வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
2008 எப்படி இருந்தது உங்களுக்கு? முற்றிலுமாய் முடிய போகின்ற இந்த 2008 வருடம் உங்களுக்கு எப்படி அமைந்தது? ஒவ்வொருவருக்கும் முக்கியமாக அல்லது மறக்க முடியாததாக நிகழ்வு ஒன்றாயினும் நிச்சயம் நிகழ்ந்து இருக்கும். அவற்றில் சிலவற்றை யாழிலும் பகிர கூடியதாக இருக்கும்...அப்படி ஏதேனும் இருந்தால் இந்த திரியில் எங்களுடன் பகிருங்கள்...
-
- 17 replies
- 3.3k views
-
-
எனது கசப்பு அனுபவம் புலம் பெயர்ந்து வந்தும் விலங்குகளால் சிறைப்பட்டேன் சில நிமிடங்கள். இரண்டு தினங்களிற்கு முன்னம் Hasle (OSLO)என்ற இடத்தில் வேலை முடிந்து இரவு 10.00 மணியளிவில் வீடு செல்வதற்காக நடந்து வந்தகொண்டிருந்தேன். திடீரென நான்கு வாகனங்களில் வந்த (மொத்தம் 20 அல்லது 25 பேர் ) இராணுவக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு கைவிலங்கு இடப்பட்டு அவர்களின் வாகனத்திற்குள் அத்துமீறி ஏற்றபட்டடேன். எனது தொலைபேசி ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து 5 நிமிடங்கள் கழிந்த பின் எல்லாவற்றையும் திரும்ப ஓப்படைத்து விட்டு மன்னிப்பு கேட்டு விடுதலை செய்தார்கள். என்னை கைது செய்த காரணத்தை ஆரம்பத்தில் இருந்து சொல்லவே இல்லை. இந்த தேசத்து மொழியிலும் நான் பெரிதாக தேர்ச்சி இல்லை இருந்தும் வாக்கு…
-
- 19 replies
- 2.4k views
-
-
பனிப்புயல் படங்கள்: டொரன்ரோ / மார்க்கம். இன்று என்னால் எடுக்கப்பட்ட சில புகை படங்கள்.... இதன் தரம் மிக குறைவு. இன்றுதான் வாழ்க்கையில் முதல் தடவையாக பனி புயல் மத்தியில் வாகனம் செழுத்தி இருக்கின்றேன். மிக சாதாரண அரசாங்க வேலை பார்த்தவரின் மகன் என்பதால் கார் வாங்குவது ஒரு கனவாக இருந்தது. கனடா வந்தே அது சாத்தியமானது. அப்படி வாங்குகையில் (ஒரு பழைய கார்) அப்பா அதனை பார்க்க இவ் உலகிலேயே இல்லை என்பதுதான் யதார்த்தம் காலம் எவரதும் வாழ்க்கைகாக காத்திருப்பதில்லை.....
-
- 69 replies
- 7.5k views
-
-
புலம் பெயர் எழுத்தாளர் "அ.முத்துலிங்கம்" அவர்களின் பேட்டி: தீராநதியில் இருந்து பேட்டியினை முழுவதுமாக வாசிக்கும் போது, அண்மையில் நான் வாசித்த சிறந்த புலம் பெயர் எழுத்தாளரின் பேட்டியாக இவரின் பேட்டி காணப்பட்டது. கனடாவில் வசிக்கும் இவரின் கருத்துகள் ஈழத்து தமிழர் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் அனைவரினதும் ஆசைகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கின்றனர். புலம் பெயர் நாடுகளில் தமிழ் படிக்கும் இளைய தலைமுறை பற்றிய இவரின் கருத்துகள் கூர்ந்து கவனிக்கப் படவேண்டியவை இந்த பேட்டி, இம்மாத தீராநதியில் இருந்து நன்றியுடன் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது ======================================================= அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
லண்டன் வாகன விபத்தில் தமிழ் இளைஞன் உயிரிழப்பு [13 - December - 2008] லண்டனில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். லண்டன் லிச்கேட் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் காசாளராக பணியாற்றி வந்த ஸ்ரீஸ்கந்தராஜா ரவிசங்கர் (28 வயது) என்பவரே உயிரிழந்தவராவார். தனது கடமையை முடித்துக் கொண்டு இவர் சென்ற வாகனம் திடீரெனத் தீப்பற்றி எரிந்த போதே அந்த வாகனத்துக்குள் சிக்கி இந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனம் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத அதேநேரம் இந்த விபத்துக் குறித்து சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக லண்டன் …
-
- 0 replies
- 1.2k views
-
-
அண்மையில் இரு தமிழர்கள் பிரதிநித்துவபடுத்தும் சங்கங்களிள் நடைபெற்ற விடயங்கள் பற்றி கோசிப் அடிக்கலாம் என்று நினைக்கிறேன்.சங்கங்களுக்கு தானே புலத்திலே பஞ்சமே இல்லை.மதங்கள் என்ற பெயரில சங்கம் மனித தெய்வத்தின் பெயரில சங்கம் ஊரிண்ட பேரில சங்கம் இது போதாது என்று சிட்னியில் வாழ்கின்ற கிராமங்களிளும் பெயரிலும் சங்கங்கள் இருக்கின்றன.இதுகளை பற்றி எழுதுவது என்றால் நேரம் போதாது நேரடியா விபரதிற்கு வருவோம். பழைய மாணவர்கள் பாடசாலை சங்கங்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள் இவர்கள் எல்லாம் ஒன்று கூடினதிற்கு காரணமே வன்னியில் அவதியுறும் எம்மவர்களுக்கு நிவாரண வசதி செய்து கொடுக்கவே.எல்லா பழைய மாணவர் சங்கங்களும் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை தந்தால் அதை வன்னிக்கு அனுப்பி வன்னி மக்களுக்கு உதவிகள் …
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனவழிப்பைத் தடுத்து நிறுத்துமாறு கோரி பிரான்சில் மாபெரும் ஒன்றுகூடல் இடம்பெற இருப்பதாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3:00 மணியளவில் பிரான்சின் மனித உரிமைகள் சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஒன்றுகூடலில் காலத்தின் கடடாயம் கருதி அனைத்து பிரான்ஸ்வாழ் தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்ட அறிக்கை: அனைத்துலக போர் நியமங்களையும் மீறி பெரும் அழிவாயுதங்களைக் கொண்டு சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப்போரை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. அனைத்துலக மனித நேய அமைப்புக்களை…
-
- 0 replies
- 582 views
-
-
அனைத்துலக மனித உரிமைகள் நாள் நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து யேர்மனியில் நாளை தீப்பந்த ஊர்வலம் நடைபெறவுள்ளது. எசன் நகரில் (an der martkirche, Essen - innenstadt) நாளை மாலை 5:00 மணிக்கு இந்த தீப்பந்த ஊர்வலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் யேர்மனிவாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, சிறீலங்கா அரசின் இனவழிப்பை யேர்மனிய மக்களிற்கு எடுத்துரைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 700 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் கல்வி நிலையங்களுக்கான மிகப்பெரிய வலைப்பின்னலை நிருவகித்துவரும் யேர்மனியின் தமிழ்க் கல்விக் கழகம் தனது 130 தமிழாலயங்களையும் ஒருங்கிணைத்து தமிழ்த்திறன் போட்டிகளை நடத்தியுள்ளது. உரை, கவிதை, வாசிப்பு, உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை, ஓவியம் மற்றும் மனனப்போட்டிகள் போன்ற விடயங்களை மையப்படுத்தி வருடம்தோறும் தமிழ்த்திறன் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. மூன்று நிலைகளாக நடாத்தப்படும் போட்டியில், முதலில் தமிழாலயங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தமிழத்திறன் போட்டிகளை நடாத்துகின்றன. அப்போட்டிகளில் முதல்நிலையை அடையும் போட்டியாளர்கள் மாநில மட்டத்திலான போட்டிகளில் கலந்துகொள்வர். மாநிலப் போட்டிகளில் முதல் மூன்று நி…
-
- 0 replies
- 825 views
-
-
பிபிசி இல் அண்மையில் புலம்பெயர் மக்கள், குறிப்பாக போரால் புலம்பெயர்ந்த ஈழ, சோமாலிய, குர்திஸ் மக்கள், அவர்களது வாழ்க்கை,அவர்கள் தங்கள் தாயகத்துக்கு செய்ய முயலும் உதவி, புலம்பயர் இளம் சமுதாயம் சமூக கலாச்சார காரணிகளால் இரட்டை வாழ்க்கை முறை வாழவேண்டியுள்ளமை என பலவற்றை பற்றியும் பேசுகிறது. அதில் குறிப்பாக ஈழ விடுதலை போருக்கு அதிகம் ஆதரவு தருபவர்கள் யார்? தராதவர்கள் யார் என்பதையும் ஓரளவு வரையறுக்க முயல்கிறார்கள், 70 களில் புலம்பெயர்ந்த மத்திய நடுத்தர வர்க்க நீல பட்டி படித்த தொழிலில் உள்ளவர்களும் அவர்களது பிள்ளைகளும் விடுதலை போருக்கு ஆதரவு தருவதில் இருந்து விலகி நிற்க, 80 இன் பின் புலம்பயர்ந்தவர்களும் அவர்களின் பிள்ளைகளும் அதிகளவில் ஆதரவளிப்பதாக சொல்கிறார்கள். Exile y…
-
- 5 replies
- 2k views
-
-
வன்னியில் எமது உறவுகளுக்கான அடிப்படை உதவிகளுக்கும் நின்மதியான வாழ்வுக்கும் உடனடி ஆவணை செய்யுமாறு ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரை கோருங்கள்.... இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (Link) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் முகவரியைக் கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் நிரப்புங்கள். அதன் பின் "Send E-mail "ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரை சென்றடையும். http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=29 உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேருக்கும் இந்த தகவலை அனுப்பி, அவர்களையும், இந்த கடிதத்தை அனுப்ப வையுங்கள். உங்கள் ஒவ்வொரு கடிதமும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எமது குரல்கள் உலக முற்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டும். உலகம் முழுவதும…
-
- 0 replies
- 725 views
-
-
தமிழகத்தில் இருந்து வந்துள்ள ஈழ அதரவு சுப.வீரபாண்டியன் அவர்களின் சிறப்பு உரை சிட்னியில் நடைபெறவுள்ளது. விரைவில் எதிர்ப்பாருங்கள்.
-
- 0 replies
- 740 views
-
-
சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் கண்டன ஊர்வலம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 809 views
-
-
பேரன்புடையீர், வணக்கம் தமிழில் அர்ச்சனை எம்மினிய சைவத் தமிழ் மக்களே! சைவமும் தமிழும் எமதிரு கண்கள் எனப் போற்றப்படுவன. எமது தாய் மொழியாந் தேனினும் இனிய தீந்தமிழிலே பாடியும் கேட்டும் பொருள் உணர்ந்து இறையன்பை உள்ளத்திலே பெருக்கிப் பக்திநெறியை வளர்ப்பதே உலக சைவப்பேரவையின் முக்கிய குறிக்கோளாகும். இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம். 2002ஆம் ஆண்டிலிருந்து இலண்டன் சிவன் கோயிலிலே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழிலே பூசை நடைபெறுகின்றது. இதுபோலே எல்லாக் கோயில்களிலும் தமிழிலே பூசை நடைபெற உங்கள் ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது. நீங்கள் செய்யும் அர்ச்சனைகளையும் பெருந்தொகைப் பணம் செலவுசெய்து ஆற்றும் பூசைகளையும் உங்களுக்கு விளங்க இனிய தமிழிலே செய்யுமாறு குரு…
-
- 6 replies
- 2.2k views
-
-
ஜேர்மனியில் மாவீரர் நாள் 2008 எங்கு நடைபெறுகின்றது? தமிழ்நாதத்தில் இருக்கும் அறிவித்தலில் இடம் குறிப்பிடப்படவில்லை. தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் சொல்வீர்களா?
-
- 7 replies
- 2.1k views
-
-
சிட்னியில் திறந்த வெளி அரங்கில் மாவீரர் நாள் 2008
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.tamilkathir.com/news/552/58//d,view_video.aspx பிரான்சில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகர் பரிசிலுள்ள ரொக்கடரோ ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காதபோதும் இறுதியில் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்க…
-
- 0 replies
- 723 views
-
-
கனடா எனக்கு மின்னஞ்சலில் நண்பரொருவரால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த இந்தக் கடிதம் இந்தவார ஒரு பேப்பரிலும் வெளியாகியிருந்தது இதனை இங்கும் இணைக்கிறேன்.நன்றி. கனடாவில் , மனிரோபா மானிலம். வின்னிபெக் நகரம்,இங்கு வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை 300 க்கும் குறைவு, இந்துக்கள் 200 க்கும் குறைவு.கடந்த மாதம் இங்கு ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளிற்கு உதவுவதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதற்கு வந்தவர்கள் 20 க்கும் குறைவு. அந்தக் கூட்டத்தில் யாரும் விரும்பினால் நன்கொடையளியுங்கள் அப்பணத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு அல்லது வட கிழக்கு பகுதிக்கு என தனிப்பட்ட நிதிஒர்துக்கீடு செய்துள்ள தொண்டு நிறுவனங்களூடாக கொடுப்போம் என கேட்ட போது அதற்கு பணம் கொடுத்தவர்கள் சிலர். ஒரு சிலரை த…
-
- 5 replies
- 1.6k views
-
-
வீரகேசரி இணையம் 11/21/2008 கிரடிட் கார்ட் (கடன் அட்டை) மோசடி தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த ஏழு பேர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் குடிவரவு,குடியகல்வு திணைக்களமும் வர்த்தக நுகர்வோர் திணைக்களமும் இணைந்து நடத்திய சோதனையின் போதே இவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். போலியான முறையில் கிரடிட் கார்ட்களை அச்சடித்து அதன் பொருட்களைக் கொள்வனவு செய்து 20,000 ஸ்டேலிங் பவுண்களை இவர்கள் மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 7 Sri Lankans arrested for credit card fraud SINGAPORE: Seven Sri Lankans were arrested on Tuesday in a joint operation by the Immigration and Checkpoints Authority and the Commercial Affairs Department. Four of them were a…
-
- 5 replies
- 1.7k views
-
-
சைவத் தமிழ்ச் சங்கம் - அருள்மிகு சிவன் கோவில் Industriestr - 34, 8152 Glattbrugg. 044 / 371 02 42 , info@sivankovil.ch , www.sivankovil.ch 'மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள் அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது". - தேசியத்தலைவர் சிவனடியார்களே! நிகழும் சர்வசித்து வருடம் கார்த்திகைத் திங்கள் 6ம் நாள் (21.11.2008) வெள்ளிக்கிழமை சிவனாலயத்தில் நம் தேசத்திற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு. இத் தேசியத் திருநாளை முன்னிட்டு , எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து இறை சந்நிதியில் மாவ…
-
- 0 replies
- 992 views
-
-
பிரான்ஸ் நண்பர்கள் கட்டாயம் பார்க்க...... http://www.valary.tv/?p=416 ஐரோப்பிய தமிழர்கள் எல்லோரும் இதில் பங்குபற்றலாமா.... ??? அல்லது பிரான்ஸ் மக்கள் மட்டுமா....?? விளக்கம் தேவை... நன்றி
-
- 2 replies
- 1.1k views
-
-
சிட்னி, மெல்பேர்ண் நகரங்களில் 'சமாதானத்துக்காக ஓவியம் வரைவோம்' அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு உங்களை அழைக்கிறது! துயருறும் எங்கள் தாயக உறவுகளை நாங்கள் மறக்கவில்லை – மறக்க மாட்டோம். கலை வடிவில் சமாதானம் பற்றிய எங்கள் கருத்தைப் பகிர்வோம். எங்கள் கூட்டுமுயற்சியில் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்க அணி திரள்வோம். நீங்கள் திறமை மிக்க ஓவியராக இருக்கவேண்டியதில்லை. ஓவியம் மூலம் திறமையைக்காட்டமுடியாவிட்டா
-
- 4 replies
- 994 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனி…
-
- 8 replies
- 1.6k views
-
-
எங்கட ஊரில அம்மம்மா வீட்டுக்கு கிட்ட ஒரு அண்ணா இருந்தார். அவற்ற சொந்தப்பெயர்கூட எனக்கு ஞாபகமில்லை ஆனால் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் அவரை கோணப்பா அல்லது கொப்பக்கடுவா என்றுதான் கூப்பிடுவார்கள். காலை ஒரு மாதிரி விந்தி விந்தித்தான் நடப்பார். சில நேரம் அவர் சிரிக்கேக்க வாயால உமிழ்நீர் வழியும். சரியான பெரிய நெத்தி அவருக்கு.கிட்டத்தட்ட 16 வயதினிலே சப்பாணி மாதிரித்தான் இருப்பார் பார்க்க. எண்ணை வடியுற ஒழுங்கா இழுக்காத தலை. வாயில எப்பவும் வெத்திலை பாக்கு இல்லாட்ட வீணீர் வடியும். வயிறுக்கு மேல இழுத்துக் கட்டின சாரம். திசைக்கொன்றா இருக்கும் விரல்களும் கோணல் மாணலா வளர்ந்து நிக்கிற நகங்கள். இதான் கோணப்பாவின் வெளித்தோற்றம். அம்மம்மா வீட்டுப் பக்கம் நிறையத் தோட்டங்கள் இருக்க…
-
- 0 replies
- 1.1k views
-