்கே, எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இவர்களிடம் மற்றவர்கள் கேட்டுக் கொள்ளலாம், தலைக்கனம் அதிகம். 'பி'…
-
- 4 replies
- 4.8k views
-
-
உலக தாய்ப்பால் வாரம்: தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? 5 ஆகஸ்ட் 2022, 01:04 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் https://www.facebook.com/BBCnewsTamil/videos/தாய்ப்பாலை-சேமிப்பது-எப்படி-பிரெஸ்ட்-ஃபீடிங்-பம்ப்-பயன்படுத்துவது-பாதுகாப்பானதா/1026457934683461 தாய்ப்பால் கொடுப்பதில் நிறைய சந்தேகங்கள் இருப்பதைப் போலவே, குழந்தை பிறந்து மூன்று அல்லது ஆறு மாதங்களில் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்போதும் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்று நினைக்கும்போது அதற்கு பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் உதவுகிறது. குழந்தை பிறந்து 3 மாதங்களிலேயே வேலைக்குச் சென்றா…
-
- 2 replies
- 443 views
- 1 follower
-
-
எபோலா எமன்! தப்புவது எப்படி? இப்போது உலகை அதிரவைக்கும் ஒரு சொல் ‘எபோலா’. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று விதவிதமான வியாதிகள், விஞ்ஞான முன்னேற்றத்துக்குச் சவால்விட்டு, அவ்வப்போது மனிதனை மரணபீதிக்குள் உறையவைக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு அபாயத்தின் பெயர் ‘எபோலா’. 1976ல் ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் கிருமி, இப்போது மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அச்சத்தில் ஆழ்ந்துபோயிருக்கிறது ஆப்பிரிக்கா. இந்தியாவுக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ‘எபோலா வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் வெகுதொலைவில் இருக்கிறோம்’ என்கிறார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். ஆனாலும், ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் ஏரா…
-
- 0 replies
- 471 views
-
-
ஜேம்ஸ் கல்லேகர் பதவி,உடல்நலம் மற்றும் அறிவியல் செய்தியாளர் பதின்பருவ சிறுமிக்கு இருந்த குணப்படுத்தவே முடியாத புற்றுநோய், புரட்சிகரமான புதிய வகை மருந்து மூலம் அவரது உடலில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அலிசாவுக்கு மற்ற அனைத்து சிகிச்சைகளும் பலன் தரவில்லை. ஆகவே, கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனை மருத்துவர்கள், உயிர் பொறியியலின் மகத்தான சாதனையான மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மருந்தை உருவாக்கினர். இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு அலிசாவின் உடலில் புற்றுநோய் இல்லை. ஆனாலும், அவரை புற்றுநோய் மீண்டும் தாக்குகிறதா என்று மருத்துவர்கள் கண்காணித…
-
- 0 replies
- 264 views
-