நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பெண்ணைக் கவரும் அம்சங்கள் ஆணுக்கு இருக்க வேண்டும். அத்தகைய ஆண்கள்தான் எளிதில் பெண்களை எளிதில் ஜெயிக்க முடிகிறது. பண்டைய காலம் முதலே ஆண்களிடம் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். அத்தகைய அம்சங்கள் உள்ள ஆண்களை மட்டுமே உறவிற்காக பெண்கள் தேர்தெடுக்கின்றனர். ஆணிடம் உள்ள எந்த அம்சங்கள் பெண்களுக்கு பிடிக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படித்து பார்த்து உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்களேன். ஒளிபடைத்த கண்கள் பாரதியார் பாடியது போல ஒளிபடைத்த கண்கள் இருக்க வேண்டுமாம். அத்தகைய காந்தக் கண்கள்தான் பெண்களை கவர்ந்து இழுக்கின்றன. “கண்ணாலே காதல் கவிதை சொன்னானே எனக்காக” என்று அந்த கண்களைப் பார்த்து பெண்கள் பாடுவார்கள். எதையும் த…
-
- 19 replies
- 1.8k views
-
-
மூளை - மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும் அதுதான் மனித உறுப்புகளில் சிக்கலானதும் அதுதான். மனிதனை ஆட்டிப் படைப்பதுவும் அதுதான். 'ஆலும் வளரனும் அறிவும் வளரனும்' என்பதொற்கொப்ப மனிதனின் பாரிய வளர்ச்சியோடு மூளையும் ஒவ்வொரு நாளும் வளருகிறது. தினமும் மூளை வளருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக குறைந்தது 10 000 நரம்பு செல்கள் (நியுரோன்) மூளையில் பிறக்கின்றன. பிறந்த சில நாட்களிலேயே அவை அழிந்தும்விடுகின்றன. தினமும் செல்கள் பிறந்து பின்பு இறந்தும் போவதால் என்ன பயன்? இதில் மூளை வளருகிறது என்று எப்படி சொல்வது?புதிதாய் பிறந்த நரம்பு செல்கள் சாகவிடாமல் அவைகளை நமக்கு பயனளிக்கும் வகையில் மாற்ற ஒரே வழி; ஒவ்வொரு நாளும் புதிதாய் கற்றுக்கொள்வதுதான். புதிதாய் பிறக்கும் செல்லுக்கு வேலை கொடுக்கவி…
-
- 1 reply
- 626 views
-
-
வயிற்றுப் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதனால் தான் ஔவையார் கூட பசிப்பிணி என்றார். பசிக்கும் போது சாப்பிடவேண்டும். ஆனால் தட்டு நிறைய உணவு இருந்தும் அதை சாப்பிட சிலருக்கு பசி எடுக்காது. பசிக்கா விட்டால் கூட அதுவும் ஒரு நோய்தான். பசியின்மைக்கு பல பிரச்சினைகள் உண்டு. ஜீரணமண்டலத்தை சீராக்கி நன்றாக பசிக்க உணவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். ருசிக்காக சாப்பிடாதீங்க ருசி என்பது நாவின் சுவை நரம்புகளுக்கு மட்டும்தான் தெரியும். ருசிக்கிறது என்பதற்காக கண்டதையும் அள்ளிப்போட்டுக்கொள்ளாதீர்கள். கடைசியில் அதுவே ஜீரணகோளறுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையான…
-
- 0 replies
- 391 views
-
-
மன அழுத்தத்தினாலும் அல்சர் வரும் நம் வயிற்றுக்குள் குடலை பாதுகாக்கும் திரை போன்ற அதைப்பு பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவானாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது இதுவே அல்சர் எனப்படுகிறது. இந்த புண்களினால் சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும். நெஞ்சு எரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும். வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாகவோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த ஏப்பம் என இன்றைக்கு பெரும்பான்மையோரை வாட்டி எடுக்கிறது அல்சர். சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாக சாப்பிடாமல் விடுவதும், பாஸ்ட் புட், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், காபி, டீ போன்றவற்றை உள்ளே தள்ளுவதும் அல்சர் …
-
- 8 replies
- 1.1k views
-
-
கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது. …
-
- 16 replies
- 11.6k views
-
-
ஆஸ்மா நோய்க்கான ஊக்கிகள் ஊக்கிகள் என்பது உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோயை மோசமாக்கும் காரணிகளாகும். உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய்க்கு ஒரு தொகுப்பு ஊக்கிகள் இருக்கலாம். அவை மற்றப் பிள்ளைகளிலிருந்து வித்தியாசப்பட்ட ஊக்கிகளாக இருக்கலாம். உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய்க்கான ஊக்கிகள் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றை நீக்க அல்லது குறைக்க முயற்சிப்பது முக்கியமானது. பொதுவான ஊக்கிகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்: தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் சிகரெட் புகை மற்றும் வளிமண்டல மாசு, குளிர் காற்று, மற்றும் இரசாயனப் புகை போன்ற வேறு எரிச்சலுண்டாக்கக்கூடிய பொருட்கள் செல்லப்பிராணிகளின் முடி, இறகு, செதில், தூசியிலுள்ள நுண்ணுயிர்கள், மகரந்…
-
- 1 reply
- 3.6k views
-
-
தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல் பாதிப்பின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தன். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே சிறுநீர் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆ…
-
- 0 replies
- 498 views
-
-
உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள். தினமும் ஒரு சில மொச்சைக் கொட்டைகளை சாப்பிட்டால் போதும். ரத்த அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள இஸ்ரேல் டியோகோன்ஸ் மருத்துவ மையத்தில் நடந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை அதிகமாக உள்ளது. குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. சிலருக்கு, "ஹைப்பர் டென்ஷன்' எனப்படும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இது மிக ஆபத்தானது. இப்படிப்பட்டவர்களில் 48 பேரை தேர்வு செய்து, அவர் களின் உணவு பழக்க வழக் கங்கள் மாற்றப்பட்டன. தினமும் அவர்களுக்கு மொச்சைக் கொட்டை வழங்கப் பட்டது. ஆச்ச…
-
- 6 replies
- 5.4k views
-
-
ஜீன்ஸ் உடை அணியப்போறீங்களா? இதைப் படிங்க! ஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஒரு உடையாக இருக்கிறது ஜீன்ஸ். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது. ஆனால் ஜீன்ஸ் உடையில் சில அசௌகரியங்களும் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும், பெண்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் ஏற்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். ஜீன்ஸ் அணிந்த இளசுகளை கேட்டாலே அந்த உடையைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள். சவுகரியமான உடை, தன்னம்பிக்கை தரக்கூடிய உடை, அழகை எடுப்பாக எடுத்துக்காட்டும் என்றெல்லாம் கூறுவார்கள். ஜீன்ஸ் உடை அணிய எத்தனை காரணங்களை கூறினாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்கள…
-
- 14 replies
- 6k views
-
-
பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது. பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவ…
-
- 0 replies
- 505 views
-
-
உடலைக் குளிர வைக்கும் வெள்ளரிக்காய்! வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியையும், நீர்ச்சத்தையும் வழங்க வல்லது. இத்தகைய வெள்ளரிக்காய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிறந்த காயாகும். கோடைகாலத்தில் ஏற்படும் அதிகமான நா வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். வெள்ளரியில் வைட்டமின்களும், கலோரிகளும் குறைவாக உள்ளது. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. இதில் பொட்டாசியம் மிகுதியாக இருப்பதால் இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகமாக உருவாக்கும். மேலும் புகைப்பிடிப்போரின் குடலை சீரழிக்கும் நிக்கோடின் நஞ்சை அழிக்கும் ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. வ…
-
- 1 reply
- 678 views
-
-
பழங்களின் நிறங்களும், குணங்களும்... இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள். பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேல…
-
- 2 replies
- 977 views
-
-
மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை! தமிழகத்தில் மாம்பழ சீசன் துவங்கியுள்ளது. சாலை ஓரக்கடைகளிலும், பழக்கடைகளிலும், பழுத்த மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன. குவியல் குவியலாக அடுக்கி வைக்கபட்டிருக்கும் மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த பழுத்த மாம்பழங்களால் சாப்பிடுவோருக்கு ஒரு பெரும் ஆபத்து காத்திருக்கிறது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்ட பணப்பயிர்களில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் மொத்தம் ஒரு இலட்சம் ஹெக்டேரில் “மா” சாகுபடி செய்யப்படுகிறது. “மா” உற்பத்தியை பொறுத்த வரையில் ஓராண்டில் விளைச்சல் நன்றாக உள்ளது என்றால், அடுத்தாண்டு சுமார் மகசூல் என்ற நிலையில் தான் இ…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஏழைகளின் சொத்து என்று சொல்லப்படும் கீரைவிலை மலிவான சாதாரண பொருட்களிலும் நிறையப்பலன்கள் பெறமுடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். சில முக்கியகீரைகளின் பலன்கள் பின்வருமாறு: அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடியகீரைவகைகளில் இது முதன்மையானது. எல்லாநோயாளிகளும் உண்ணக்கூடியது. கண் பார்வைச்சிறப்பாக வைத்திருபதற்கு இந்தக்கீரை பயன்படுகிறது. இரத்தநாளங்கள் ஜீரண உறுப்புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமானமகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும்வல்லமை இந்தக்கீரைக்கு இருக்கிறது. மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண் வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்ட சஞ்சீவி என்று இக்கிரையைக்கூறுவார்கள். மூலநோய்இ குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
கடந்த பல மாதங்களுக்கு முன் இடப்பக்கத்தில் உள்ள மேற்பகுதியின் மூலையில் இருக்கும் கொடுப்புப் பல் ஒன்றில் வலி ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பெரிசாகி இப்ப அடிக்கடி கடுமையாக வலிக்குது. பெரிய சாப்பாடு (இறைச்சி, ஆட்டு எலும்பு போன்றன) எல்லாம் சாப்பிடும் போது அப்பாவியாக தானுண்டு தன் பாடுண்டு என இருக்கும் பல் கடுகு, தானியங்களின் தோல், பர்கர் துண்டு, கடலை போன்ற சின்ன உணவு சாப்பிடும் போது மட்டும் உயிரே போற மாதிரி வலிக்குது. சின்ன உணவுகள் மாவாக அரைபடும் போது, அவை போய் பல்லில் அடையும் போதுதான் இந்த வலி கடுமையாக வருகுது. என்னடா சாப்பாட்டு ராமன் எனக்கு இப்படிச் சோதனை வந்துட்டுதே என்று பல் வைத்தியரிடம் போய் பல்லைக் காட்டினால், அந்தாள் இதுதான் சாக்கு என்று பல X-Ray களை எடுத்துப் பார்த…
-
- 27 replies
- 18.6k views
-
-
மார்பக புற்றுநோயை அது உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எளிய இரத்த பரிசோதனை மூலம் கண்டறியமுடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தகைய பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கமுடியும் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். கேன்சர் ரிசர்ச் என்கிற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் 1380 பெண்களின் இரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர். இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காலப்போக்கில் இவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம் மட்டுமல்ல, அது ஆயுளையும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. முத்தத்தைப் பற்றிய ஆராய்ச்சிமுடிவுகள் தினம் தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதோ புதிய ஆய்வு முடிவு ஒன்றின் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்களேன். திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது. இங்கிலாந்தில் இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்த…
-
- 0 replies
- 553 views
-
-
தயிர் அதிசயம் மிக்க உயிருள்ள உணவு. தயிரின் மகத்துவம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே 3000 வருடங்களுக்கு முன்பே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது. தயிரில் லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்சன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும். தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது…
-
- 1 reply
- 494 views
-
-
இரத்தம் என்றாலே அநேகமானோர் ஒருகணம் கலங்கித்தான் போவார்கள். அதுவும் நமது இரத்தத்தை நாமே பார்க்கும் போது ஏற்படுகின்ற உணர்வு இன்னும் கொஞ்சம் பயங்கரமானது நிறையப் பேருக்கு. நமது உடலில் இருந்து அளவுக்கதிகமான இரத்தம் வெளியேறுவதனாலேயே சில மரணங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக விபத்துக்களுக்கு உள்ளான ஒருவர், யுத்த வெடிகுண்டுகளிலே சிக்கிய ஒருவர், அல்லது குழந்தை பிறப்புக்கு பின் அதிகம் ஏற்படும் ரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறப்பதற்கு முக்கிய காரணம் இந்த இரத்தப்போக்காகும். இவ்வாறு இரத்தம் போவது ஆங்கிலத்திலே கீமரேஜ்(haemorrahage) எனப்படுகிறது. இந்த இரத்தப்போக்கு சாதாரணமாக ஒரு காயத்தினால் வெளியிலே எமக்கு தெரியும்படி நடைபெறும்போது வெளிப்புற இரத்தப்போக்கு (external haemorra…
-
- 0 replies
- 482 views
-
-
கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக்கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும். கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம். கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நா…
-
- 0 replies
- 570 views
-
-
செக்ஸ் வெப்சைட்களை பார்க்கும் பழக்கம் வந்துவிட்டால், உறவுகளை, நட்பை, அலுவலகத்தில் வேலை செய்வதை அது கெடுத்துவிடும்! அமெரிக்காவில் உள்ள, சின்சினாட்டி பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில், இது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, செக்ஸ் வெப்சைட் பார்ப்பது பலருக்கும் ஒரு வியாதியாக பரவி விட்டது. இதனால் தான் அங்கு வன்முறை போக்கும் அதிகமாக இருக்கிறது என்பது தான் நிபுணர்கள் கருத்து. 500 பேரிடம் இது பற்றி ஆய்வு செய்த இந்த நிபுணர்கள், செக்ஸ் புத்தகங்கள், செக்ஸ் "சிடி’க்கள், வெப்சைட்கள் பார்ப்பதால், ஒருவரின் வாழ்க்கை பல வகையில் கெடுகிறது என்று எச்சரித்துள்ளனர். ஆய்வு அறிக்கையில், நிபுணர்கள் கூறியதாவது: "இன்டர்நெட்’ பார்க்கும் பழக்கம், இப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை கர்ப்பக் காலத்தில் வெகுவாகக் குறைந்து இரத்த சோகை வரும் நிகழ்வால் பல கர்ப்பிணிகள் அடிக்கடி நோய்க்கு ஆளாகிறார்கள். இந்தப் பிரச்சனை ஏன் அடிக்கடி கர்ப்பிணிகளுக்கு வருகிறது என்றால், கருவுக்குத் தேவையான கூடுதல் ஊட்டச்சத்து ஆக்சிஜன் போன்றவை தாயாரின் இரத்தம் மூலமே கடத்தப்படுகிறது. இரும்புச்சத்து போதிய அளவில் இல்லாத தாய்மார்கள் மற்றும் ஊட்ட உணவு உட்கொள்ளாதவர்கள் ஆகியோருக்கு இரத்தப் பற்றாக்குறை ஏற்படுவதால் நோய்த்தாக்கம் ஏற்படுகிறது. இந்தச் பிரச்சனைக்கு இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுத்து சரி செய்யலாம். இரத்த நிறமிகள் சரியாக இருக்கின்றனவா என்பதை சரி பார்ப்பதற்காகவும், வேறு ஏதேனும் நோய்த்தொற்று இருப்பின் அதை அறிவதற்கும் இரத…
-
- 0 replies
- 414 views
-
-
காரமான உணவு உண்பது சுகப்பிரசவத்தை எளிதாக்குகிறது. ஆனால் இது போன்ற உணவை சாப்பிடுவதன் மூலம் குமட்டல் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் காரமான உணவை சாப்பிடும் முறையை தவிர்க்கவும். தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது. அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது, இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்குகிறது. தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். உடற்பயிற்சி செய்யாதவர்கள், தினமும் படிகட்டுகளில் அரை மணிநேரம் ஏறி இறங்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடனும் நெகிழு…
-
- 0 replies
- 389 views
-
-
சுறுசுறுவெனும் காரத் தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள். 1. தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி குணமாகும். 2. மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது நெய்யில் கலந்து கொண்டு சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும். 3. சளி, தடுமன் (ஜலதோஷம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலேயே நல்ல குணம் காணலாம். 4. பசியில்லா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஹெல்த் ஸ்பெஷல் ! சூப்பர் டிப்ஸ்.... எலும்பே நலமா? 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவா…
-
- 2 replies
- 682 views
-