நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
மார்பகப் புற்றுநோயை, தடுக்கும்.... அத்திப்பழம்! அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது. அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன. …
-
- 0 replies
- 987 views
-
-
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல்தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான். அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று. சரி, இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம். * நோயெதிர்…
-
- 4 replies
- 925 views
-
-
நடைப்பயிற்சி சில உதவிக் குறிப்புகள் இப்பொழுது எந்த மருத்துவரிடம் போனாலும் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி என ஓடாத குறையாக விரட்டுகிறார்கள். உண்மைதான் உடற் பயிற்சி மிகவும் நல்லது. ஆண் பெண் குழந்தைகள் என எவருக்கும் ஏற்றது. சுலபமாகச் செய்யக் கூடியது. செலவில்லாதது. இடம் தேடி அலைய வேண்டியது இல்லை. வீதியருகின் நடைபாதைகளே போதுமானது. அதீத உடையுள்ளவர்கள், கொலஸ்டரோல் பிரச்சனையுள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் அவசியமானது. வாரத்தில் 5 நாட்களுக்காவது செய்வது நல்லது. பொதுவாக 30 நிமிடப் பயிற்சி தேவை. ஆயினும் நடைப் பயிற்சியை ஆரம்பிக்க இருப்பவரின் தேவை என்ன, ஆரோக்கிய நிலை எப்படி போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை மா…
-
- 0 replies
- 969 views
-
-
நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வோம்..! கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான். * இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும். * இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும். * இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாட…
-
- 0 replies
- 782 views
-
-
நீரழிவு நோய் என்றால் என்ன? நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வழங்குகின்றது. குளுக்கோஸில் இருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ள இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreas) என்னும் சுரப்பி உள்ளது. இங்குதான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் (சீனியின்) அளவு அதிகமாகிறது. இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான குளுக்கோஸ் அல்லது சீனி இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக…
-
- 1 reply
- 4.4k views
-
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,Dr. பிரதீபா லட்சுமி பதவி,பிபிசிக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபகாலமாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக உடல்நலம் சார்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்தும் பல விஷயங்களைப் பலர் பகிர்ந்து வருகின்றனர். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுடன் கஷாயம், லேகியம், பானங்கள், பொடிகள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றைச் சேர்த்து உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அதில் கூறப்படுகிறது. நிபுணர் என்ற…
-
- 1 reply
- 482 views
- 1 follower
-
-
தாயின் கருவறையில் இருக்கும்போதே, இதயத் துடிப்பு ஆரம்பிக்கிறது. நம் இதயம் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் முறை துடிக்கிறது. அதாவது, நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை. அப்படி ஓய்வே இல்லாமல் துடிப்பதால்தான், ரத்தமும் ஆக்சிஜனும் உடல் முழுமைக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. இதயம் தானாகத் துடிப்பது இல்லை, இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவை. அது இல்லை என்றால், இதயம் துடிப்பது நின்றுவிடும். இதயத்தை இயங்கவைக்கும் மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் வலது அறையில் உள்ளது. இந்த அறையில் உள்ள சைனஸ் நோட் என்பதுதான், இதயம் இயங்கத் தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த 'சைனஸ் நோட்’டை மனிதனின் ஜெனரேட்டர் என்று சொல்லலாம். இதில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறைகிறது. சிலருக்…
-
- 0 replies
- 2.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள…
-
- 0 replies
- 975 views
- 1 follower
-
-
எட்டு மணிக்கு மேல் சாப்பிடாதீர்கள்! இரவு வெள்ளையாக இருக்கும் எதையும் சாப்பிடக் கூடாது! வாழைப்பழம், உருளைக்கிழங்கைத் தவிருங்கள்! காபி, தேநீர் குடிப்பதை நிறுத்திவிடுங்கள்! இத்யாதி, இத்யாதி... உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்படும்போதெல்லாம், இந்த மாதிரி உணவுக் கட்டுப்பாடு ஆலோசனைகளைக் நண்பர்களும் உறவினர்களும் வாரி வழங்குவார்கள். ஆனால், இந்த மாதிரி ஆலோசனைகளைக் கட்டுப்பெட்டித்தனமாகப் பின்பற்றுவது, உடல் எடை குறைய முழு பலனளிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் நம்மைச் சுற்றி இந்த மாதிரி நிறைய தவறான கருத்துகள் நிரம்பியிருக்கின்றன. அதனால்தான் தீவிரமாக ‘டயட்’டில் இருப்பவர்களால்கூட, நினைப்பதை முழுமையாகச் சாதிக்க முடிவதில்லை. ‘டயட்…
-
- 0 replies
- 352 views
-
-
பௌலா மிக்கிராத் சுகாதார பிரிவு, பிபிசி பெண்ணுறுப்பு பற்றி பல தவறான கட்டுக் கதைகள் சமூக ஊடகங்களில் உள்ளன. அத்தகைய தவறான தகவல்களை இனம்கண்டு திருத்துவதை தனது பணியாக ஒரு பெண் செய்து வருகிறார். அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த 25 ஆண்டுகளாக மகப்பேறு மற்றும் பெண்கள் நல சிறப்பு மருத்துவராக இருக்கிறார் ஜென் குன்டர்.…
-
- 1 reply
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 29 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 30 மே 2025 பாம்புகளைப் பார்த்தாலே மனிதர்களுக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதனால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படக்கூடிய சூழல் இல்லை என்றாலும்கூட, பதற்ற உணர்வு என்பது மனிதர்களிடையே தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இந்தச் சூழலில் ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால், உயிர் பயமும் பதற்றமும் உச்சத்துக்குச் சென்றுவிடுகிறது. ஆனால், பாம்புக்கடிக்கு ஆளாகிவிட்டால், அந்தப் பதற்றம்தான் முதல் எதிரி என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் நிகழ்வதாகவும் அவற்றில் சுமார் 58,000 பேர் உயிரிழப்பதாகவும் தேசிய நோய்க் கட்டுப்ப…
-
-
- 1 reply
- 288 views
- 1 follower
-
-
கரத்தில் நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்க அதனை வயிற்றுக்குள் வைத்து தைத்த மருத்துவர்கள் தொழிற்சாலை விபத்தொன்றில் கையின் ஒரு பகுதியில் தோல் முழுவதும் உரிக்கப்பட்ட நிலைக்குள்ளான நபரொருவருக்கு, அவரது அந்தக் கரப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க அதனை அவரது வயிற்றுப் பகுதிக்குள் வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் தென் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது. தொழிற்சாலையொன்றில் இயந்திரத்தை செயற்படுத்தும் பிரிவில் கடமையாற்றி வந்த கார்லொஸ் மரியோற்றி (42 வயது) என்ற மேற்படி நபர், சம்பவ தினம் பணியாற்றிக் கொண்டிருந்த போது இயந்திரத்தில் அவரது கரம் சிக்கியதால் அந்தக் கரத்தின் முன் பகுதியிலுள்ள தோல் முழுவதும…
-
- 0 replies
- 326 views
-
-
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலநேரங்களில் சொல்வது மறந்திட்டேன் என்பதாகத்தான் இருக்கும். சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இ…
-
- 2 replies
- 11.6k views
-
-
நீரில் இறங்காமல் நீச்சலா? பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று. "நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என்றவுடன் அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது. "விடிஞ்சு பொழுது சாயு மட்டும் வீட்டிலை வேலை, வேலை... இதுக்கு மேலை என்ன பயிற்சி செய்யுறது." இன்னுமொருவர் தனியார் துறையில் பொறுப்பு வாய்ந்த வேலையில் இருப்பவர். வேளையோடு வேலைக்குப் போனால் இரவான பின்தான் வீட்டிற்கு வர முடியும். உடற்பயிற்சி பற்றி யோசிக்கவே நேரம் இல்லையாம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை இருவருமே அறிந்திருந்தார்கள். ஆயினும், நேரம் இல்லாததால் பயிற்சி செய்வதில்லை. ஆனால், நீரில் இறங்காமல் நீந்த…
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும். இந்திய உணவில் இரண்டு வகை உண்டு. தென்னிந்திய உணவு வகை, வட இந்திய உணவு வகை. தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது. இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவைய…
-
- 17 replies
- 21.1k views
-
-
பித்தப்பை கற்களுக்கு தீர்வு என்ன!!!! முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது. இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும் இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால்இ பித்தப…
-
- 5 replies
- 2.8k views
-
-
சளித் தொல்லை பாடாய்ப் படுத்துகிறதா? ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில…
-
- 1 reply
- 15.6k views
-
-
4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் அறியப்பட்டுள்ள, ’இரண்டு மரபணு பிறழ்வுகளை’ கொண்டிருக்கும் ஒரே நபர் ஜோ கேமரூன் ஆவார். இதன் காரணமாக அவர் கிட்டத்தட்ட வலியை உணர்வதில்லை மற்றும் எந்த காயம் ஏற்பட்டாலும் விரைவிலேயே குணமடையும் திறனையும் அவர் பெற்றுள்ளார். பிறழ்வுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. 2013 ஆம் ஆண்டில் அப்போது 65 வயதாக இருந்த அவரது கையில் ஒரு வழக்கமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, ஒரு மரபணு பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டது, இது அவரது வலி உணர்திறன் இல்லாமையை விளக்கியது. "என் கையில் மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். நான் மயக்க மருந்து நிபுணரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இது …
-
- 1 reply
- 532 views
- 1 follower
-
-
குளிர்ச்சி உணவான தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவாகவே ஜீரணமாகிவிடும். வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம். மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.வெண்ணெயை காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். …
-
- 0 replies
- 732 views
-
-
திருமூலர் திருமந்திரத்தில் இருந்து; நூறு மிளகு அளவு சிறுநீரை அருந்துங்கள். இதற்கு மாறான மருந்து ஒன்றும் இல்லை. இதைத் தெளிந்த உச்சியில் அப்பினால் அதாவது தேய்த்துக் குளித்தால் நரைமயிர் மாறிக் கறுக்கும்.ஒரு கையளவு சிறு நீரோடு ஒவ்வொரு நாளைக்கும் ஒரு மிளகு வீதம் அதிகப்படுத்தி நூறு மிளகு வரை உண்ணுக என சில சித்த லைத்திய நூல்கள் கூறுகின்றன. இது ஒரு காய கல்ப முறை. சிறு நீரினால் உடலை மாலிஸ் இதற்குக் குறைந்த பட்சம் 7 நாட்கள் பழையதான சிறுநீர் தேவை. இதை ஓவ்வொரு நாளும் ஒரு பாட்டிலில் பிடித்து ஏழு நாட்களில் ஏழு பாட்டில்களில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
பலரையும் பாடாய்படுத்தி வரும் மனஅழுத்தத்தை தீர்ப்பதற்கான வழிகள் [Thursday, 2011-09-29 11:44:06] பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு மருத்துவர்கள் வழி சொல்கின்றனர்.வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள். அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உட…
-
- 2 replies
- 2k views
-
-
வியர்வை.... ஏன் துர்நாற்றம், வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!வாயுப் பிரச்சனைக்கு பிறகு ஓர் மனிதன் பொது இடங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவது இந்த வியர்வை துர்நாற்ற பிரச்சனையின் காரணத்தினால் தான். பொதுவாக வெயிலில் அலைந்து, திரிந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்க வாய்ப்புகள் இருக்கின்றன. வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது? ஆனால், சிலருக்கு சாதாரண வேலைகள் செய்யும் போது கூட அளவிற்கு அதிகமாக வியர்வை வெளிப்படும். வியர்வை வெளிவருவது நல்லது தான், ஆனால் வியர்வையோடு சேர்ந்து அதிகமாக துர்நாற்றம் வெளிப்படுவது தான் இவர்களுக்கு ஏற்படும் சிக்கலே. அதிகமாக வியர்வை வெளிபடுதல் இந்த நோய்களுக்கான அறிகுறிகள் என்று உங்களுக்கு தெரியுமா? அனைவருக்கும் தான் வியக்கிறது…
-
- 7 replies
- 6.8k views
-
-
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும் ஜேம்ஸ் கெலஹர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் படத்தின் காப்புரிமை Getty Images சிக்கன் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற - அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளத…
-
- 1 reply
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19-ஆம் தேதி அனுசரிக்கப்படும் வேளையில் கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரலுக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் பிபிசி தமிழிடம் பேசினார் . அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கல்லீரலை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முதல் விசயம் என்ன? உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் செயல்பாடும் நமக்கு தெரியும். ஆனால், கல்லீரல் குறிப்பாக என்ன செய்கிறது என்று பலருக்கு தெரியாது. ஏனென்றால் கல்லீரல் உடலில் 500 வகையான வேலைகளை செய்கிறது. நாம் சா…
-
- 0 replies
- 626 views
- 1 follower
-
-
குழந்தை பேறு பெண்ணின் மூளையில் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு பெண் கர்ப்பமானபோதும் குழந்தை பெற்றெடுத்த பிறகும் அவரின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் நமக்கு தெரியாத ஒன்றும் உள்ளது. அது குழந்தை பேறு பெண்ணின் மூளை அமைப்பையும் மாற்றும் என்பதுதான். குழந்தையை கருவில் சுமக்காத தாயோ அல்லது தந்தையோ குழந்தையை பார்த்து கொள்வதன் மூலம் அவர்களின் மூளையின் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தை பெறுவது மூளையை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராய்ந்த நிபுணர் குழுவை நேர்காணல் செய்து பிபிசி அறிவியல் பத்திரிகையாளர் மெலிசா ஹோஜென…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-