வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
அவுஸ்திரேலிய கடற்படையினர் தம்மை சாகுமாறு கூறியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றச்சாட்டு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- அவுஸ்திரேலிய கடற்படையினர் தம்மை சாகுமாறு கூறியதாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நடுக்கடலில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர். கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு கடற்படையினர் நடுக் கடலிலேயே திருப்பி அனுப்பி வைப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கி…
-
- 1 reply
- 707 views
-
-
இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார்.அன்று முதல் அந்த குழந்தை பிரித்தானியாவில் வளர்ந்து வந்தது. ரொஷானி என்ற இந்த பெண் குழந்தை தற்போது வயது வந்த இளம் பெண். பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ரியலிட்டி ஷோவில் கலந்து கொண்ட இந்த பெண் அங்கு பிரபலமானார். ரொஷானியை வளர்த்த பிரித்தானிய வளர்ப்பு தாய் 2010ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். இறப்பதற்கு முன்னர் அவர் ரொஷானியை பெற்ற தாய் பற்றிய விபரங்களை அவருக்கு வழங்கியுள்ளார். வயலட் என்…
-
- 0 replies
- 909 views
-
-
யாழ் இந்து பழைய மாணவர்கள் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரனுடன் ஒரு சந்திப்பை இராஜகுலசிங்கம் (பாபு ) வீட்டில் ஏற்பாடுசெய்திருந்தார்கள் .அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படும் எமது பழைய மாணவர் சங்கம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு என்ன தேவை என்று யோசிக்கலாம் . நாம் படித்த பாடசாலைக்கு உதவுவதுடன் மட்டுமல்லாது நாட்டிலிலும் சில வேலைத்திட்டங்களை எமது பழையமாணவர் சங்கம் ஏற்கனவே செய்துவருகின்றது .அதைவிட கனடாவிலும் நடை பவனி போன்ற நிதி சேர்ப்பு நிகழ்வுகள் மூலம் கனேடிய வைத்தியசாலைகளுக்கும் கடந்த காலங்களில் உதவி செய்துவந்தது . தமிழர் மரபுரிமை விழாவிற்ககாக கனடா வருகை தந்திருந்த வியாளேந்திரனின் கனேடிய நிகழ்வுகளில் பங்குபற்றிய சில பழ…
-
- 13 replies
- 1.3k views
-
-
வாகன மோதல்களை அரங்கேற்றி காப்புறுதி மோசடி செய்த தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை. Mohanay February 05, 2016 Canada காப்பீட்டு மோசடி “நடன இயக்குநர்” ஒருவர் ரொறொன்ரோவின் பிசியான வீதிகளில் 13 வாகன மோதல்களை நடாத்திய குற்றத்திற்காக வியாழக்கிழமை மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். குற்றவியல் அமைப்பொன்றின் தலைவர்களில் ஒருவரான 38வயதுடைய உதயகாந்தன் ‘மனோ’ திருநாவுக்கரசு என்பவர் ஒரு டசின் கணக்கான சாரதிகள் மற்றும் பயணிகளை போலியான வகையில் காயப்பட்டவர்கள் என காட்டி 1.5மில்லியன் டொலர்கள் வரையிலான பொய்யான காப்பீட்டு கோரிக்கைளை பெற்றுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டார். இத்தொகையில் 1.2மில்லியன் டொலர்கள் திருநாவுக்கரசுவின் வணிக கணக்கில் சென்றுள்ளதாதவும் கூறப்பட்டுள்ளது.…
-
- 12 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். சிங்கள தேசம் தமிழர் தேசத்துக்கு இழைத்த கொடுமைகளை இன்னும் இன்னும்.. உலகறியச் செய்வோம். TYO -UK
-
- 0 replies
- 883 views
-
-
-
- 0 replies
- 652 views
-
-
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிசாருக்கு ஒன்ராறியோ வரி செலுத்துபவர்கள் பல மில்லியன் டொலர்களை செலுத்துகின்றனர்! கனடா- ஒன்ராறியோவில் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு வரிசெலுத்துபவர்கள் வருடந்தோறும் பல மில்லியன் டொலர்களை செலவிடுகின்றனர் என இரண்டு சுயாதீன செய்தி விசாரனையில் இருந்து தெரிய வந்துள்ளது. தவறான நடத்தைகளினால் குறைந்தது 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இன்னமும் ஊதியங்களை பெற்று கொண்டிருக்கின்றனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடமொன்றிற்கு சராசரி சம்பளம் டொலர்கள் 90,000 அடிப்படையில் டொலர்கள் 4.5மில்லியன் டொலர்கள் வரிசெலுத்துபவர்களின் டொலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களிற்கு வழங்கப்…
-
- 0 replies
- 380 views
-
-
ஜேர்மனியில் குடியேற்றவாசிகள் தங்குமிடங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு [ Friday,29 January 2016, 16:50:50 ] ஜேர்மனியில் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு குடியேற்றவாசிகள் தங்கியுள்ள ஹோட்டல்கள் மீதான தாக்குதல்கள் ஐந்து மடங்கிற்கும் அதிகமான இடம்பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டு 199 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதுடன், 2015 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஆயிரத்து 5 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர்களே 90 வீதமான தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமாக உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் முன்எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு 1 தசம் 1 மில்லியன் மக்கள் புகலிடம் கோரிச் சென்றுள்ளமை…
-
- 0 replies
- 582 views
-
-
“இத்தாலி பலெர்மோவில் தைப்பொங்கல் புத்துணர்வும் வட்டுக்கோட்டைத் தீர்மான மீள்எழுச்யின் புதுநிமிர்வும்” [Thursday 2016-01-28 19:00] இத்தாலி பலேர்மோ மாநகரில் 24/01/2016 ஞாயிறு மாலை 4:00 மணியளவில் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வாக மண்டபத்திற்கு வெளியே மிகச் சிறப்பாக தமிழ்க்கலாச்சார முறைப்படி தைப்பொங்கல் இடம்பெற்றது. பின்னர் மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் தமிழீழ தேசியக்கொடியே ற்றலோடு அருட்தந்தை மற்றும் ஆலய பூசகர்கள்,தமிழ்த் தேசிய கட்டமைப்பின் பிரதிநிதிகள்,தமிழ்ச்சோலை,கலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் மங்கள விளக்கை ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பாடல்கள்,நடனங்கள்,கவிதைகள் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன .இந்நிகழ்வில் பெருந்த…
-
- 0 replies
- 540 views
-
-
அன்று 30.- இன்று 200.- நான் 1991இல் வெளிநாடு வந்த சந்ததியினரில் ஒருவன். கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்திருந்தாலும் அதனோடு வாழ்ந்து இருக்கிறேன் என்று உணர்கிறேன். கேட்டது கிடைக்கவில்லை, கேட்டால் கொடுப்பதர்க்கு வசதிகளும் அன்று இருக்கவில்லை. நான் பார்த்து ஆசைப்படுவதர்க்கு நண்பர்களோ ஏனைய சுற்றாடலில் வாழ்ந்த தமிழர்களோ அப்படி இருக்கவில்லை, அனைவருக்குமே ஒரு வகையில் ஒரே நிலை. இன்று கேட்பது கிடைக்கிறது, கேட்காமலும் கிடைக்கிறது. வசித்தது காம்ப் வீட்டில், அதில் ஏதிலிகள் இல்லம் என்று ஜேர்மன் மொழியில் லான்ட்லைன் தொலைபேசியில் எழுதி இருந்தது. அன்று அர்த்தம் தெரியவில்லை. 1 பிராங் கிடைத்தாலே கடைக்கு சென்று இனிப்பு வாங்கிவிடுவோம். அதை உண்ணும்போது இருந்த சந்தோசம் இன்று …
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழர் மரபுத் திங்கள் சேர்மனியில் பிரகடனம். தமிழ் கல்விக் கழகம் பிராங்பேர்டின்; கீழ் இயங்கும் தமிழாலயம் பிராங்பேர்ட் ஆண்டுதோறும் நடாத்திவரும் தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் விழா, 23.01.2016ல் பிராங்போட் நகரில் சமய அனுட்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களை பாடசாலை மாணவர்களும் ஆசரியர்களும் இருமருங்கும் நின்று வணக்கம் கூறி, விழா மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். தமிழர் திருநாள், விளையாட்டுப்போட்டி, ஆண்டு விழா, சிறிய பண்டிகைகள், பண்பாட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகள், தமிழ்த் திறனாய்வுப் போட்டி ஆகியவற்றை வருடாவருடம் நடாத்தி வரும் இப்பாடசாலை 23.04.1995 ல் ஆரம்பிக்கப்பட்டது. மழலைப் பிரிவு தொடக்கம் வளர்நிலை 12 வரை 169 மாணவர்கள் இங்க…
-
- 2 replies
- 790 views
-
-
சிரியாவில் இருந்து கனேடிய அரசால் கனடா அழைத்து வரப்பட்ட அகதிகள் முகம் சுழிக்கிறார்கள். தங்களைத் தங்க வைத்திருக்கும் தற்காலிக தங்குமிடம் வசதிக்குறைவாக உள்ளதாவும் தாங்கள் திரும்பவும் ஜோர்தானிய அகதிமுகாமிற்கே மீண்டுவிடலாம் போலுள்ளது என்றும் கூறுவது கனடாவில் பரபரப்பான செய்திகளில் ஒன்றாயுள்ளது. ஏனோ இதைக் கேட்ட மாத்திரத்தில் உள்ளுர பல அலைகள். எடுத்த எடுப்பில் அகதிகளில் ஆத்திரம் மட்டுமே பிறந்தது. எனினும் இது ஒரு-பரிமாண விடயம் அல்ல என்பதும் கூடவே தோன்றியது. அப்படி நடந்த ஒரு சுய விசாரணையினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். கால்நூற்றாண்டிற்கு முன்னர் நம்மவர்கள் (நான் உட்பட) கனடாவிற்கு வந்த காலத்திற்கு மனம் பறந்தது. நிரந்தர வதிவுரிமையினைப் பெற்று விடவேண்டும் என்பதற்கப்பால் எதையும் மன…
-
- 13 replies
- 1.7k views
-
-
கனடா ரொறன்ரோ கல்விச் சபையின் Scarborough Rouge River தொகுதியின் உறுப்பினராகநேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகள் பெற்று வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளார் தமிழ் மகனாக நீதன் சண். இவர் ஒரோரியோவில் பல தேர்தல்களில் போடியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் தனது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் தெருவித்து வருகின்றார் … மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும்…. http://www.insidetoronto.com/news-story/6248281-neethan-shan-elected-new-tdsb-trustee-for-scarborough-rouge-river/ - See more at: http://www.canadamirror.com
-
- 0 replies
- 424 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு பயணித்தோரில் 1,200பேர் மரணம் சட்டவிரோதமான முறையில், படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற சுமார் 1,200 அகதிகள், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் அதில் அதிகமானோர் இலங்கை அகதிகள் எனவும் இனங்காணப்பட்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கணிக்கப்பட்ட எண்ணிக்கையில் அதிகமான இலங்கை அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று, தென்னிந்தியாவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் சீன் கெல்லி, வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேயாவிலுள்ள கடல் பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடினமான எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி, விசா இல்லாமல் படகு மூலம் நாட்டுக்குள் வந்த எவராலும் அங்கு குடியமர முடியாது என்றும் அ…
-
- 0 replies
- 578 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
சுவிற்சர்லாந்தில் குடியேற்ற வாசிகளின் எதிர்காலம் சிக்கலில்..? 10, 000 தனி நபர்களை நாடுகடத்தும் ஆபத்து..! [ திங்கட்கிழமை, 18 சனவரி 2016, 05:27.16 AM GMT ] இரண்டு மில்லியன் மனிதர்களின் வதிவிட உரிமை மீதான ஆபத்து இந் நாட்டு கடவுச் சீட்டின்றி சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாகத் தொழில் புரியும் இரண்டு மில்லியன் மக்களிற்கு நாடு கடத்தல் சட்ட அமுலாக்கம் ஆபத்தானது. சிறிய குற்றச் செயல்கள் புரிபவரை எவ்வித விசாரணையுமின்றி பலவந்தமாக திருப்பி அனுப்ப இது வழி செய்கிறது. இச் சட்ட மூலமானது இந் நாட்டில் நீண்ட காலமாக வாழும் மக்களின் இரண்டாம் தலைமுறையினருக்கும் உரித்தானதாகும். http://www.tamilwin.com/show-RUmuyBScSWit1J.html
-
- 0 replies
- 614 views
-
-
இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இலங்கை வல்வெட்டித்தறையை சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார். தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்ற இவர் மாநிலங்கள் அளவில் சென்னை வேளாச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்றபோட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவ…
-
- 2 replies
- 634 views
-
-
ஊர் நினைவுகளுடனேயே காலம் ஆகிப் போவோமா? கலாநிதி சர்வேந்திரா இன்றைய பத்தி இரண்டு கதைகளுடன் தொடங்குகிறது. இவற்றை நான் இங்கு கதை என்று குறிப்பிட்டாலும் இவை உண்மையில் நடந்த நிகழ்வுகளே. முதலாவது கதை கனடா ரொரோண்டோவில் நடக்கிறது. இரண்டாவது கதை நோர்வே ஒஸ்லோவில் நடக்கிறது. முதலாவது கதைக்கு வயது 18. இரண்டாவது கதையின் வயது 22. இக் கதைகளைப் பற்றி முன்னரும் பொங்குதமிழில் எழுதியிருக்கிறேன். இப் பத்திக்காக இக் கதைகளை மீண்டும் ஒரு தடவை பார்ப்போம். கதை 1. 1997 ஆம் ஆண்டு சில மாதங்கள் நான் கனடாவில் தங்கியிருந்தேன். நான் கனடா வந்திருப்பதைக் கேள்வியுற்ற எனது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துகால நண்பர் ஒருவர் தனது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அன்று அவர் வீட்டில்தா…
-
- 1 reply
- 1.2k views
-
-
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முதுமொழிக்கமைய பிறக்கப் போகும் தைத்திங்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டு வர வேண்டுமென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி, தமிழீழ மக்களின் பெருவிருப்பான சுதந்திர தமிழீழத்தை நோக்கிய நகர்வை விரைவுபடுத்தப்படும் என நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் முகமாக உலகலாவிய தமிழர் மரபுரிமைத் திங்கள் பெருவிழாவினைக் கொண்டாடுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிலையில் தமிழர் திருநாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் : …
-
- 0 replies
- 831 views
-
-
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பாகிய நாம் தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழர்களின் தேசிய திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்ளுகின்றோம். இத் தைத்திருநாளில் எமது மக்களுக்கு விடுதலையையும், நீதியையும் பெற்றுத்தரவேண்டும் என்றும் மனதில் நினைத்துக்கொண்டு எமது பணியை தொடருவோம். அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எமது மக்கள் மீளவும் தமது சொந்த நிலங்களுக்கு சென்று அடுத்த ஆண்டு தைப்பொங்கலாவது சொந்த நிலத்தில் நடைபெறச் செய்யவேண்டும் என்பதை நினைத்து தமிழ்மக்களின் தலைவர்கள் போராட வேண்டும். தமது அரசியல் இரு…
-
- 0 replies
- 496 views
-
-
ரொறன்ரோ நகரசபைத்தலைவர் John Tory அவா்கள் கனேடியத் தமிழர்களுக்கு தனது தைப் பொங்கல் நல்வாழ்துக்களை தெரிவித்துள்ளார். 13-01-16 நேற்றையதினம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் தொடர்பான சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே அவா் தனது வாழ்த்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்படி நிகழ்வில் பல தமிழ் பிரமுகர்களும் ஊடகவியலாளா்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=149252&category=TamilNews…
-
- 0 replies
- 745 views
-
-
முஸ்லிம் வெளியேற்றம்: மன்னிப்புக் கோருமாறு ட்ரம்புக்கு அழுத்தம் குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள டொனால்ட் ட்ரம்பின் பிரசாரக் கூட்டமொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரரிடம் மன்னிப்புக் கோருமாறு ட்ரம்புக்கு, அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பாடல்களுக்கான சபை அழுத்தம் கொடுத்துள்ளது. தெற்கு கரோலினாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலிருந்து ரோஸ் ஹமிட் வெளியேற்றப்பட்டமையானது, அமெரிக்காவிலிலுள்ள முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தும் செய்தியை விடுக்கின்றது என அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பாடல்களுக்கான சபை கூறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (08), ரொக் …
-
- 0 replies
- 908 views
-
-
கனடாவில் இன்று முதல் புதிய சட்டங்கள் கனடாவில் புதிய அரசாங்கத்தன் வாக்குறுதிகளுக்கு அமைய 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய சட்டங்கள், அரசாங்க கொள்கைகள் மற்றும் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டங்களின் இணை மாற்றங்கள் என்பன அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்பிரகாரம் மத்தியதர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு, மாணவர்களின் கடன் சுமைகளை தளர்த்துதல், TFSA தீர்வையற்ற சேமிப்பு கணக்கு எல்லை குறைப்பு, ஒன்ராறியோ-குளிர்கால சக்கர வரி, மனிரோபா பணியாளர் இழப்பீட்டு அணுகலை விரிவுபடுத்தல், சாரதிகளுக்கான புதிய சட்டம், ஒன்ராறியோ அணு நீர் மின்சார கட்டணம் விலக்கல், மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா-சுகாதார-பராமரிப்பு கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்…
-
- 1 reply
- 1.4k views
-
-
புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த 2015ல் சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினைத் தாங்கிப் பிடிக்கும் அணுகுமுறை ஆகியன நாம் எதிர் கொள்ளப் போகும் சவால்களுக்குக் கட்டியம் கூறும் ஆண்டாக அமைந்திருந்ததெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், அனைத்துலக சமூகத்தின் ஆதரவை ஈழத் தமிழ் மக…
-
- 0 replies
- 552 views
-
-
இவர்களை தெரிகிறதா? பொது மக்களின் உதவியை நாடும் கனடா பொலிசார். கனடா-ரொறொன்ரோ, ஸ்காபுரோ பகுதியில் இரண்டு வீட்டு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடுகின்றனர். இவர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். நான்கு முதல் ஐந்து ஆண்கள் முகமூடி அணிந்தவாறு நவம்பர் மாதம் 30-ந்திகதி அதிகாலை 3.40மணியளவில் எல்ஸ்மியர் வீதி மற்றும் மார்க்கம் வீதியில் அமைந்துள்ள வீட்டில் இருந்த மனிதனிடம் கொள்ளை அடித்துள்ளனர். இதே குழு குறிப்பிட்ட மனிதனிடம் இரண்டாவது தடவையாக டிசம்பர் 7ந்திகதி அதிகாலை 2.15 அளவில் மீண்டும் கொள்ளையடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இரண்டு வழக்குகளிலும் மூன்று அல்ல…
-
- 0 replies
- 1k views
-