Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ் இளைஞர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.லண்டனுக்கு அகதி தஞ்சம் கோரி சென்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் இன்னும் அவரது அகதிக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்க…

  2. தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும். வாழ்க்கை என்பது கடல் போன்றது. கடலில் அலைகள் காலம் நேரம் மாறி மாறி எழுகின்றன. அது போல் நம் வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும். அதை எதிர்த்து செல்லும் மன வலிமை எல்லோருக்கும் வேண்டும். எங்கள் பிரதமர் கொரோனா தாக்கத்தின் முதலாம் அலையினை வருகின்ற கோடை காலத்தின் ஆரம்பத்தில் வென்றுவிடலாம். ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தினை முறியடிக்க கனேடிய மருத்துவ விஞ்ஞானிகள் பெரும் ஆராச்சியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். கொரோனவை அடியோடு அழிக்கும் ஊசியினை வெகு சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம். எனவே வீட்டில் தொடர்ச்சியாக இருந்து மனத்தைரியதுடன் ஒற்றுமையா…

    • 1 reply
    • 716 views
  3. ஒவ்வொரு நாளும் தன்னை வந்து பார்த்துவிட்டுப் போகும் தனது மகள் கொஞ்ச நாட்களாகத் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று ஒரு தவிப்பு அந்தத் தாயிடம் இருந்தது. ‘இன்று வருவாள் நாளை வருவாள்’ என்று காத்திருந்து இரண்டு வாரங்களாகியும், மகள் வந்த பாடேயில்லை. யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். எதையுமே அந்தத் தாய் தனது காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது நினைப்பு முழுக்கத் தன் மகளிடமே இருந்தது. கொரோனாத் தொற்று யேர்மனியில் பரவிய போது, முதியோர் இல்லங்களில் அதன் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயற்படும்படி அரசாங்கம், முதியார் இல்லங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி இருந்தும் Wolfsburg என்ற நகரத்தில் இருந்த முதியவர் இல்லத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு பல முதியவர்கள் இற…

    • 4 replies
    • 892 views
  4. தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை விடுத்த வண்ணம் உள்ளது கொவிட் 19.இதனால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரஸால் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் தீவிர கண்காணிப்பில் பலர் வைத்தியசாலைகளில் உள்ளனர். இந்த தகவலை வழங்கும் தமிழ் வைத்தியர் பணியாற்றும் நியு ஜேர்சி வைத்தியசாலைகளில் கூட 250 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவில் கொவிட்19 நிலை என்ன என்பதை விளக்குகறார் தமிழ் வைத்தியரான சிறி சுஜந்தி ராஜாராம் https://www.ibctamil.com/usa/80/140895?ref=imp-news

  5. எனது நண்பி ஒருத்தியின் தந்தை இரு வாரங்களுக்கு முன்னர் பிரான்சில் இறந்துவிட்டார். அவர்கள் குடும்பத்தவர் அனைவரையும் எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவரின் வயது 78. விடயத்தைக் கேள்விப்பட்டதும் அவளுக்குப்பின் செய்தேன். எதனால் இறந்தார் என்றேன். அந்தக் கொரோனா தானடி வந்திட்டுது. ஐயோ நாங்கள் போக்க கூட முடியாதடி. எல்லைகளையும் மூடி விட்டார்கள் என்று கூறி அழுதாள். அவளுக்குத் தந்தைமேல் மிகுந்த பாசம் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்ததால் அவளுக்கு ஒருவாறு ஆறுதல் கூறிவிட்டு போனை வைத்த்துவிடடேன். அடுத்த நாள் மீண்டும் தொடப்பு கொண்டு அவளுடன் கதைத்துவிட்டு மற்றவர்கள் நிலை என்ன என்று கேட்டேன். ஏனெனில் அவளின் தாயும் தந்தையும் ஒரு சகோதரியுடன் தான் வசித்தனர். அவருக்கு கொரோனா என்றால் மற்வர்களுக்கு தொற…

  6. வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்! by : Benitlas அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், செனட் சபை உறுப்பினர் பெர்ன…

    • 0 replies
    • 403 views
  7. பிரான்சில் கொரோனா பலியெடுத்த இன்னுமொரு ஈழத்தமிழர் யாழ்ப்பணம் பாரதிவீதி கோண்டாவில் மேற்கு இணுவிலைப்பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராஜா பாஸ்கரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். http://thinakkural.lk/article/38315

  8. யாழ்ப்பாணத்து இளம் பெண்ணின் உயிரை பறித்த கொரொனா: பிரான்சில் சம்பவம் On Apr 8, 2020 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே இக் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவராவார். தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. htt…

    • 1 reply
    • 537 views
  9. லண்டனில் கொரொனா பலியெடுத்த ஈழத்து இளைஞன்: இவர் முன்னை நாள் உள்ளூராட்சி உறுப்பினர், ஊடகக்காரர் On Apr 9, 2020 கொரோனா நோயின் தாக்கத்தால் லண்டனில் இன்று ஈழத் தமிழர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று காலமானார் . இவர் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் .என்பதுடன் TTN தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல நிலைகளில் பணிபுரிந்த ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . https://www.thaarakam.com/news/122235

    • 3 replies
    • 1k views
  10. கடந்த இரண்டு வாரங்களாக யேர்மனி Konstanz நகரத்தில், தற்காலிகமாகப் போடப்பட்ட ஒரு வேலி யேர்மனியையும் சுவிற்சலாந்தையும் பிரித்து வைத்திருக்கிறது. வேலி போட்டதற்கான காரணம் கொரோனா. மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து யேர்மனி, சுவிற்சலாந்து நாடுகளுக்கான எல்லைச் சோதனைகளும் மீண்டும் முன்னர் போல் ஆரம்பித்திருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்துக்கள் அல்லது வேலை சம்பந்தமான பயணிகளுக்கு மட்டுமே சோதனைச்சாவடியில் அனுமதி கிடைக்கிறது. அதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள். Konstanzநகரத்தின் ஏரியின் அருகே இருக்கும் புல்வெளியூடாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து அல்லது சைக்கிளில் செல்வதற்கான பாதை ஒன்று இருக்கிறது. அந்தப் பாதையையும் இடைமறித்து தற்காலிகமாக மார்பளவு உயரத்த…

  11. பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன! கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத் தீவிரமாக்குகின்றன என்ற செய்தியை யாரோ பரவவிட்டதைத் தொடர்ந்து இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. “இது முற்று முழுதும் பொய்யான தகவல். அத்தோடு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, இக் காலகட்டத்தில், எமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு கருவி அது. இது மிகவும் கோழ்த்தனமான ஒரு நடவ்டிக்கை” எனத் தேசிய சுகாதார சேவைகள் வாரியத் தலைவர் ஸ்டீபன் போவிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். …

  12. வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டது. சூரியன் வெளியே வந்து சிரிக்கத் தொடங்கி விட்டான். அதிலும் வார இறுதியில் வெப்பநிலை 20 செல்சியசுக்கும் அதிகமாக இருக்கும் போது யாருக்குத்தான் வீட்டில் இருக்கப் பிடிக்கும்.காற்பந்து விளையாட்டு, பூங்காவில் உலாவருவது, பார்பிக்யூ செய்வது, பியர் போத்தல்களை உரசுவது என்று வழமையாக வசந்தத்தில் யேர்மனியர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் இது கொரோனாவின் காலம். இந்த வசந்தம் மகிழ்ச்சியாக இல்லை. கடினமானது. அதுவும் வீட்டுக்குள் முடங்கி இருப்பது எல்லோராலும் முடியாத காரியம். ஆனாலும் வீட்டுக்குள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியது கட்டாயம் எனும் நிலை. அந்தக் கட்டுப்பாடுதான் பல உயிர்களைக் காப்பாற்றும் என்பதால் அரசாங்கம் அறிவித்திருக்கும் விதிமுறைகளைக் கண்டிப்பாக…

  13. “என்னதான் தடைகள் வந்தாலும் உண்மையான காதல் அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி தங்களைச் சந்திப்பதற்கு ஒரு வழியைக் கண்டு பிடித்துவிடும்” காதலுக்கான ஒரு விளக்கத்தை இப்படிச் சொன்னவர், யேர்மனியில் Nordfriesland பகுதியில் உள்ள Suederlugum இல் வசிக்கும் 89 வயதான Karsten. Karsten இனின் காதலியின் பெயர் Inga. 85 வயதான Inga டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர். கொரோனா நோய்த் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கள் எல்லைகளை மூட ஆரம்பித்த பொழுது யேர்மனியும் டென்மார்ககும் தங்கள் எல்லைகளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் மூடிக் கொண்டன. எல்லைகள் மூடப் பட்டதால் Karstenனாலும் Ingaவுவாலும் சந்திக்க முடியாமல் போனது. தினமும் சந்தித்து மகிழ்ந்திருந்த இருவரும் தனித்து விடப்பட்ட நிலையில் தவித்துப் போ…

    • 7 replies
    • 1.1k views
  14. கொரோனா உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டு லட்சக் கணக்கில் உயிர்ப்பலிகள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், 2020ம் ஆண்டுக்கான அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வீட்டு முகவரிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய குறியீட்டு எண்ணுடன் கடிதம் அனுப்பட்டுள்ளது. அதை நினைவூட்டும் வகையில் இரண்டாவது கடிதமும் தபாலில் எல்லா வீட்டு முகவரியிலும் வந்து சேர்ந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதியை சென்சஸ் டே(Census Day) என்று குறிப்பிட்டு அன்றைய தேதியில் அமெரிக்காவில் வசிப்பவர்களை, பெயர், வயது, முகவரி மற்றும் இனம் போன்ற விவரங்களுடன் கணக்கிடுகிறார்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கும் ஏப்ரல் 1ம் தேதி கடைசி நாளாகும். இந்த கணக்கெடுப்பில் தமிழர் என்று அடையாளப்படுத்துமாறு, 6…

    • 3 replies
    • 1.5k views
  15. அச்சுவேலியைப் பிறப்பிட மாகவும் பிரான்ஸில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவர் கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். https://valampurii.lk/news/local-news/2020/அச்சுவேலியைச்-சேர்ந்தவர/

  16. நாட்டில் எங்காவது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து ஊரடங்குச் சட்டம் வரப் போகிறது என்று கதை அடிபட்டால் போதும். ஊரில் இருக்கும் சங்கக்கடைகள் பலசரக்குக் கடைகளில் மா,சீனி, மண்ணெண்ணெய் எல்லாம் காணாமல் போய்விடும். அப்படியான காலங்களில் பலசரக்குக் கடை உரிமையாளர்தான் ஊரில் கதாநாயகனாக இருப்பார். வந்த பிரச்சினைகள் நீங்கிய பின்னர் பார்த்தால் முதலாளிகள் என்னவோ செழிப்பாகத்தான் இருப்பார்கள். அந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து நீண்ட காலங்களாகிப் போயிற்று. இப்பொழுது கொரோனா வந்து அவைகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வைக்கிறது. கொரோனாத் தொற்றுநோயின் அலை வீசத் தொடங்க யேர்மனியிலும் மா, சீனி, அரிசி, நூடில்ஸ் என்பவையோடு ரொயிலற் ரிசுவும் கடைகளில் காணாமல் போகத் தொடங்கியது. இங்கே அவைகளைப் பதுக்கி வைப்பவ…

  17. Started by Nathamuni,

    • 4 replies
    • 1.6k views
  18. சமூக ஊடகங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பற்றி ஏகப்பட்ட தகவல்களை ஆளாளுக்கு பகிர்ந்து கொண்டும் பதிந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று ஏப்ரல் முதலாம் திகதி. முட்டாள்களின் நாளாக உலகம் எங்கும் அறியப்பட்ட நாள். தங்களது தவறான தகவல்களைப் பரப்புவதற்கு இந்த நாளை சிலர் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு வந்திருக்கிறது.தாய்லாந்தில் ´ஒரு தவறான செய்தியைப் பரப்புவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்குச் செல்ல நேரிடும்` என்று அந்த நாட்டில் ஒரு வருடத்துக்கு முன்னரே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை இப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை Twitter மூலம் நினைவு படுத்தியிருக்கிறது. தைவானில் ´தவறான செய்திகள் …

    • 1 reply
    • 790 views
  19. எனது இரண்டு விட்ட சகோதரனும் குடும்பத்தவர்களும் மொத்தமாக ஒன்பது பேர் கரோ நகரில் கொரோனாத் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனது சகோதரன் 40 வயது.மனைவி 35 வயது, ஒரு மகன் 10 வயது.மற்றும் எனது சின்னம்மா, சிற்றப்பா, மகள், கணவன், ஒரு மகன் ( வைத்தியர்). மற்றைய மகன் ஆகியோர் ஒன்றாக இரு வீடுகளில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நோய் வைத்தியராகக் கடமைபுரியும் மகனுக்கும் மற்றைய மகனுக்கும் ஒன்றாக தொற்றியுள்ளது. இருவருக்கும் வந்து அவர்கள் 30,33 வலதுகளை உடையவர்கள் என்பதால் குணமாகிவிட்டனர். அவர்களுக்கு வந்து பத்தாம் நாள் மற்றவர்களுக்கும் வந்துள்ளதாம். சின்னம்மாவுக்குத்தான் டயாபற்றிஸ் உள்ளது. மற்றவர்கள் ஓரளவு பரவாயில்லை. இன்று அவர்களுடன் பேசியபொழுது சகோதரன்தான் பேசினார். கொஞ்சம் மனத்த…

  20. மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது. யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இத…

    • 0 replies
    • 406 views
  21. "கிக்" (Gig ) பொருளாதாரமும் ஏற்படக்கூடும் உயிர் இழப்பும் மேற்குலம் உட்பட பல நாடுகளில் மக்கள் வீடுகளில் முடக்கி விடப்பட்டுள்ளனர். அத்திவாசியமான தொழில் செய்ப்வர்கள் மட்டுமே வீதிகளில் இறங்க முடிகின்றது. முதியவர்கள், 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டப்பட்டவர்கள், கடைகளுக்கு செல்ல முடியாதவர்கள் தமக்கு தேவையான உணவு பொருட்களை செயலி ஊடாக இல்லை திறந்திருக்கும் கடைகளின் இணையத்தளம் ஊடாக வேண்டுகின்றனர். இங்கே, இவர்களுடன், வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்களில் பலரும் இணைந்துள்ளார்கள். அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளில் வேலை செய்ப்பவர்களும், இவ்வாறான பண்டக பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும் 'கிக்' பொருளாதாரத்தில் வேலை செய்ப்பவர்கள் கோவி…

    • 0 replies
    • 460 views
  22. பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் கவனத்துக்கு: குடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு தற்போதய COVID -19 தாக்கத்தினை தொடர்ந்து அகதி மற்றும் குடிவரவு தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் (Home Office) சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.  அகதி விண்ணப்பம் அல்லது ஏனைய வதிவிட விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பவர்களுக்கான உள்நாட்டு திணைக்களத்தில் பதிவிடும் (Reporting) தேவைப்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  அகதி விண்ணப்பம் தொடர்பான ஆரம்ப தகவல் திரட்டும் நேர்முகத்தேர்வு (Screening Interview) நீக்கப்பட்டு புதிய நடைமுறை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.  அகதி விண்ணப்பம் தொடர்பான விரிவான நேர்முகத்தேர்வு (Full Asylum Interview) தற்போது நிறுத…

  23. COVID-19 - கனடிய அரசாங்கத்தின் உதவித்திட்டம் குறித்த உங்கள் கேள்விகள் என்ன? பதில் வழக்குகின்றார் Scarborough-Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

    • 0 replies
    • 509 views
  24. லண்டனில் இலங்கையை சேர்ந்த ஓருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Feltham பகுதியில் வசித்து வந்த 61 வயது நபரே வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்துள்ள நபர் மகரகம பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/78850

    • 6 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.