யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். ஏன்?
-
- 8 replies
- 2.1k views
-
-
யாழ் உறவுகளை ஊக்கி விக்க என்னால் மூன்று பச்ச்சை தான் குத்த முடிகின்றது ஒரு நாளிள்..........நான் மோகன் அண்ணாவிடம் கேட்பது என்ன என்ரா ஒரு நாளைக்கு விரும்பும் அலவுக்கு பச்சை குத்த முடியாதா....மூன்று பச்சைக்கு பதில் பத்து தந்தா நல்லா இருக்கும்................
-
- 32 replies
- 2.1k views
-
-
அண்மைக்காலமாக யாழ்களத்தில் செய்திகளையோ, கருத்துக்களையோ வேறோர் தளத்திலிருந்து சுட்டு ஒட்டுவோர், தலைப்புக்களை கவனிக்கத் தவறுகிறார்கள். இதனால் நீண்ட தலைப்புக்களை சுட்டு ஒட்டும்போது அரைகுறைகளாகவே தலைப்புகள் தென்படுகின்றது. ஏன், நீண்ட தலைப்புகளாயின், விளங்கும்படி சிறிதாக தட்டச்சு செய்து போட முடியாதா????? :roll: இங்கு மர்மமாகவோ கருத்துக்களைக் கத்தரித்து குப்பைத் தொட்டியில் போடும் கள மட்டுறுத்தினர்களும் இதைக் கவனிக்கிறார்களில்லை!!!!! :cry: :wink:
-
- 8 replies
- 2.1k views
-
-
யாழ் கள நிர்வாகத்தை நோக்கி: யாழ் களத்தில் அறிவியல் தடாகம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட "கிறீன் பிரிகேட்" பச்சைப் படையணி என்ற சூழல் வெப்ப முறுதலின் காரணிகள் விளைவுகளை மற்றும் இவை தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்க என்றிருந்த தலைப்பை இப்போ அங்க காணக் கிடைக்கேல்ல..???! அண்மைய ஆய்வொன்றின் படி சமீபத்திய வெள்ளப் பெருக்களுக்கு காரணமான சூறாவளிகளின் பெருக்கத்துக்கு சமுத்திர வெப்ப உயர்வும் காரணம் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6921695.stm இதைப் பிரசுரிக்க.. தலைப்பைத் தேடினால் தலைப்பைக் காணல்ல..???! எங்க போச்சுது தலைப்பு..??! :angry:
-
- 10 replies
- 2.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம். அனைவரும் யாழ் தலைப்புப் படத்தினைப் பார்த்திருப்பீர்கள். புதிய வடிவமைப்பின் தொடக்கத்தில் நீர்க்குமிழிகள் படமும், அதன் பின்னர் வண்ணத் தெறிப்பு படமும், இப்போது ஒரு படமும் என்று படங்கள் மாற்றப்பட்டுள்ளன. தொடர்ந்தும் ஒவ்வொரு கிழமையும் (முடிந்தால்) ஒரு புதிய தலைப்புப் படத்தினை மாற்றுவதாக எண்ணியுள்ளோம். ஆர்வமுள்ள கருத்துக்கள உறவுகள், உங்கள் ஆக்கங்களையும் எமக்கு அனுப்பிவைக்கலாம். நல்ல தரமான படங்கள் கருத்துக்கள நிர்வாகத்தால் தெரிவுசெய்யப்பட்டு இணைக்கப்படும். விபரம் .......... + படங்கள் பின்பருவனவையாக இருக்கலாம்: 1. நீங்கள் எடுத்த அழகான காட்சியுடனான புகைப்படங்கள். 2. நீங்கள் வரைந்த ஓவியங்கள். 3. கணினியில் வடிவமைக்கப்பட்ட படங்க…
-
- 11 replies
- 2.1k views
-
-
கருத்துக் களப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, அன்புடையீர்! நான் வரவேற்புப் பகுதியில் பதிவிட்டுடிருக்கிறேன். அதிலே உறவுகள் பலர் உற்சாகமாக வரவேற்றுக் கருத்தகளைப் பதிவிட்டள்ளபோதும் என்னால் அவர்களுக்கு பதிலெழுத முடியாமல் உள்ளது. எழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது. என்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த அன்புடன் நொச்சி
-
- 17 replies
- 2.1k views
-
-
வணக்கம், படம் ஒன்று இணைக்க முயன்றேன். பழைய முறையில் இணைத்தால் முடியவில்லை. சரி என்று மட்டுறுத்தினர் ஒருவர் களம் பற்றி பிரிவில் போட்டதை பார்த்தால் அது பழைய களத்தின் அடிப்படையில் தான் இருக்கு. புதிய இக் களத்தில் எப்படி என்று ஒரு முறை சொல்லுங்கள். நான் வடிவாக செய்து பார்த்தேன். ஆனாலும் முடியவில்லையே
-
- 6 replies
- 2k views
-
-
எரோட்டிக் ஸ்டவ் என்ற பெயரில் புதிய உறுப்பினர் ஒருவர் ஒரு வீடியோ கிளிப்பை யாழ் களத்தில் போட்டிருந்தார். இது தற்போது அகற்றப்பட்டு விட்டதாக உணர்கின்றேன். எரோட்டிக் ஸ்டவ் என்ற இந்த இந்த வீடியோ கிளிப்பை பார்க்க முயற்சித்த போது எனது கணனியிலிருந்து செகியூரிட்டி வார்னிங்க் வந்தது! யாழ் கள நண்பர்களே கவனம்! இந்த "ஓ யா" வுக்குள் ஓராயிரம் வைரஸ் கிருமிகள் இருக்கக் கூடும். கணணிகளிற்கே எயிட்ஸ் தொற்றும் கலியுக காலமடா இது!
-
- 11 replies
- 2k views
-
-
கருத்துக்களம் பார்த்தேன் பார்த்தேன் ஒரு நொடி ரசித்தேன் ரசித்தேன் வடிவமைப்போ கண்ணைக் கவர்ந்தது கன்னக்குழி மெல்ல விழுந்தது. மீண்டும் வரச்சொல்லி மின்னல் வெட்டி கருத்துக்களம் என்னை அழைக்குதே வடிவமைத்த கரங்களுக்கு நன்றி சொல்ல யாழ்இணைய நண்பர்கள் துடிக்கு என் இதயமும் இங்கே துடிக்குதே வாழ்த்துக்கள் மோகன் அண்ணா. அன்புடன் தமிழ் பொழியும் தமிழ்வானம்
-
- 14 replies
- 2k views
-
-
யாழ்களத்தில் மீண்டும் அண்மைகாலமாக சிலர் கருத்து களத்தின் பக்கங்களில் தங்கள் கருத்துகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பதிவதை காண கூடியதாக உள்ளது எனவே இதனை மட்டுறுத்துனர்களோ அல்லது நிருவாகமோ கவனித்தால் நல்லது இப்படி சிறிது சிறிதாக தொடங்கி பின்னர் தமிங்கில களமாக மாறிவிடாது பார்த்து கொள்ளவேண்டியது அவசியமே நன்றி
-
- 8 replies
- 2k views
-
-
... கடந்த காலங்களில் மழை அடிக்குது / பனி கொட்டுது / காத்தடிக்குது / ... என்று என்ன என்னவெல்லாவற்றுக்கும் புலம்பெயர் தேசங்களில் புனர்வாழ்வு பணவசூல் செய்து விட்டு ... முள்ளிவாய்க்காலுக்கு பின் கணக்கு / வழக்கு கேட்பாரோ / சொல்லுவாரோ அற்று கைகழுவி விடப்பட்டு ... பல மில்லியன்களை வைத்து செய்வதறியாது, ... இருக்கிறோம் ... என்று காட்ட, இந்த .. ஈழநாதம் ... எனும் இணையத்தளத்தை நடத்துகிறார்கள். அதற்கு மேல் இந்த புனர்வாழ்வு மில்லியனர், புலம்பெயர் தேசங்களில், தாயகத்தில் மண்ணோடு மண்ணாக, கடலோடு கடலாக கரைந்து விட்ட மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை ... கடந்த காலங்களில் கணக்கு காட்டாத இவர்கள் ... கணக்கு கேட்டு குழப்ப முற்பட்டிருக்கிறார்கள். இப்படியாக பல மில்லியன்களுக்கு சொந்த…
-
- 17 replies
- 2k views
-
-
அண்மைக் காலமாக வேறு தளங்களில் எழுதும் என்னையும், வேறு சிலரையும் தனிமனிதத் தாக்குதல் செய்வது அதிகரித்துள்ளது. யாழில் இணைந்துள்ள உறுப்பினர்கள் வேறு எந்தத் தளங்களிலும் எழுதக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை, அதே வேளை யாழின் எந்தவொரு கருத்துக்களும் என்னால் திருடப்படவும் இல்லை எனது சொந்தக்கருத்துக்களை எழுதுவது எவ்வாறு தவறாகும்? எனது கருத்துக்கள் குறித்து எழும் முரண்பாடுகளை அந்தந்தக் களங்களில் விமர்சிப்பதும்,கேள்வியெழுப்புவதும் நியாயமானதே அதை விடுத்து வேறொரு தளத்தில் எழுதியதை பிரதி பண்ணி யாழில் போட்டு அநாகரீகமாகவும், தனி மனிதத் தாக்குதலில் ஈடுபடுவதையும் யாழ் எவ்வாறு அனுமதிக்கிறது? இதில் யாழின் நிலைப்பாடு என்ன? இது குறித்து ஏதும் விதிமுறைகள் கொண்டுவரப்படுமா? யாழ் உறவு…
-
- 15 replies
- 2k views
-
-
யாழில் சமீப காலமாக.. எந்தத் தலைப்பிலும்.. அது பொங்கு தமிழாக இருக்கட்டும்..தமிழும் நயமுமாக இருக்கட்டும்.. உலகச் செய்திகளாக இருக்கட்டும்.. புலம்பெயர் வாழ்விலாக இருக்கட்டும்.. மெய்யெனப்படுவதாக இருக்கட்டும்.. பிறமொழிச் செய்திகளாக இருக்கட்டும்.. எங்கும்.. "திராவிடம்" "இராமர் சேது" " இந்து மதம்" " பார்பர்னர்கள்" "ஈ வெ ரா புராணம்" " பகுத்தறிவு" இவற்றை எப்படியோ ஒட்டித் திணித்துவிடுகிறார்கள். கள நிர்வாகமும் கேட்டுக் களைத்து விட்டது. எல்லாக் குப்பைகளையும் ஒரே இடத்தில் கொட்டுங்கள் என்று. ஒரு நாலு பாட்டைப் போட்டு.. அதற்கு இராம தலைப்பிட்டு.. தமிழும் நயமும்.. வலைப்பூக்களில் வரும்.. பெரிய நீண்ட வசனக் கோர்வைகளைப் போட்டிட்டு.. ஆராய்சிக்கட்டுரையாக காட்டிக் கொண்டு.. அதற்கு "திராவிட தலை…
-
- 5 replies
- 2k views
-
-
நண்பர்களிற்கு வணக்கம் சனல் 4இன் sri lanka's killing fields ஆவணத்தை நான் இங்கு வசிக்கின்ற நாட்டின் மொழியில் subtitle செய்து வெளியிடலாம் என்று உள்ளேன். பிரச்சனை: நான் subtitle செய்வதற்கு எனக்கு ஆங்கிலத்தில் இந்த ஆவணத்தின் வடிவம் தேவை. இந்த ஆவணத்தை நான் ஒவ்வொரு வசனமாக எழுதி பின் மொழி பெயர்ப்பது சற்று காலம் எடுக்கும். இதனை குறைப்பதற்கு உங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். கேள்வி: இந்த சனல் 4இன் ஆவணத்தின் ஆங்கில அல்லது யேர்மன் மொழி subtitle எங்காவது பெற முடியுமா?
-
- 25 replies
- 2k views
-
-
திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு இணையத்தில் இருக்கிறது. எனக்கு மொழி பெயர்ப்பு புத்தகமாக வேண்டும். புத்தகாகமாக கிடைக்கிறதா? இணைய தளத்தில் ஆங்கில மொழி பெயர்ப்பு புத்தகத்தை வாங்க வசதியுள்ளதா? தெரிந்தவர்கள் அறிய தாருங்கள். நன்றி
-
- 4 replies
- 2k views
-
-
தமிழ் இளையோர் அமைப்பு என்ற தலைப்பில் குருவிகள் எழுதிய அனைத்துக் கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இது அவரது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு செயல். தன்னுடைய கருத்துக்கள் எவையோ அவற்றை துணிந்து முனவைக்கும் முழு உரிமையும் அவருக்கு உண்டு. ஆகவே அவர் தமிழ் இளையோர் பற்றியும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் எழுதிய அனைத்துக் கருத்துக்களையும் வாசகர்களின் பார்வைக்கு விட வேண்டும். வேண்டுமானால் தனியான பக்கத்தில் குருவிகளின் கருத்துக்கள் என்ற பெயரில் அக் கருத்துக்களை வெளியிடுதல் சாலச் சிறந்தது. என்னுடைய விருப்பம் என்னவெனில் அவர் எழுதிய அக் கருத்துக்களை மற்றவர்கள் பார்வையிடக்கூடிய அளவில் மட்டுமாயினும் அப் பொன்னான கருத்துக்களை அனுமதியுங்கள் என…
-
- 5 replies
- 2k views
-
-
யாழில் சமகாலமாக தணிக்கைகள் குறித்து சில முரண்பாடுகள் இருக்கின்றன. 1. "கேடி" என்பது எந்த வகையில் தவறான பதம்..???! 2. "நாய் போல" என்ற உவமை எந்த வகையில் கருத்துத் திணிப்பு ஆகும்..??! 3. விபச்சாரிப் பெண்கள் என்ற தலைப்புக்குள் எல்லாப் பெண்களும் அடங்கவில்லை என்பது இயல்பாகத் தெரிகிறதுதானே. அப்படி இருக்க.. அதற்குள் எல்லாப் பெண்களும் வருறாப் போல எப்படி.. பொருள் வரும்..???! இது தவறான அர்த்தம் கற்பிப்பதாக எல்லோ அமையுது...??!
-
- 6 replies
- 2k views
-
-
இங்கு எனது முகமூடி "வாசகன்". "இருக்கும் நண்பர்களையும் இழந்து விடாதே" தலைப்பில் திரு நாரதர் அவர்கள் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். வேறு எவரோ மீது இருக்கும் தனிப்பட்ட விரோதத்தில் நானும் அவரும் ஒருவர் என்று தானே ஒரு கற்பனையை செய்து என்மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார். என்னை வேறோருவராக நினைத்து இருந்தால் அவர் என்னிடம் தனிமடலில் விளக்கம் கேட்டிருக்கலாம். இப்போதும் கேட்கலாம். அதை விடுத்து தாங்களாகவே ஓரு முடிவை எடுத்து.... கேவலமாக இருக்கிறது. அநுபவசாலிகளும் எடுத்தேன் கவிழ்தேன் என்று எழுதுவது அவர்களின் அநுபவத்தையே கேள்வி குறியாக்காதா??????
-
- 15 replies
- 2k views
-
-
எரிச்சலைத் தரும் அலட்டல்கள் மதிப்பிற்குரிய நிர்வாகத்தினருக்கு, மிகவும் பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்து வந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் அர்த்தமற்ற அலட்டல்கள் யாழ் களத்துடனான தொடர்பையே குறைத்துக் கொள்ளும் அளவிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. பயனுள்ள விடயம் ஒன்று தொடர்பாக இரண்டொரு கருத்தாடல்கள் நடந்ததுமே அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற ஒரு சிலர் தங்கள் அலட்டல்களின் மூலம் அந்தப் பகுதியை பிரயோசனமற்றதாக்கி அலட்டித் தள்ளுவதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? இதெற்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அலட்டி தங்கள் கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும்படி இந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை தர மாட்டீ…
-
- 8 replies
- 2k views
-
-
இங்கு எத்தனையோ பெரியவர்கள் இருக்கிறார்கள் பழைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் நான் இதை எழுதுவது சரியோ பிழையோ தெரியவில்லை. என்றாலும் எழுதுகிறேன் மன்னிக்கவும். இது ஓரு தமிழ்ஈழ விடுதலைக்கான ஆதரவு களம். இங்கு விடுதலைக்கு ஆதரவான அதற்கு ஊட்டம் தரக்கூடிய கருத்துகளே அதிகம் எதிர்பார்க்கப் படுவதாக நான் உணர்கிறேன். அதை விடுத்து உங்களது தனிப்பட்ட பிரச்சனைகளை பேசுவதென்றால் தனிமடலில் பேசுங்களேன். என்னை போன்ற சாதாரண வாசகர்களின் சாபங்களாவது உங்களுக்கு கிடைக்காமல் போகும். "மதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம்" எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இங்கு இல்லை. பதில் தெரியாத கேள்விகளுக்கு விடை சொல்லாமல் விடலாம். யாரும் பதில் எழுதவில்லையே என்று எவரும் கோவி…
-
- 10 replies
- 2k views
-
-
மேலே உள்ளது இன்றைய யாழ் கள நிர்வாக அறிவிப்பு..! வரவேற்கலாம்..! ஆனால் அதற்கு முதல் ஒன்றைச் சுட்டிக்காட்டனும்.. விவாதப் பொருளாக அன்றி வரும் பெரியார் புகழ்பாடல்.. பகுத்தறிவு என்று 1950-80 காலப் பழமைகளைக் கொட்டுத்தல் மற்றும் மத எதிர்ப்பு பிரச்சாரங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..! உலகம் 2050 நோக்கி திட்டமிடல்களை 2007 இல் நின்று தீர்மானிக்க முயலும் போது பெண்களுக்கு விடுதலை.. ஆண்களுக்கு ஆப்பு என்று சமூக மாற்றங்களை சரிவர உள்வாங்காமல் இங்கு விதைக்கப்படும் பழமைவாதப் பிரச்சாரங்களுக்கும் இடமளிக்கக்கூடாது. பெரியாரிசும்.. மத எதிர்ப்பு பிரச்சாரங்களால் தமிழர்கள் 2050 ஆண்டு உலக வளர்ச்சியில் அளிக்கப் போகும் பங்களிப்பு என்ன..??! மதம் சார் பிரச்சாரங்களை தடுக்கும் உரிமை…
-
- 8 replies
- 2k views
-
-
quote ஐ இணைப்பது எப்படி ??????????? எழுதுவதில் உதவி தேவை ???? மத்தியகுழு உறுப்பினர்கள் உதவ முடியுமா??????????????
-
- 9 replies
- 2k views
-
-
ஆதியால் பாதிக்கப்பட்ட யாழ்க்கள உறவுகளுக்கு, ஆதியின் அநாகரீகமான வார்த்தைகளால் புண்பட்ட யாழ்க்கள உறுப்பினர்கள் யாரேனும் இங்கிருந்தால் பதிவு செய்யுங்கள். ஆதி, அப்படிப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டு விடைபெறுகிறேன். இது நிற்கவா? போகவா? விளையாட்டு அல்ல http://www.yarl.com/forum3/index.php?showtopic=14416
-
- 7 replies
- 2k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஓர் எரிச்சல் தரும் விவாதத்தில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். :P இப்படியான ஓர் தலைப்பை ஆரம்பிக்கலாமா என்று முன்பு ஒருமுறை கேட்டபோது கு.சா அண்ணா அதற்கு பச்சைக்கொடி காட்டினார். எனவே இந்த கருத்தாடல் கு.சா அண்ணாவிற்கு சமர்ப்பணம். கேள்விகள்: 1. யாழில் கருத்துக்கணிப்புக்கள் தேவையா? 2. ஆம் என்றால் ஏன் தேவை என நினைக்கின்றீர்கள்? இல்லை என்றால் ஏன் தேவையில்லை என நினைக்கின்றீர்கள்? 3. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் ஆர்வமுடன் பங்குபற்றும் ஒருவராக இருந்தால் அவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் எவை? 4. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் பங்குபற்றாத ஒருவராக இருந்தால் நீங்கள் அவ்வாறு பங்குபற்றாது இருப்பதற்கான கா…
-
- 8 replies
- 2k views
-
-
கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::... …
-
- 15 replies
- 2k views
-