நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
802 topics in this forum
-
நண்பர்களை உருவாக்குவதற்கான போர்… அகரன் வீட்டின் பின்புறத்தில் மூங்கில் தடிகளை வெட்டி வீட்டுத்தோட்டத்திற்கு வேலி போட்டபடி இருந்தேன். மகள் என்னுடன் நிற்பதற்கு விரும்பினாள். அப்படி நிற்பதென்றால் நான் செய்யும் வேலையை நிறுத்தவேண்டும். வீட்டில் உள்ள சேவல் தன்னை கொத்திவிடும் என்று கத்துவாள். ஒரு சேவலுக்கு ஆறு பேடுகள் அவசியம் என்று எமக்கு கோழிகளை விற்ற பிரெஞ்சுப்பெண் சொன்னாள். இளம்பருவ சேவல் வளர்ந்து வர்ணங்களை வளர விட்டதோடு சண்டித்தனத்தை எங்களிடமும் காட்ட ஆரம்பித்திருந்தது. மகளைக்கண்டால் திரத்த ஆரம்பித்துவிடும். மகள் பெரிய தடியை வைத்திருந்தாலும் அதை தாக்கப் பயன்படுத்த மாட்டாள் என்பதை சேவல் எப்படியோ அறிந்து விட்டது. மகளுக்கு எப்போதும் ‘நீ பயம் கொள்வதை அறிந்…
-
-
- 7 replies
- 850 views
-
-
`` ‘திராவிட மாடல்’ என்பது என்ன? இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படை பற்றி விளக்க முடியுமா?’’ “சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான ஓர் அரசியல் இயக்கம், ஓரளவு எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை வழங்குவது சாத்தியம் என்பதைத் தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. இதுவே ‘திராவிட மாடல்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படை. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களிலும் சாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் திரட்சி நடந்தது. ஆனால், அது பொருளாதார வளர்ச்சியைத் தரவில்லை. தமிழ்நாட்டில் இந்தத் திரட்சி எப்படிப்பட்டது, எதை முன்னிறுத்தியது என்ற புள்ளியில் திராவிட மாடலை ஆராய்ந்திருக்கிறோம். சாதிய அடிப்படையிலேயே தொழில்கள் நிர்ணயிக்கப்படுகின்றன எனும்போது, இந்த நிலையை ஒழிக்க நவீனக் கல்வி,…
-
- 1 reply
- 848 views
-
-
'கூடார நிழல்' கவிதைத் தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளிவந்துள்ளது. http://www.uyirmmai.com/
-
- 2 replies
- 843 views
-
-
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1369:2013-03-07-01-08-26&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29
-
- 5 replies
- 841 views
-
-
சூரன் சுயசரிதை வரலாற்றை வாசித்தல் - 05 1. "எனது பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளே செல்லட்டும். ஆனால் நான் உங்கள் கோயில்களுக்கு வரமாட்டேன். ஏனெனில் உங்கள் கோயில்களுக்குள்ளே சுத்தம் மிகக்குறைவு" என்று ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கலாமா என்ற விவாதங்கள் 1940களில் நடந்தபோது சூரன் அவர்கள் கூறிய கருத்து ஒருகாலத்தில் பிரபல்யமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு தீர்க்கமாய்க் கூறிய சூரன் நம் இலங்கை வரலாற்றில் முக்கியமானவர். ஒருவகையில் பண்டிதர் அயோத்திதாசர் போல மறைக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்காரர் என அவரைச் சொல்லலாம். சூரனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் 1900களின் தொடக்ககாலங்களில் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றின் குறுக்குவெட்டு முகத்தைப் பார்க்க…
-
- 0 replies
- 837 views
-
-
குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக் கின் கருத்துகளின் தொகுப்பே ‘ஒவ் வொரு குழந்தையையும் நேசிப்போம்’ என்னும் நூல். இந்நூலை தி.தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங் களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர் பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது. இருபத்தியொரு தலைப்புகளின் கீழ், குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை அடக்கியுள்ளது இந்நூல். குழந்தைகள் போடும் சத்தமே பெற் றோருக்கு வேதனை தரக்கூடியது. இது பற்றிப் பேசும் கோச்சார்க், குழந்தை நடக்கும்போது நடக்கும், கடிக்கும்போது கடிக்கும் என்று சொல்கிறார். ‘எல்லா நரிகளும் தந்திரம் மிக்கதா, நி…
-
- 1 reply
- 837 views
-
-
ஓராயிரம் சூரியன்கள்! "மரியம் தன் கடைசி இருபது அடிகளை எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தாள். அவள் பின்னால் தொடரும் இளம் தலிபான் ஆயுத தாரியின் நிழல் அவளோடு கூடத் தொடர்ந்தது. இவ்வளவு முயன்றும் இப்படித் தான் என் வாழ்வு முடியப் போகிறதா என்ற கேள்வியும் அவளுள் தொடர்ந்து வந்தது. ஆனால், ஒரு சிறு நல்ல காரியமாவது செய்து விட்ட திருப்தியோடு தான் போகிறேன் என்ற எண்ணமும் ஒரு மன மூலையில் இருந்தது!" (வரிக்கு வரி மொழிபெயர்ப்பல்ல) ஏற்கனவே நூற்றோட்டம் பகுதியில் நாம் பார்த்த பட்டமோடியை எழுதிய காலித் ஹொசைனியின் இன்னொரு படைப்பு இந்த "ஓராயிரம் சூரியன்கள்" நாவல். நாவலின் பின்புலம் கம்யூனிச பொம்மை ஆட்சியை ரஷ்யா ஏற்படுத்தி விட்ட பின்னர், தலிபான் உட்பட்ட யுத்தப் பிரபுக்களின் குழுக்கள் மீண்…
-
- 0 replies
- 835 views
-
-
-
- 2 replies
- 833 views
-
-
நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அசோகனின் வைத்தியசாலை - கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல் மூலமாக இதை அனுப்பி வைத்திருந்தார் நடேசன். புலம்பெயர் சூழலிலிருந்து புதிதாக ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு ஏற்றமாதிரி, வேறுபட்ட கதைக்களத்தையும் நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் கருவையும் கொண்டு தமிழில் எழுதப்பட்ட இன்னொரு நாவலாக “அசோகனின் வைத்தியசாலை“ இருக்கிறது. வாழ்க்கை புதிய தளங்களில் அகலிக்கும்போதும் வேர்விடும்போதும் …
-
- 1 reply
- 833 views
-
-
இந்த மாத ஆட்காட்டியில் வெளியாகியிருந்த என் நூல் பற்றிய விமர்சனம் நிவேதாவின் நிறம் மாறும் உறவோடு கோசல்யாவின் சிற்றுராய்வு மரபாக வாழ்ந்த இடத்திலிருந்து புலத்தில் வாழ்வை ஆரம்பித்த காலங்கள் பலரைப் படைப்பாளிகளாக . ஆக்கதாரர்களாக தோற்றம் பெற்றவர்கள் எம்மத்தியில் பல படைப்பாளிகள் . இவர்கள் வாழ்வியல் பட்டறிவு வாயிலாக வாய்ப்புப் பெற்றது மெய்யானதே எனலாம் அந்த வகையில் இங்கே நிவேதா உதயராயன் +நிறம் மாறம் உறவு + படைப்பிலக்கியம் சிறப்புப் பெறுகின்றது ..சீரிய உரை நடை வீரிய வார்த்தைகள் ..வட்டார வழக்கான வசனயார்ப்பு. இங்கு கூறப்படும் பதினனைந்து படைப்பாக்கமும் பறைசாற்றி நிற்பது -மெய்யானது. . கதையல்ல மெய்யான மெருகான சம்பவங்களே --- இவைதான். அந்த வகையில் இவரும் மெய்ப்பாடான படைப்பிலக்கிய க…
-
- 3 replies
- 830 views
-
-
ஈழத்தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்டபோரின் அவலங்களைப் பேசும் கருணாகரனின் வேட்டைத்தோப்பு - முருகபூபதி படித்தோம் சொல்கிறோம் அரசியல் அறமே கூற்றுவனாகி மக்களின் வாழ்வைகுலைத்துப்போட்டதை சித்திரிக்கும் தொகுப்பு இலங்கையில் மட்டுமன்றி தமிழகம்மற்றும் தமிழர் புகலிட நாடுகளிலும் இலக்கிய வாசகர்களின் கவனிப்பிற்குள்ளான கருணாகரன் - கவிஞராகவே முன்னர் அறியப்பட்டவர். வெளிச்சம் இதழின் ஆசிரியராகவுமிருந்தவர். பத்தி எழுத்தாளர் -ஊடகவியலாளர் - சில நூல்களின் பதிப்பாளர் - இலக்கிய இயக்கசெயற்பாட்டாளர். எனக்கு கருணாகரன் இலக்கியத்தின் ஊடாகஅறிமுகமானது 2008 இல்தான். லண்டனில் வதியும் முல்லை அமுதன்தொகுத்து வெளியிட இலக்கியப்பூக்கள் தொகுப்பில் மறைந்த செம்பியன்செல்வனைப்பற்றி கருணாகரன்…
-
- 0 replies
- 829 views
-
-
(தமிழ் பெண்கள் அபிவிருத்தி மன்றத்தின் 2014 சரவ்தேச மகளிர்தின வெளியீடு) 2009 மே மாதம் முதல் பகுதியில் ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்ட அறிக்கையுடன் முடிவிற்கு வந்தது ஈழத்தமிழரின் முப்பது (30)வருடகால விடுதலைப் போராட்டம். யுத்தம் முடிவிற்கு வந்ததா? நாட்டிற்குப் போய் 4 நாள் நின்றுவிட்டு றாலும் கணவாயும் சாப்பிட்டு விட்டு கருப்பணியும் கள்ளும் குடித்துவிட்டு 'அங்கு இப்ப பறவாயில்லை' என்று கூறி ஈழமண்ணிற்கு பிரயாணிகளாய் போய் திரும்பிய சிலரின் யாழை மையமாக வைத்து கூறப்படும் இக்கருத்துக்கு அப்பால்; பூதாகரமாக வளர்ந்;து நிற்கும் யுத்தத்தின் நிழல்கள் யுத்தத்தின் எச்சங்கள் கூறும் உண்மைகள் மனிதர் எல்லோரையும் உலுக்கிப்போட வல்லவை என்பதை உரத்துக்கூறும் குமுறல்கோ…
-
- 2 replies
- 828 views
-
-
மெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும்!… தெய்வீகன். அகரன்November 27, 2018 இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் ஊடாக பேசிய அரசியல், அறம் ஆகியவை குறித்து தமிழகத்தின் படைப்பாளுமை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய நிழல் வெளி நூல் அறிமுக நிகழ்வும் அவருடனான சந்திப்பும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த படைப்பாளியும் அரங்கச்செயற்பாட்டாளருமான தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தனது குட…
-
- 1 reply
- 828 views
-
-
பிரபாகரனின் இறுதி 3 நாட்கள் May 10, 2022 பொறுப்புத் துறப்பு: இணைத்தவர் இப்பதிவில் விடுதலைப் புலிப் போராளிகளை பயங்கரவாதிகள் எனச் சுட்டுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. By Maj. Gen. Kamal Gunaratne தமிழில் Rajh Selvapathi (முன்னாள் ஐ. நா. சபை உத்தியோகத்தர், கிளிநொச்சி) (முன்) கதைச்சுருக்கம் 800x800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த ம…
-
- 0 replies
- 827 views
-
-
காதுகள்- எம்.வி. வெங்கட்ராம் - வாசிப்பு குறிப்பு சுனீல் கிருஷ்ணன் எம். வி. வியின் வாழ்க்கை சித்திரத்தை பற்றி ஜெயமோகனின் 'அறம்' கதை வழியாக முதன்முறையாக பரிச்சயம் செய்து கொண்டேன். நித்ய கன்னி நாவலை சில ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். 'காதுகள்' எழுபது வயதிற்கு மேல் அவர் எழுதிய நாவல். அவருக்கு சாகித்திய அகாதமி விருதை பெற்றுக்கொடுத்த நாவலும் இதுவே. பசித்த மானிடம் முடித்த கையுடன் காதுகள் வாசிக்க தொடங்கினேன். இதுவும் கும்பகோணத்தை களமாக கொண்ட நாவல் தான். இப்போது இதை முடித்துவிட்டு மோக முள் தொடங்கியிருக்கிறேன். 'காதுகள்' குறித்து முன்னர் இரண்டொரு வாசிப்பனுபவங்கள் வாசித்தது நினைவில் இருக்கிறது. அது அளித்த அச்சத்தின் காரணமாகவே வாசிப்பதை தவிர்த்தும் தள்ளிப்போட்டும் …
-
- 0 replies
- 827 views
-
-
பட்டமோடி (The Kite Runner) "மீண்டும் நல்வழிக்குத் திரும்ப ஒரு வழி இருக்கிறது!" "There's a way to be good again!" (இது பல ஆண்டுகளுக்கு முன்பு நாவலாக வெளிவந்து பின்னர் ஒரு திரைப்படமாகவும் வெளிவந்து விட்ட ஒரு படைப்பு. இதைப் பற்றி ஏற்கனவே யாழில் பகிரப் பட்டிருக்கக் கூடும், ஆனால் கொரனாவுக்கு முடங்கிய நாட்களில் வாசிக்கத் தகுந்த நல்ல புத்தகமாக இருப்பதால் இங்கே பகிர்கிறேன்) "யுத்தம் என்பது குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் மட்டும் நடக்கும் ஒன்றல்ல. இந்த உபகரணங்களுக்கு அப்பால் மக்களின் துன்பத்தினாலும் வாழ்க்கை மாற்றங்களாலும் கூட யுத்தம் பிரதிநிதித்துவம் செய்யப் படுகிறது". இப்படிச் சொன்னவர் வன்னியில் இறுதி யுத்த நாட்கள் வரை வாழ்ந்து மீண்ட தமிழ்க்கவி. …
-
- 4 replies
- 826 views
-
-
கனடா பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் யாழில் வெளியீடு! கனடாவில் வசிக்கும் பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் அறிமுகமும் உரையாடலும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகக் குவிவுமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நூல் பற்றிய அறிமுகத்தை சுரேகா பரம் என்பவர் நிகழ்த்தியதுடன் கருத்தியல் சார்ந்த பெண்ணிய அணுகுமுறையை மதுஷா மாதங்கியும் வாசிப்பு அனுபவத்தை பிறைநிலா கிருஷ் ஆகியோரும் நிகழ்த்தினர். இந்நிகழ்வில், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், புலம்பெயர் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். …
-
- 5 replies
- 826 views
-
-
“கள்ளத்தோணி” மனம் பெரும் சுமையாகி கனக்கிறது! – தமிழ்க்கவி கள்ளத்தோணி’ ‘தோட்டக்காட்டார்’ ‘புளிச்சக்கீரை’ ‘கொண்டைகட்டி’ இதெல்லாம் நாங்கள் எம்முடன் பாடசாலையில் படிக்கும் இந்திய வம்சாவழித்தமிழ் சக மாணவர்களை விளிக்கும் சொற்கள். அதன் அர்த்தம் எமக்கு தெரியாவிட்டாலும் எமது பெரியவர்களின் உரையாடல்களிலிருந்து பெற்றவைதான் அந்தச் சொற்கள். பிள்ளைகள் பிறந்தால் அவர்களது தலைமுடியை திருப்பதிக்கோ சிறீரங்கத்துக்கோ நேர்த்தி செய்து வைப்பார்கள். பெண்பிள்ளையானால் போச்சு. ஆனால் ஆண்பிள்ளைகளுக்கு அந்த முடியை ஒரடி ஒன்றரையடி நீளத்தில் பின்னி ரிபண் வைத்துக்கட்டி பாடசாலைக்கு விடுவார்கள். ஆறாம் ஆண்டு படிக்கும் பையன் பின்னலுடன் வருவான். அவனை நண்பர்கள் சக மாணவர்கள் கொண்டைகட்டி என்பார்கள். அப்படிய…
-
- 1 reply
- 824 views
-
-
கார்டன் வைஸ்சின் Cage – தமிழாக்கமான கூண்டு நடேசன் (Gorden Weiss) கார்டன் வைஸின் தமிழாக்கமான கூண்டு நூல் தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது. பல இடங்களில் அதன் ஆங்கில மூலத்தை பார்த்திருந்தேன். அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தேன் . ஆனால், கூண்டு என்ற அதன் தமிழாக்கம் பற்றி ஏன் தமிழ்த் தேசியர்கள் பலர் பேசவில்லை என ஆச்சரியப்படுகிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் புத்தகங்களை வாசிக்காதவர்கள். அல்லது ஆனந்தவிகடன் , குமுதத்தின் வாசகர்களாக இருந்தாலும் அவர்களில் ஒரு வீதத்தினராவது இது பற்றிப் பேசியிருந்தால் புத்தகத்தைப் பற்றி எனக்கும் தெரிந்திருக்கும். முக்கியமாக தமிழர்கள் மத்தியில் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. பின் அட்டைக்கு பேராசிரியர்…
-
- 0 replies
- 824 views
-
-
திருகோணமலையில் சோழர் - டாக்டர் ஜீவராஜின் புதிய நூல் இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில் சோழர்களது ஆட்சி பற்றிய சில கட்டுரைகளை கொண்டு இம்மின்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சோழ இலங்கேஸ்வரன், சோழர்கால தமிழ் பௌத்தம் என்பன அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. வலைப்பதிவில் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளே இவை. இது திருகோணமலையில் சோழராட்சியின் முழுமையான விபரிப்பாக அமையாது என்றாலும் அது தொடர்பில் ஒரு சிறு அறிமுகத்தை தருகின்ற முயற்சியாகவே இது.. https://vanakkamlondon.com/l…
-
- 0 replies
- 824 views
-
-
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இணையத்தில் தொடர்ந்து எழுத வந்தபோது சக இணைய எழுத்தாளர்கள் மட்டுமே வழிகாட்ட இருந்தார்கள். இங்கே அப்போது பெரிய எழுத்தாளர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். இணையம் ஒரு மிரட்டலாகவே பார்க்கப்பட்டது. அப்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வந்தவர்களில் முக்கியமானவர் அய்யா வண்ணதாசன். கவிதையைத் தேடி தொலைதூரம் போகிறவர் அல்ல அவர். அந்நிய மனிதனின் கைக்குட்டையை நுனி விரலால் பற்றி குப்பைத்தொட்டியில் போடுவோர் நிறைந்த உலகில், பார்க்க வந்த ஒருவர் மேசையில் மறந்து வைத்துவிட்ட கைக்குட்டை காற்று வாங்கும் சுதந்திரத்தை கவிதையாக்கி சேமிக்கிறார். குளத்தின் சலன வட்டங்களை சுருட்டிக் கூட்டில் வைத்து நகரும் நத்தையை நான் இன்னும் எத்தனை வருடங்கள் சென்று கற்பனை செய்ய …
-
- 1 reply
- 824 views
-
-
நூல் அறிமுகம்: விடியலைத் தேடி’ ஊடாக, செங்கை ஆழியானை நினைவுகூர்தல் ‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்…
-
- 0 replies
- 823 views
-
-
குமிழி நாவல் மீதான உள்ளடக்க உரையாடல்: அசுரா நாதன் ஆயுதப் போராட்ட அனுபவங்களை சுமந்து வரும் இலக்கியப் பிரதிகளின் தொடர்ச்சியாக ‘குமிழி’ எனும் நாவல் வெளிவந்திருக்கிறது. 1985ம் ஆண்டில் வெளிவந்த கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எனும் நாவலின் உரையாடல் பகுதியாகவும், தனித்துவமாகவும் ரவியின் ‘குமிழி’ நாவலின் சித்தரிப்பு அமைந்திருக்கிறது. கோவிந்தனும், ரவியும் இருப்பினும் ‘புளட்’ இயக்க தோழர்களான இரண்டு படைப்பாளிகளின் காலமும், தேர்வும் வெவ்வேறானவை. கோவிந்தன் இலட்சிய வேட்கையுடன் புரட்சிகரமான ஒரு ‘மாளிகையை’ கட்டியெழுப்பியவர். தாம் மேற்கொள்ளும் விடுதலைப் போராட்டமே சர்வதேசப் புரட்சிக்கும் சாதகமாக அமையப்போகிறது, அதற்காகக் கட்டப்பட்ட ‘மாளிகையே’ புளட் எனும் அமைப்பாக நினைத…
-
- 0 replies
- 822 views
-
-
மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி வெற்றிச்செல்வி (வேலு சந்திரகலா)எழுதிய முடியாத ஏக்கங்கள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா அண்மையில்இடம்பெற்றுள்ளது. இந்த சிறுகதை நூலில் முழுக்க ழுழுக்க போரில் பாதிக்கப்பட்டமாற்றுத்திறானாளிகளின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் முடியாத ஏக்கங்கள் என்றசிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா கடந்த முதலாம் திகதி அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி செல்வி வேலுசந்திரகலாவின் இந்த நூல்வெளியீட்டு விழா கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் வெளிப்பாடுகளுடன்அமைந்திருந்தது. போரில் ஒரு கண்ணும் கையும் பாதிக்…
-
- 3 replies
- 815 views
-
-
ஒருதுளி இனிமையின் மீட்பு ஜெயமோகன் முதல்தொகுதியுடன் அறிமுகமாகும் எழுத்தாளர்களில் இருவகையினரைப் பார்க்கிறேன். முதல்வகையினர், இவர்களே பெரும்பான்மையினர், ஏற்கனவே வணிகஇதழ்களில் எழுதப்பட்டிருக்கும் படைப்புகளில் ஊறியவர்கள். அந்தச் சூழல் உருவாக்கும் புனைவுமொழிக்குள் அவர்களின் கதைகள் எழுதப்பட்டிருக்கும். இரண்டாம் வகையினர் தங்களுக்கென எழுதுவதற்கு மெலிதாகவேனும் ஓர் அனுபவமண்டலத்தைக் கொண்டவர்கள். அதைவெளிப்படுத்துவதற்கான மொழியையும் வடிவையும் தேடித் தத்தளிப்பவர்கள். இலக்கியமுன்னோடிகளில் சிலருடைய மொழியையும் வடிவையும் தங்களுக்கு அணுக்கமானதாக உணர்ந்து அவர்களைப் பின் தொடர்கிறார்கள். முதல்வகையினர் பெரும்பாலும் ஏற்கனவே சொல்லப்பட்ட கதைக்கருக்களை ஆர்வமூட்டும் கதைக்கட்டுமானத்…
-
- 1 reply
- 814 views
-