வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
லண்டனில்... விசா இல்லயென்ற ஒரே காரணத்திற்காக, புதருக்கு அருகிலுள்ள கராஜ் ஒன்றினுள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்று மறைவாகப் படுத்துறங்கி, ஒரு மணி நேரத்திற்கு... ஒரு பவுண்ட் மட்டுமே, சம்பளமாக வாங்கும் தமிழ் இளைஞர்களைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். 2018 ம் ஆண்டு Sky TV, அதை ஆவணமாக்கி ஒளிபரப்பியிருந்தது. மனம் பதறி, ஒரு தடவை நிலை குலைந்திருக்கும். அவர்களையே ஒத்த இளைஞர்கள்... இங்கு ஃபிரான்ஸிலும். சில தமிழ் முதலாளிகளிடம் சிக்கிச் சொல்லெண்ணாத் துன்பத்திற்கும். மன அழுத்தத்திற்குமுள்ளாகி வருகிறார்கள். சொந்த நிலங்களை விட்டு அகதிகளாய்ச் சிதறினாலும்... இன்னொரு வாழ்க்கையை எப்படியாவது அமைத்துக் கொள்ள…
-
- 31 replies
- 3.9k views
-
-
பிரெஞ்சு - பொபிக்னி நகரசபையின் முதல்வரை சந்தித்தார் யாழ்.மாநகர சபை முதல்வர் பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகள் மற்றும் பொபிக்னி நகர சபையுடன் இணைந்து யாழ்.மாநகர சபை எவ்வாறு பணியாற்றலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் பொபிக்னி நகர முதல்வர் அதன் பிரதி முதல்வர், நகர சபை உறுப்பினர்கள், யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்…
-
- 0 replies
- 445 views
-
-
புதிய நாஷனாலிற்றி மற்றும் எல்லைக்கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றின் அங்கீகாரத்தின் பின் பிரபுக்கள் சபையின் அங்கீகாரத்துக்காக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. அது சட்டமானால்.. பிரித்தானிய பூர்வீகமற்ற.. பிற பூர்வீக பின்னணியில் இருந்து பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒருவரின் குடியுரிமையை அவருக்கே அறிவிக்காமல் அரசு பறிமுதல் செய்யலாம். இதன் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள்.. அல்லது பாரம்பரியமாக இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற தகுதியானவர்களின் குடியுரிமையை அரசு சாக்குப் போக்குக் காரணத்துக்காகக் கூட பறிமுதல் செய்யும் பரந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். உலகில்.. அதிக அளவில் வழங்கிய பிரஜா உரிமையை பறிக்கும் நாடுகளில் …
-
- 0 replies
- 676 views
-
-
https://fb.watch/cC7DxWVuCX/
-
- 0 replies
- 442 views
-
-
முதல் முதலாக நாசாவில் பணியாற்றிய ஈழத்தமிழ் விஞ்ஞானி கலாநிதி துரைசாமி பற்றிய பகிர்வு.
-
- 0 replies
- 921 views
-
-
இவ்வாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவுக்குள் கடல் மற்றும் லொறிகளின் ஊடாக சட்டவிரோதமாக உள்நுழையும் அகதிகளில் குறிப்பாக குடும்பமாக அன்றி.. தனியாக வரும் இளைஞர்களை ருவண்டாவில் குடியேற்றும் முறைமையை கைக்கொள்வதற்கான இரு தரப்பு உடன்படிக்கையில் ருவண்டாவும் பிரித்தானியாவும் கைச்சாத்திட்டுள்ளதோடு.. இத்திட்டம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவும் பட இருக்கிறது. இதன் மூலம் ஆபிரிக்க நாடான ருவண்டாவில் அதற்கு சம்பந்தமில்லாதவர்களும் குடியேறும் நிலை ஏற்படும். பிரித்தானிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புக் காட்டி வரும் நிலையில்.. டோவர் பகுதி வாழ் பிரித்தானிய மக்கள்.. இதனை வரவேற்கவும் செய்துள்ளனர். பிரக்சிட் மூலம் பிரித்தானிய எல்லைகள் இறுக்கப்படும்..…
-
- 1 reply
- 630 views
-
-
தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022யேர்மனி மத்தியமாநிலம். 32ஆவது அகவை தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு தொடங்கியுள்ளது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் 09.04.2022 சனிக்கிழமை மத்திய மாநிலத்தின் வெஸ்லிங் (Wesseling) நகரிலே நிறைவுற்றுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீர…
-
- 0 replies
- 726 views
-
-
இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்! March 28, 2022 பௌஸர் மஃறூப் அரசியல் ரீதியாக பலரால் விமர்சிக்கப்படுபவர்தான். தமிழரும் விமர்சிப்பர், முஸ்லிம்களும் அப்படியே. இவர் மீது சந்தேகம் கொண்டவர்களும் உண்டு. அவரோடு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்காக என்னில் இருந்து விலகிய ஒரு நண்பரும் உண்டு. இதுவெல்லாம் சேர்ந்ததுதான் இலங்கை (ஈழத்தமிழர்?) தமிழரின் புலம்பெயர் வாழ்வு. ஆனால், அதற்காக பௌஸர் செய்யும் சில வேலைகளை வெறுமனே கடந்து போய்விட முடியாது. இங்கு புலம்பெயர்ந்த மண்ணில், குறிப்பாக லண்டனில், ஈழத்தமிழர் வட்டாரங்களைப் பொறுத்தவரை, மைய நீரோட்டத்தில் இருப்பவையாக குறிப்பிடப்படும் சில அமைப்புக்களை தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக இந்…
-
- 14 replies
- 1.1k views
-
-
நாளையதினம் 22.04.22 அன்று அகதிகள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பலர் யேர்மனியில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்பட இருக்கின்றனர். ஏன் இந்த நிலை? அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி Paragraph 25B வீசாவை பெற்றுக் கொள்ள முடியும்? இந்த வீடியோ பகிர்வில் விபரங்கள் பகிரப்பட்டுள்ளது. உங்கள்ளுக்கு தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
-
- 0 replies
- 810 views
-
-
Sri Lanka tests UN's patience on human rights.. தமிழினப் படுகொலையில்.. மனித உரிமைகள் விடயத்தில் ஐநாவின் பொறுமை சோதிக்கும் சொறீலங்கா என்று தலைப்பிட்டு.. புதிய செய்தி வெளியிட்டிருக்கும்.. பிபிசி.. சமீபத்திய சொறீலங்கா பொருண்மிய நெருக்கடியையும் தொட்டு செய்தி வடித்துள்ளது. The European Union has already warned it will suspend tariff free access for Sri Lankan companies if there is no progress on human rights. The island's exporters sent garments worth more than $2bn to the bloc in 2020. Given Sri Lanka's foreign exchange reserves crisis, a bailout from the International Monetary Fund looks on the cards. Last month, UN Human …
-
- 0 replies
- 715 views
-
-
நாசாவில் நீண்டகாலம் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு #Srilanka#America#Jaffna#Nasa#Kuppilan#Vaithilingam Thuraisamy#Apollo-11 அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்தவர் வைத்திலிங்கம் துரைசாமி. அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது. கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில்யாழ்ப்ப…
-
- 18 replies
- 1.7k views
-
-
திருமதி ராஜி பீட்டசன் மீதான தாக்குதல் பின்னணி என்ன?
-
- 0 replies
- 1.2k views
-
-
கந்தையா தமிழ் தொழில் முனைவோர்க்கு முன்னோடி.
-
- 0 replies
- 1.4k views
-
-
யேர்மனியில் பிறந்த அச்சா பிள்ளையள் ஆரபி, மகிழினி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? *கதைப்போம் வா "
-
- 0 replies
- 958 views
-
-
மெல்போர்னில் வசிக்கும் 24 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவருக்கு நேற்று ( 2, மார்ச், 2022) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25 இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காக குறித்த நபருக்கு 13 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வற்புறுத்தி, தங்களைப் பற்றிய வெளிப்படையான பாலியல் படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு வலியுறுத்தி அந்தரங்க தகவல்களை சந்தேக நபர் பெற்றுள்ளார். பின்னர் தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால் பெறப்பட்ட அந்தரங்க தகவல்களை பாதிக்கப்பட்ட சிறுமிகளது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவேன் என்று அச்சுறுத்தல் விடுத்து, பரிமாற்றமும் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அள…
-
- 1 reply
- 522 views
-
-
எமது தேசியக்கொடி போராடும் இனங்களுக்கெல்லாம் ஆத்ம பலம் கொடுக்கவல்லது. எம்மைப்போலவே விடுதலை வேண்டி நீண்ட நெடிய போராட்டம் செய்பவர்கள்தான் குர்து இனமக்கள். அண்மையில் பிராங்பேட்டிலிருந்து பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க் நோக்கிய நடைப்பயணமொன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்ட ஆரம்நிகழ்விற்காக யேர்மன் த.ஒ.கு. அரசியற்பிரிவினரையும் அழைத்திருந்தார்கள். எம்மவர்களும் வழமைபோல் எமது தேசியக்கொடி சகிதம் பிரசன்னமாகியிருந்தார் கள். போராட்டத்தில் அவர்களது தேசியக்கொடிக்கும் ஒச்சலானின் படங்களுக்கும் அனுமதியில்லை. இந்நிலையில் அவர்களிற்கு என்னதோன்றியதோ நடைப்பயணம் ஆரம்பிக்கும் நேரம் திடீரென எமது தேசியக்கொடியினை ஏந்தியவரை அழைத்து முன்னே செல்லும்படி நயமாகக்கேட்டுக்கொண்டார்கள். தமிழீழத் தேசிய…
-
- 1 reply
- 811 views
-
-
மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி Posted on January 8, 2022 by சமர்வீரன் 1032 0 அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம், இக்காலப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்ட, இன்றும் நிகழ்த்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை வலியுறுத்தியும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அமைதி வழியில் போராடி வருகின்றோம். இன்று யேர்மனியில் பதினாறு ஆண்டுகளுக்கு பின்பு ஓலாவ் சொல்ச் (Olaf Scholz) அவர்களது தலைமையிலான ஒரு புதிய அரசு பதவியேற்ற நிலையில், தமிழ்மக்களாகி…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடுவோம். மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனிதநேய ஈருருளிப்பயணம் 24வது தடவையாக ஐ.நா நோக்கி ஆறு ஐரோப்பிய நாடுகளூடாக பயணிக்க இருக்கின்றது. • 16/02/2022 அன்று, Wallington green , SM6 OTW England ல் மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமாகி பிரித்தானியப் பிரதமர் இல்லத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தோடு தொடர்ந்து •18.02.2022 அன்று, நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தைச் சென்றடைந்து, அங்கு 13:30 மணிக்கு கவனயீர்ப்பு ப…
-
- 0 replies
- 459 views
-
-
லண்டனில் தமிழர்கள் தமிழர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி முதிய தமிழ் தம்பதியர் வீட்டை இழக்கும் அபாயம்!!! லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (6.6 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (43) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தி…
-
- 22 replies
- 2.1k views
-
-
தமிழின அழிப்பை மூடி மறைக்கும் கொழும்பை தளமாக கொண்ட சிவில் அமைப்புகள் – புலம்பெயர் அமைப்பு குற்றச்சாட்டு ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழினஅழிப்பை மூடிமறைக்கும் செயற்பாடுகளை கொழும்பை தளமாக கொண்ட சிவில்சமூக அமைப்புகள் சில மேற்கொண்டுவருகின்றன என உலக தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளர் பொஸ்கோ குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 2015 இல் எவ்வாறானதொரு சூழல் காணப்பட்டதோ அதேபோன்ற சூழலே தற்போதும் காணப்படுகின்றது. மேற்குலகநாடுகள் இலங்கையில் மீண்டுமொரு ஆட்சிமாற்ற நாடகத்தை அரங்ககேற்ற ஆரம்பித்துள்ளன. அதாவது தமி…
-
- 2 replies
- 613 views
-
-
தமிழ்நாட்டு உறவுகள் வஞ்சமற்ற நேசிப்பாலும் அன்பாலும் நெகிழவைக்கிறார்கள்.. என்னை அறியாமலே கண்கலங்கி விட்டேன்.. ரத்த உறவுகள் என்பது சும்மாவா… இனியவன் அண்ணாவின் மற்றும் டீக்கடை அண்ணாவின் வஞ்சமற்ற பேச்சையும் அன்பையும் வாழ்க்கை முழுக்க அவர்களை பேசவிட்டு ரசிக்கவேணும் போல இருக்கு.. எளிய மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்கள்.. பாசத்தை அள்ளி அள்ளி வாரி இறைக்கிறார்கள்.. வாழ்வின் நெகிழ்ச்சியான தருணங்கள்…❤️❤️
-
- 3 replies
- 767 views
-
-
லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை. லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழரின் தற்கொலைக்கு குறித்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களே அதற்கு பொறுப்பு என தற்போது உறுதியாகியுள்ளது. வோர்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் திகதி கேதீஸ்வரன் குணரத்தினம் என்ற இலங்கை தமிழர் தற்கொலை செய்துக் கொண்டார். இறப்பதற்கு சில நாட்களாக உணவு உண்ண மறுத்து பட்டினியாக இருந்து வந்த அவர் தற்கொலை தொடர்பில் பேசி வந்ததாக மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மனநில…
-
- 0 replies
- 427 views
-
-
சட்டமூலம் 104: தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான சட்டத்தினை எதிர்த்து சிறிலாங்கா அரசு ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் ஒன்ராறியோவில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான சட்டத்தினை எதிர்த்து சிறிலங்கா அரசு ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால், மேற்படி சட்டத்தினைப் பாதுகாக்கும் போராட்டத்தில் அனைத்துத் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது ஓர் அவசரமான காலத்தின் தேவையாகும். சிறிலங்கா அரசால் தொடரப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான சட்டமூலம்-104இற்கு எதிரான வழக்கினை எதிர்கொண்டு நடத்தப்படும் சட்டப்போராட்டத்தில் இணைந்துள்ள பல தமிழ் அமைப்புகளின் பட்டி…
-
- 0 replies
- 812 views
-
-
பிரான்சில் 93 பிராந்தியத்தில் நடைபெற்ற மாநகர முதல்வருக்கான தேர்தலும் அதில் தமிழரின் பங்களிப்பும்! பிரான்சின் 93 பிராந்தியத்தில் தமிழ் மக்கள் அதிக அளவில் வாழும் பொண்டி மாநகரத்தின் மாநகரமுதல்வருக்கான தேர்தல் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றிருந்தது இத்தேர்தலில் 61;04 வீதமான வாக்குகளை பெற்று திரு. stephan HERVE வெற்றிபெற்றிருந்தார். கடந்த 23 ஆம் நாளில் முதற்கட்டத் தேர்தலும், போட்டியிட்ட இரண்டு கட்சியினரும் தேர்தல் நடைமுறைக்கு அமைவாக 50 வீதத்திற்கு மேலான வாக்குகள் பெறாத காரணத்தால் 30 ஆம் நாள் 2 ஆம் கட்டத்தேர்தலும் நடைபெற்றது. இதில் பொண்டி முதல்வராக stephan HERVE அவர்கள் தெரிவாகியிருந்தார். முதற்தடவையாக இப்பிரதேசத்தில் இவரின் கட்சியில் இரண்டு தமிழர்களும் வேட்பாளர்க…
-
- 1 reply
- 567 views
-
-
அதிவலது “Freedom Convoy” இயக்கம் கனேடிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுகிறது: கனேடிய ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு திருப்புமுனை Keith Jones, Roger Jordan-wsws. கனடாவின் ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் தூண்டிவிட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு விரோதமான ஓர் அதிவலது இயக்கம் இப்போது அச்சுறுத்தும் விதமாக தேசிய நாடாளுமன்றத்திற்கு வெளியே முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அங்கேயே தங்கியிருக்க சூளுரைத்துள்ளது. கனேடிய தலைநகரில் அரசியல் வன்முறை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. நேற்றுடன் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக, இந்த அதிவலது Freedom Convoy (சுதந்திர தொடரணி) இய…
-
- 0 replies
- 617 views
-