Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா? வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழ வகைகளில் ஒன்று என அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, சாப்பிடும் போது பழத்தைக் கழுவத் தேவையில்லை, கடித்து, அரைத்து விழுங்கத் தேவையில்லை, வெறுமே மென்றாலே தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு இறங்கும் என்று காரணம் காட்டி வேறு சத்தான காலை உணவுகளைச் சாப்பிட சோம்பல் பட்டுக் கொண்டு அன்றாடம் காலை உணவாக வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்வது தவறு. ஏனெனில் வாழைப்பழங்களில் நிறைந்திருக்கும் மைக்ரோ நியூட்ரியன்டுகளா…

  2. மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியன ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; சரிவரப் பேசவும் முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும் போதும் நிமிரும் போதும் தலை வலிக்கும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்வதால் வாசனை தெரியாது. ருசியையும் உணர முடியாது. ‘என்டோஸ்கோப்பி’ சிகிச்சை மூலம் மூடப்பட்ட சைனஸ் அறைகளைத் திறந்து உள்ளே இருக்கும் நீரை வெளியேற்றி சைனஸைக் குணப்படுத்தலாம். சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் சைனஸ் நோய் வரலாம். எனவே நம் உடம்பை நன்கு கவனித்துக் கொள்வதுடன் நோய்கள் தாக்கும் முன் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அவசியம். …

  3. கனடா- ஒன்ராறியோ குடும்பம் ஒன்று ஒரு இரண்டாவது கல்லீரல் இரத்த தானம் செய்பவரை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. இந்த குடும்பம் ஒரு இதயத்தை நொருக்கும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. குழந்தைகளின் தந்தை சாத்தியமான நிலையில் இருக்கின்றார் ஆனால் அவரால் இரட்டையர்களில் ஒருவருக்கு தேவையான பகுதியை மட்டுமே வழங்க முடியும். மைக்கேல் வாக்னரின் 3-வயது தத்தெடுக்கப்பட்ட இரட்டையர்களான Binh, Phuoc ஆகிய இரு குழந்தைகளுக்கும் ஒர மரபணு குறைபாடு உள்ளது. இந்நோய் இவர்களது கல்லீரல் செயலிழக்கச் செய்யும். கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யாவிடில் இரு பெண்களும் இறந்து விடுவார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தனது இரண்டு பிள்ளைகளில் ஒருவருக்குத்தான் தனது கல்லீரல் பொருத்த முடியும் என்ற நிலையில்…

  4. மைக்ரோ வேவ் சமையல்- உஷார் மைக்ரோ வேவ் இல்லத வீடு தற்ப்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது. மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாகDr.மெர்கோலா தெரிவிக்கிறார். அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள். *** புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்று நோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidant)கள் ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனி…

  5. சிலிரிப்பு என்பது பொதுவாக அனைத்து மனிதர்களும் உணர்ந்திருக்கக்கூடிய ஒரு உடல் மாற்றமாகும். இதன்போது உடலின் தசைப் பகுதிகள் இறுக்கமடைவதுடன், உடலிலுள்ள உரோமங்கள் நிமிர்ந்த நிலையில் காணப்படும். ஆச்சரியம் மற்றும் பீதி ஏற்படும் சந்தர்ப்பங்களில் இதனை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். இந்த உணர்வுக்கான ஆச்சரியம் தரும் காரணம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஆழ்மனத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிரீனலின் எனப்படும் ஹோர்மோன் வெளிவிடப்படும்.இது சிறுநீரகங்களுக்கு மேலாக காணப்படும் இரு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹோர்மோன் ஆகும். இந்த ஹோர்மோன் ஆனது தோல் தசைகளில் ஏற்படும் சுருக்கத்திற்கு காரணமாக இருக்கின்றமை மாத்திரமன்றி பிற உடல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இதன்…

    • 0 replies
    • 399 views
  6. [size=4]உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை. ஆகவே இனிமேல் அவ்வாறு தெரியாமல் சாப்பிடாமல், அதைப் பற்றி தெரிந்து கொண்ட…

  7. எல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை ,பரிதவிபு்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உண்ர்வு சமீபகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலைல இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல. கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிலயோ என்னத்திலயோ இருக்கிற கோவத்தை வருத்தத்தை வேறயாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக்கொண்டிருக்கிறம் இல்லையா? நீங்கள் எப்பிடியோ தெரியாது ஆனால் கொஞ்சநாளா நான் நடந்துகொள்ற விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு " உம்மோட பெரிய உபத்திரம்" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எத…

  8. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் பேர் மாரடைப்பால் மரணமடைகின்றனர். ஒவ்வொரு வருடமும் மூன்று லட்சம் பேருக்குப் புதிதாக மாரடைப்பு ஏற்படுகிறது. அவர்களில் 10% பேர் மட்டுமே மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வருகின்றனர். அடுத்த 10% பேர் 12 மணி நேரம் கழித்து வருகின்றனர். மீதிப் பேர் சிகிச்சைக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கும் அதிகமாகிறது. மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் ஒரு மணி நேரம்தான் உயிர் காக்கும் பொன்னான நேரம் (Golden hour). அந்த நேரத்துக்குள் அவருக்குத் தேவையான முக்கிய சிகிச்சைகள் கிடைத்துவிட்டால், பிழைத்துக் கொள்வார். தவற விட்டால், மரணம் ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். இந்தியச் சூழலில் மாரடைப்பு வந்த ஒருவர் ஆட்டோ, பஸ், கார் போன்ற வாகனங்…

    • 0 replies
    • 359 views
  9. புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டும் துல்லிய வீடியோ ஒவ்வொரு செல்லிலும் புற்றுநோய் பரவுவதை துல்லியமாக விடியோவில் படம் பிடித்துள்ளனர் ஜப்பான் குழுவினர். இந்த வீடியோவில், இயல்பான உடல் திசுக்கள் பச்சை நிறமாகவும் புற்றுநோய் திசுக்கள் அடர் சிவப்பு நிறமாகவும் காட்டப்பட்டுள்ளது. அந்த ஆபத்தான முறையை விளக்க இந்த தொழில்நுட்பம் பயன்படும் என டோக்கியோ பல்கலைக்கழகத்தின் குழு மற்றும் ரிகென் க்வாண்டிடேடிவ் உயிரியல் மையத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர். எலியின் மீது இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். உடல் முழுவதும் புற்றுநோய் பரவும் ஆபத்தான நிலையை `மெடாசிஸ…

  10. இளைப்பது சுலபம் வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி? அனுபவத் தொடர் - 1 -பா.ராகவன் இந்த லட்டு, பூமி, அறுபது வாட்ஸ் பல்பு இதெல்லாம் எப்படித் தொடக்கத்தில் இருந்தே குண்டாகப் படைக்கப்பட்டதோ, அதேபோல் ஆண்டவன் என்னையும் உருட்டிப் படைத்தான். நான் பிறந்ததும், பிழைப்பது சிரமம் என்று வைத்திய சிரோன்மணி என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், கணிப்பு களைக் கதறியோடச் செய்கிற பிறப்பல்லவா நம்முடையது? பிழைத்துத் தொலைத்தேன். இந்த சந்தோஷத்தில், என் அம்மாவானவர் என்னைப் போஷாக்காக வளர்க்கிறேன் பேர்வழி என்று புஷ்டியாக வளர்க்க ஆரம்பித்தார். நான் உண்ணப் பிறந்தவன் என்பது அவர் முடிவு. அது நல்ல கணிப்பு என்பதால் பொய…

  11. பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவின் சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது. இந்தப் பித்தப்பை இல்லாமல் மாந்தர் உயிர் வாழமுடியும். அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்படல் பித்தப்பை நீக்கம் எனப்படும். பித்தப்பைக்கல் அல்லது பித்தக்கல் என்பது பித்தத்தில் அடங்கியுள்ள பொருட்கள் ஒன்றாகச்சேர்ந்து இறுக்கமடைந்து உருவாகும் படிகத் திரளமைப்பு ஆகும். இந்தக் கற்கள் பித்தப்பையில் உருவாகினாலும் கல்லீரல், பித்தப்பை, பித்தக்கான்கள் அடங்க…

  12. உடல் பருமனைத் தவிர்க்க புத்திசாலித்தனமான வழிகள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல் என எங்கு எடை பார்க்கும் மெஷின் இருந்தாலும் உடனே, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்று ஆர்வமாகப் பார்ப்போம். பார்த்த பிறகு, என்ன தோன்றும்? உடல் பருமன் முற்றிய நிலையில் தீர்வு காண்பது கடினம். ஆனால், ஆரம்ப நிலையிலேயே இதைத் தடுக்க முடியும். உடல் பருமனாவதைத் தவிர்த்து ஃபிட்டாக இருக்க லேப்ராஸ்கோப்பி மற்றும் உடல் பருமன் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணர் சி.பழனிவேலு அளிக்கும் டிப்ஸ் இங்கே... சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கலோரிகள் சேர்ந்து, அதை ஆரோக்கி யமான முறையில் செலவிடத் தவறும்போது உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன், அழகு ச…

  13. Started by nunavilan,

    மாதுளை மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் ம…

  14. நின்றுகொண்டே சாப்பிட்டால்... By DEVIKA 13 NOV, 2022 | 11:59 AM நின்றுகொண்டே சாப்பிடுவது மன அழுத்தத்தை தூண்டும். அதோடு நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நிற்கும்போது புவி ஈர்ப்பு விசை­யின் காரணமாக இரத்தம் கீழ் நோக்கி பாயும். நின்றுகொண்டே சாப்பி­டும்­போது உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து இரத்­தம் மேல் நோக்கி செல்வ­தற்கு சிரமப்படும். இரத்தத்தை மேல்­நோக்கி எடுத்து செல்வதற்கு இதயம் சிரமப்பட வேண்டியிருக்கும். அதன் காரணமாக பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படும். அது மன அழுத்தத்தை தூண்­டும் ஹோர்மோனான கார்டி­சாலின் அளவை அதிகப்படுத்தும். தொடர்…

  15. மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன. செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக…

  16. நெட்டி முறித்தல் ஆபத்தா அடிக்கடி நெட்டி முறிக்கக் கூடாது என பாட்டி சொல்கிறார். உண்மையில் அது தவறா டொக்டர்? எஸ். பிரணவி, சாவகச்சேரி பதில்:- நெட்டி முறிப்பது தீங்கானது என்பது உங்கள் பாட்டியினது மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் பாட்டிகள் சொல்லி பரம்பரை பரம்பரையாக நம்பப்படுகிறது. ஏன் பல மருத்துவர்கள் கூட அது தீங்கானது எனச் சொல்லக் கூடும். மாற்றுக் கருத்துகளும் உள்ளன. அண்மையில் அதாவது 2017 ல் செய்யப்பட்ட ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பாதிப்பு இல்லை என்கின்றன. நெட்டி முறிக்கும்போது என்ன நடக்கிறது என 400 பேரை அல்டரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்நேரம் சடுதியாக தனித்துவமான ஒளிப்பாய்ச்சல் போன்று மூட்டிற்குள்…

  17. கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர். இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து? பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிற…

  18. "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்" 50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது. தொ…

  19. பெண்களில் ஸ்ரெயிட் (ஆண்களில் முழுமையான ஸ்ரெயிட் உள்ளது போல்) அதாவது உண்மையான பெண்கள் இல்லை என்றும் எல்லாப் பெண்களும் இருபால் கவர்ச்சி உடையவர்கள் என்றும் இங்கிலாந்தில் சாதாரண மற்றும் ஒத்தபால் கவர்ச்சி உள்ள பெண்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் எல்லோரும் பெண்ணைக் கண்டாலும் ஒரு கட்டத்தில் பாலுணர்வுத் தூண்டல் அடைவதாகவும்.. இது ஒத்தபால் கவர்ச்சி உள்ள பெண்களிடத்தில் மட்டுமன்றி சாதாரண பெண்களிடமும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆண்களில்.. ஒத்தபால் தூண்டல் உள்ள கேய்கள் தவிர மற்றை வகுப்பில்.. ஸ்ரெயிட் என்று எதிர்ப்பால் தூண்டல் மட்டும் கொண்ட ஆண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு பெண்களில் ஆண்களைப் போல ஸ்ரெயிட் உள்ளார்கள் என்று நம்பப்பட்டு வந்த உண்மைய…

  20. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்...களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வ…

  21. விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது, `ஆண்மைக் குறைவு’ பற்றிய ஆராய்ச்சி! ஏன் என்றால் உலகம் முழுக்க இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம். ஏன்? இந்தியா விவசாய நாடு. எங்கு பார்த்தாலும் விளைநிலங்களாக இருந்தன. எழுபது சதவீத மக்கள் விவசாய வேலை பார்த்து, விவசாயிகளாக வாழ்ந்துவந்தார்கள். அதிகாலையிலே எழுந்து, வயலுக்கு செல்வார்கள். கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்த இயற்கையான உணவை, அவர்கள் கைப்பட சுவையாக தயாரித்த…

  22. [size=3][/size] [size=3][size=4]காதல் [/size][/size][size=3][size=4]இதயத்தில் இருந்து வருகிறதா? அது மூளை தொடர்புடையதா என்று ஒரு ஆராய்ச்சி நடந்து வரும் வேலையில் காதலித்தால் அது இதயத்தை பாதுகாக்கிறது. இதயநோய்கள் ஏற்படாமல் காதல் தடுக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.[/size][/size] [size=3][size=4]இதயநோய் வராது[/size][/size] [size=3][size=4]திருமணம் மூலம் ஏற்படும் குடும்ப உறவு, தம்பதியருக்கிடையே ஏற்படும் அந்நியோன்யமான தாம்பத்யம் இதயநோய்களை தடுக்கிறது என்று பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அன்பான உறவு மூலம் கிடைக்கும் நேசம் பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்கிறதாம் இதனால் இதயநோய் ஏற்படுவது குறைகிறது என்கின்ற…

  23. நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு: [Friday 2016-07-08 07:00] நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற…

    • 0 replies
    • 377 views
  24. (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் தொடராக பிபிசி தமிழ் வெளியிடுகிறது. இதன் 6 பாகங்கள் 2020இல் வெளியாகின. 9ஆம் பாகம் இது.) பாம்பு கடித்த பின்பு கடிபட்ட இடத்தில் இருக்கும் தசையை வெட்டி எடுக்க வேண்டும் அல்லது கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கைக்கொண்டு கட்ட வேண்டும் என்றெல்லாம் நீங்கள் இதுவரை எங்காவது படித்து யாராவது சொல்லிக் கேட்டு இருக்க வாய்ப்புண்டு. பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்று கூட ஒரு மூட நம்பிக்…

  25. மழைக்காலத்தில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன. மேலும் வறட்சியான காற்றை அதிகப்படியாக சுவாசிக்க நேர்ந்தாலும், மூக்கில் அடைப்புகள் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய அடைப்புக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் பொதுவானவையே. ஆகவே இந்த பிரச்சனையைப் போக்க பலர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.