Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆட்டா மாவுக்கு இங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நம்மவர்கள் இதை எந்த நாளும் பாவிப்பதில்லை. ஆனால் இந்தியர்கள் கூடுதலாக பஞ்சாபியர்கள் சப்பாத்தி இல்லாமல் சாப்பாடே இறங்காது. நியூயோர்க்கில் உள்ள ஒரு குடும்ப இந்திய நண்பர் தான் விடயத்தை சொல்லி வட கரோலினாவில் இருந்தா வாங்கி வாங்க என்றார். நானும் இந்தியகடை முழுவதும் தேடி பார்த்தேன்.கிடைக்கவில்லை. இந்தியா திடீரென ஏற்றுமதியை நிற்பாட்டியது தான் காரணமென்கிறார்கள்.ஏதோ சூழ்ச்சி இருக்கு என்னவென்று தான் தெரியலை என்கிறார்கள். உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளிலும் இப்படியான தட்டுப்பாடுள்ளதா?

  2. ஐந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரே அமெரிக்காவில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தலா 55,000 அமெரிக்க டொலர்களை செலுத்தி மிகவும் சிரமத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் தரையிறங்கி சில மணித்தியாலத்திலேயே குறித்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்ததுடன் கைதானவர்கள் கடந்த 2010 ம் ஆண்டு முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நீண்டகாலமாக இவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவ…

  3. கடுங்குளிர் நிலவும் அமெரிக்கா அமெரிக்காவின் சில பகுதிகளில் நிலவும் கடுங்குளிர் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது. நியுயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களும் இந்த ஆர்க்டிக் குளிர் காற்றால் உறைந்துள்ளன. வெப்பநிலை வேகமாகக் குறைந்துவரும் நிலையில், நியுயார்க் மாநில ஆளுநர் அண்ட்ரூ குவொமோ சில பெரிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் என்றார். கடுமையான வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை, மின்னெசோட்டா மாநிலத்தில் பாபிட் நகரில் மிகக் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது (-38 டிகிரி செல்சியஸ்) . குளிரான கா…

    • 4 replies
    • 1.1k views
  4. வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து 25 பேர் வரை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் ஜூலை 4ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேலான நாடுகளில் இருந்து அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.தமிழகத்தில் இருந்து பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறினார். மாநாட்டில் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள், அதன் பின்னர் இணை…

    • 5 replies
    • 1.9k views
  5. அமெரிக்கர்கள் அல்லாத அனைவரும் ஃபுளோரிடாவில் வாகனம் செலுத்தும்போது, அனைத்துலக சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றையும் வைத்திருக்கவேண்டுமென்ற விதி மாற்றப்படும்வரை, அங்கு செல்லும் கனேடியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துலக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுச் செல்லவேண்டுமென CAA பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் வாகனம் செலுத்தும் கனேடியர்கள் அனைத்துலக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கவேண்டுமென கோரப்படவில்லையென அது குறிப்பிட்டது. விதி மாற்றத்தில் கனடா இணைக்கப்பட்டமை தவறென தம்மிடம் மாநில அதிகாரிகள் கூறியதாக CAA தெரிவித்தது. கனேடியர்களுக்கு விலக்களிக்கப்படும் வகையில் விதி மாற்றம் செய்யப்படுமெனவும் ஆனால் அடுத்த மாதம் வரை சட்டசபை…

  6. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கோவிட்௧9 நோயினால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன் ? கோவிட்-19 உலகுக்குச் சமத்துவத்தைக் கற்பிக்க வந்த ஒரு வியாதி என்றும் சிலர் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. அதற்கு, இனங்களோ, மதங்களோ, ஏழிகளோ, பணக்காரரோ, வசதி படைத்தவர்களோ இல்லையோ என்று பாரபட்சமின்றிப் பீடித்து வந்தது. ஆனால் ஏற்கெனவே பாரபட்சங்களாலும், ஏற்ற இறக்கங்களாலும், இன பேதங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட சமூகங்களில் வைரஸ் கொஞ்சம் தளம்பத்தான் செய்திருக்கிறது. அமெரிக்கா அதற்கு நல்லதொரு உதாரணம். அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும், கோவிட்-19 தொற்று 1 மில்லியனைத் தாண்டியும், மரணங்கள் 60,000 ஐ அண்மித்து வருகின்றதுமான இவ்வேளையில், இந்த நோய்க்குப் பலியாகின…

    • 0 replies
    • 889 views
  7. தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை விடுத்த வண்ணம் உள்ளது கொவிட் 19.இதனால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரஸால் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் தீவிர கண்காணிப்பில் பலர் வைத்தியசாலைகளில் உள்ளனர். இந்த தகவலை வழங்கும் தமிழ் வைத்தியர் பணியாற்றும் நியு ஜேர்சி வைத்தியசாலைகளில் கூட 250 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவில் கொவிட்19 நிலை என்ன என்பதை விளக்குகறார் தமிழ் வைத்தியரான சிறி சுஜந்தி ராஜாராம் https://www.ibctamil.com/usa/80/140895?ref=imp-news

  8. அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.! அமெ­ரிக்­காவில் நியூ­ஜெர்சி மாநி­லத்தில் தற்­பொ­ழுது வசித்­து­வரும் யாழ்ப்­பாணம் அள­வெட்­டியைச் சேர்ந்த ஈழத் தமி­ழர்கள் நிர்­மலா, செல்­லையா ஞான­ சே­கரனின் மகன் மகிஷன் ஞான­சே­கரன் சமூ­க­நல செயற்­பா­டு­களில் மிக ஆர்வம் கொண்­டவர். இலங்­கையில் பிறந்து அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும் மகிஷன் ஞான­சே­கரன் தமிழ் மொழியில் சர­ள­மாகப் பேசக்­கூ­டியவர். ஸ்பானிஷ் மொழி­யையும் ஆர்­வ­மாக கற்று வரு­கின்றார். 2016 ஆகஸ்ட் மாதம் அமெ­ரிக்க மாநி­ல­மான நியூ­ஜெர்­சியின் உயர்­நிலைக் கல்விப் பிரிவில் பயிலும் மாண­வர்­களில் கல்வி, சமூ­க­சேவை, மாணவ தலை­மைத்­துவம் ஆகிய துறை­களில் முதல் நிலை மாண­வ­ராக விசேட …

  9. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் நடைபெற்ற தாக்குதல்களின் சூத்திரிதாரிகளில் ஒருவராக கருதப்படும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இது பற்றிய வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தனக்கு மரண தண்டனையை வழங்குமாறு கோரியுள்ளார். அப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட்டால் தான் தியாகியாகலாம் என்று அவர் கூறினார். குவாண்டானமோ குடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கலித் ஷேக் முகமதும், மற்ற நான்கு பேரும் அச்சிறைவளாகத்திலேயே இராணுவ நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அமெரிக்கா மீதான தாக்குதல்களை இவர்கள் திட்டமிட்டதாகவும், தாக்குதல் நடத்த உதவியதாகவும் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கொலை, சதி மற்றும் பயங்கரவாசக் குற்…

  10. அமெரிக்காவில் தேர்தல் ஆணையகம் அமைந்தது! 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மே 2 இல் தேர்தல்!! மே மாதம் 2ஆம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலை நாடாத்துவதற்கான தேர்தல் ஆணையகம் அமெரிக்க செயற்பாட்டுக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலைத் திட்டமிட்டு நடாத்தி முடிப்பதற்கான பொறுப்பை இவ் ஆணையகம் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையாளராக அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் திரு Ramsey Clark அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் 66 வது சட்டமா அதிபராக ஜனாதிபதி ஜோன்சன் அவர்களின் காலத்தில் பணிபுரிந்தவர் ஆவர். தேர்தல் ஆணையகத்தில் பின்வருவோர் உறுப்பினர்களாக உள்ளனர் Dr. Ilangovan, former President of the Fed…

  11. அமெரிக்காவில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம்! - இன்னும் ஒருவருடமே தங்கியிருக்க அனுமதி [Monday, 2014-03-31 10:55:28] அமெரிக்காவின் இறுக்கமான குடிவரவு, குடியகல்வு சட்டம் காரணமாக இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதியன்று இந்தக்குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தது. எனினும் பல்வேறு போராட்டங்கள் காரணமாக அந்த நாடு கடத்தல் உத்தரவு ஒரு வருடத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 போரின் பின்னர் ஜூலியன் மற்றும் கிருபா ஆகியோர் தமது பெண் பிள்ளையான ஜெனிபருடன் நெவேக்குக்கு சென்றனர். பின்னர் அங்கு இந்த தமிழ் குடும்பம் அகதி அந்தஸ்து கோரியது…

  12. அமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது! by : Anojkiyan உலகிலேயே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவில், நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் 61,848பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 890பேர் உயிரிழந்துள்ளனர். இதற்மைய அமெரிக்காவில் வைரஸ் தொற்று தோன்றியதிலிருந்து பதிவான, நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், அமெரிக்காவில் கொவிட்-19 பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31இலட்சத்து 58ஆய…

    • 0 replies
    • 525 views
  13. அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றிவரும் மருத்துவர், பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற தமிழருக்கு, உலக அளவில் மதிப்புமிக்க பொறியியல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாக்டர் பரஞ்சோதி ஜெயக்குமார் அவர்கள் அமெரிக்க இராணுவத்தின் பீரங்கி வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார் இவர், இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று, 1982-83 காலப்பகுதியில், அதே பல்கலைகழகத்தில் கணிதவியல் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு SAE International என்ற அனைத்துலக பொறியியலாளர் அமைப்பு ஆண்டுதோறும் வழங்கி வரும், ஆர்ச் டி கொல்வெல் ஒத்துழைப்பு பொறியியல் பதக்கத்தை (Arch T. Colwell Cooperati…

  14. அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதியளித்தார் ட்ரம்ப் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற புதிய சிகிச்சை முறையான பிளாஸ்மா சிகிச்சைக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னர் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அரசு நிபுணர்களை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த பிளாஸ்மா சிகிச்சை (convalescent plasma) என்ற சிகிச்சை முறைக்கு அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் அளித்துள்ளதாக ஜனாதிபதி…

    • 0 replies
    • 463 views
  15. அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்றத் தீர்மானம் by : Dhackshala அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரப்படி அங்கு பெரும்பாலான மரணதண்டனைக் கைதிகள் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் இதைவிடவும் வேறு அதிக வழிகளில் மரணதண்டனை வழங்க டொனால்ட் ட்ரம்ப் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குற்றவாளிகளை தூக்கில் போடுவது, விஷவாயு மூலம் உயிரிழக்க வைப்பது மற்றும் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவது உள்ளிட்ட புதிய தண்டனைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகளுக்கு பெரும்பாலான மாகாணங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூற…

  16. ஒரு நாட்டிய அரங்கேற்றத்தில் பங்கு கொள்ளச் சென்றிருந்தோம். வழமைபோலவே நம்மவர்களுக்குள் ஒரு கலந்துரையாடல். தம் பிள்ளையின் ஓட்டுநர் காப்பீட்டுக்கு நான்காயிரம் வெள்ளிகள் வரையிலும் செலவு ஆவதாக ஒருவர். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். இஃகிஃகி, பரபரப்புத் தொற்றிக் கொண்டது. நாம் சிரித்துக் கொண்டே, இதெல்லாம் தமிழ்ச்சங்கக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டியது என்றேன். நம்மை நன்கறிந்த நண்பர் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார். அமெரிக்க வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கும் தளமாகத் தமிழ் அமைப்புகள் விளங்க வேண்டுமென்பதைத்தான் நாம் இடையறாது சொல்லி வருகின்றோம். மாறாக, ஊர்ப்பழக்கங்களைப் பேசிப் பெருமை கொள்வதிலேயே ஊறித்திளைப்பது பின்னடைவேயென்பது நம் த…

  17. 1970 களில் ஜேர்மனி சுவிஸ் போன்ற இடங்களில் இருந்து அமெரிக்கா வந்த இந்த மக்கள் இப்போதும் அந்த நாளில் வாழ்ந்த வாழ்க்கை மாதிரியே வாழ்கிறார்கள்.இவர்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.அரை குறை நம்பிக்கையாக இருந்தது.அண்மையில் பென்சில்வேனியா மாநிலத்தில் லான்செஸ்ரர் என்னும் இடத்திற்கு இவர்களைப் பார்ப்பதற்காக போயிருந்தேன்.பெரும் தொகையான மக்கள் இவர்களையும் இவரகள் வதிவிடங்களையும் பார்க்க வருகிறார்கள்.வந்தவர்கள் இவர்களது உற்பத்தி பொருட்களையும் நிறையவே வாங்கி செல்கிறார்கள். சாதாரணமாக எமது வீடுகள் போன்ற வீடுகளிலேயே வாழ்கிறார்கள்.ஆனால் மின்சாரம் பாவிப்பதில்லை.மோட்டார்வண்டி பாவிப்பதில்லை.எந்த ஒரு இயந்திரத்தையும் பாவிப்பதில்லை.ஏன் மிதிவண்டி கூட பாவிப்பதில்லை.ஆனால் ஸ்கூட்டர் மாதிரி இரண்டு…

  18. அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை – கொசோவோ பிரதிநிதி வழங்குகிறார் தமிழினப் படுகொலையை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நினைவுப் பேருரையை கொசோவோ பிரதிநிதி Dr. Alush Gashi அவர்கள் வழங்க இருக்கின்றார். கொசோவோவின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றியிருந்ததோடு, கொசொவோவின் முதன் அரசுத் தலைவரது முதன்மை ஆலோசகராகவும் இருந்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏன்சலஸ் பல்கலைக்கழகத்தில் (University of California in Los Angeles,) மே-18 நாளன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி …

    • 0 replies
    • 850 views
  19. அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் அருகில் ஓகியா என்ற மாவட்டத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி போன்று 8 அடி உயரம் கொண்ட சிலை வடிவமைக்கபட்டுள்ளது. இந்த கோவிலில் சுமார் 1000 பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20,000 ஆயிரம் சதுர அடி அளவில் இக்கோவில் உருவாக்கபட்டுள்ளது. இந்த கோவில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோவில் முகப்பு பகுதியில் கோபுரமும் சாமி சன்னதிக்கு முன் கொடி மரம் அனுமன்,விநாயகர் போன்ற சிலைகள் வைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இக்கோவிலின் திறப்பு விழா மற்றும் பூஜைகள் வரும் ஜூலை 30 முதல் தொடங்கி ஆகஸ்ட் 2-தேதி வரை நடத்தபட உள்ளதாக இந்து அமைப்புகள் தெரிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/cana…

    • 0 replies
    • 504 views
  20. அமெரிக்காவில், கடத்தப்பட்ட சிறுமி, 48 மணி நேரத்தில் மீட்பு. நியூயோர்க் மாநில அரச பூங்கா ஒன்றில், உள்ள காம்ப் ஒன்றில் குடும்பம் ஹொலிடே எடுத்துக் கொண்டிருந்திருக்கிறது. 9 வயது சிறுமி, தனது நண்பியுடன் சைக்கிளில் பார்க்கினை சுத்தி ஒரு ரவுண்டு வந்து இருக்கிறார்கள். இரண்டாவது ரவுண்டு போக சிறுமி தயாராக, நண்பி களைப்பாக இருப்பதாக சொல்ல, சிறுமி, தான் மட்டுமே போவதாக கிளம்பி போய் இருக்கிறார். 15 நிமிடமாக அவர் திரும்பி வராததால், குடும்பம் தேட தொடங்கி, நேரமாக, போலீசாரை அழைத்திருக்கிறார்கள். நியூயோர்க் மாநில போலீசார், FBI, பொதுமக்கள் 400 பேர், சுற்று வட்டார பகுதிகளில் எல்லாம் தேடுதலை தொடங்கினர். நேரமாக, நேரமாக அனைவரிடமும் பதட்டம் அதிகரித்தது. 36 மணிந…

  21. அமெரிக்காவை நனைக்கப் போகும் இசைஞானியின் இசை மழை இசைஞானி இளையராஜா பிப்ரவரி 23ம் தேதி அமெரிக்காவில் முதல் முறையாக நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐட்ரீம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கவுள்ளது. ரிஹானா போன்ற பெரிய பெரிய ஆட்களின் இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் இது. இங்குதான் இசை ராஜாங்கம் நடத்த உள்ளார் ராஜா. இளையராஜாவின் நிகழ்ச்சி குறித்து ஐட்ரீம்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராஜ்குமார் கூறுகையில், இளையராஜாவின் இசை யாருடனும் ஒப்பிட முடியாதது. மகத்தான இசை மேதை அவர். அவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய நிகழ்ச்சியை அதிலும் அமெரிக்காவில் அவரது முத…

  22. அமைச்சரவை மறுசீரமைப்பில் ஜூலியன் ஸ்மித் – ஆன்ட்ரியா லீட்சம் – எஸ்தர் மக்வே நீக்கம் by : S.K.Guna பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ள நிலையில் வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஆன்ட்ரியா லீட்சம் ஆகியோர் பதவிகளை இழந்துள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் சிரேஸ்ர அமைச்சர் ஜூலியன் ஸ்மித் 204 நாட்கள் குறித்த அமைச்சு பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், வீடமைப்பு அமைச்சராக இருந்த எஸ்தர் மக்வே அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனது பதவியை இழந்துள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் குறித்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவி ஆர்லீன…

  23. Columnsசிவதாசன் அமைச்சர் ஆனந்தசங்கரி விவகாரம்: இனத்துவேஷத்தின் வெளிப்பாடு? சிவதாசன்கடந்த வாரம் பாராளுமன்ற கேள்வி நேரத்தில் இரண்டு கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ஆனந்தசங்கரியை ஹயீனாக்கள் போல வட்டமிட்டுத் துளைத்தெடுத்தார்கள். இது திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு விடயமென்பதில் சந்தேகமேயில்லை. இச்சம்பவத்திற்கு முன்னரும் பின்னரும் கன்சர்வேட்டிவ் ஆதரவு நாஷனல் போஸ்ட் மற்றும் குளோபல் தொலைக்காட்சி ஆகியன ஹயீனாக்கள் அமைச்சரை வட்டமிடத் தொடங்கி விட்டன. அமைச்சருக்கு இது நிச்சயமான ஒரு கரும் புள்ளி என்பதில் சந்தேகமேயில்லை. தமிழர் மத்தியில் இது ஒரு அவமானமாகப் பார்க்கப்பட்டாலும் அமைச்சர் ஒரு தமிழரென்பதற்காக இப்படி நடத்தப்பட்டார் எனக் கூறமுடியாது. வேண்டுமானால் அவர…

  24. புலம் பெயர் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கொடிகளையும் பதாதைகளையும் தற்போதைக்கு ஒதுக்கி வைத்து விட்டு மெழுகுவர்த்திகளோடு ஓரிடத்தில் இருந்து அருகேயுள்ள ஒரு குறிப்பிட்ட தேவாலயங்களை நோக்கிச் செல்லுங்கள். தாயகத்தில் அல்லலுறும் மக்கள் நிலையை தெளிவுபடுத்தி அந்த ஆலய பெரியோரிடம் எழுத்து மூலம் எம்மவர் அவலங்களை எழுத்துருவில் ஒப்படையுங்கள். ஊடகங்களின் கைகளில் கூட எழுத்து பிரதிகளை மட்டும் கொடுங்கள். பேசாதீர்கள். அதைவைத்து அவர்களையே பேச வையுங்கள். தயவு செய்து பதாதைகளையும் கொடிகளையும் தவிருங்கள். அப்படிச் செல்லும் போது பேச்சுகளையும் சிரிப்புகளையும் தவிருங்கள். இவற்றை ஒழுங்கு செய்வோர் பங்கு கொள்ள கலந்து கொள்ள வரும் தமிழ் …

    • 5 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.